தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Romans

Romans 1

Romans 1:1-3

Q? பவுலின் காலத்திற்குமுன்பு, தேவன் எதன் மூலமாய் சுவிசேஷத்தை வாக்குரைத்தார்?

A. தேவன் பரிசுத்த வேதவாக்கியங்களில் தமது தீர்க்கதரிசிகள் மூலமாய் முன்பு சுவிசேஷத்தை வாக்குரைத்தார்[1:1-2].

Q? மாம்சத்தின்படி தேவனுடைய குமாரன் எந்த சந்ததியில் பிறந்தார்?

A. மாம்சத்தின்படி தேவனுடைய குமாரன் தாவீதின் சந்ததியில் பிறந்தார் [1:3].

Romans 1:4-6

Q? எந்த நிகழ்வினால் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அறிவிக்கப்பட்டார்?

A. மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பினதால் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அறிவிக்கப்பட்டார் [1:4].

Q? எந்த நோக்கத்திற்காக பவுல் கிறிஸ்துவிடமிருந்து கிருபையையும், அப்போஸ்தல ஊழியத்தையும் பெற்றான்?

A. சகல நாட்டு மக்களையும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணும்படி பவுல் கிருபையையும், அப்போஸ்தல ஊழியத்தையும் பெற்றான் [1:5].

Romans 1:7

Romans 1:8-10

Q? ரோமிலுள்ள விசுவாசிகளைக் குறித்த விஷயத்தில், பவுல் எதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறான்?

A. உலகமெங்கிலும் அவர்களது விசுவாசம் பறைசாற்றப்படுகிறபடியால், பவுல் தேவனுக்கு நன்றி கூறுகிறான் [1:8].

Romans 1:11-12

Q? பவுல் ரோமிலுள்ள விசுவாசிகளைக் காண ஏன் ஆசைப்பட்டான்?

A. அவர்களுக்கு சில ஆவிக்குரிய வரங்களைக் கொடுத்து, அவர்களை ஸ்திரப்படுத்தும்படி பவுல் அவர்களைக் காண ஆசைப்பட்டான் [1:11].

Romans 1:13-15

Q? இதுவரையிலும் ரோமிலிருந்த விசுவாசிகளை பவுலினால் ஏன் சந்திக்க முடியாமல் போனது?

A. இதுவரையிலும் பவுல் வரத் தடைப்பட்டபடியால், அவனால் அவர்களை சந்திக்க முடியாமல் போனது [1:13].

Romans 1:16-17

Q? சுவிசேஷம் என்னவென்று பவுல் கூறுகிறான்?

A. சுவிசேஷம் விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் இரட்சிக்கிற தேவ வல்லமையாயிருக்கிறது என்று பவுல் கூறுகிறான் [1:16].

Q? நீதிமான் எப்படி வாழ்வான் என்பதைப் பற்றி பவுல் எந்த வேதவாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறான்?

A. "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்ற வேதவாக்கியத்தை பவுல் மேற்கோள் காட்டுகிறான் [1:17].

Romans 1:18-19

Q? தேவனைப் பற்றி அறிவது அவர்களுக்குக் காண்பிக்கப் பட்டிருந்தபோதும், பக்தியற்றோரும், நீதியற்றோரும் என்ன செய்கிறார்கள்?

A. தேவனைப் பற்றி அறிவது அவர்களுக்குக் காண்பிக்கப் பட்டிருந்தபோதும், பக்தியற்றோரும், நீதியற்றோரும் சத்தியத்தை அடக்கி வைக்கிறார்கள் [1:18-19].

Romans 1:20-21

Q? தேவனைப் பற்றிய காணமுடியாத விஷயங்கள் எப்படி தெளிவாய் காணமுடிகிறவைகளாய் இருக்கிறது?

A. தேவனைப் பற்றிய காணமுடியாத விஷயங்கள் படைக்கப்பட்டவைகள் மூலம் தெளிவாய் காணமுடிகிறவைகளாய் இருக்கிறது [1:20].

Q?தேவனுடைய எந்த இயல்புகள் தெளிவாகக் காணக்கூடியவைகளாய் இருக்கிறது?

A. தேவனுடைய நித்திய வல்லமையும், தேவத்துவமும் தெளிவாகக் காணக்கூடியவைகள் [1:20].

Q? தேவனை மகிமைப்படுத்தாமலும், அவருக்கு நன்றி செலுத்தாமலும் இருப்பவர்களின் சிந்தனைகளுக்கும் இருதயங்களுக்கும் என்ன நேரிடுகிறது?

A. தேவனை மகிமைப்படுத்தாமலும், அவருக்கு நன்றி செலுத்தாமலும் இருப்பவர்கள் தங்கள் சிந்தனைகளில் மதிகெட்டுப் போவார்கள், அவர்களுடைய இருதயங்கள் இருளடைந்து விடுகின்றன [1:21].

Romans 1:22-23

Q? தேவன் தமது மகிமையை அழிந்துபோகிற மனிதர்கள் மற்றும் மிருகங்களுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றுகிறவர்களுக்கு என்ன செய்கிறார்?

A. தேவன் அவர்களைத் தங்கள் இருதயங்களில் கொண்டிருந்த இச்சையினிமித்தம் அசுத்தத்திற்கும், அவர்களுக்குள் தங்கள் சரீரங்களைக் கனவீனப்படுத்திக் கொள்ளவும் ஒப்புக்கொடுக்கிறார் [1:23-24].

Romans 1:24-25

Romans 1:26-27

Q? எந்த கனவீனமான ஆசைகளுக்கு, இந்தப் பெண்களும் ஆண்களும் தங்கள் இச்சைகளில் வெறி கொண்டிருந்தனர்?

A. பெண்கள் தங்களுக்குள் ஒருவர்மீது ஒருவர் காமவெறி கொண்டிருந்தனர், ஆண்கள் தங்களுக்குள் ஒருவர்மீது ஒருவர் காமவெறி கொண்டிருந்தனர் [1:26-27].

Romans 1:28

Q? தேவனைத் தங்கள் கவனத்தில் பெற்றிருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர் என்ன செய்கிறார்?

A. செய்யத் தகாதவைகளை செய்யும்படி தேவன் அவர்களை சீர்கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறார் [1:28].

Romans 1:29-31

Q? சீர்கேடான சிந்தை உடையோர் பெற்றிருக்கும் சில சுபாவங்கள் யாவை?

A. சீர்கேடான சிந்தை உடையோர் பொறாமை, கொலைவெறி, சண்டை, வஞ்சகம் மற்றும் தீய நோக்கங்கள் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள் [1:29].

Romans 1:32

Q? தேவனுடைய கோரிக்கைகளைப் பற்றி சீர்கேடான சிந்தை உடையோர் என்ன புரிந்திருந்தனர்?

A. அத்தகைய காரியங்களை செய்வோர் மரணத்திற்குப் பாத்திரர் என்று சீர்கேடான சிந்தை உடையோர் புரிந்திருந்தனர் [1:32].

Q? தேவனுடைய கோரிக்கைகளை சீர்கேடான சிந்தை உடையோர் புரிந்திருந்த போதிலும், அவர்கள் எதை வேண்டுமென்றே செய்தனர்?

A. அவர்கள் அநீதியான காரியங்களை வேண்டுமென்றே செய்தனர், அவைகளைச் செய்துவந்தோரையும் அங்கீகரித்தனர் [1:32].

Romans 2

Romans 2:1-2

Q? சில மக்கள் நியாயந் தீர்க்கப்படும்போது ஏன் தயவுபெற மாட்டார்கள்?

A. மற்றவர்களை நியாயந்தீர்க்கிற அதே செயல்களை அவர்கள் செய்கிறபடியால் சில மக்கள் நியாயந் தீர்க்கப்படும்போது தயவுபெற மாட்டார்கள் [2:1].

Q? அநீதியை நடப்பிப்போரை நியாயந் தீர்க்கும்போது, தேவன் எப்படி நியாயந் தீர்ப்பார்?

A. அநீதியை நடப்பிப்போரை தேவன் நியாயந் தீர்க்கும்போது, சத்தியத்தின்படி நியாயந் தீர்ப்பார் [2:2].

Romans 2:3-4

Q? தேவனுடைய பொறுமையும் நன்மையும் எதைச் செய்ய வழங்கப்பட்டுள்ளது?

A. தேவனுடைய பொறுமையும் நன்மையும் ஒரு நபரை மனந்திரும்புதலுக்கு வழிநடந்த வழங்கப்பட்டுள்ளது [2:4].

Romans 2:5-7

Q? தேவனிடத்தில் மனந்திரும்பாமல் கடின இருதயம் கொண்டோர் தங்களுக்கென்று சேர்த்து வைத்துக் கொண்டிருப்பது என்ன?

A. தேவனிடத்தில் மனந்திரும்பாமல் கடின இருதயம் கொண்டோர் தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பின் நாளில் தங்களுக்கென்று கோபாக்கினையை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் [2:5].

Q? தொடர்ச்சியாக நற்செயல் புரிவோர் என்ன பெறுகிறார்கள்?

A. தொடர்ச்சியாக நற்செயல் புரிவோர் நித்திய வாழ்வைப் பெறுகிறார்கள் [2:7].

Romans 2:8-9

Q? அநீதிக்குக் கீழ்ப்படிவோர் என்ன பெறுகிறார்கள்?

A. அநீதிக்குக் கீழ்ப்படிவோர் கோபாக்கினையும், கடுங்கோபத்தையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் பெறுகிறார்கள் [2:8-9].

Romans 2:10-12

Q? தேவன் தமது நியாயத்தீர்ப்பில் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே எப்படி பாரபட்சம் காட்டாமல் செயல்படுகிறார்?

A. யூதரோ, கிரேக்கரோ யார் பாவம் செய்கிறார்களோ அவர்கள் தேவன் பாரபட்சம் காட்டாதவாறு அழிவார்கள் [2:12].

Romans 2:13-14

Q? தேவனுக்கு முன்பாக யார் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்?

A. நியாயப்பிரமாணத்தை நடப்பிக்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக்கப்படுகிறார்கள் [2:13].

Q? யூதரல்லாத ஒருவன் தன் இருதயத்தில் நியாயப்பிரமாணம் கோரும் செயல்கள் எழுதியிருக்கிறதாக எப்படிக் காட்டுகிறான்?

