2 Corinthians
2 Corinthians 1
2 Corinthians 1:1-2
இந்த நிருபத்தை எழுதியது யார் ?
பவுலும் தீமோத்தேயுவும் இதை எழுதினார்கள் [1:1].
இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது ?
கொரிந்து பட்டணத்திலுள்ள சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதப்பட்டது [1:1].
2 Corinthians 1:3-7
பவுல் தேவனை எப்படி விவரிக்கிறார் ?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், ஆறுதலின் தேவன் என்று கூறுகிறான் [1:3].
கர்த்தர் நமது உபத்திரவத்தில் ஆறுதலாயிருக்கிறார் ஏன் ?
தேவனாலே எங்களுக்கு அருளப்பட்ட ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்ய திராணியுள்ளவர்களாகும்படி ஆறுதல் செய்கிறவர் அவரே [1:4].
2 Corinthians 1:8-10
ஆசியாவில் பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் ஏற்பட்ட உபத்திரவம் என்ன ?
பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக அவர்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் உண்டாயிற்று [1:8-9].
எதினால் பவுலுக்கும், அவனோடிருந்தவர்களுக்கும் மரண சூழ்நிலை கடந்துவந்தது ?
அவர்கள் தங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாய் இருக்கும்படிக்கு மரண சூழ்நிலை கடந்துவந்தது [1:9].
2 Corinthians 1:11
பவுலுக்கு கொரிந்து சபை எப்படி உதவக்கூடும் ?
கொரிந்து சபையின் விண்ணப்பத்தினால் அவர்களுக்கு உதவக்கூடும் என பவுல் கூறுகிறான் [1:11].
2 Corinthians 1:12-14
எது பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் புகழ்ச்சியாய் இருப்பதாக அவன் கூறுகிறான் ?
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடு நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும் கபடமில்லாமல் நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுகிற சாட்சியே அவர்களுக்கு புகழ்ச்சியாய் இருப்பதாக பவுல் கூறுகிறான் [1:12].
கர்த்தராகிய இயேசுவின் நாளிலே பவுல் எதைக் குறித்து நம்பிக்கைக் கொண்டிருந்தான் ?
பவுலும் அவனோடிருப்பவர்களும் கர்த்தராகிய இயேசுவின் நாளிலே கொரிந்து சபையின் பரிசுத்தவான்களுக்கு புகழ்ச்சியாய் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டிருந்தான் [1:14].
2 Corinthians 1:15-20
பவுல் கொரிந்திய சபையின் பரிசுத்தவான்களை சந்திக்கும்படி எத்தனை முறை யோசனையாயிருந்தான் ?
இரண்டு முறை அவர்களை பவுல் சந்திக்கும்படி யோசனையாயிருந்தான்[1:15].
2 Corinthians 1:21-22
என்ன காரணத்திற்காக கிறிஸ்து அவருடைய ஆவியை நமது இருதயங்களில் கொடுத்திருக்கிறார் ?
அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார் [1:22].
2 Corinthians 1:23-24
கொரிந்து பட்டணத்திற்கு பவுல் ஏன் வரவில்ல ?
அவர்களைத் தப்பவிடும்படிக்கே பவுல் கொரிந்து பட்டணத்திற்கு வரவில்லை [1:23].
பவுலும் தீமோத்தேயுவும் கொரிந்து சபையில் என்ன செய்வதாகவும், என்ன செய்யவில்லையென்றும் பவுல் கூறுகிறான் ?
அவர்களின் விசுவாசத்திற்கு இவர்கள் அதிகாரிகளாயிராமல், அவர்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருப்பதாக கூறுகிறான். [1:24].
2 Corinthians 2
2 Corinthians 2:1-2
எந்த சூழ்நிலைகளில் பவுல் கொரிந்து சபைக்கு வருவதைத் தவிர்த்தான் ?
துக்கநாட்களில் பவுல் கொரிந்து சபைக்குப் வருவதைத் தவிர்த்தான் [2:1]
2 Corinthians 2:3-4
பவுல் தான் கொரிந்து சபையில் செய்தவைகளை ஏன் முதலாம் நிருபத்தில் எழுதினான் ?
பவுல் வரும்போது, அவனை சந்தோஷப்படுத்த வேண்டியவர்களால் அவன் துக்கமடையாதபடிக்கு அதை அவர்களுக்கு எழுதினான் [2:3]
கொரிந்தியர்களுக்கு பவுல் நிருபம் எழுதுவதற்கு முன்பு அவனது மனநிலை எப்படி இருந்தது ?
மிகுந்த வியாகுலமும், மன இடுக்கமும் அடைந்தவனாயிருந்தான் [2:4]
ஏன் பவுல் இந்த நிருபத்தை கொரிந்து சபைக்கு எழுதினான் ?
பவுல்; அவர்கள்மேல் வைத்த அன்பின் மிகுதியை அவர்கள் அறியும்படிக்கே அவைகளை எழுதினான் [2:4]
2 Corinthians 2:5-7
தண்டிக்கப்பட்ட ஒருவனுக்கு கொரிந்து பரிசுத்தவான்களை என்ன செய்யவேண்டுமென்று பவுல் கூறினான் ?
பவுல்: அவர்களை அவனை மன்னித்து, ஆறுதல் செய்யவேண்டுமென்றான் [2:6-7]
ஏன் தண்டிக்கப்பட்ட ஒருவனுக்கு கொரிந்து பரிசுத்தவான்கள் மன்னித்து, ஆறுதல் செய்யவேண்டுமென்று பவுல் கூறினான் ?
A . அவன் அதிக துக்கத்திலே அமிழ்ந்துபோகாதபடிக்கு அப்படி செய்யும்படி கூறினான் [2:7]
2 Corinthians 2:8-9
பவுல் நிருபத்தைக் கொரிந்து சபைக்கு எழுதியதற்கு மற்றொரு காரணம் என்ன ?
