John
John 1
John 1:1-3
ஆதியிலே என்ன இருந்தது ?
ஆதியிலே வார்த்தை இருந்தது [1:1].
அந்த வார்த்தை யாரோடு இருந்தது ?
அந்த வார்த்தை தேவனோடு இருந்தது [1:1-2].
அந்த வார்த்தை என்ன ?
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது [1:1].
ஏதாகிலும் அவரில்லாமல் உண்டானதோ ?
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை [1:3].
John 1:4-5
அந்த வார்த்தையில் என்ன இருந்தது ?
அந்த வார்த்தையில் ஜீவன் இருந்தது [1:4].
John 1:6-8
தேவனால் அனுப்பப்பட்ட மனுஷனின் பேர் என்ன ?
அவன் பெயர் யோவான் [1:6].
யோவான் எதை செய்ய வந்தான் ?
அவன் தன்னால் எல்லோரும் அவரை விசுவாசிக்கும்படிக்கு அவரைக் குறித்து சாட்சிகொடுக்க வந்தான் [1:7].
John 1:9
John 1:10-11
யோவான் சாட்சிகொடுக்க வந்த அந்த ஒளியை உலகம் அறிந்ததா ? அல்லது ஏற்றுக்கொண்டதா ?
யோவான் சாட்சிகொடுக்க வந்த அந்த ஒளியை உலகம் அறியவில்லை, தமக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை [1:10-11].
John 1:12-13
அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு அந்த ஒளி என்ன செய்தது ?
அவருடைய நாமத்தில் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் யாவரும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் [1:13].
அவருடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்கள் எப்படி தேவனுடைய பிள்ளைகளாக இயலும் ?
அவர்கள் தேவனாலே பிறந்ததினால் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் ஆனார்கள் [1:13].
John 1:14-15
பிதாவினிடத்திலிருந்து வந்த அந்த வார்த்தையைப்போல் வேறுயாராகிலும் இருந்தார்களா? இருக்கிறார்களா ?
இல்லை! பிதாவினிடத்திலிருந்து வந்த அந்த வார்த்தையாகிய தனி நபர் அவரே [1:14].
John 1:16-18
யோவான் சாட்சி கொடுக்க வந்த அவருடைய பரிபூரணத்தினால் நாம் எதை பெற்றோம் ?
அவருடைய பரிபூரணத்தினால் நாம் கிருபைமேல் கிருபை பெற்றோம் [1:16].
இயேசு கிறிஸ்துவினால் என்ன உண்டானது ?
கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டாயிற்று [1:17].
எவனாகிலும் தேவனை எப்போதாகிலும் கண்டதுண்டோ ?
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை [1:18].
தேவனை நமக்கு வெளிப்படுத்தினது யார் ?
பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் [1:18].
John 1:19-21
John 1:22-23
எருசலேமிலிருந்து ஆசாரியரும் லேவியரும் யோவானிடம் நீர் யார் என்று கேட்டதற்கு அவன் கூறியது என்ன ? நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான் [1:19-23}
John 1:24-25
John 1:26-28
John 1:29-31
இயேசு தம்மிடம் வருகிறதை யோவான் கண்டு அவரைக் குறித்து கூறியது என்ன ?
இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான் [1:29].
ஏன் யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்க வந்தான் ?
இயேசு இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கு நான் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்க வந்தேன் என்றான் [1:31].
John 1:32-34
இயேசு தேவனுடைய குமாரன் என்பதற்கு யோவானுக்கு வெளிப்பட்ட அடையாளம் என்ன ?
ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று அறிந்திருந்தான் [1:32-34].
John 1:35-36
John 1:37-39
இயேசுவை யோவான் தேவ ஆட்டுக்குட்டி என்று அழைத்ததற்கு அவன் இரண்டு சீஷர்கள் என்ன செய்தனர் ?
அவர்கள் இயேசுவுக்குப்பின் சென்றனர் [1:35-37].
John 1:40-42
யோவான் சொல்லக்கேட்டு இயேசுவுக்குப் பின் சென்றவர்களில் ஒருவன் பெயர் என்ன ?
அவர்களில் ஒருவன் பெயர் அந்திரேயா [1:40].
அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோனிடம் இயேசுவைக் குறித்து கூறியது என்ன ?