A. நியாயப்பிரமாணத்தின் செயல்களை செய்கிறபோது, யூதரல்லாத ஒருவன் தன் இருதயத்தில் நியாயப்பிரமாணம் கோரும் செயல்கள் எழுதியிருக்கிறதாகக் காட்டுகிறான் [2:14-15].

Romans 2:15-16

Romans 2:17-20

Q? நியாயப்பிரமாணத்தை சார்ந்து, அதனை மற்றவர்களுக்கு போதிக்கிற யூதர்களுக்கு பவுல் என்ன சவால் கொடுக்கிறான்?

A. அவர்கள் மற்றவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதிப்பார்களானால், அவர்கள் தங்களுக்கும் அதைப் போதிக்க வேண்டுமென்று பவுல் சவால் கொடுக்கிறான் [2:17-21].

Romans 2:21-22

Q? நியாயப்பிரமாணத்தின் யூதப் போதகர்கள் செய்வதை நிறுத்த வேண்டுமென்று பவுல் எந்தப் பாவங்களைக் குறிப்பிடுகிறான்?

A. களவு, விபச்சாரம் மற்றும் கோவில்களைக் கொள்ளையிடுதல் ஆகிய பாவங்களைப் பவுல் குறிப்பிடுகிறான் [2:21-22].

Romans 2:23-24

Q? நியாயப்பிரமாணத்தின் யூதப் போதகர்களால் யூதரல்லாதவர்கள் மத்தியில் தேவனுடைய நாமம் ஏன் கனவீனம் பண்ணப்படுகிறது?

A. நியாயப்பிரமாணத்தின் யூதப் போதகர்கள் நியாயப்பிரமாணத்தை மீறுவதால் யூதரல்லாதவர்கள் மத்தியில் தேவனுடைய நாமம் கனவீனம் பண்ணப்படுகிறது [2:23-24].

Romans 2:25-27

Q? ஒரு யூத நபரின் விருத்தசேதனம் எப்படி விருத்தசேதனமற்றதாக மாற முடியும் என்று பவுல் கூறுகிறான்?

A. அந்த நபர் நியாயப்பிரமாணத்தை மீறுகிறவராய் இருந்தால், ஒரு யூத நபரின் விருத்தசேதனம் விருத்தசேதனமற்றதாக மாற முடியும் என்று பவுல் கூறுகிறான் [2:25].

Q?ஒரு யூதனல்லாத நபரின் விருத்தசேதனமின்மை எப்படி விருத்தசேதனமாகக் கருதப்படும் என்று பவுல் கூறுகிறான்?

A. அந்த நபர் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளை கைக்கொண்டால், ஒரு யூதனல்லாத நபரின் விருத்தசேதனமின்மை விருத்தசேதனமாகக் கருதப்படும் என்று பவுல் கூறுகிறான் [2:26].

Romans 2:28-29

Q? பவுல் யாரை ஒரு மெய்யான யூதனென்று கூறுகிறான்?

A. இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டு, உள்ளத்தில் யூதனாய் இருப்பவனே மெய்யான யூதனென்று பவுல் கூறுகிறான் [2:28-29].

Q? ஒரு மெய்யான யூதன் யாரிடமிருந்து புகழைப் பெறுவான்?

A. ஒரு மெய்யான யூதன் தேவனிடமிருந்து புகழைப் பெறுவான் [2:29].

Romans 3

Romans 3:1-2

Q? யூதனுக்குரிய மேன்மைகளில் பிரதானமானது எது?

A. தேவனிடமிருந்து வந்த வெளிப்பாடு அவர்களிடம் நம்பி கொடுக்கப்பட்டதே யூதனுக்குரிய மேன்மைகளில் பிரதானமானது [3:1-2].

Romans 3:3-4

Q? ஒவ்வொரு மனிதனும் பொய்யனாய் இருப்பினும், தேவன் எப்படி காணப்படுவார்?

A. ஒவ்வொரு மனிதனும் பொய்யனாய் இருப்பினும், தேவன் உண்மையுள்ளவராகவே காணப்படுவார் [3:4].

Romans 3:5-6

Q? தேவன் நீதிபரராய் இருப்பதினால், அவரால் என்ன செய்ய முடியும்?

A. தேவன் நீதிபரராய் இருப்பதினால், அவரால் உலகத்தை நியாயந்தீர்க்க முடியும் [3:5-6].

Romans 3:7-8

Q? "நன்மை வரும்படிக்கு, தீமை செய்வோமாக" என்று கூறுகிறவர்கள்மீது என்ன வருகிறது?

A. "நன்மை வரும்படிக்கு, தீமை செய்வோமாக" என்று கூறுகிறவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வருகிறது [3:8].

Romans 3:9-10

Q? யூதர்கள் மற்றும் கிரேக்கர்களாகிய அனைவரின் நீதி பற்றி வேதவாக்கியங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?

A. ஒருவரும் நீதிமான் இல்லை, ஒருவனாகிலும் இல்லை என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது [3:9-10].

Romans 3:11-12

Q? எழுதப்பட்டிருக்கிறபடி, யார் புரிந்துகொள்ளுகிறவர்களாவும் தேவனைத் தேடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்?

A. எழுதப்பட்டிருக்கிறபடி, ஒருவரும் புரிந்துகொள்ளுவதுமில்லை, ஒருவரும் தேவனைத் தேடுகிறதும் இல்லை [3:11].

Romans 3:13-14

Romans 3:15-18

Romans 3:19-20

Q? நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் யார் நீதிமான்களாக்கப்படுவார்கள்?

A. எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமான்களாக்கப்படுவதில்லை [3:20].

Q? நியாயப்பிரமாணத்தின்மூலம் என்ன வருகிறது?

A. நியாயப்பிரமாணத்தின்மூலம் பாவத்தைப் பற்றிய அறிவு வருகிறது [3:20].

Romans 3:21-22

Q? எந்த சாட்சிகளால் நியாயப்பிரமாணமில்லாமல் நீதி இப்பொழுது அறியப்பட்டிருக்கிறது?

A. நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சிகளால் நியாயப்பிரமாணமில்லாமல் நீதி இப்பொழுது அறியப்பட்டிருக்கிறது [3:21].

Q? நியாயப்பிரமாணமில்லாமல் இப்பொழுது அறியப்பட்டிருக்கிற நீதி யாது?

A. விசுவாசிக்கிற யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின்மூலம் நியாயப்பிரமாணமில்லாத நீதியாகிய தேவநீதி உண்டாயிருக்கிறது [3:22].

Romans 3:23-24

Q? தேவனுக்கு முன்பாக ஒருவன் எப்படி நீதிமானாக்கப்படுகிறான்?

A. கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் மூலம் இலவசமாய் அவருடைய கிருபையினால் ஒருவன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுகிறான் [3:24].

Romans 3:25-26

Q? எந்த நோக்கத்திற்காக தேவன் கிறிஸ்து இயேசுவை கொடுத்தார்?

A. அவருடைய இரத்தத்தின்மேல் வைக்கும் விசுவாசத்தின்மூலம் தேவன் கிறிஸ்து இயேசுவை ஒரு பாவநிவாரண பலியாக கொடுத்தார் [3:25].

Q?இயேசு கிறிஸ்துவின்மூலம் நிகழ்ந்த யாவற்றையும் கொண்டு தேவன் என்ன காண்பித்தார்?

A. இயேசுவில் விசுவாசம் வைக்கும் எவரையும் நீதிமானாக்குபவர் அவரே என்பதை தேவன் காண்பித்தார் [3:26].

Romans 3:27-28

Q?நீதிமானாக்குவதில் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு என்ன பங்கு இருக்கிறது?

A. ஒருவன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளின்றி விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறான் [3:28].

Romans 3:29-30

Q? விருத்தசேதனமுடைய யூதனையும், விருத்தசேதனமில்லாத

A. யூதனல்லாதவனையும் தேவன் எப்படி நீதிமானாக்குகிறார்?

Romans 3:31

Q? விசுவாசத்தின்மூலம் நியாயப்பிரமாணத்தை நாம் என்ன செய்கிறோம்?

A. விசுவாசத்தின்மூலம் நியாயப்பிரமாணத்தை நாம் கைக்கொள்கிறோம் [3:31].

Romans 4

Romans 4:1-3

Q?ஆபிரகாம் மேன்மைபாராட்ட எது காரணமாய் இருந்திருக்கும்?

A. அவன் கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டிருந்தால், மேன்மைபாராட்ட ஆபிரகாமிற்கு காரணம் இருந்திருக்கும் [4:2].

Q? ஆபிரகாம் எப்படி நீதிமானாக்கப்பட்டான் என்பதைப் பற்றி வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது?

A. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று வேதவாக்கியங்கள் கூறுகிறது [4:3].

Romans 4:4-5

Q? தேவன் எத்தகைய மக்களை நீதிமானாக்குகிறார்?

A. தேவன் தேவபக்தியற்றோரை நீதிமானாக்குகிறார் [4:5].

Romans 4:6-8

Q? தாவீதின் கூற்றுப்படி, எந்தவிதத்தில் ஒரு மனிதன் தேவனால் ஆசிர்வதிக்கப்படுகிறான்?

A. தாவீதின் கூற்றுப்படி, யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்களைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவானாய் இருக்கிறான் [4:6-8].

Romans 4:9-10

Q? ஆபிரகாமின் விசுவாசம் அவன் விருத்தசேதனம் பெறுவதற்குமுன்பா அல்லது அவன் விருத்தசேதனம் பெற்றபின்பா அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது?

A. ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுவதற்கு முன்பே அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது [4:9-10].

Romans 4:11-12

Q? எந்த மக்கள் கூட்டத்தினருக்கு ஆபிரகாம் தகப்பனாய் இருக்கிறான்?

A. விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும், விருத்தசேதனம் பெற்றவர்களுக்கும், விசுவாசிக்கிற அனைவருக்கும் ஆபிரகாம் தகப்பனாய் இருக்கிறான் [4:11-12].

Romans 4:13-15

Q? விசுவாசத்தின் நீதியின்மூலம் ஆபிரகாமிற்கும், அவனது சந்ததியருக்கும் என்ன வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது?