அவர்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறார்களோ என்று சோதித்தறியும்படிக்கு பவுல் அவர்களுக்கு எழுதினான் [2:9]
2 Corinthians 2:10-11
எவனுக்கு அவர்கள் மன்னிக்கிறார்களோ, அவனுக்கு பவுலும், கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறான் என்று கொரிந்து சபை அறிவது ஏன் அவசியமாயிற்று ?
சாத்தானாலே அவர்கள் மோசம் போகாதபடிக்கு இப்படி செய்தான் [2:11]
2 Corinthians 2:12-13
ஏன் துரோவா பட்டணத்திற்கு பவுல் சென்றபோது அவனுடைய ஆவி அமைதலில்லாதிருந்தது ?
துரோவா பட்டணத்திலே தன் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே அவன் ஆவி அமைதலில்லாதிருந்தது [2:13]
2 Corinthians 2:14-15
பவுல் மற்றும் அவனோடிருந்தவர்கள் மூலம் கர்த்தர் செய்தது என்ன ?
எல்லா இடங்களிலேயும் பவுல் மற்றும் அவனோடிருந்தவர்கள் மூலம் கர்த்தர் அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்தினார் [2:14-15]
2 Corinthians 2:16-17
பவுலும் அவனோடிருந்தவர்களும் மற்றவர்களைப்போல் தேவ வசனத்தை இலாபத்திற்கு விற்காமல் எப்படி மாறுபட்டு இருந்தனர் ?
பவுலும் அவனோடிருந்தவர்களும் தேவ வசனத்தை துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்ட பிரகாரமும், கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதியில் பேசினார்கள் [2:17]
2 Corinthians 3
2 Corinthians 3:1-3
பவுலுக்கும், அவனோடிருந்தவர்களுக்கும் உண்டாயிருந்த பரிந்துரைக் கடிதம் என்ன ?
சகல மனுஷராலும் அறிந்து, வாசிக்கப்பட்டும் இருக்கிற அவர்களுடைய பரிந்துரைக் கடிதம் கொரிந்து சபையின் பரிசுத்தவான்களே [3:2]
2 Corinthians 3:4-6
பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் தேவனில்; கிறிஸ்துவால் உண்டாயிருந்த நம்பிக்கை என்ன ?
பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் உண்டாயிருந்த நம்பிக்கை என்னவெனில்; இந்த தகுதி அவர்களாலேயல்லாமல் தேவனால் உண்டானதே [3:4-5]
பவுலும் அவனோடிருந்தவர்களும் தேவனுடைய ஊழியக்காரர்களாகும்படி தேவனால் அவர்களுக்கு அருளப்பட்ட புது உடன்படிக்கைக்குறிய தகுதி என்ன ?
அந்த புதிய உடன்படிக்கை கொல்லுகிற எழுத்தாயிராமல், உயிர்பிக்கிற ஆவியாயிருக்கிறது [3:6]
2 Corinthians 3:7-8
ஏன் மோசேயினுடைய முகத்தை இஸ்ரவேல் ஜனங்களால் நேரில் காணக்கூடாதிருந்தது ?
மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால் அவர்களால் அவன் முகத்தை காணக்கூடாதிருந்தார்கள் [3:7]
2 Corinthians 3:9-13
ஒழிந்து போகிற ஊழியம், ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம், ஆவிக்குரிய ஊழியம் மற்றும் நீதிக்குரிய ஊழியம்; இதில் சிறந்த மகிமையுள்ளதாய் இருக்கும் ?
ஆவிக்குரிய ஊழியம் மகிமையுள்ளதாய் இருக்கும். நீதிக்குரிய ஊழியமும் அதிக மகிமையுள்ளதாய் இருக்கும். இதில் நிலைத்திருக்கும் மகிமையே சிறந்ததாய் இருக்கும்
[3:8-11]
2 Corinthians 3:14-16
மோசேயின் உடன்படிக்கையின் ஆகமங்கள் வாசிக்கையில் இஸ்ரவேலருக்கு இந்நாள் வரைக்கும் இருக்கும் குறை என்ன ?
அவர்களுடைய மனது கடினப்படுகிறது மற்றும் அவர்கள் இருதயம் முக்காடிடப்பட்டிருக்கிறது [3:15]
இஸ்ரவேலரின் மனது எப்போது திறக்கப்படும், அவர்களுடைய இருதயத்தின் முக்காடு எப்படி நீங்கும் ?
அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது அந்த முக்காடு எடுபட்டுப்போம் [3:14,16]
2 Corinthians 3:17-18
கர்த்தருடைய ஆவியானவர் தருவது என்ன ?
கர்த்தருடைய ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு [3:17]
கர்த்தருடைய மகிமையைக் காண்கிறவர்கள் எதினால் மறுரூபமாகிறார்கள் ?
ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமாவார்கள் [3:18]
2 Corinthians 4
2 Corinthians 4:1-2
பவுலும் அவனோடிருந்தவர்களும் ஏன் சோர்ந்துபோகாதிருந்தார்கள் ?
ஊழியத்தை உடையவர்களாகிய அவர்கள் இரக்கம் பெற்றிருந்ததால் அவர்கள் சோர்ந்துபோகாதிருந்தார்கள்[4:1]
பவுலும் அவனோடிருந்தவர்களும் என்னென்ன காரியங்களில் விலகியிருந்தார்கள் ?
அவர்கள்; வெட்கமான அந்தரங்கக் காரியங்களை வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தை புரட்டாமல், சத்தியத்தை வெளிப்படுத்துகிறவர்களுமாயிருந்தார்கள் [4:2]
பவுலும் அவனோடிருந்தவர்களும் எப்படி தேவனுக்கு முன்பாக எல்லோருடைய மனச்சாட்சிக்கும் அவர்களை விளங்கப்பண்ணினார்கள் ?
இவைகளை செய்து அவர்கள் உத்தமரென்று விளங்கப்பண்ணினார்கள் [4:2]
2 Corinthians 4:3-4
யாருக்கு சுவிசேஷம் மறைபொருளாய் இருக்கிறது ?