அந்திரேயா: நாங்கள் மேசியாவைக் கண்டோம் என்றான் [1:41].
இயேசு, சீமோனிடம் அவன் எவ்வாறு அழைக்கப்படுவான் என்றார் ?
நீ கேபா என்றழைக்கப்படுவாய் என்றார் [பேதுரு என்று அர்த்தம்] [1:42].
John 1:43-45
அந்திரேயா, பேதுரு என்பவர்களின் ஊர் என்ன ?
பேதுருவும் அந்திரேயாவும் பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்தவர்கள் [1:44].
John 1:46-48
John 1:49-51
நாத்தான்வேல் இயேசுவைக் குறித்து கூறியது என்ன ?
நாத்தான்வேல், ரபி, நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா என்றான் [1:49].
நாத்தான்வேல் எதைக் காண்பான் என்று இயேசு சொன்னார் ?
வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் அவன் காண்பான் என்று இயேசு சொன்னார் [1:51].
John 2
John 2:1-2
கலிலேயாவிலுள்ள கானா ஊர் கல்யாணத்திலே இருந்தது யார் ?
இயேசுவும், அவருடைய தாய் மற்றும் அவருடைய சீஷர்களும் கலிலேயாவிலுள்ள கானா ஊர் கல்யாணத்திலே இருந்தனர் [2:1&11].
John 2:3-5
இயேசுவினுடைய தாய் ஏன் இயேசுவிடம் அவர்களுக்கு திராட்சைரசம் இல்லாதிருக்கிறதை கூறினாள் ?
அந்த சூழ்நிலையில் இயேசு எதாவது செய்வார் என்று நினைத்து அவள் திராட்சைரசம் குறைவுபட்டதை அவரிடம் கூறினாள் [2:5].
John 2:6-8
வேலைக்காரரிடம் இயேசு கூறிய இரண்டு காரியங்கள் என்ன ?
முதலாவது ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், பின்பு பந்தி விசாரிப்புகாரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார் [2:7-8].
John 2:9-10
பந்தி விசாரிப்புகாரன் திரட்சைரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்துவிட்டு கூறினது என்ன ?
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சை ரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான் [2:10].
John 2:11
இந்த அற்புதத்தைக் கண்ட இயேசுவின் சீஷர்களின் செயல் என்ன ?
அவர்கள் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள் [2:11].
John 2:12
John 2:13-14
எருசலேம் தேவாலயத்தில் இயேசு பிரவேசிக்கையில் அவர் கண்டது என்ன ?
ஆடுகள், மாடுகள், புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் காசுக்காரர்களையும் இயேசு கண்டார் [2:14].
John 2:15-16
விற்கிறவகர்ளுக்கும் காசுக்காரர்களுக்கும் இயேசு செய்தது என்ன ?
கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாயலத்துக்கு புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளை கொட்டி பலகைகளை கவிழ்த்துப்போட்டார் [2:15].
புறா விற்கிறவர்களிடம் இயேசு கூறியது என்ன ?
இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள் என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் [2:16].
John 2:17-19
தேவாலயத்தில் இயேசு செய்தவைகளைக் குறித்து யூதர்களின் கேள்வி என்ன ?
நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்கு காண்பிக்கிறீர் என்றார்கள் ? [2:18].
யூதர்களுக்கு இயேசு எவ்வாறு பதிலளித்தார் ?
இயேசு அவர்களிடத்தில்: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றரர் [2:19].
John 2:20-22
எந்த ஆலயத்தைக் குறித்து இயேசு கூறினார் ?
இயேசுவோ தம்முடைய ஆலயமாகிய சரீரத்தைக் குறித்து பேசினார் [2:21].
John 2:23-25
ஏன் அநேகர் அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள் ?
அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள் [2:23].
ஏன் இயேசு அவர்களோடே இணங்கவில்லை ?
மனிதரின் உள்ளத்திலிருப்பதை இயேசு அறிந்திருந்தபடியால், அவர்களோடு இணங்கவில்லை, மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்கு சாட்சிகொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை [2:24-25].
John 3
John 3:1-2
நிக்கொதேமு என்பவன் யார் ?