A. அவர்கள் உலகத்தை சுதந்தரிப்பார்கள் என்று ஆபிரகாமிற்கும், அவனது சந்ததியருக்கும் வாக்களிக்கப்பட்டது [4:13].

Q? நியாயப்பிரமாணத்தின்மூலம் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் வந்ததென்றால், எது உண்மையாகும்?

A. நியாயப்பிரமாணத்தின்மூலம் வாக்குத்தத்தம் வந்ததென்றால், பின்பு விசுவாசம் வெறுமையாகும், வாக்குத்தத்தம் பயனற்றதாய் போய்விடும் [4:14].

Romans 4:16-17

Q? என்ன காரணங்களுக்காக, வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் கொடுக்கப்படுகிறது?

A. அது கிருபையினால் உண்டாயிருக்கும்படிக்கும், அது உறுதியாயிருக்கும்படிக்கும் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் கொடுக்கப்படுகிறது [4:16].

Q? தேவன் செய்கிறதாய் பவுல் கூறுகிற இரண்டு காரியங்கள் யாவை?

A. தேவன் மரித்தோருக்கு வாழ்வளிக்கிறார் என்றும், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறார் என்றும் பவுல் கூறுகிறான் [4:17].

Romans 4:18-19

Q? அவன் அநேக தேசத்து மக்களுக்குத் தகப்பனாவான் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்புவதற்கு, ஆபிரகாமை கஷ்டப்படுத்திய வெளிப்புற சூழ்நிலைகள் யாவை?

A. தேவன் ஆபிரகாமிற்கு வாக்களித்தபோது, ஆபிரகாம் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருந்தான், சாராளின் கர்ப்பம் மரித்துப்போய் இருந்தது [4:18-19].

Romans 4:20-22

Q? இப்படிப்பட்ட வெளிப்புற சூழ்நிலைகள் இருந்தபோதிலும், ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு எப்படி மறுமொழி கொடுத்தான்?

A. ஆபிரகாம் தேவனை உறுதியாய் நம்பினான், அவன் அவிசுவாசத்தோடு தயங்கவில்லை [4:18,20].

Romans 4:23-25

Q? ஆபிரகாமின் வாழ்க்கை விவரம் யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது?

A. ஆபிரகாமின் வாழ்க்கை விவரம் அவனது பயனிற்காகவும், நம்முடைய பயனிற்காகவும் எழுதப்பட்டிருக்கிறது [4:23-24].

Q? தேவன் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்?

A. தேவன் நம்முடைய மீறுதலுக்காய் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினார் என்றும், நாம் நீதிமான்களாக்கப்பட அவரை எழுப்பினார் என்றும் விசுவாசிக்கிறோம் [4:25].

Romans 5

Romans 5:1-2

Q? விசுவாசிகள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டதினால் அவர்களுக்கு என்ன இருக்கிறது?

A. விசுவாசிகள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டதினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் அவர்களுக்கு தேவனிடத்தில் சமாதானம் உண்டாயிருக்கிறது [5:1].

Romans 5:3-5

Q? பாடுகள் உண்டுபண்ணுகிற மூன்று காரியங்கள் யாவை?

A. பாடுகள் சகிப்புத்தன்மை, அங்கீகாரம் மற்றும் திடநம்பிக்கையை உண்டுபண்ணுகிறது [5:3-4].

Romans 5:6-7

Romans 5:8-9

Q? தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பை எப்படி நிரூபிக்கிறார்?

A. நாம் பாவிகளாயிருக்கும்பொழுதே, கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பை நிரூபிக்கிறார் [5:8].

Q? கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டபடியால், விசுவாசிகள் எதிலிருந்து காக்கப்பட்டிருக்கிறார்கள்?

A. கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டபடியால், விசுவாசிகள் தேவனுடைய கோபத்திலிருந்து காக்கப்பட்டிருக்கிறார்கள் [5:9].

Romans 5:10-11

Q? இயேசுவின்மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாக்கப்படுவதற்குமுன்பு, அவிசுவாசிகள் தேவனிடத்தில் என்ன உறவு பெற்றிருந்தனர்?

A. இயேசுவின்மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாக்கப்படுவதற்குமுன்பு, அவிசுவாசிகள் தேவனுக்கு பகைவர்களாய் இருந்தார்கள் [5:10].

Romans 5:12-13

Q? ஒரு மனிதனுடைய பாவத்தினால் என்ன நடந்தது?

A. ஒரு மனிதனுடைய பாவத்தினால் பாவம் உலகத்திற்குள் பிரவேசித்தது, பாவத்தின்மூலம் மரணம் பிரவேசித்தது, மரணம் எல்லா மக்களுக்கும் பரவியது [5:12].

Romans 5:14-15

Q? எந்தவொரு மனிதன்மூலம் பாவம் உலகத்திற்குள் பிரவேசித்தது?

A. ஆதாம் என்ற ஒரு மனிதன்மூலம் பாவம் உலகத்திற்குள் பிரவேசித்தது [5:14].

Q? ஆதாமின் மீறுதலைவிட தேவனுடைய இலவச வெகுமதி எப்படி வித்தியாசமானது?

A. ஆதாமின் மீறுதலினால் அநேகர் மரித்தனர், ஆனால் தேவனுடைய இலவச வெகுமதியினால் அநேகர் பெருகினர் [5:15].

Romans 5:16-17

Q? ஆதாமின் மீறுதலினால் உண்டான விளைவு என்ன? தேவனுடைய இலவச வெகுமதியினால் உண்டான விளைவு என்ன?

A. குற்றவாளியாகத் தீர்க்கப்படுவது ஆதாமின் மீறுதலினால் உண்டான விளைவு, ஆனால் நீதிமானாக்கப்படுவது தேவனுடைய இலவச வெகுமதியினால் உண்டான விளைவு [5:16].

Q? ஆதாமின் மீறுதலினால் எது ஆளுகை செய்யும்? தேவனுடைய நீதியின் வெகுமதியினால் எது ஆளுகை செய்யும்?

A. ஆதாமின் மீறுதலினால் பாவம் ஆளுகை செய்யும், தேவனுடைய வெகுமதியைப் பெற்றோர் இயேசு கிறிஸ்துவின்மூலம் ஆளுகை செய்வார்கள் [5:17].

Romans 5:18-19

Q? ஆதாமின் கீழ்ப்படியாமையின்மூலம் அநேகர் என்ன ஆக்கப்பட்டார்கள்? கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின்மூலம் அநேகர் என்ன ஆக்கப்பட்டார்கள்?

A. ஆதாமின் கீழ்ப்படியாமையின்மூலம் அநேகர் பாவிகளாக்கப்பட்டார்கள், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின்மூலம் அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள் [5:19].

Romans 5:20-21

Q? கூடவே நியாயப்பிரமாணம் ஏன் வந்தது?

A. மீறுதல் பெருகும்படிக்கு, நியாயப்பிரமாணம் கூடவே வந்தது [5:20].

Q? மீறுதலைவிட எது பெருகியது?

A. தேவனுடைய கிருபை மீறுதலைவிட பெருகியது [5:20].

Romans 6

Romans 6:1-3

Q?தேவனுடைய கிருபை பெருகும்படிக்கு, விசுவாசிகள் பாவத்தில் தொடர வேண்டுமோ?

A. அப்படி ஒருபோதும் கூடாது [6:1-2].

Q? கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற மக்கள், எதற்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்?

A. கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற மக்கள், கிறிஸ்துவின் மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள் [6:3].

Romans 6:4-5

Q?கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டபடியால், விசுவாசிகள் என்ன செய்ய வேண்டும்?

A. விசுவாசிகள் புதிய வாழ்கை வாழ வேண்டும் [6:4].

Q? ஞானஸ்நானத்தின்மூலம், விசுவாசிகள் எந்த இரண்டு வழிகளில் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்?

A. விசுவாசிகள் கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள் [6:5].

Romans 6:6-7

Q?நாம் பாவத்திற்கு இனி அடிமையாகாதபடிக்கு, நமக்காக என்ன செய்யப்பட்டிருக்கிறது?

A. நாம் பாவத்திற்கு இனி அடிமையாகாதபடிக்கு, நமது பழைய மனிதன் கிறிஸ்துவோடு சிலுவையிலறையப்பட்டிருக்கிறான் [6:6].

Romans 6:8-9

Q? மரணம் இனி கிறிஸ்துவை ஆளுவதில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?

A. கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டபடியால், மரணம் இனி கிறிஸ்துவை ஆளுவதில்லை என்பதை நாம் அறிகிறோம் [6:9].

Romans 6:10-11

Q? கிறிஸ்து பாவத்திற்கென்று எத்தனை முறை மரித்தார்? அவர் எத்தனை மக்களுக்காக மரித்தார்?

A. கிறிஸ்து அனைவருக்காகவும் பாவத்திற்கென்று ஒருமுறை மரித்தார் [6:10].

Q? பாவத்தோடுள்ள தொடர்பில், ஒரு விசுவாசி தன்னைப் பற்றி எப்படி சிந்திக்க வேண்டும்?

A. ஒரு விசுவாசி பாவத்திற்கு மரித்தவனாய் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும் [6:10-11].

Q? ஒரு விசுவாசி தன் வாழ்க்கையை யாருக்காக வாழ்கிறான்?

A. ஒரு விசுவாசி தன் வாழ்க்கையை தேவனுக்காக வாழ்கிறான் [6:10-11].

Romans 6:12-14

Q? ஒரு விசுவாசி தன் சரீர அவயவங்களை யாருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்? என்ன நோக்கத்திற்காக?

A. ஒரு விசுவாசி தன் சரீர அவயவங்களை நீதியின் கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் [6:13].

Q? பாவத்தை ஆளுகை செய்ய அனுமதிக்கிற எதற்குக்கீழ் ஒரு விசுவாசி வாழ வேண்டும்?

A. பாவத்தை ஆளுகை செய்ய அனுமதிக்கிற கிருபைக்குக் கீழ் ஒரு விசுவாசி வாழ வேண்டும் [6:14].

Romans 6:15-16

Q? ஒருவன் தன்னை பாவத்திற்கு அடிமையாக்கிக் கொண்டால், அவனது இறுதி முடிவு என்னவாயிருக்கும்?