கெட்டுப்போகிறவர்களுக்கு அது மறைபொருளாய் இருக்கிறது [4:3]
ஏன் கெட்டுப்போகிறவர்களுக்கு சுவிசேஷம் மறைபொருளாய் இருக்கிறது
? இந்த உலகத்தின் தேவனானவன் அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கினதினால், அவர்களுக்கு சுவிசேஷம் பிரகாசமாயிராமல் மறைக்கப்பட்டிருக்கிறது [4:4]
2 Corinthians 4:5-6
பவுலும் அவனோடிருந்தவர்களும், இயேசுவைக் குறித்தும் அவர்கள் தங்களைக் குறித்தும் என்னவென்று பிரசங்கம்பண்ணினார்கள் ?
அவர்கள் இயேசுவைக் கர்த்தரென்றும், அவர்களை இயேசுவினிமித்தம் கொரிந்து சபையின் ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கித்தார்கள் [4:5]
2 Corinthians 4:7-12
ஏன் பவுலும் அவனோடிருந்தவர்களும் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றனர் ?
இந்த மகத்துவமுள்ள வல்லமை அவர்களால் உண்டாகாமல் தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி அந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றனர் [4:7]
பவுலும் அவனோடிருந்தவர்களும் ஏன் இயேசுவின் மரணத்தை சுமந்து திரிந்தனர் ?
கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் அவர்களில் விளங்கும்படிக்கு இயேசுவின் மரணத்தை சுமந்துத் திரிந்தனர்[4:10]
2 Corinthians 4:13-15
இயேசு கிறிஸ்துவை எழுப்பினவர் யாரை எழுப்பி அவருக்குமுன்பாக நிறுத்துவார் ?
பவுலுலையும் அவனோடிருந்தவர்களையும் மற்றும் கொரிந்து பரிசுத்தவான்களையும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எழுப்பித் தமக்கு முன்பாக நிறுத்துவார் [4:14]
அநேகரிடம் கிருபை பெருகுவதால் என்ன சம்பவிக்கிறது ?
தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும் [4:15]
2 Corinthians 4:16-18
பவுலும் அவனோடிருந்தவர்களும் சோர்ந்துபோவதற்கு உண்டானக் காரணம் என்ன ?
அவர்கள் சோர்ந்துபோகிறதற்கு உண்டானக் காரணம் என்னவெனில் புறம்பான மனுஷன் அழிந்துபோகிறதே[4:16]
பவுலும் அவனோடிருந்தவர்களும் ஏன் சோர்ந்துபோகவில்லை ?
உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் புதிதக்கப்படுகிறதினால் அவர்கள் சோர்ந்துபோகவில்லை. மேலும் அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் மிகவும் அதிகமான கனமகிமையை உண்டாக்குகிறது; ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணபடாதவைகளோ நித்தியமானவைகள் [4:16-18]
2 Corinthians 5
2 Corinthians 5:1-3
பூமிக்குரிய வீடு அழிந்துபோனாலும் என்ன இருப்பதாக பவுல் கூறுகிறான் ?
பவுல்: தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டு என்கிறான் [5:1]
2 Corinthians 5:4-5
நாம் இந்தக் கூடாரத்திலே இருக்கையில் ஏன் புலம்புவதாகப் பவுல் கூறுகிறான் ?
பவுல்: இந்தக் கூடாரத்திலே நாம் பாரம் சுமந்து தவிக்கிறோம், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வைத் தரித்தவர்களாகவேண்டுமென்று விரும்புகிறோம் [5:4]
நம்மை ஆயத்தப்படுத்தும்படி தேவன் நமக்கு என்ன அச்சாரத்தை நமக்குத் தந்திருக்கிறார் ?
நம்மை ஆயத்தப்படுத்தும்படி தேவன் நமக்கு ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்திருக்கிறார் [5:5]
2 Corinthians 5:6-8
பவுல் இந்த தேகத்திலோ அல்லது தேவனிடத்திலோ எங்கே இருக்க விரும்புகிறான் ?
பவுல்: இந்த தேகத்தைவிட்டுப் போகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறான் [5:8]
2 Corinthians 5:9-10
பவுலின் நோக்கம் என்ன ?
தேவனுக்குப் பிரியமாயிருக்க நாடுவது [5:9]
ஏன் பவுல் தேவனுக்குப் பிரியமாயிருக்க நாடினான் ?
ஏனெனில், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைகாவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும் [5:10]
2 Corinthians 5:11-12
பவுலும் அவனோடிருந்தவர்களும் ஏன் ஜனங்களுக்கு புத்திசொன்னார்கள் ?
கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்தபடியால் அவர்கள் ஜனங்களுக்கு புத்திசொன்னார்கள்[5:11]
பவுல், கொரிந்து பரிசுத்தவான்களிடம் அவர்களைக் குறித்து மெச்சிக்கொள்வதில்லை என்கிறான். மாறாக அவர்கள் செய்தது என்ன ?
நங்கள் உங்களுக்குமுன் எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம் [5:12]
2 Corinthians 5:13-15
கிறிஸ்து நம் எல்லோருக்காகவும் மரித்ததினாலே, பிழைத்திருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
பிழைத்திருக்கிறவர்கள் இனி தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்க வேண்டும் [5:15]
2 Corinthians 5:16-17
ஏன் பவுல் இனி ஒருவரையும் மாம்சத்தின்படி அறியோம் என்று கூறினான் ?
ஏனெனில் கிறிஸ்து நம் எல்லோருக்காகவும் மரித்ததினாலே, நாம் இனி நமக்காய் வாழாமல், கிறிஸ்துவுக்காய் வாழவேண்டும் [5:15-16]
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் என்ன ஆகும் ?
அவன் புது சிருஷ்டியாயிருப்பான். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோகும், எல்லாம் புதியவைகளாய் மாறும் [5:17]
2 Corinthians 5:18-19
தேவன் ஜனங்களை கிறிஸ்துவினாலே அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு தேவன் என்ன செய்கிறார் ?
தேவன்; அவர்களுடைய பாவங்களை எண்ணாமல், அவர்களை ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை அவர்களிடத்தில் கொடுத்தார் [5:19]
2 Corinthians 5:20-21
கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தானாதிபதிகளாகிய பவுலும் அவனோடிருந்தவர்களும் கொரிந்தியர்களிடம் வேண்டிக்கொண்டது என்ன ?