நிக்கொதேமு என்பவன் பரிசேயன், அவன் யூதருக்கு அதிகாரியாய் இருந்தான் [3:1].
இயேசுவைப் பற்றி நிக்கொதேமு கூறிய சாட்சி என்ன ?
ரபி, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தேவன் தன்னுடன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான் [3:2]
John 3:3-4
நிக்கொதேமு குழப்பமடைந்தவனாக எங்களுக்கு தெரியப்படுத்தும் என இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன ?
நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாய் இருக்கையில் எப்படி பிறப்பான் ? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்து பிறக்க கூடுமோ என்றான் ? [3:4&9].
John 3:5-6
John 3:7-8
John 3:9-11
நிக்கொதேமுவை இயேசு எவ்வாறு கடிந்துகொண்டார் ?
இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாய் இருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா ? மேலும் அவர்: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்கு அறிவித்தும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரம காரியங்களை நான் உங்களுக்கு சொல்வேனனால் எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார் [3:10-12].
John 3:12-13
பரலோகத்திற்கு ஏறினவன் யார் ?
பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்திலிருக்கிரவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை [3:13].
John 3:14-15
ஏன் மனுஷகுமாரன் உயர்த்தப்பட வேண்டும் ?
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவன் அடையும்படிக்கு மனுஷகுமாரன் உயர்த்தப்பட வேண்டும் [3:14-15].
John 3:16-18
தேவன் எவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் ?
தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்த்தார் [3:16].
உலகத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்க்க தேவன் தம்முடையக் குமரனை அனுப்பினாரா ?
இல்லை, அவராலே உலகம் இரட்சிக்கப்படும்படிக்கு அவரை அனுப்பினார் [3:17].
John 3:19-21
ஏன் மனிதர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள் ?
ஒளியானது உலகத்தில் வந்திருந்தும், மனுஷனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியால் அவர்கள் ஒளியை பார்க்கிலும் இருளை விரும்புகிறபடியால் அவர்கள் ஆக்கினைதீர்ப்புக்கு காரணமாவார்கள் [3:19].
பொல்லாப்பு செய்கிறவன் ஏன் ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான் ?
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியை பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கபடாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான் [3:20].
சத்தியத்தின்படி செய்கிறவன் ஏன் ஒளியினிடத்தில் வருகிறான் ?
சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய் செய்யப்படுகிறது வெளியாகும்படிக்கு ஒளியினிடத்திற்கு வருகிறான் [3:21].
John 3:22-24
John 3:25-26
John 3:27-28
John 3:29-33
யோவானுடைய சீஷர்கள், இயேசு ஞானஸ்நானங்கொடுக்கிறார் எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றதற்கு யோவான் கூறியது என்ன ?
யோவான்: அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்றான் [3:26&30].
John 3:34-36
John 4
John 4:1-3
எப்போது இயேசு யூதேயாவை விட்டு கலிலேயாவுக்கு போனார் ?
யோவானைப் பார்க்கிலும் இயேசு அநேகம்பேரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர் கேள்விபடத்தக்கதாக இயேசு அறிந்தபடியால் அவர் யூதேயாவை விட்டு கலிலேயாவுக்கு போனார் [4:1-3].
John 4:4-5
கலிலேயாவுக்கு பிரயாணமாய் போகிற வழியில் இயேசு எங்கே இளைப்பாறினார் ?
சமாரியாவிலுள்ள சீகார் எனப்பட்ட இடத்தில் யாகோபுக்கு சொந்தமான கிணற்றினருகே இயேசு இளைப்பாறினார் [4:5-6].
John 4:6-8
இயேசு யாக்கோபுடைய கிணற்றினருகே இருந்தபோது அங்கே யார் வந்தது ?
சாமாரிய ஸ்த்ரி தண்ணீர் மொள்ள வந்தாள் [4:7].
இயேசுவின் சீஷர்கள் எங்கே இருந்தனர் ?
போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்கள் ஊருக்குள் சென்றிருந்தனர் [4:8] # சாமாரிய ஸ்த்ரியிடம் இயேசு முதலில் கூறியது என்ன ? இயேசு அவளை நோக்கி தாகத்துக்கு தண்ணீர் தரும்படி கேட்டார் [4:7].