A. ஒருவன் தன்னை பாவத்திற்கு அடிமையாக்கிக் கொண்டால், அவனது இறுதி முடிவு மரணமாயிருக்கும் [6:16, 21].

Q? ஒருவன் தன்னை தேவனுக்கு அடிமையாக்கிக் கொண்டால், அவனது இறுதி முடிவு என்னவாயிருக்கும்?

A. ஒருவன் தன்னை தேவனுக்கு அடிமையாக்கிக் கொண்டால், அவனது இறுதி முடிவு நீதியாயிருக்கும் [6:16, 18-19].

Romans 6:17-18

Romans 6:19-21

Romans 6:22-23

Q? தேவனுடைய அடிமைகள் என்ன நோக்கத்திற்காக தங்கள் பலனைப் பெறுகிறார்கள்?

A. தேவனுடைய அடிமைகள் பரிசுத்தமாக்கப்படுவதற்காக தங்கள் பலனைப் பெறுகிறார்கள் [6:22].

Q? பாவத்தின் சம்பளம் என்ன?

A. பாவத்தின் சம்பளம் மரணம் [6:23].

Q?தேவனுடைய இலவச வரம் எது?

A. தேவனுடைய இலவச வரம் நித்திய வாழ்வு [6:23].

Romans 7

Romans 7:1

Q? நியாயப்பிரமாணம் ஒரு மனிதனை எவ்வளவு காலம் கட்டுப்படுத்துகிறது?

A. நியாயப்பிரமாணம் ஒரு மனிதனை அவன் உயிரோடிருக்கும்வரை கட்டுப்படுத்துகிறது [7:1].

Romans 7:2-3

Q? ஒரு மணமான பெண் திருமண சட்டத்தால் எவ்வளவு காலம் கட்டப்பட்டிருக்கிறாள்?

A. ஒரு மணமான பெண் தன் கணவன் மரிக்கும்வரை திருமண சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறாள் [7:2].

Q? ஒரு பெண் திருமண சட்டத்திலிருந்து விடுதலை பெற்றால், அவள் என்ன செய்வாள்?

A. ஒரு பெண் திருமண சட்டத்திலிருந்து விடுதலை பெற்றால், அவள் வேறொரு மனிதனை மணப்பாள் [7:3].

Romans 7:4-5

Q? விசுவாசிகள் நியாயப்பிரமாணத்திற்கு எப்படி மரிக்கப் பண்ணப்படுகிறார்கள்?

A. கிறிஸ்துவின் சரீரத்தின்மூலம் விசுவாசிகள் நியாயப்பிரமாணத்திற்கு மரிக்கப் பண்ணப்படுகிறார்கள் [7:4].

Q? நியாயப்பிரமாணத்திற்கு மரிக்கப் பண்ணப்பட்டவர்களாயிருக்க, விசுவாசிகளால் என்ன செய்ய முடியும்?

A. நியாயப்பிரமாணத்திற்கு மரிக்கப் பண்ணப்பட்டவர்களாயிருக்க, விசுவாசிகளால் கிறிஸ்துவுடன் இணைய முடியும் [7:4].

Romans 7:6

Romans 7:7-8

Q? நியாயப்பிரமாணம் நிறைவேற்றும் செயல்பாடு யாது?

A. நியாயப்பிரமாணம் பாவம் இன்னதென்று வெளிப்படுத்துகிறது [7:7].

Q? பாவம் நியாயப்பிரமாணத்தின் கட்டளையின்மூலம் என்ன செய்கிறது?

A. பாவம் நியாயப்பிரமாணத்தின் கட்டளையின்மூலம், ஒரு மனிதனிலுள்ள ஒவ்வொரு தவறான ஆசையையும் வெளியே கொண்டு வருகிறது [7:8].

Romans 7:9-10

Romans 7:11-12

Q? நியாயப்பிரமாணம் பாவமானதா அல்லது பரிசுத்தமானதா?

A. நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, அதன் கட்டளை பரிசுத்தமும், நீதியும், நன்மையுமானதாய் இருக்கிறது [7:7,12].

Romans 7:13-14

Q? பாவம் தனக்கு என்ன செய்கிறதென்று பவுல் கூறுகிறான்?

A. பாவம் நியாயப்பிரமாணத்தின்மூலம் தனக்குள் மரணத்தைக் கொண்டு வருகிறதென்று பவுல் கூறுகிறான் [7:13].

Romans 7:15-16

Q? நியாயப்பிரமாணம் நல்லதென்று பவுல் நியாயப்பிரமாணத்துடன் ஒத்துச்செல்ல ஏதுவாயிருந்தது எது?

A. பவுல் தான் விரும்பாததை செய்கிறபோது, நியாயப்பிரமாணம் நல்லதென்று நியாயப்பிரமாணத்துடன் ஒத்துச்செல்கிறான் [7:16].

Romans 7:17-18

Q? பவுல் செய்கிற, ஆனால் அவன் செய்ய விரும்பாத காரியங்களை செய்கிறது யார்?

A. பவுலிற்குள் வாசமாயிருக்கும் பாவம், அவன் செய்ய விரும்பாத காரியங்களை செய்கிறது [7:17,20].

Q? பவுலின் மாம்சத்தில் எது வாசம்செய்கிறது?

A. பவுலின் மாம்சத்தில் எந்தவொரு நன்மையும் வாசம் செய்யவில்லை [7:18].

Romans 7:19-21

Q? தனக்குள் கிரியை செய்கிறதாய் பவுல் காண்கிற விதி எது?

A. நன்மை செய்ய தனக்கு விருப்பமுண்டு, ஆனால் தீமையே தனக்குள் உண்மையாய் இருக்கிறது என்ற விதி தனக்குள் இருப்பதாக பவுல் காண்கிறான் [7:21-23].

Romans 7:22-23

Q? தனக்குள் கிரியை செய்கிறதாய் பவுல் காண்கிற விதி எது?

A. நன்மை செய்ய தனக்கு விருப்பமுண்டு, ஆனால் தீமையே தனக்குள் உண்மையாய் இருக்கிறது என்ற விதி தனக்குள் இருப்பதாக பவுல் காண்கிறான் [7:21-23].

Romans 7:24-25

Q? பவுல் தனது உள்ளான மனிதனில் எந்த விதியை காண்கிறான்? அவன் தன் சரீர அவயவங்களில் எந்த விதியை காண்கிறான்?

A. பவுல் தனது உள்ளான மனிதனில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் களிகூருவதாகவும், ஆனால் தன் சரீர அவயவங்களில் பாவம் எனும் விதி அவனை ஆண்டு கைதியாக்குகிறதாகவும் காண்கிறான் [7:23,25].

Q? பவுலை அவனது மரண சரீரத்திலிருந்து காப்பாற்றுவது யார்?

A. இயேசு கிறிஸ்துவின்மூலம் தனக்குக் கொடுத்த விடுதலைக்காக பவுல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான் [7:25].

Romans 8

Romans 8:1-2

Q? பாவம் மற்றும் மரணத்தின் விதியிலிருந்து பவுலை விடுதலையாக்கியது எது?

A. இயேசு கிறிஸ்துவுக்குள் உயிருள்ள ஆவியின் பிரமாணம் பவுலை பாவம் மற்றும் மரணத்தின் விதியிலிருந்து விடுதலையாக்கியது [8:2].

Romans 8:3-5

Q? நியாயப்பிரமாணத்தினால் ஏன் மக்களை பாவம் மற்றும் மரணத்தின் விதியிலிருந்து விடுதலையாக்க முடியவில்லை?

A. நியாயப்பிரமாணம் மாம்சத்தினால் பெலவீனமாயிருந்தபடியால், அதினால் முடியவில்லை [8:3].

Q? ஆவியின்படி நடக்கிறவர்கள் எதற்கு கவனம் செலுத்துவார்கள்?

A. ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்குக் கவனம் செலுத்துவார்கள் [8:4-5].

Romans 8:6-8

Q? தேவன் மற்றும் நியாயப்பிரமாணத்தோடுள்ள மாம்சத்தின் உறவு எத்தகையது?

A. மாம்சம் தேவனுக்கு எதிரானது, அது நியாயப்பிரமாணத்திற்கு அடங்கியிருக்க முடியாதது [8:7].

Romans 8:9-10

Q? தேவனை சேராதவர்கள் எதிலே குறைவுபடுவார்கள்?

A. தேவனை சேராதவர்கள் தங்களில் கிறிஸ்துவின் ஆவி வாசமாயிருப்பதைப் பெற்றிருக்க மாட்டார்கள் [8:9].

Romans 8:11

Q? விசுவாசியின் சாவுக்கேதுவான சரீரத்திற்கு தேவன் எப்படி உயிர் தருவார்?

A. தேவன் விசுவாசிக்குள் வாசம்செய்கிற தம்முடைய ஆவியின்மூலம் விசுவாசியின் சாவுக்கேதுவான சரீரத்திற்கு உயிர் தருவார் [8:11].

Romans 8:12-13

Q? தேவனுடைய குமாரர்கள் வாழ்வதற்கு எப்படி வழிநடத்தப்படுவார்கள்?

A. தேவனுடைய குமாரர்கள் வாழ்வதற்கு தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுவார்கள் [8:13-14].

Romans 8:14-15

Q? தேவனுடைய குமாரர்கள் வாழ்வதற்கு எப்படி வழிநடத்தப்படுவார்கள்?

A. தேவனுடைய குமாரர்கள் வாழ்வதற்கு தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுவார்கள் [8:13-14].

Q? ஒரு விசுவாசி தேவனுடைய குடும்பத்தில் எப்படி சேர்த்துக் கொள்ளப்படுகிறான்?

A. புத்திரசுவிகாரத்தினால் ஒரு விசுவாசி தேவனுடைய குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறான் [8:15].

Romans 8:16-17

Q? தேவனுடைய பிள்ளைகளாக, விசுவாசிகள் தேவனுடைய குடும்பத்தில் வேறு என்ன பயன் பெறுகிறார்கள்?

A. தேவனுடைய பிள்ளைகளாக, விசுவாசிகள் தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவோடு உடன் சுதந்தரருமாய் இருக்கிறார்கள் [8:17].