கொரிந்தியர்கள், தேவனோடே ஒப்புரவாகும்படி கிறிஸ்துவினிமித்தம் பவுல், அவனோடிருந்தவர்களும் வேண்டிக்கொண்டனர் [5:20]
ஏன் தேவன்; நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்துவை பாவமாக்கினார் ?
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு தேவன் அவ்வாறு செய்தார் [5:21]
2 Corinthians 6
2 Corinthians 6:1-3
பவுலும் அவனோடிருந்தவர்களும், கொரிந்தியர்களிடம் என்ன செய்யவேண்டாமென்று புத்திச் சொன்னார்கள் ?
கொரிந்தியர்கள் தேவனுடைய கிருபையை விருதாவாய் பெறாதபடிக்கு புத்திச் சொன்னார்கள் [6:1]
எது அனுக்கிரகக் காலம் ? எது இரட்சணிய நாள் ?
இப்பொழுதே அனுக்கிரகக் காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்[6:2]
பவுலும் அவனோடிருந்தவர்களும் ஏன் ஒருவருக்கும் இடறலுண்டக்காமலிருந்தனர் ?
இந்த ஊழியம் குற்றஞ்சாட்டபடாதபடிக்கு அவர்கள் யாதொன்றிலும் இடறலுண்டக்காமலிருந்தனர்[6:3]
2 Corinthians 6:4-7
பவுலும் அவனோடிருந்தவர்களும் அவர்களின் செய்கையினால் என்ன விளங்கப்பண்ணினார்கள் ?
அவர்களின் செய்கைகளினால் அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என விளங்கப்பண்ணினார்கள்[6:4]
எவைகளையெல்லாம் பவுலும் அவனோடிருந்தவர்களும் தாங்கினர் ?
உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும் மற்றும் வறுமையையும் தாங்கினர் [6:4-5]
2 Corinthians 6:8-10
பவுலும் அவனோடிருந்தவர்களும் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாயிருந்தும் என்னவென்று குற்றஞ்ச்சாட்டப்பட்டனர் ?
அவர்கள் எத்தரெனப்பட்டனர் [6:8]
2 Corinthians 6:11-13
கொரிந்தியர்களிடம் பவுல் என்ன மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினான் ?
பவுல்: எங்கள் இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் நெருக்கமடையவில்லை என்றும் கொரிந்து பரிசுத்தவான்களை பவுலுக்கும் அவனோடிருப்பவர்களுக்கும் அவர்களுடைய இருதயத்தைத் திறக்கும்படி வேண்டிக்கொண்டான் [6:11,13]
2 Corinthians 6:14-16
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்ப்டாதிருக்கும்படி பவுல் கூறும் காரணங்கள் என்ன ?
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது ? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடன் விசுவாசிக்கு பங்கேது ? தேவனுடைய ஆலயத்துக்கும் விகிரகத்திற்கும் சம்பந்தமேது?[6:14-16]
2 Corinthians 6:17-18
அந்நியர்களினின்று பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமலிருப்பவர்க்ளுக்கு கர்த்தர் என்ன செய்வதாகக் கூறுகிறார் ?
கர்த்தர்: நான் அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு பிதாவாயிருப்பேன். அவர்கள் என் குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பார்கள் [6:17-18]
2 Corinthians 7
2 Corinthians 7:2-4
கொரிந்து பரிசுத்தவான்கள், பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் என்ன செய்யும்படி பவுல் விரும்பினான் ?
பவுல், அவர்கள் தங்களுக்கு இடங்கொடுக்கும்படி விரும்பினான் [7:2]
பவுல்; கொரிந்து பரிசுத்தவான்களுக்கு கூறிய சந்தோஷமுள்ள வார்த்தைகள் என்ன ?
பவுல்; கொரிந்து பரிசுத்தவான்களிடம்: உங்களுடனேகூட சாகவும், கூடப் பிழைக்கவும்தக்கதாக எங்கள் இருதயங்களில் இருக்கிறீர்கள். மிகுந்த தைரியத்துடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன். ஆறுதலால் நிறைந்திருக்கிறேன் [7:3-4]
2 Corinthians 7:5-7
பவுலும் அவனோடிருந்தவர்களும் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது எப்பக்த்திலேயும் உபத்திரவப்பட்டு, புறம்பே போராட்டங்களும், உள்ளே பயமும் இருந்தபோது, தேவன் அவர்களுக்கு எப்படி ஆறுதல் செய்தார் ?
தீத்து வந்ததினாலே எங்களுக்கு தேவன் ஆறுதல் செய்தார், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தியதினாலும், நானும் ஆறுதலடைந்து சந்தோஷப்பட்டேன் [7:6-7]
2 Corinthians 7:8-0
பவுலின் முந்தின நிருபம் கொரிந்து பரிசுத்தவான்களிடம் என்ன உண்டுபன்னினது ?
பவுலின் நிருபம் கொரிந்து பரிசுத்தவான்களை துக்கப்படுத்தியது, அதிலும் தேவனுகேற்ற துக்கம் அடைந்தார்கள் [7:8-9]
2 Corinthians 7:1-10
நாம் எவைகளிலிருந்து நம்மை சுத்திகரிக்கவேண்டும் ?
மாம்சத்திலும் ஆவியிலும் அசுசிப்படுத்துகிற எல்லாக் காரியத்தையும் நீங்க நம்மை சுத்திகரிக்கவேண்டும் [7:1]
2 Corinthians 7:11-12
தேவனுகேற்ற துக்கம் கொரிந்து பரிசுத்தவான்களை என்ன செய்தது ?
தேவனுகேற்ற துக்கம் அவர்களுக்கு மனந்திரும்புதலையும், அவர்கள் குற்றமற்றவர்களென்று விளங்கப்பண்ணிற்று [7:9,11]
முந்தின நிருபத்தை ஏன் பவுல் கொரிந்திய பரிசுத்தவான்களுக்கு எழுதுவதாகக் கூறுகிறான் ?