John 4:9-10
இயேசு, சமாரிய ஸ்த்ரியிடம் பேசியதைக் குறித்து ஏன் அவள் ஆச்சரியம் அடைந்தாள் ?
சமாரியர்கள் யூதர்களோடு சம்மந்தங்கலவாதபடியால் அவள் ஆச்சரியமடைந்தாள் [4:9].
இயேசு எதைக் கூறி பேச்சை தேவனுக்குண்டானதாய் மாற்றினார் ?
நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்று அறிந்திருந்தால். நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய் அவர் உனக்கு ஜீவத்தண்ணீர் கொடுத்திருப்பார் என்றார் [4:10].
John 4:11-12
இயேசு கூறியதின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை என்பதை காட்டும்படி அவள் எதைக் கூறினாள் ?
ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாய் இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும் என்றாள் [4:11].
John 4:13-14
John 4:15-16
இயேசு தாம் கொடுக்கும் தண்ணீரைக் குறித்து அவளிடம் கூறியது என்ன ?
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீராய் இருக்கும் என்றார் [4:15].
இயேசு கொடுக்கும் தண்ணீரை அவள் ஏன் பெற்றுக்கொள்ளும்படி விரும்பினாள் ?
ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் மொண்டுகொள்ள வராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்கு தரவேண்டும் என்றாள் [4:15].
இயேசு பின்பு பேச்சை மாற்றும்படி அவளிடம் கூறியது என்ன ?
இயேசு: நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா என்றார் [4:16].
John 4:17-18
போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா என்று இயேசு கூறியதற்கு அவள் கூறியது என்ன ?
அவள்: எனக்கு புருஷன் இல்லை என்றாள் [4:17].
அவள் இயேசுவை தீர்க்கதரிசி என்று அறியும்படி அவர் அவளிடம் கூறியது என்ன ?
உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்போது இருப்பவன் உனக்கு புருஷன் அல்ல என்றார் [4:18-19].
John 4:19-20
அவள் இயேசுவை தீர்க்கதரிசி என்று அறியும்படி அவர் அவளிடம் கூறியது என்ன ?
உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்போது இருப்பவன் உனக்கு புருஷன் அல்ல என்றார்[4:18-19].
ஆராதனைக் குறித்து அவள் இயேசுவிடம் செய்த விவாதம் என்ன ?
ஆரதனை செய்ய எது சரியான இடம் என்பதைக் குறித்து விவாதித்தாள் [4:20].
John 4:21-22
John 4:23-24
எப்படிப்பட்ட ஆராதனைக்காரர்களை பிதாவானவர் விரும்புவதாக இயேசு அவளிடம் கூறினார் ?
தேவன் ஆவியாய் இருக்கிறார் எனவே உண்மையாய் தொழுதுகொள்கிரவர்கள், ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுதுகொள்ள வேண்டும் என்றார் [4:23-24].
John 4:25-26
மேசியா எனப்படும் கிறிஸ்து வருகிறார், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்று அவள் கூறியதற்கு இயேசு கூறியது என்ன ?
உன்னுடனே பேசுகிற நானே அவர் என்று இயேசு கூறினார் [4:25-26].
John 4:27
John 4:28-30
இயேசுவிடம் பேசி முடித்துவிட்டு அவள் செய்தது என்ன ?
அவள், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய் ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்கு அறிவித்தார், அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானோ என்றாள் [4:28-29].
அந்த பெண்ணின் வார்த்தையைக் கேட்டு அந்த ஊரார் செய்தது என்ன ?
அவர்கள் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள் [4:30].
John 4:31-33
John 4:34-36
எதை இயேசு தன்னுடைய போஜனமாய் இருக்கிறது என்றார் ?
இயேசு: என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியைகளை முடிப்பதே என்னுடைய போஜனமாய் இருக்கிறது என்றார் [4:34].
அறுக்கிறதின் பலன் என்ன ?
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்து சந்தோஷபடத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்தியஜீவனுக்காக பலனை சேர்த்துக்கொள்கிறான் [4:36].
John 4:37-38
John 4:39-40
எந்த இரண்டு காரியத்தினிமித்தம் சமாரியா ஊரார் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள் ?