Romans 8:18-19

Q? நிகழ்காலப் பாடுகளை விசுவாசிகள் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?

A. தேவனுடைய குமாரர்கள் வெளிப்படும்போது விசுவாசிகள் கிறிஸ்துவுடன் மகிமைப்படும்படிக்கு நிகழ்காலப் பாடுகளை சகித்துக்கொள்ள வேண்டும் [8:17-19].

Romans 8:20-22

Q? நிகழ்காலத்தில், சிருஷ்டிப்பு எந்த வகையான அடிமைத்தனத்தின் கீழிருக்கிறது?

A. நிகழ்காலத்தில், சிருஷ்டிப்பு அழிவிற்குரிய வகையான அடிமைத்தனத்தின் கீழிருக்கிறது [8:21].

Q? எதற்குள் சிருஷ்டிப்பு விடுதலையாக்கப்படும்?

A. தேவனுடைய பிள்ளைகளின் மகிமையான விடுதலைக்குள் சிருஷ்டிப்பு விடுதலையாக்கப்படும் [8:21].

Romans 8:23-25

Q? விசுவாசிகள் சரீர மீட்பிற்காக எப்படிக் காத்திருக்க வேண்டும்?

A. விசுவாசிகள் சரீர மீட்பிற்காக திடநம்பிக்கையோடும், பொறுமையோடும் காத்திருக்க வேண்டும் [8:23-25]

Romans 8:26-27

Q? பரிசுத்தவான்களின் பெலவீனத்தில் உதவும்படிக்கு ஆவியானவர் தாமாக என்ன செய்கிறார்?

A. தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்தவான்கள் சார்பில் ஆவியானவர் தாமாக மன்றாடுகிறார் [8:26-27].

Romans 8:28-30

Q? தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கும், தேவனுடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் தேவன் சகல காரியங்களையும் சேர்த்து என்ன செய்கிறார்?

A. தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கும், தேவனுடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் தேவன் சகல காரியங்கள்மூலமாய் நன்மை உண்டாகும்படி செய்கிறார் [8:28].

Q? தேவன் தாம் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களுக்கு எந்தவிதமான எதிர்காலத்தை முன்குறித்திருந்தார்?

A. தேவன் தாம் எவர்களை முன்னறிந்தாரோ அவர்கள் தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாறுவதற்கு அவர்களை முன்குறித்திருந்தார் [8:29].

Q? தேவன் தாம் முன்குறித்திருந்தவர்களுக்கு வேறு என்ன செய்கிறார்?

A. எவர்களை முன்குறித்திருந்தாரோ, தேவன் அவர்களை அழைத்தும், நீதிமான்களாக்கியும், மகிமைப்படுத்தியுமிருக்கிறார் [8:30]

Romans 8:31-32

Q? தேவன் விசுவாசிகளுக்கு சகலவற்றையும் இலவசமாய்க் கொடுப்பார் என்பதை அவர்கள் எப்படி அறிகிறார்கள்?

A. அனைத்து விசுவாசிகளின் சார்பிலும் தேவன் தம்முடைய சொந்த குமாரனைக் கொடுத்தபடியால், தேவன் சகலவற்றையும் அவர்களுக்கு இலவசமாய்க் கொடுப்பார் என்று அவர்கள் அறிவார்கள் [8:32].

Romans 8:33-34

Q? கிறிஸ்து இயேசு தேவனுடைய வலது புறத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

A. கிறிஸ்து இயேசு தேவனுடைய வலது புறத்தில் பரிசுத்தவான்கள் சார்பில் மன்றாடிக் கொண்டிருக்கிறார் [8:34].

Romans 8:35-36

Q? விசுவாசிகள் துன்பம், உபத்திரவம் அல்லது மரணத்தையும்விட எப்படி மிகவும் வெற்றி பெறுகிறவர்களாய் இருக்கிறார்கள்?

A. விசுவாசிகள் தங்களிடத்தில் அன்புகூர்ந்தவரால் எல்லாவற்றின்மேலும் பெரும்வெற்றி பெறுகிறவர்களாய் இருக்கிறார்கள் [8:35-37].

Romans 8:37-39

Q? சிருஷ்டிக்கப்பட்டதொன்றும் விசுவாசிக்கு செய்ய முடியாதென்று எதைக் குறித்து பவுல் நம்பியிருந்தான்?

A. சிருஷ்டிக்கப்பட்டதொன்றும் விசுவாசியை தேவனுடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாதென்று பவுல் நம்பியிருந்தான் [8:39].

Romans 9

Romans 9:1-2

Q? பவுல் ஏன் தன் இருதயத்தில் பெருந்துக்கமும், இடைவிடாத வேதனையும் கொண்டிருந்தான்?

A. மாம்சத்தின்படி, இஸ்ரவேலராகிய தன் சகோதரர்களுக்காய் பவுல் துக்கமும் வேதனையும் கொண்டிருந்தான் [9:1-4].

Romans 9:3-5

Q? இஸ்ரவேலர் தங்கள் சரித்திரத்தில் எவைகளை உடையவர்களாயிருந்தார்கள்?

A. இஸ்ரவேலர் புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் உடையவர்களாயிருந்தார்கள் [9:4].

Romans 9:6-7

Q? இஸ்ரவேலிலுள்ள ஒவ்வொருவர் மற்றும் ஆபிரகாமின் அனைத்து சந்ததியர் பற்றி எது உண்மையல்ல என்று பவுல் கூறுகிறான்?

A. இஸ்ரவேலிலுள்ள ஒவ்வொருவரும் உண்மையாக இஸ்ரவேலர் அல்லவென்றும், ஆபிரகாமின் அனைத்து சந்ததியரும் உண்மையாக அவனுடைய பிள்ளைகள் அல்லவென்றும் பவுல் கூறுகிறான் [9:6-7].

Romans 9:8-9

Q? தேவனுடைய பிள்ளைகள் என்று யார் எண்ணப்படவில்லை?

A. மாம்சத்தின் பிள்ளைகள் தேவனுடைய பிள்ளைகள் என்று எண்ணப்படவில்லை [9:8].

Q? தேவனுடைய பிள்ளைகள் என்று யார் எண்ணப்படுகிறார்கள்?

A. வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் தேவனுடைய பிள்ளைகள் என்று எண்ணப்படுகிறார்கள் [9:8].

Romans 9:10-13

Q? ரெபெக்காளின் பிள்ளைகள் பிறப்பதற்குமுன்பு, அவளிடம், "மூத்தவன் இளையவனை சேவிப்பான்" என்ற வாக்கியம் வழங்கப்பட்டதற்கு பின்னாலிருந்த காரணம் என்ன?

A. தெரிந்துகொள்ளுதலின்படி தேவனுடைய நோக்கமே ரெபெக்காளிடம் அந்த வாக்கியம் வழங்கப்பட்டதற்கு காரணமாய் இருந்தது [9:10-12].

Romans 9:14-16

Q? தேவனுடைய வரங்களாகிய இரக்கம் மற்றும் மனதுருக்கத்திற்குப் பின்னால் எது காரணமாயிருந்தது?

A. தேவனுடைய தெரிந்துகொள்ளுதலே தேவனுடைய வரங்களாகிய இரக்கம் மற்றும் மனதுருக்கத்திற்குப் பின்னால் காரணமாயிருந்தது [9:14-16].

Q? தேவனுடைய வரங்களாகிய இரக்கம் மற்றும் மனதுருக்கத்திற்குப் பின்னால் எது காரணமாயிருக்கவில்லை?

A. வரங்களைப் பெறுகிறவனின் சித்தமோ அல்லது அவன் செயல்களோ தேவனுடைய வரங்களாகிய இரக்கம் மற்றும் மனதுருக்கத்திற்குப் பின்னால் காரணமாயிருக்கவில்லை [9:16].

Romans 9:17-18

Romans 9:19-21

Q? தேவன் நீதிபரராய் இருப்பதினால், அவர் மனிதனிடத்தில் குற்றம் கண்டு பிடிப்பாரோ என்று கேட்போருக்கு பவுல் அளிக்கும் பதில் என்ன?

A. "தேவனுக்கெதிராய் பதிலுரைப்பதற்கு நீ யார்?" என்று பவுல் பதிலளிக்கிறான் [9:20].

Romans 9:22-24

Q? அழிவிற்கு ஆயத்தமாயிருந்தோரிடத்தில் தேவன் என்ன செய்தார்?

A. அழிவிற்கு ஆயத்தமாயிருந்தோரிடத்தில் தேவன் மிகவும் பொறுமையாயிருந்து அவர்களை சகித்துக்கொண்டார் [9:22].

Q? மகிமைக்கு ஆயத்தமாயிருந்தோரிடத்தில் தேவன் என்ன செய்தார்?

A. தேவன் அவர்களுக்குத் தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தினார் [9:23].

Q? தேவனிடத்தில் யார் இரக்கம் பெறுகிறார்களோ, அவர்களை அவர் எந்த மக்களிடமிருந்து அழைத்திருக்கிறார்?

A. தேவனிடத்தில் யார் இரக்கம் பெறுகிறார்களோ, அவர்களை அவர் யூதர்கள் மற்றும் யூதரல்லாதவர்களிடமிருந்து அழைத்திருக்கிறார் [9:24].

Romans 9:25-26

Romans 9:27-29

Q? சகல இஸ்ரவேல் புத்திரரிலிருந்தும், எத்தனைபேர் இரட்சிக்கப்படுவார்கள்?

A. சகல இஸ்ரவேல் புத்திரரிலிருந்தும், மீதியாயிருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் [9:27].

Romans 9:30-31

Q? நீதியைப் பின்பற்றாத யூதரல்லாதவர்கள், அதனை எப்படி அடைந்தார்கள்?

A. யூதரல்லாதவர்கள் விசுவாசத்தினாலுண்டான நீதியினால் அதனை அடைந்தார்கள் [9:30].

Q? இஸ்ரவேலர் நீதியின் பிரமாணத்தைப் பின்பற்றியபோதும், ஏன் அவர்கள் அதை அடையவில்லை?

A. இஸ்ரவேலர் விசுவாசத்தினால் பின்பற்றாமல் கிரியைகளினால் அதை பின்பற்றியபடியினால், அவர்கள் அதை அடையவில்லை [9:31-32].

Romans 9:32-33

Q? இஸ்ரவேலர் எதன்மீது இடறினார்கள்?