பவுல்: தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் உண்டாயிருக்கிற ஜாக்கிரதை கொரிந்தியர்களுக்கு வெளிப்ப்படும்பொருட்டு அப்படி எழுதினான் [7:12]
2 Corinthians 7:13-14
எதினால் தீத்துவுக்கு சந்தோஷம் உண்டானது ?
தீத்துவினுடைய ஆவி கொரிந்து பரிசுத்தவான்கள் அனைவராலும் ஆறுதலடந்ததினாலே அவனுக்கு சந்தோஷம் உண்டானது [7:13]
2 Corinthians 7:15-16
ஏன் தீத்துவினுடைய உள்ளம் கொரிந்து பரிசுத்தவான்களைப் பற்றி அதிக அன்பாயிருந்தது?
கொரிந்து பரிசுத்தவான்கள் எல்லோரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை தீத்து நினைக்கையில், அவனுடைய உள்ளம் அவர்களைப்பற்றி அதிக அன்பாயிருந்தது [7:15]
2 Corinthians 8
2 Corinthians 8:1-2
கொரிந்திய சகோதர, சகோதிரிகள் எதை அறியவேண்டுமென்று பவுல் விரும்பினான் ?
மக்கெதோனியா நாட்டிலுள்ள சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை அவர்கள் அறியும்படி பவுல் விரும்பினான் [8:1]
2 Corinthians 8:3-5
மக்கெதோனிய நாட்டு சபையார் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்பட்டு, தரித்திரராய் இருக்கையில் அவர்கள் செய்தது என்ன ?
தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய் ஊழியத்திற்கு கொடுத்து மேலும் அவர்கள் திராணிக்குத் தக்கதாகவும், அவர்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுத்தார்கள் [8:2-4]
2 Corinthians 8:6-7
பவுல், தீத்துவிடம் செய்யும்படி வேண்டிக்கொண்டது என்ன ?
தீத்து தொடங்கிய தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கியதை முடிக்கவேண்டுமென்று பவுல் வேண்டிக்கொண்டான் [8:6]
2 Corinthians 8:8-9
கொரிந்து பரிசுத்தவான்களிடம் ஏன் தர்மகாரியத்திலும் பெருகவேண்டுமென்றான் ?
அவர்களுடைய அன்பின் உண்மையை சோதிக்கும்படியும் மற்றவர்களுக்கு அதிகாரியாயிருப்பதினாலும் பவுல் இப்படி கூறினான் [8:7-8]
2 Corinthians 8:10-12
நல்லது மற்றும் ஏற்றுக்கொள்வது என பவுல் எதைக் குறிப்பிடுகிறான் ?
இந்த வேலையை செய்வது நல்லது என்றும் உற்சாகமாய் செய்வதும் வேண்டும் என்று கொரிந்து பரிசுத்தவான்களுக்கு பவுல் கூறுகிறான் [8:12]
2 Corinthians 8:13-15
இந்த பணியில் மற்றவர்களுக்கு சகாயமும், கொரிந்து பரிசுத்தவான்களுக்கு மனவருத்தமும் உண்டாகும்படி பவுல் கூறினானோ ?
இல்லை. சமநிலையாகும்படியே, எப்படியெனில் மிகுதியாய் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய் சேர்த்தவனுக்கு குறைவானதுமில்லை என்கிறபடி கொரிந்து பரிசுத்தவான்களின் வறுமைக்கு மற்றவர்களின் செல்வம் உதவும்படிக்கு, இப்பொழுது இவர்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவும்படி பவுல் கூறினான் [8:13-14]
2 Corinthians 8:16-17
பவுலைப் போல தீத்துவுக்கு கொரிந்து பரிசுத்தவான்கள்மேல் ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படியாய் இருதயத்தில் அருளியபின்பு அவன் செய்தது என்ன ?
பவுல் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்து, அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மனவிருப்பத்தின்படியே கொரிந்து பரிசுத்தவான்களிடத்திற்கு போகப் புறப்பட்டான் [8:16-17]
2 Corinthians 8:18-21
ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் குறித்து ஒருவரும் அவர்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு பவுலும், அவனோடிருந்த பரிசுத்தவான்களும் செய்த எச்சரிக்கை என்ன ?
தீத்துவை மாத்திரம் பவுலும், மற்றப் பரிசுத்தவான்களும் அனுப்பாமல், அவனோடேகூட சுவிசேஷத்தினால் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிப் பெற்ற மற்றொரு சகோதரனையும் அனுப்பினார்கள். இவர்கள் தர்மப்பணத்தைக் கொண்டுசெல்லும்படி சபைகளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் [8:18-22]
2 Corinthians 8:22-24
மற்ற சபைகளுக்கு அவர்களால் அனுப்பப்படுகிறவர்களுக்கு கொரிந்து பரிசுத்தவான்கள் என்ன செய்யும்படி பவுல் கூறினான் ?
பவுல்: அவர்களுக்கு உங்கள் அன்பைக் காண்பித்து, நான் உங்களைக்குறித்து சொன்ன புகழ்ச்சியையும் சபைகளுக்கு முன்பாகப் பிரசித்தப்படுத்துங்கள் என்றான் [8:24]
2 Corinthians 9
2 Corinthians 9:1-2
எதைக் குறித்து பவுல், கொரிந்து பரிசுத்தவானக்ளுக்கு எழுதவேண்டியதில்லை என்றான் ?
தர்மசகாயத்தைக் குறித்து அதிகமாய் அவர்களுக்கு எழுதவேண்டியதில்லை என்றான்[9:1]
2 Corinthians 9:3-5
ஏன் பவுல் கொரிந்தியர்களிடம் சகோதரர்களை அனுப்பினான் ?
பவுல் அவர்களைக் குறித்து சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்போகாமல், பவுல் சொன்னபடி கொரிந்து பரிசுத்தவான்கள் ஆயத்தமாயிருப்பதற்கு அந்த சகோதரர்களை அனுப்பினான் [9:3]
அந்த சகோதரர்கள் கொரிந்து பரிசுத்தவான்களிடம் முன்னமே போய் அங்கே வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறவைகளை ஆயத்தப்படுத்துவது அவசியம் என்று ஏன் பவுல் எண்ணினான் ?