நான் செய்த எல்லாவற்றையும் எனக்கு சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்த்ரியினுடைய வார்த்தையினிமித்தமும், அவருடைய உபதேசத்தினிமித்தமும் சமாரியா ஊரிலிருந்த அநேகர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள் [4:39&41].
John 4:41-42
மேலும் பல சமாரியர்கள் எதினால் இயேசுவை விசுவாசித்தார்கள் ?
அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து அவரை விசுவாசித்தார்கள் [4:42].
John 4:43-45
இயேசு கலிலேயாவுக்கு வந்தபோது எதினால் அவரை கலிலேயர்கள் அவரை ஏற்றுக்கொண்டனர் ?
எருசலேமின் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டனர் [4:45].
John 4:46-47
இயேசு யூதேயாவை விட்டு கலிலேயாவுக்கு மறுபடியும் வந்தபோது, யார் அவரிடம் வந்தது ? அவன் இயேசு என்ன செய்யும்படி விரும்பினான் ?
ராஜாவின் மனுஷரில் ஒருவன் இயேசுவிடம் வந்து தன் மகன் மரணஅவஸ்தையாய் இருக்கிறான் என்றும் அவனை குணமாக்க வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான் [4:46-47].
John 4:48-50
ராஜாவின் மனுஷனுக்கு இயேசு அடையாளங்களையும் அற்புதங்களையும் குறித்துக் கூறியது என்ன ?
இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார் [4:48]
நீ போகலாம் உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று கூறிவிட்டு இயேசு தன்னோடு கூட வராததற்கு அவன் என்ன செய்தான் ?
அந்த மனுஷன் இயேசு சொன்ன வார்த்தையை நம்பி தன் வழியே போனான் [4:50].
John 4:51-52
John 4:53-54
உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள், நேற்று எழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள், இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து அவன் என்ன செய்தான் ?
ராஜாவின் மனுஷனும் அவன் வீட்டார் அனைவரும் இயேசுவை விசுவாசித்தார்கள் [4:53].
John 5
John 5:1-4
எருசலேமில் ஐந்து மண்டபங்களுண்டாயிருந்த ஆட்டுவாசல் என்றழைக்கப்படும் இடத்திலிருந்த குளத்தின் பெயர் என்ன ?
அந்த குளம் பெதஸ்தா என்று அழைக்கப்பட்டது [5:2].
பெதஸ்தாவினருகே இருந்தது யார் ?
பெதஸ்தாவினருகே குருடர், சப்பானியர், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர்கள் அநேகர் படுத்திருந்தார்கள் [5:3-4]
John 5:5-6
பெதஸ்தாவிலே யாரிடம் நீ சொஸ்தமாக விரும்புகிறாயா என்று இயேசு கேட்டார் ?
முப்பத்தெட்டு வருடமாய் வியாதி கொண்டிருந்து படுத்து கிடந்த ஒருவனை பார்த்து இயேசு கேட்டார் [5:5-6]
John 5:7-9
நீ சொஸ்தமாக விரும்புகிறாயா என்று இயேசு கேட்ட கேள்விக்கு அந்த வியாதியஸ்தனின் பதில் என்ன ?
வியாதியஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்க்குள்ளே வேறொருவன் எனக்கு முன் இறங்கிவிடுகிறான் என்றான் [5:7].
John 5:10-11
வியாதியஸ்தன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு போனது ஏன் யூதர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கிற்று ?
அது ஓய்வு நாளாய் இருந்தபடியால், அவன் படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது நியாமல்ல என்று வருத்தமடைந்தனர் [5:9-10].
John 5:12-13
John 5:14-15
சொஸ்தமாக்கப்பட்டவனை இயேசு தேவாலயத்தில் கண்டு அவனிடம் கூறியது என்ன ?
இதோ நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார் [5:14].
இனிப் பாவஞ்செய்யாதே என்று இயேசு அவனிடம் கூறிய பின்பு அவன் என்ன செய்தான் ? அந்த மனுஷன் போய், தன்னை சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு தலைவர்களுக்கு அறிவித்தான் [5:15].
John 5:16-18
ஓய்வுநாளில் இயேசு அவனை சொஸ்தமாக்கினபடியால் அவரை யூத தலைவர்கள் கொலை செய்ய வகைதேடினார்கள் அவர்களுக்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார் [5:17].