A.இஸ்ரவேலர் தடுக்கி விழச்செய்யும் கல் மற்றும் தவற வைக்கும் பாறையின்மீது இடறினார்கள் [9:32-33].

Q?இடறாமல், ஆனால் விசுவாசமாயிருப்பவர்கள் எவர்களோ அவர்களுக்கு என்ன நடக்கிறது?

A. இடறாமல், ஆனால் விசுவாசமாயிருப்பவர்கள் எவர்களோ அவர்கள் அவமானம் அடைவதில்லை [9:33].

Romans 10

Romans 10:1-3

Q? இஸ்ரவேலராகிய தன் சகோதரர்களுக்கான பவுலின் விருப்பம் யாது?

A. இஸ்ரவேலரின் இரட்சிப்பு பவுலின் விருப்பமாயிருக்கிறது [10:1].

Q? இஸ்ரவேலர் எதை நிலைநாட்டத் தேடினர்?

A. இஸ்ரவேலர் தங்கள் சொந்த நீதியை நிலைநாட்டத் தேடினர் [10:3].

Q?இஸ்ரவேலர் எதைப் பற்றி அறியாதிருந்தார்கள்?

A. இஸ்ரவேலர் தேவனுடைய நீதியைப் பற்றி அறியாதிருந்தார்கள் [10:3].

Romans 10:4-5

Q? நியாயப்பிரமாணத்தோடுள்ள தொடர்பில் கிறிஸ்து என்ன செய்திருக்கிறார்?

A. விசுவாசிக்கிற யாவருக்கும் கிறிஸ்து நீதிக்கான நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறார் [10:4].

Romans 10:6-7

Romans 10:8-10

Q? பவுல் அறிவிக்கின்ற விசுவாசத்தின் வார்த்தை எங்கே இருக்கிறது?

A. விசுவாசத்தின் வார்த்தை அருகினில் வாயிலும், இருதயத்திலும் இருக்கிறது [10:8].

Q? ஒருவன் இரட்சிக்கப்பட அவன் என்ன செய்ய வேண்டுமென்று பவுல் கூறுகிறான்?

A. ஒருவன் தன் வாயினால் இயேசுவை கர்த்தர் என்று அறிக்கைசெய்து, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று இருதயத்தில் விசுவாசிக்க வேண்டுமென்று பவுல் கூறுகிறான் [10:9].

Romans 10:11-13

Q? எதனைச் செய்கிற ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள்?

A. கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுகிற ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் [10:13].

Romans 10:14-15

Q? ஒருவன் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடும்படிக்கு, அவனிடம் நற்செய்தியைக் கொண்டுசெல்வதற்கான தொடர்ச்சியான படிகளாகப் பவுல் எவற்றைக் கூறுகிறான்?

A. ஒருவன் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவதற்கு, முதலில் பிரசங்கிக்கிற ஒருவன் அனுப்பப்பட வேண்டும், பின்பு நற்செய்தியானது கேட்கப்பட்டு விசுவாசிக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறான் [10:14-15].

Romans 10:16-17

Q?விசுவாசம் உண்டாக எது கேட்கப்படுகிறது?

A. விசுவாசம் உண்டாக கிறிஸ்துவின் வசனம் கேட்கப்படுகிறது [10:17].

Romans 10:18

Q? இஸ்ரவேலர் நற்செய்தியைக் கேட்டு அறிந்திருந்தார்களா?

A. ஆம், இஸ்ரவேலர் நற்செய்தியைக் கேட்டு அறிந்திருந்தார்கள் [10:18-19].

Romans 10:19

Q? இஸ்ரவேலருக்கு எப்படி பொறாமை உண்டாக்கப் போவதாக தேவன் சொன்னார்?

A. தேவனைத் தேடாதவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதின்மூலம் இஸ்ரவேலருக்கு பொறாமை உண்டாக்கப் போவதாக தேவன் சொன்னார் [10:19-20].

Romans 10:20-21

Q? தேவன் இஸ்ரவேலரை சந்திக்க முற்பட்டபோது, அவர் என்ன கண்டு கொண்டார்?

A. தேவன் இஸ்ரவேலரை சந்திக்க முற்பட்டபோது, அவர்கள் கீழ்ப்படியாதவர்களும், எதிர்த்துநிற்கிறவர்களுமான மக்கள் என்று கண்டு கொண்டார் [10:21].

Romans 11

Romans 11:1-3

Q? தேவன் இஸ்ரவேலரைப் புறக்கணித்து விட்டாரோ?

A. ஒருபோதும் அப்படி இல்லை [11:1].

Romans 11:4-5

Q? ஏதேனும் உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் மீந்திருக்கிறார்கள் என்று பவுல் சொல்லுவானெனில், அப்படியே இருக்குமெனில், அவர்கள் எப்படி காக்கப்பட்டிருந்தார்கள்?

A. கிருபையின் தெரிந்துகொள்ளுதலினால் காக்கப்பட்டிருந்த ஒரு மீதியானக் கூட்டம் மீந்திருக்கிறார்கள் என்று பவுல் கூறுகிறான் [11:5].

Romans 11:6-8

Q? இஸ்ரவேலர் மத்தியில் யார் இரட்சிப்பை அடைந்தார்கள்?

A. இஸ்ரவேலர் மத்தியில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இரட்சிப்பை அடைந்தார்கள், மற்றவர்கள் கடினப்பட்டார்கள் [11:7].

Q?தேவனால் கொடுக்கப்பட்ட மந்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, அந்த ஆவி என்ன செய்தது?

A. மந்த ஆவி அவர்கள் கண்களைக் காணவிடாமலும், அவர்கள் காதுகளைக் கேட்கவிடாமலும் செய்தது [11:8,10].

Romans 11:9-10

Romans 11:11-12

Q? இஸ்ரவேலர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் என்ன நன்மை நேரிட்டது?

A. இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு வந்தது [11:11-12].

Romans 11:13-14

Romans 11:15-16

Romans 11:17-18

Q? பவுலின் ஒலிவ மரவேர் மற்றும் காட்டுக்கிளைகள் உவமானத்தில், வேராயிருப்பது யார்? காட்டுக்கிளைகளாயிருப்பது யார்?

A. இஸ்ரவேல் வேராயிருக்கிறார்கள், யூதரல்லாதவர்கள் காட்டுக்கிளைகளாயிருக்கிறார்கள் [11:13-14,17].

Romans 11:19-21

Q? காட்டுக்கிளைகள் எந்த மனோபாவத்தைத் தவிர்க்க வேண்டுமென்று பவுல் கூறுகிறான்?

A. காட்டுக்கிளைகள் முறிக்கப்பட்ட இயல்பான கிளைகள்மேல் பெருமை பாராட்டுகிற மனோபாவத்தைத் தவிர்க்க வேண்டுமென்று பவுல் கூறுகிறான் [11:18-20].

Q? காட்டுக்கிளைகளுக்குப் பவுல் கொடுக்கும் எச்சரிக்கை யாது?

A. தேவன் இயல்பான கிளைகளை தப்பவிடவில்லையெனில், காட்டுக் கிளைகள் அவிசுவாசத்தில் விழுமானால், அவைகளையும் அவர் தப்பவிடமாட்டார் என்று காட்டுக்கிளைகளைப் பவுல் எச்சரிக்கிறார் [11:20-22].

Romans 11:22

Romans 11:23-24

Q? இயல்பான கிளைகள் தங்கள் அவிசுவாசத்தில் தொடரவில்லையெனில், தேவன் அவைகளிடத்தில் என்ன செய்ய முடியும்?

A. தங்கள் அவிசுவாசத்தில் தொடராத இயல்பான கிளைகளை தேவன் மறுபடியும் ஒலிவமரத்தில் ஒட்டவைக்க முடியும் [11:23-24].

Romans 11:25

Q? இஸ்ரவேலில் ஒரு பகுதியினர் கடினமாயிருப்பது எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?

A. இஸ்ரவேலில் ஒரு பகுதியினர் கடினமாயிருக்கும் காலம் யூதரல்லாதவர்களில் ஒரு கூட்டம் உள்ளே வந்து சேரும்மட்டும் இருக்கும் [11:25].

Romans 11:26-27

Romans 11:28-29

Q? இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனாலும், ஏன் அவர்கள் தொடர்ந்து தேவனால் நேசிக்கப்படுகிறார்கள்?

A. முற்பிதாக்களினிமித்தமும், தேவனுடைய அழைப்பு மாறாததாய் இருக்கிறபடியினாலும், இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனாலும், அவர்கள் தொடர்ந்து தேவனால் நேசிக்கப்படுகிறார்கள் [11:28-29].

Romans 11:30-32

Q?யூதர் மற்றும் யூதரல்லாதவர் ஆகிய இருசாராரும் தேவனால் எப்படி காண்பிக்கப்பட்டிருக்கிறார்கள்?

A. யூதர் மற்றும் யூதரல்லாதவர் ஆகிய இருசாராரும் கீழ்ப்படியாதவர்களாய் காண்பிக்கப்பட்டிருக்கிறார்கள் [11:30-32].

Q?தேவன் கீழ்ப்படியாதவர்களுக்கு என்ன காட்டியுள்ளார்?

A. தேவன் கீழ்ப்படியாதவர்களாகிய யூதர் மற்றும் யூதரல்லாத இருசாராருக்கும் இரக்கத்தைக் காட்டியுள்ளார் [11:30-32].

Romans 11:33-34

Q? தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை யார் ஆராய்ச்சி செய்து, அவருக்கு அறிவுரை வழங்க முடியும்?

A. ஒருவராலும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை ஆராய்ச்சி செய்து, அவருக்கு அறிவுரை வழங்க முடியாது [11:33-34].

Romans 11:35-36

Q? எந்த மூன்று வழிகளில் அனைத்தும் தேவனோடு தொடர்புடையதாயிருக்கிறது?

A. அனைத்தும் தேவனிடமிருந்தும், தேவன்மூலமாகவும், தேவனுக்காகவும் இருக்கிறது [11:36].

Romans 12

Romans 12:1-2

Q? ஒரு விசுவாசிக்கான ஆவிக்குரிய ஆராதனை எது?