மக்கொதோனியர் பவுலோடே கூடவந்து, அவர்களை ஆயத்தபடாதவர்களாகக் கண்டால் இவ்வளவு நிச்சயமாய் அவர்களை புகழ்ந்ததற்ககாக பவுலும் அவனோடிருந்தவர்களும் வெட்கபடாமலிருக்கும்படிக்கும். கொரிந்து பரிசுத்தவான்கள் தர்மப்பணத்தை உதாரத்துவமாய்க் கொடுக்கும்படிக்கும் ஆயத்தப்படுத்துவது அவசியம் என்று ஏன் பவுல் எண்ணினான்[9:4-5]
2 Corinthians 9:6-9
அவர்கள் கொடுக்கிற காரியத்தைக் குறித்து பவுல் கூறுவது என்ன ?
பவுல்: சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான் [9:6]
ஒவ்வொருவனும் எப்படி கொடுக்கவேண்டும் ?
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் [9:7]
2 Corinthians 9:10-11
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் கொரிந்து பரிசுத்தவான்களுக்கு என்ன செய்வார் ?
அவர்; அவர்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி அவர்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கப்பன்னுவார். அவர்கள் மிகுந்த உதாரகுணத்திலே எவ்விதத்திலும் சம்பூர்ணமடைவார்கள் [9:10-11]
2 Corinthians 9:12-15
கொரிந்து பரிசுத்தவான்கள் எவ்வாறு கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள் ?
அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிடுகிறதினிமித்தமும், உதாரத்துவமாய் தர்மம் செய்கிறதினிமித்தமும் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்[9:13]
ஏன் பரிசுத்தவான்கள் கொரிந்து பரிசுத்தவான்கள்மேல் வாஞ்சையாயிருந்து அவர்களுக்காக் வேண்டுதல் செய்தார்கள் ?
அவர்கள் கொரிந்து பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்து, தேவன் அவர்களுக்கு அளித்த மிகவும் விசேஷ கிருபையினிமித்தம் கொரிந்து பரிசுத்தவான்கள்மேல் வாஞ்சையாயிருந்தார்கள் [9:14]
2 Corinthians 10
2 Corinthians 10:1-2
கொரிந்து பரிசுத்தவான்களிடம் பவுல் வேண்டிக்கொண்டது என்ன ?
பவுல்: உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு எச்சரிப்பாயிருகும்படி அவர்களை வேண்டிக்கொண்டான் [10:2]
எப்பொழுது பவுல் எச்சரிக்கையோடு கண்டிப்பயிருக்கவேண்டுமென்று எண்ணினான் ?
பவுலையும் அவனோடிருந்தவர்களையும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து எச்சரிக்கையோடு கண்டிப்பயிருக்கவேண்டுமென்று எண்ணினான்[10:2]
2 Corinthians 10:3-4
பவுலும் அவனோடிருந்தவர்களும் போர் செய்கிறவர்களாயிருந்து, எந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாதிருந்தார்கள் ?
பவுலும் அவனோடிருந்தவர்களும் போர் செய்கிறவர்களாயிருந்தும் மாம்சத்திற்கேற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தாதிருந்தார்கள்[10:4]
2 Corinthians 10:5-6
பவுல் பயன்படுத்திய போராயுதங்கள் என்ன ?
பவுல்; தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிமூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய சிறைப்படுத்துகிறவனாயிருந்தான்[10:4-5]
2 Corinthians 10:7-8
கர்த்தர் எதினால் பவுலுக்கும், அவனோடிருந்தவர்களுக்கும் அதிகாரத்தைத் தந்தார் ?
கொரிந்து பரிசுத்தவான்களை நிர்மூலமாக்குகிறதற்கு அல்ல அவர்களை ஊன்றக் கட்டுவதற்கே அவர்களுக்கு கர்த்தர் அதிகாரத்தைத் தந்தார் [10:8]
2 Corinthians 10:9-10
பவுலைக் குறித்தும் அவனுடைய நிருபத்தைக் குறித்தும் சிலர் கூறியது என்ன ?
பவுலின் நிருபங்கள் பாரயோசனையும் பலமுள்ளவைகள், சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாய் இருக்கிறது என்றார்கள் [10:10]
2 Corinthians 10:11-12
பவுலின் நிருபங்களில் குறிப்பிடபட்டவைகளில் அவன் மாறுபட்டவனாக எண்ணினவனுக்கு பவுல் கூறுவது என்ன ?
பவுல்: நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே கொரிந்து பரிசுத்தவான்களோடும் இருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கும்படி கூறுகிறான் [10:11]
தங்களை தாங்களே மெச்சிக்கொள்கிறவர்கள், புத்தியில்லாதவர்கள் என்பதற்கு என்ன செய்வார்கள் ?
அவர்கள் தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்தியில்லாதவர்கள் [10:12]
2 Corinthians 10:13-16
பவுலின் மேன்மைபாராட்டுதலுக்குரிய அளவுகள் என்ன ?
பவுல்: நாங்கள் அளவுக்குமிஞ்சி மேன்மப்பாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுபிரமாணத்தின்படியே மேன்மப்பாராட்டுகிறோம். எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டோம். மற்றவர்களுடைய எல்லைக்குள் செய்யப்பட்டதை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல் இருக்கிறோம் [10:13,15,16]
2 Corinthians 10:17-18
மேன்மைபாராட்டுகிறவன் யாரைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன் ?
மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்[10:18]
2 Corinthians 11
2 Corinthians 11:1-2
ஏன் பவுல் கொரிந்து பரிசுத்தவான்கள்மேல் தேவ வைராக்கியம் கொண்டிருந்தான் ?
