Philemon
Philemon 1
Philemon 1:1-3
Q? இந்த நிருபத்தை எழுதுகையில் பவுல் எங்கே இருந்தான் ?
A. பவுல் இந்த நிருபத்தை எழுதுகையில் சிறைச்சாலையில் இருந்தான் [1:1,9,13].
Q? யாருக்கு இந்த நிருபம் எழுதப்பட்டது ?
A. இந்த நிருபம் பவுலுக்கு பிரியமும், உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கு எழுதப்பட்டது [1:1].
Q? சபை கூடிவருகிற இடம் எது ?
A. வீடு தான் சபை கூடுகிற இடம் [1:2].
Philemon 1:4-7
Q? பிலேமோனைக் குறித்து பவுல் கேள்விப்பட்ட நல்ல குணாதிசயங்கள் என்ன ?
A. பிலேமோனின் அன்பையும், விசுவாசத்தையும், உண்மையையும் எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும் பவுல் கேள்விப்பட்டான் [1:5].
Q? பவுலின் பார்வையில், பிலேமோன் பரிசுத்தவான்களுக்கு செய்தது என்ன ?
A. பரிசுத்தவான்களின் உள்ளம் இளைப்பாறினது[1:7].
Philemon 1:8-9
Q? பவுல் எதினால் பிலேமோனிடம் செய்யத்தக்கவைகளை கட்டளைக்கொடுக்காமல் கேட்டுக்கொண்டான் ?
A. பவுல் பிலேமோனிடம் அன்பினிமித்தம் கேட்டுக்கொண்டான்[1:9].
Philemon 1:10-13
Q? பவுல் ஒநேசிமுவுக்கு தகப்பனானது எப்போது ?
A. பவுல் சிறைச்சாலையில் இருக்கையில் ஒநேசிமுவுக்கு தகப்பன் ஆனான் [1:10].
Q? ஒநேசிமுக்கு பவுல் செய்தது என்ன ?
A. பவுல், ஒநேசிமுவை பிலேமோனிடம் அனுப்பினான் [1:12].
Q? பவுல் ஒநேசிமு என்ன செய்யவேண்டுமென்று விரும்பினான் ?
A. ஒநேசிமு, பிறருக்கு உதவி செய்யவேண்டுமென்று பவுல் விரும்பினான் [1:13].
Philemon 1:14-16
Q? பிலேமோன் ஒநேசிமுவிடம் சேர்ந்து என்ன செய்யும்படி பவுல் விரும்பினான் A. பிலேமோன், ஒநேசிமுவை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, பவுலிடம் அனுப்பும்படி சம்மதிக்கவேண்டுமென்று விரும்பினான் [1:14-16].
Q? ஒநேசிமுவை, பிலேமோன் எப்படி எண்ண வேண்டுமென்று பவுல் விரும்பினான் ?
A. ஒநேசிமுவை, பிலேமோன் பிரியமுள்ள சகோதரனாக எண்ண வேண்டுமென்று பவுல் விரும்பினான்[1:16].
Philemon 1:17-20
Philemon 1:21-22
Q? ஒநேசிமுவை, பவுலிடம்; பிலேமோன் திருப்பி அனுப்ப சம்மதித்தானா ? A. ஆம். பிலேமோன். ஒநேசிமுவை பவுலிடம் திருப்பி அனுப்புவான் என்று பவுல் திட்டமாய் நம்பினான் [1:21].
Q? சிறையிலிருந்து பவுல் விடுதலையானால் எங்கே வருவான் ?
A. பவுல் சிறையிலிருந்து விடுதலையானால் பிலேமோனிடம் வருவான் [1:22].