A. தன்னை தேவனுக்கு உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுப்பதே ஒரு விசுவாசிக்கான ஆவிக்குரிய ஆராதனை [12:1].

Q? விசுவாசியிலுள்ள மறுரூபமாக்கப்பட்ட மனம் அவனை என்ன செய்ய வைக்கும்?

A. மறுரூபமாக்கப்பட்ட மனம் ஒரு விசுவாசிக்கு தேவனுடைய நன்மையும், பிரியமும், பூரணமானதுமான சித்தம் இன்னதென்று அறிய வைக்கும் [12:2].

Romans 12:3

Q? ஒரு விசுவாசி தன்னைப் பற்றி எப்படி சிந்திக்கக் கூடாது?

A. ஒரு விசுவாசி தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டியதற்கு மேலாக சிந்திக்கக் கூடாது [12:3].

Romans 12:4-5

Q? அநேக விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாய் இருக்கிறார்கள்?

A. அநேக விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்கிறார்கள், தனித்தனியே ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறார்கள் [12:4-5].

Romans 12:6-8

Q? ஒவ்வொரு விசுவாசியும் தேவன் தங்களுக்கு வழங்கியுள்ள வரங்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?

A. ஒவ்வொரு விசுவாசியும் தனது விசுவாசத்தின் அளவிற்கேற்றபடி தன் வரங்களைப் பயன்படுத்த வேண்டும் [12:6].

Romans 12:9-10

Q? விசுவாசிகள் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும்?

A. விசுவாசிகள் ஒருவருக்கொருவர் பிரியமாயிருக்க வேண்டும், மேலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் [12:10].

Romans 12:11-13

Q? விசுவாசிகள் பரிசுத்தவான்களின் தேவைகளுக்கு எப்படி பதிற்கிரியை செய்ய வேண்டும்?

A. விசுவாசிகள் பரிசுத்தவான்களின் தேவைகளில் பகிர்ந்தளிக்க வேண்டும் [12:13].

Romans 12:14-16

Q? விசுவாசிகள் தங்களை உபத்திரவப்படுத்துவோருக்கு எப்படி பதிற்கிரியை செய்ய வேண்டும்?

A. விசுவாசிகள் தங்களை உபத்திரவப்படுத்துவோரை ஆசிர்வதிக்க வேண்டும், சபிக்கக் கூடாது [12:14].

Q? விசுவாசிகள் சிறுமைப்பட்ட மக்களை எப்படி நடத்த வேண்டும்?

A.விசுவாசிகள் சிறுமைப்பட்ட மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் [12:16].

Romans 12:17-18

Q? கூடுமானவரையில், விசுவாசிகள் அனைத்து மக்களிடமும் எதனை நாட வேண்டும்?

A. கூடுமானவரையில், விசுவாசிகள் அனைத்து மக்களிடமும் சமாதானத்தை நாட வேண்டும் [12:18].

Romans 12:19-21

Q? விசுவாசிகள் ஏன் தங்களுக்குள் பழிவாங்கக் கூடாது?

A. பழிவாங்குதல் கர்த்தருக்குரியதாய் இருப்பதால், விசுவாசிகள் தங்களுக்குள் பழிவாங்கக் கூடாது [12:19].

Q? விசுவாசிகள் தீமையை எப்படி மேற்கொள்ள வேண்டும்?

A. விசுவாசிகள் தீமையை நன்மையினால் மேற்கொள்ள வேண்டும் [12:21].

Romans 13

Romans 13:1-2

Q? பூமிக்குரிய அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை எங்கிருந்து பெறுகிறார்கள்?

A. பூமிக்குரிய அதிகாரிகள் தேவனால் நியமிக்கப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தேவனிடமிருந்து பெறுகிறார்கள் [13:1].

Q? பூமிக்குரிய அதிகாரியை எதிர்ப்போர் என்ன பெறுவார்கள்?

A. பூமிக்குரிய அதிகாரியை எதிர்ப்போர் தங்கள்மீது நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள் [13:2].

Romans 13:3-5

Q? ஆளும் அதிகாரிக்குப் பயப்படாமலிருக்க, விசுவாசிகள் என்ன செய்ய வேண்டுமென்று பவுல் கூறுகிறான்?

A. ஆளும் அதிகாரிக்குப் பயப்படாமலிருக்க, விசுவாசிகள் நன்மை செய்ய வேண்டுமென்று பவுல் கூறுகிறான் [13:3].

Q? தீமையை ஒடுக்க தேவன் அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் கொடுத்திருக்கிறார்?

A. தேவன் அதிகாரிகளுக்கு பட்டயத்தை சுமக்கும் அதிகாரத்தையும், தீமை செய்தவன்மீது கோபாக்கினையை செலுத்தும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் [13:4].

Romans 13:6-7

Q? பணம் தொடர்பில் தேவன் அதிகாரிகளுக்குக் கொடுத்த அதிகாரம் யாது?

A. வரிகளைக் கட்டக் கோரவேண்டுமென்று தேவன் அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் [13:6].

Romans 13:8-10

Q? விசுவாசிகள் மற்றவர்களிடம் எந்த ஒரு காரியத்திற்கு கடன்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறான்?

A. விசுவாசிகள் மற்றவர்களிடம் அன்புக்கு மட்டும் கடன்படும்படி பவுல் கூறுகிறான் [13:8].

Q? ஒரு விசுவாசி எப்படி நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்?

A. ஒரு விசுவாசி பிறனிடம் அன்புகூருவதினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான் [13:8,10].

Q? எந்தக் கட்டளைகளை நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதி என பவுல் வரிசைப்படுத்துகிறான்?

A. விபச்சாரம் செய்யாதிருங்கள், கொலை செய்யாதிருங்கள், களவு செய்யாதிருங்கள், இச்சியாதிருங்கள் என்கிற கட்டளைகளை நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதி என பவுல் வரிசைப்படுத்துகிறான் [13:9].

Romans 13:11-12

Q? விசுவாசிகள் எவற்றை களைந்துவிடவும், எவற்றை அணிந்துகொள்ளவும் வேண்டுமென்று பவுல் கூறுகிறான்?

A. விசுவாசிகள் இருளின் கிரியைகளைக் களைந்துவிடவும், ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்ளவும் வேண்டுமென்று பவுல் கூறுகிறான் [13:12].

Romans 13:13-14

Q? விசுவாசிகள் எந்தவித செயல்பாடுகளில் பங்கேற்கக் கூடாது?

A. விசுவாசிகள் களியாட்டங்களிலும், குடிவெறியிலும், பாலியல் முறைகேட்டிலும், காமவிகாரத்திலும், கலகத்திலும், பொறாமையிலும் பங்கேற்கக் கூடாது [13:13].

Q? மாம்சத்தின் இச்சைகள் பற்றிய விஷயத்தில் விசுவாசியின் சிந்தை எப்படியிருக்க வேண்டும்?

A. விசுவாசி மாம்சத்தின் இச்சைகளுக்கு எந்தவொரு இடத்தையும் கொடுக்கக்கூடாது [13:14].

Romans 14

Romans 14:1-2

Q? விசுவாசத்தில் பலமிக்கவன் எந்த வகையான ஆகாரத்தைப் புசிக்கிறான்? விசுவாசத்தில் பலவீனன் என்ன புசிக்கிறான்?

A. விசுவாசத்தில் பலமிக்கவன் எதையும் புசிக்கிறான், ஆனால் விசுவாசத்தில் பலவீனன் காய்கறிகளை மட்டுமே புசிக்கிறான் [14:2].

Q? விசுவாசிகள் தாங்கள் உணவருந்துவதில் வேறுபடும்போது ஒருவருக்கொருவர் எத்தகைய சிந்தை உடையவர்களாய் இருக்க வேண்டும்?

A. விசுவாசிகள் தாங்கள் உணவருந்துவதில் வேறுபடும்போது ஒருவருக்கொருவர் இழிவுபடுத்துவதோ அல்லது நியாயம் தீர்ப்பதோ கூடாது [14:1,3].

Romans 14:3-4

Q? எதையும் புசிக்கிறவன் மற்றும் காய்கறிகளை மட்டும் புசிக்கிறவன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது யார்?

A. எதையும் புசிக்கிறவன் மற்றும் காய்கறிகளை மட்டும் புசிக்கிறவன் ஆகிய இருவரையும் தேவன் ஏற்றுக்கொண்டிருக்கிறார் [14:3-4].

Romans 14:5-6

Q? தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயமாக வேறு எந்த விஷயத்தைப் பவுல் குறிப்பிடுகிறான்?

A. ஒரு நாளை மற்ற நாட்களைவிட விசேஷமானதாகவும் அல்லது எல்லா நாட்களையும் ஒன்றுபோல விசேஷமானதாகவும் மதிப்பிடுவது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று பவுல் குறிப்பிடுகிறான் [14:5].

Romans 14:7-9

Q? விசுவாசிகள் யாருக்காக வாழவும் மரிக்கவும் செய்கிறார்கள்?

A. விசுவாசிகள் கர்த்தருக்காக வாழவும் மரிக்கவும் செய்கிறார்கள் [14:7-8].

Romans 14:10-11

Q? விசுவாசிகள் அனைவரும் இறுதியில் எங்கே நிற்பார்கள்? அவர்கள் அங்கே என்ன செய்வார்கள்?

A. விசுவாசிகள் அனைவரும் இறுதியில் தேவனுடைய நியாயாசனத்திற்குமுன்பு தங்களைக் குறித்து தேவனிடம் கணக்கொப்புவிக்கிறவர்களாக நிற்பார்கள் [14:10-12].

Romans 14:12-13

Q? தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஒரு சகோதரன் மற்ற சகோதரனிடம் எந்தவிதமான சிந்தை கொண்டிருக்க வேண்டும்?

A. தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஒரு சகோதரன் மற்ற சகோதரனுக்குமுன் ஒரு தடைக்கல்லையோ அல்லது கண்ணியையோ வைக்கக்கூடாது [14:13].

Romans 14:14-15

Q? கர்த்தராகிய இயேசுவிற்குள் எந்த உணவுகள் தீட்டுள்ளது என்று பவுல் நிச்சயித்திருக்கிறான்?