ஏன் இயேசுவின் வார்த்தை யூத தலைவர்கள் இயேசுவை கொலை செய்ய முற்படுத்தியது ?
ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்த பிதா என்று சொல்லி தம்மை தேவனுக்கு சமமாக்கினபடியால், யூத தலைவர்கள் அவரைக் கொலை செய்ய அதிகமாய் வகைதேடினார்கள் [5:18].
John 5:19-20
இயேசு என்ன செய்தார் ?
பிதாவானவர் செய்ய காண்கிறதை குமாரனும் செய்தார் [5:19].
John 5:21-23
யூதர்கள் ஆச்சரியப்படத்தக்கதாக எந்த பெரிய காரியங்களை பிதா தம்முடைய குமாரனுக்கு காண்பிக்கிறார் ?
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயர்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்கு சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார் [5:20-21].
ஏன் பிதா நியாயத்தீர்ப்பின் முழு அதிகாரத்தை குமாரனிடம் கொடுத்தார் ?
அன்றியும் பிதாவை கனம்பண்ணுகிறதுபோல எல்லோரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு நியாயத்தீர்ப்பின் முழு அதிகாரத்தை குமாரனிடம் கொடுத்தார் [5:22-23].
குமாரனை கனம்பண்ணாதவன் என்ன செய்கிறான் ?
குமாரனை கனம்பண்ணாதவன், அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாய் இருக்கிறான் [5:23].
John 5:24
இயேசுவின் வசனத்தைக் கேட்டு அவரை அனுப்பின பிதாவை விசுவாசிக்கிறவனுக்கு என்ன கிடைக்கும் ?
நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருப்பான் [5:24].
John 5:25
John 5:26-27
பிதாவானவர், குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடயவராய் இருக்கும்படி அருள்செய்திருக்கிறார் [5:26].
கல்லறைகளில் இருக்கிறவர்கள் பிதாவின் சத்தத்தைக் கேட்கும்பொழுது என்ன சம்பவிக்கும் ?
John 5:28-29
கல்லறைகளில் இருக்கிறவர்கள் பிதாவின் சத்தத்தைக் கேட்கும்பொழுது என்ன சம்பவிக்கும் ?
நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள் [5:28-29].
John 5:30-32
ஏன் இயேசுவின் நியாயதீர்ப்பு நீதியாய் இருக்கிறது ?
இயேசு தமக்கு சித்தமானதை தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்கு சித்தமானதையே தேடுகிறபடியால் அவருடைய நியாயதீர்ப்பு நீதியாய் இருக்கிறது [5:30].
John 5:33-35
John 5:36-38
மனிதனால் இயேசுவைக் குறித்து கொடுக்கப்படாத இரண்டு சாட்சிகள் என்ன ?
இயேசு நிறைவேற்றும்படிக்கு பிதா அவருக்கு கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே, பிதா என்னை அனுப்பினார் என்று சாட்சி கொடுக்கிறது [5:34-37].
யார் ஒருக்காலும் பிதாவின் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை ?
யூதர்கள் பிதாவின் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை[5:37].
John 5:39-40
யூதர்கள் ஏன் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறார்கள் ?
அவைகளால் அவர்கள் நித்திய ஜீவன் உண்டு என்று எண்ணுகிறார்கள் [5:39].
வேதவாக்கியங்கள் யாரைக் குறித்து சாட்சி கொடுக்கிறது ?
அவைகள் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறது [5:39].
John 5:41-42
John 5:43-44
யூதர்களில் யார் தேவனுடைய மகிமையை தேடாதவர்கள் ?
அவர்கள் தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையை தேடுகிறதில்லை [5:44].
John 5:45-8
யூதர்களை பிதாவின் முன்பு குற்றஞ்சாட்டுது யார் ?
யூதர்களை பிதாவின் முன்பு மோசே குற்றஞ்சாட்டுவான் [5:45].
யூதர்கள் மோசேயை விசுவாசித்திருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என இயேசு கூறுகிறார் ?
இயேசு: நீங்கள் மோசேயை விசுவாசித்தால் என்னையும் விசுவாசித்திருப்பீர்கள், அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே என்றார் [5:46-47].