பவுல் அவர்களை கற்புள்ள கண்ணிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் அவர்களுக்காக தேவ வைராக்கியம் கொண்டிருந்தான்[11:2]
2 Corinthians 11:3-6
கொரிந்து பரிசுத்தவான்களைக் குறித்து ஏன் பவுல் பயந்திருந்தான் ?
அவர்கள் மனம் கிறிஸ்துவைப்பற்றும் உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பவுல் பயந்திருந்தான் [11:3]
கொரிந்து பரிசுத்தவான்கள் எதை சகித்தார்கள் ?
வேறொருவன், பவுலும், அவனோடிருந்தவர்களும் பிரசங்கியாத வேறொரு கிறிஸ்துவை பிரசங்கித்திருந்தால், வேறொரு சுவிசேஷத்தைப் பெற்றீர்களானால் அவர்கள் சகித்தார்கள் [11:4]
2 Corinthians 11:7-13
பவுல், கொரிந்தியர்களுக்கு எப்படி சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான் ?
பவுல், கொரிந்தியர்களுக்கு இலவசமாய் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான்[11:7]
பவுல் எப்படி மற்ற சபைகளைக் கொள்ளையிட்டான் ?
கொரிந்தியர்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்ற சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டான்[11:8]
2 Corinthians 11:14-15
மற்றவர்கள் மேன்மைப்படும்படி பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களைப்போல வேஷம் தரித்துக்கொண்டவர்களைக் குறித்து பவுல் கூறுவது என்ன ?
அப்படிப்பட்டவர்கள் சாத்தானுடைய ஊழியக்காரர்கள், கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள் மற்றும் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்கள் என்று பவுல் விளக்குகிறான் [11:13-15]
சாத்தான் அவனுக்கு போட்டுக்கொண்ட மாறுவேடம் என்ன ?
ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டான் [11:14]
2 Corinthians 11:16-18
ஏன் பவுலை புத்தியில்லாதவனைப் போல ஏற்றுக்கொள்ளும்படி கொரிந்து பரிசுத்தவான்களிடம் கூறினான் ?
சற்றே மேன்மைபாராட்டும்படி பவுலை புத்தியில்லாதவனைப் போல ஏற்றுக்கொள்ளும்படி கொரிந்து பரிசுத்தவான்களிடம் கூறினான்[11:16]
2 Corinthians 11:19-21
யாரோடு கொரிந்து பரிசுத்தவான்கள் சந்தோஷமாய் சகித்ததாகப் பவுல் கூறுகிறான் ?
பவுல்: நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியிள்ளாதவர்கச் சந்தோஷமாய் சகித்தார்கள். ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் சகித்தார்கள் என்றான் [11:19-20]
2 Corinthians 11:22-23
தங்களைப் போல இருப்பதாக எண்ணி மேன்மைபாராட்டுகிற மற்றவர்களைக் போல பவுல் மேன்மைபாராட்டுகிற சில காரியங்கள் என்ன ?
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரேயன், அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன், அவர்கள் ஆபிரகாமின் சந்த்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான், அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியினமாய் பேசுகிறேன், நான் அதிகமாய் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய் காவலில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரணஅவஸ்தையில் அகப்பட்டவன் என்று கூறுகிறான் [11:22-23]
2 Corinthians 11:24-26
பவுல் தாங்கின கொடிய மோசங்கள் என்னென்ன ?
யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒருஇராப்பகல் முழுதும் போக்கினேன், அநேகந்தரம் பிரயாணம் பண்ணினேன், ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும் என் சுய ஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச் சகோதரர்களால் உண்டான மோசங்களிலும், தமஸ்கு பட்டணத்தில் அரேத்தா ராஜாவினுடைய சேனைத் தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல் வைத்துக் காத்தான் இவைகளே [11:24-26,32]
2 Corinthians 11:27-29
பவுலின் பார்வையில்; எதினால் அவன் மனம் எரிவதாகக் கூறுகிறான் ?
ஒருவன் பாவத்தில் விழுந்தால் பவுலின் மனம் எரிவதாகக் கூறுகிறான் [11:29]
2 Corinthians 11:30-33
பவுல் மேன்மைபாராட்டவேண்டுமானால், எதைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டும் என்கிறான் ?
பவுல்: என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்தே மேன்மைபாராட்டவேண்டும் என்கிறான்[11:30]
2 Corinthians 12
2 Corinthians 12:1-2
பவுல் எதைக்குறித்து இப்பொழுது மேன்மைபாராட்டுவேன் என்கிறான் ?
பவுல்: கர்த்தர் அருளிய தரிசனங்களையும், வெளிப்படுத்தல்களையும் குறித்து மேன்மைபாராட்டுவேன் என்கிறான்[12:1]
2 Corinthians 12:3-5
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனிதனுக்கு பதினாலு வருஷத்திற்கு முன் நடந்தது என்ன ?
அவன் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான், அவன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டான் [12:2-4]
2 Corinthians 12:6-7
ஏன் மேன்மைபாராட்டினாலும் நான் புத்தியீனனல்ல என்று பவுல் கூறுகிறான் ?
பவுல்: நான் சத்தியமானவைகளைப் பேசுகிறபடியால், மேன்மைபாராட்டினாலும் நான் புத்தியீனனல்ல என்று கூறுகிறான்[12:6]
தன்னை உயர்த்தாதபடிக்கு பவுலுக்கு சம்பவித்தது என்ன ?
அவன் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது, அது அவனைக் குட்டும் சாத்தானாய் இருந்தது [12:7]
2 Corinthians 12:8-10
மாம்சத்தில் உள்ள அந்த முள்ளை எடுத்துப்போடும்படி கர்த்தரிடத்தில் பவுல் வேண்டினபோது, கர்த்தர் கூறியது என்ன ?
கர்த்தர்; பவுலை நோக்கி, என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார் [12:9]
ஏன் பவுல் அவன் பலவீனங்களைக் குறித்து சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவதாகக் கூறுகிறான் ?
கிறிஸ்துவின் வல்லமை அவன்மேல் தங்கும்படி பவுல் அவன் பலவீனங்களைக் குறித்து சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவதாகக் கூறுகிறான்[12:9]
2 Corinthians 12:11-13
எல்லாவிதமான பொறுமையோடும் கொரிந்தியர்களிடம் நடபிக்கப்பட்ட காரியங்கள் என்ன ?
அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், எல்லாவிதமான பொறுமையோடும் கொரிந்தியர்களிடம் அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் நடபிக்கப்பட்டது [12:12]
2 Corinthians 12:14-18
ஏன் பவுல் கொரிந்தியர்களிடம் அவர்களை தான் வருத்தப்படுத்துவதில்லை என்கிறான் ?
பவுல்: கொரிந்தியர்களுடயதையல்ல, அவர்களையே நாடுவதாக குறிப்பிடும்படிக்கு இப்படி கூறினான் [12:14]
பவுல், கொரிந்து பரிசுத்தவான்களுக்காய் மிகுந்த சந்தோஷத்தோடே என்ன செய்வதாகக் கூறுகிறான் ?
பவுல்: அவர்கள் ஆத்துமாவுக்காக மிகுந்த சந்தோஷத்தோடே செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புவதாகக் கூறினான் [12:15]
2 Corinthians 12:19
இவைகளை எதினால் கொரிந்து பரிசுத்தவான்களுக்கு செய்வதாக பவுல் கூறுகிறான் ?
பவுல்: சகலத்தையும் கொரிந்து பரிசுத்தவான்களின் பக்திவிருத்திக்காக செய்கிறோம் என்றான் [12:19]
2 Corinthians 12:20-21
மறுபடியும் கொரிந்து பரிசுத்தவான்களிடம் வரும்போது எதைக் காண்பதாக பவுல் பயந்தான் ?
அவர்களுக்குள்ளே விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள் வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் அவர்களில் உண்டாகுமென்று பவுல் பயந்திருந்தான் [12:20]
தேவன் பவுலுக்கு என்ன செய்வார் என்று அவன் பயந்திருந்தான் ?
கொரிந்து பரிசுத்தவான்கள்முன் பவுலை தேவன் தாழ்த்துவார் என்று அவன் பயந்திருந்தான் [12:21]
முன்பு பாவம் செய்தவர்களாகிய கொரிந்து பரிசுத்தவான்களுக்காக தான் ஏன் துக்கப்படவேண்டுமென்று பவுல் எண்ணினான் ?
அவர்களில் அநேகர் முன்பு நடப்பித்த அசுத்தத்தையும், வேசித்தனத்தையும், காமவிகாரத்தையும் விட்டு அவர்கள் மனதிரும்பாமல் இருப்பார்கலேன்று பவுல் பயந்திருந்தான் [12:21]
2 Corinthians 13
2 Corinthians 13:1-2
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தின்போது பவுல் எத்தனை முறை கொரிந்தியர்களிடம் முன்பே வந்திருந்தான் ?
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தின்போது பவுல் இரண்டு முறை கொரிந்தியர்களிடம் முன்பே வந்திருந்தான்[13:1-2]
2 Corinthians 13:3-4
முன்பு பாவம் செய்தவர்களும், மற்ற எல்லோரிடமும்; உங்களிடத்தில் நான் மறுபடியும் வந்தால் தப்பவிடேன் என்று ஏன் பவுல் கூறினான் ?
கிறிஸ்து அவர்களுக்குள் பேசுகிறாரென்று அத்தாட்சி தேடுகிறதினால், பவுல் அவ்வாறு கூறினான் [13:3]
2 Corinthians 13:5-6
உங்களை நீங்களே சோதித்து அறிந்து பரீட்சித்துப் பாருங்கள் என ஏன் பவுல் கொரிந்தியர்களிடம் கூறினான் ?
அவர்கள் விசுவாசமுள்ளவர்கலோவென்று அறியும்படிக்கு சோதித்து அறிந்து பரீட்சித்துப் பாருங்கள் என ஏன் பவுல் கொரிந்தியர்களிடம் கூறினான்[13:5]
பவுல், அவனைக் குறித்தும் அவனோடிருந்தவர்களைக் குறித்தும் கொரிந்து பரிசுத்தவான்கள் அறிவார்கள் என என்னவென்று நிச்சயித்திருந்தான் ?
பவுல் மற்றும் அவனோடிருப்பவர்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள் என்று கொரிந்து பரிசுத்தவான்கள் அறிவார்கள் என பவுல் நிச்சயித்திருந்தான் [13:6]
2 Corinthians 13:7-8
பவுலும், அவனோடிருந்தவர்களும் என்ன செய்ய இயலவில்லை என பவுல் கூறுகிறான் ?
பவுல், சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றும் அவர்களால் செய்யக்கூடாமற்போயிற்று [13:8]
2 Corinthians 13:9-10
பவுல், கொரிந்து பரிசுத்தவான்களை விட்டு தூரமாய் இருக்கையில் ஏன் அவர்களுக்கு நிருபம் எழுதினான் ?
பவுல் கொரிந்து பரிசுத்தவான்களிடம் வந்திருக்கும்போது, அவர்களை கண்டிப்பு பண்ணாதபடிக்கு அவர்களுக்கு தூரத்திலிருந்து நிருபம் எழுதினான் [13:10]
கர்த்தர், பவுலுக்கு கொடுத்த அதிகாரத்தை கொரிந்து பரிசுத்தவான்களிடம் எதற்காக பயன்படுத்த விரும்பினான் ?
இடித்துப்போட அல்ல, அவர்களை ஊன்றக்கட்டவே கர்த்தர் பவுலுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பினான் [13:10]
2 Corinthians 13:11-12
பவுல், கடைசியாக கொரிந்தியர்கள் என்ன செய்யும்படி விரும்பினான் ?
பவுல்: சந்தோசமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள், ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்று பவுல் கூறினான் [13:11-12]
2 Corinthians 13:13-14
கொரிந்து பரிசுத்தவான்களோடு என்ன இருக்கும்படி பவுல் விரும்பினான் ?
கர்த்தாராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் அவர்கள் அனைவரோடுங்கூட இருக்கும்படி பவுல் விரும்பினான் [13:14]