A. எந்த உணவுகளும் தீட்டானதல்ல என்று பவுல் நிச்சயித்திருக்கிறான் [14:14].

Romans 14:16-17

Q? தேவனுடைய இராஜ்யம் எதைப் பற்றியது?

A. தேவனுடைய இராஜ்யம் நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவிக்குள் இருக்கும் சந்தோஷம் பற்றியது [14:17].

Romans 14:18-19

Romans 14:20-21

Q? ஒரு சகோதரன் மாமிசம் புசிக்காத அல்லது மது அருந்தாத மற்றொரு சகோதரனின் முன்னிலையில் எப்படி நடக்க வேண்டுமென்று பவுல் கூறுகிறான்?

A. ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனின் முன்னிலையில் மாமிசம் புசிக்காமலும், மது அருந்தாமலும் இருந்தால் நலமாயிருக்கும் என்று பவுல் கூறுகிறான் [14:21].

Romans 14:22-23

Q? ஒருவன் விசுவாசமின்றி செயல்பட்டால், அதன் முடிவு என்ன?

A. விசுவாசமில்லாமல் செய்யப்படும் செயல்கள் பாவமாகும் [14:23].

Romans 15

Romans 15:1-2

Q? பலமான விசுவாசம் கொண்ட விசுவாசிகள் பலவீனமான விசுவாசம் கொண்ட விசுவாசிகளிடம் என்ன சிந்தை கொண்டவர்களாயிருக்க வேண்டும்?

A. பலமான விசுவாசம் கொண்ட விசுவாசிகள் பலவீனமான விசுவாசம் கொண்டவர்களைக் கட்டி எழுப்பும்படிக்கு அவர்களின் பெலவீனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் [15:1-2].

Romans 15:3-4

Q? முன்பு எழுதப்பட்ட வேதவாக்கியங்களின் நோக்கங்களில் ஒன்று யாது?

A. முன்பு எழுதப்பட்ட வேதவாக்கியங்கள் நமக்குப் போதனையாக எழுதப்பட்டிருக்கின்றன [15:4].

Romans 15:5-7

Q? விசுவாசிகள் ஒருவருக்கொருவர் பொறுமையாயும், ஆறுதல் அளிப்பவர்களாகவும் இருப்பதின்மூலம் பவுல் என்ன ஆசைப்படுகிறான்?

A. விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்று பவுல் ஆசைப்படுகிறான் [15:5].

Romans 15:8-9

Q? ஒருவர் தமக்குப் பிரியமாய் வாழாமல், மற்றவர்களுக்கு சேவை செய்ததாகப் பவுல் பயன்படுத்துகிற மாதிரி யார்?

A. கிறிஸ்து தமக்குப் பிரியமாய் வாழாமல், மற்றவர்களுக்கு சேவை செய்தார் [15:3,8-9].

Romans 15:10-11

Q? தேவனுடைய இரக்கம் யூதரல்லாதவர்களை நோக்கி இருப்பதால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகிறது?

A. யூதரல்லாதவர்கள் கர்த்தரில் நம்பிக்கை வைத்து, மகிழ்ந்து, அவரைத் துதிப்பார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகிறது [15:10-12].

Romans 15:12

Romans 15:13

Q? பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் விசுவாசிகள் என்ன செய்ய முடியுமென்று பவுல் கூறுகிறான்?

A. விசுவாசிகள் சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரம்புவார்கள், மேலும் நம்பிக்கையில் பெருகுவார்கள் [15:13].

Romans 15:14

Romans 15:15-16

Q? தேவன் பவுலிற்கு கொடுத்த வரம் யாது? பவுலின் பணி எது?

A. யூதரல்லாதவர்களிடத்தில் அனுப்பப்பட்ட கிறிஸ்து இயேசுவின் ஊழியக்காரனாயிருப்பதே பவுலின் பணியாயிருக்கிறது [15:16].

Romans 15:17-19

Q? யூதரல்லாதவர்களை பவுலின்மூலம் கீழ்ப்படிதலில் கொண்டு வருவதற்கு, கிறிஸ்து எந்த வழிகளில் கிரியை செய்தார்?

A. கிறிஸ்து பவுலின்மூலம் வார்த்தை மற்றும் செய்கையினாலும், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களின் வல்லமையினாலும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும் கிரியை செய்தார் [15:18-19].

Romans 15:20-21

Q? பவுல் நற்செய்தியை எங்கே அறிவிக்க ஆசைப்பட்டான்?

A. கிறிஸ்துவின் பெயர் அறியப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கப் பவுல் ஆசைப்பட்டான் [15:20-21].

Romans 15:22-23

Romans 15:24-25

Q? ரோமிற்கும் வருவதற்கு அனுமதிக்கிற எந்த இடத்திற்குப் பயணம் செய்ய பவுல் திட்டமிடுகிறான்?

A. ரோமிற்கும் வருவதற்கு அனுமதிக்கிற ஸ்பானியாவிற்குப் பயணம் செய்ய பவுல் திட்டமிடுகிறான் [15:24,28].

Romans 15:26-27

Q? பவுல் இப்பொழுது ஏன் எருசலேமிற்கு சென்று கொண்டிருக்கிறான்?

A. எருசலேமிலுள்ள ஏழ்மையான பரிசுத்தவான்களுக்கு யூதரல்லாத விசுவாசிகள் கொடுத்த தர்மப்பணத்தை ஒப்படைக்கும்படி பவுல் இப்பொழுது எருசலேமிற்கு சென்று கொண்டிருக்கிறான் [15:25-26].

Q? யூதரல்லாத விசுவாசிகள் யூத விசுவாசிகளுக்கு பொருளுதவி செய்ய கடன்பட்டிருக்கிறார்கள் என்று பவுல் ஏன் சொல்லுகிறான்?

A. யூதரல்லாத விசுவாசிகள் யூத விசுவாசிகளின் ஆவிக்குரிய காரியங்களில் பங்குபெற்றிருப்பதனால் யூதரல்லாத விசுவாசிகள் யூத விசுவாசிகளுக்கு பொருளுதவி செய்ய கடன்பட்டிருக்கிறார்கள் [15:27].

Romans 15:28-29

Romans 15:30-32

Q? பவுல் யாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள விரும்புகிறான்?

A. யூதேயாவிலுள்ள கீழ்ப்படியாதவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள பவுல் விரும்புகிறான் [15:31].

Romans 15:33

Romans 16

Romans 16:1-2

Q? சகோதரி பெபேயாள் பவுலிற்கு என்ன ஆனாள்?

A. சகோதரி பெபேயாள் பவுலிற்கும், மற்றும் வேறு அநேகருக்கும் உதவுகிறவளானாள் [16:1-2].

Romans 16:3-5

Q? பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் கடந்த காலத்தில் பவுலிற்கு என்ன செய்திருந்தார்கள்?

A. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் கடந்த காலத்தில் பவுலிற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள் [16:4].

Q? ரோமில் விசுவாசிகள் கூடுகிற ஒரு இடம் எங்கே இருக்கிறது?

A. ரோமில் உள்ள விசுவாசிகள் பிரிஸ்கில்லாள் மற்றும் ஆக்கில்லாவின் வீட்டில் கூடுகிறார்கள் [16:5].

Romans 16:6-8

Q? கடந்த காலத்தில் அன்றோனீக்கையும் யூனியாவும் பவுலுடன் எந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்?

A. கடந்த காலத்தில் அன்றோனீக்கையும், யூனியாவும் பவுலுடன் உடன்கைதிகளாய் இருந்திருக்கிறார்கள் [16:7].

Romans 16:9-11

Romans 16:12-14

Romans 16:15-16

Q? விசுவாசிகள் ஒருவரையொருவர் எப்படி வாழ்த்துகிறார்கள்?

A. விசுவாசிகள் ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தால் வாழ்த்துகிறார்கள் [16:16].

Romans 16:17-18

Q? பிரிவினைகளையும் இடறலையும் உண்டாக்குகிறவிதமாய் சிலர் என்ன செய்கிறார்கள்?

A. கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவிதமாய், சிலர் தாங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்தையும் மிஞ்சி நடக்கிறார்கள் [16:17-18].

Q? பிரிவினைகளையும் இடறலையும் உண்டாக்குகிறவர்களிடம் விசுவாசிகள் என்ன செய்ய வேண்டுமென்று பவுல் கூறுகிறான்?

A. பிரிவினைகளையும் இடறலையும் உண்டாக்குகிறவர்களைவிட்டு விசுவாசிகள் விலகிப் போகும்படி பவுல் கூறுகிறான் [16:17].

Romans 16:19-20

Q? நன்மை மற்றும் தீமை பற்றிய விஷயத்தில் விசுவாசிகள் எத்தகைய சிந்தை உடையவர்களாய் இருக்க வேண்டுமென்று பவுல் விரும்புகிறான்?

A. விசுவாசிகள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாய் இருக்க வேண்டுமென்று பவுல் விரும்புகிறான் [16:19].

Q? சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் என்ன செய்யப் போகிறார்?

A. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை விசுவாசிகளின் பாதங்களின் கீழே நசுக்கிப் போடுவார் [16:20].

Romans 16:21-22

Q? இந்த நிருபத்தை உண்மையில் எழுதியது யார்?

A. தெர்தியு உண்மையில் இந்த நிருபத்தை எழுதினான் [16:22].

Romans 16:23-24

Q? விசுவாசியாகிய எரஸ்து என்ன வேலை செய்கிறான்?

A. எரஸ்து பட்டணத்தின் பொருளாளராக இருக்கிறான் [16:23].

Romans 16:25-26

Q?நீண்ட காலமாக இரகசியமாய் வைக்கப்பட்டிருந்த எந்த வெளிப்பாட்டை பவுல் இப்பொழுது பிரசங்கிக்கிறான்?

A. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாகிய வெளிப்பாட்டை பவுல் இப்பொழுது பிரசங்கிக்கிறான் [16:25-26].

Q? எந்த நோக்கத்திற்காகப் பவுல் பிரசங்கிக்கிறான்?

A. யூதரல்லாத எல்லார் மத்தியிலும் மக்கள் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு பவுல் பிரசங்கிக்கிறான் [16:26].

Romans 16:27