John 5:9-47
இயேசு அந்த வியதியஸ்தனை நோக்கி எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துகொண்டு நட என்றதும் சம்பவித்தது என்ன ?
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான் [5:8-9]
John 6
John 6:1-3
கலிலேயா கடலின் மறுபெயர் என்ன ?
கலிலேயா கடலின் மறுபெயர் திபேரி எனப்படும் [6:1].
எதினால் திரளான ஜனங்கள் இயேசுவை பின் தொடர்ந்தனர் ?
இயேசு வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களை திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப்பின் சென்றனர் [6:2].
John 6:4-6
இயேசு மலையிமேல் ஏறி அங்கே தம்முடைய சீஷர்களோடு உட்கார்ந்தபின்பு எதைக் கண்டார் ?
திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டார் [6:4-5].
இவர்கள் சாப்பிட அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று ஏன் பிலிப்புனிடம் இயேசு கேட்டார் ?
இயேசு பிலிப்பை சோதிக்கும்படி அப்படி கேட்டார் [6:5-6].
John 6:7-9
இவர்கள் சாப்பிட அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்ற இயேசுவின் கேள்விக்கு பிலிப்பின் பதில் என்ன ?
பிலிப்பு: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும் இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்கு போதாதே என்றான் [6:7].
இவர்கள் சாப்பிட அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று இயேசுவின் கேள்விக்கு அந்திரேயாவின் பதில் என்ன ?
இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு ஆனாலும் இவ்வளவு ஜனங்களுக்கு இது எம்மாத்திரம் என்றான் [6:8-9].
John 6:10-12
எத்தனை புருஷர்கள் அங்கே இருந்தனர் ?
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர்கள் இருந்தார்கள் [6:10].
அப்பங்களையும் மீன்களையும் வைத்து இயேசு செய்தது என்ன ?
இயேசு அந்த அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி சீஷர்களிடத்தில் கொடுத்தார், சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்கு கொடுத்தார்கள், அந்தப்படியே மீன்களையும் அவர்களுக்கு கொடுத்தார் [6:11].
ஜனங்களுக்கு சாப்பிடும்படி எவ்வளவு உணவு கிடைத்தது ?
அவர்களுக்கு சாப்பிட வேண்டியமட்டும் கிடைத்தது [6:11].
John 6:13-15
அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளில் எவ்வளவு அப்பங்கள் மீதம் எடுத்தனர் ?
வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளினாலே நிரப்பினார்கள் [6:13].
ஏன் இயேசு விலகி, தனியே மலையிமேல் ஏறினார் ?
இயேசு செய்த அற்புதத்தை [ஐயாயிரம் பேர் புசித்தது] அவர்கள் கண்டு, அவர்கள் வந்து தம்மை ராஜவாகும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார் [6:14-15].
John 6:16-18
சீஷர்கள் படவில் ஏறி கப்பர்நாகூமுக்கு போகையில் வானிலை எப்படி இருந்தது ?
பெருங்காற்று அடித்தபடியினால் கடல் கொந்தளித்தது [6:18].
John 6:19-21
எதினால் சீஷர்கள் பயந்தார்கள் ?
இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்கு சமீபமாய் வருகிறதைக் கண்டு சீஷர்கள் பயந்தார்கள் [6:19].
இயேசு கூறிய எந்த வார்த்தை அவரை சீஷர்கள் படவில் ஏற்றுக்கொள்ள சம்மதித்தது ?
இயேசு: நான் தான் பயப்படாதிருங்கள் என்றார் [6:20].
John 6:22-23
John 6:24-25
John 6:26-27
ஜனங்கள் எதினால் தம்மைத் தேடுவதாக இயேசு கூறினார் ?
இயேசு: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, அப்பம் புசித்து திருப்தியடந்ததினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்றார் [6:26].
எவைகளுக்காக கிரியைகள் செய்யவும் எவைகளுக்காக கிரியைகள் செய்யாதிருக்கவும் இயேசு ஜனங்களிடம் கூறினார் ?
அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியையை நடப்பியுங்கள் என்றார் [6:27].
John 6:28-29
தேவனுகேற்ற கிரியை என்ன என்பதை இயேசு எவ்வாறு ஜனங்களுக்கு விளக்கினார் ?
இயேசு ஜனங்களிடம்: தேவன் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாய் இருக்கிறது என்றார் [6:29].
John 6:30-31
John 6:32-34
ஜனங்கள் இயேசுவினிடத்தில், நாங்கள் உம்மை விசுவாசிக்கும்படி தங்கள் பிதாக்களுக்கு வானத்திலிருந்து புசிக்க அப்பத்தை கொடுத்ததுபோல எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும் என்று கேட்க, இயேசு எந்த அப்பத்தைக் குறித்து பேசதுவங்கினார் ?
இயேசு: வானத்திலிருந்து இறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார் [6:30-35].
John 6:35-37
யார் இயேசுவினிடத்தில் வருவார் ?
பிதாவானவர் இயேசுவுக்குக் கொடுக்கிற யாவும் அவரிடத்தில் வருவார்கள் என்றார் [6:37].
John 6:38-40
இயேசுவை அனுப்பின பிதாவினுடைய சித்தம் என்ன ?
இயேசுவுக்கு தாம் தந்தவைகளில் ஒன்றையும் அவர் இழந்துபோகாமல், இயேசுவில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ அவன் நித்தியஜீவன் அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும் இயேசுவை அனுப்பின பிதாவின் சித்தமாய் இருக்கிறது [6:39-40].
John 6:41-42
John 6:43-45
எப்படி ஒருவன் இயேசுவிடம் வருவான் ?
பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், எவனும் இயேசுவினிடத்தில் வரான் [6:44].
John 6:46-47
பிதாவை கண்டவர் யார் ?
பிதாவினிடத்திலிருந்து வந்த அவர் ஒருவரே பிதாவைக் கண்டவர் [6:46].
John 6:48-49
John 6:50-51
உலகத்தின் ஜீவனுக்காக இயேசு கொடுக்கும் அப்பம் எது ?
இயேசு கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக அவர் கொடுக்கும் அவர் மாம்சமே [6:51].
John 6:52-53
உங்களுக்குள்ளே ஜீவன் உண்டாக நீங்கள் என்ன செய்யவேண்டும் ?
உங்களுக்குள்ளே ஜீவன் உண்டாக நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசித்து, அவருடைய இரத்தத்தை பானம்பண்ண வேண்டும் [6:53].
John 6:54-56
எப்படி இயேசு நம்மில் நிலைத்திருக்கவும், நாம் அவரில் நிலைத்திருக்கவும் இயலும் ?
அவருடைய மாம்சத்தை புசித்து அவருடைய இரத்த்தைதை பானம்பன்னுகிறவன் இயேசுவில் நிலைத்திருப்பான், அவரும் அவனில் நிலைத்திருப்பார் [6:56].
John 6:57-59
எதினால் இயேசு பிழைத்திருக்கிறார் ?
இயேசு பிதாவினால் பிழைத்திருக்கிறார் [6:57].
John 6:60-61
John 6:62-63
John 6:64-65
எப்படி ஒருவன் இயேசுவிடம் வருவான் ?
பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், எவனும் இயேசுவினிடத்தில் வரான் [6:44].
John 6:66-69
இயேசு பன்னிருவரையும் நோக்கி நீங்களும் போய்விடமனதாய் இருக்கிறீர்களோ ? என்று கேட்டதற்கு, பதில் கூறியது யார் ? கூறியது என்ன ?
சீமான் பேதுரு: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்து அறிந்தும் இருக்கிறோம் என்றான்
[6:67-69].
John 6:70-71
பன்னிருவரில் உங்களுக்குள் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்று இயேசு யாரை பற்றி கூறினார் ?
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து, பன்னிருவரில் ஒருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியால் அவனைக் குறித்து இப்படி சொன்னார் [6:70-71].
John 7
John 7:1-2
ஏன் இயேசு யூதேயாவிற்க்கு போக மனதில்லாதிருந்தார் ?
யூதர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடினபடியால் அவர் அங்கே போக மனதில்லாதிருந்தார் [7:1].
John 7:3-4
கூடாரப்பண்டிகை சமீபமாய் இருக்கையில் ஏன் இயேசுவின் சகோதரர்கள் அவரை யூதேயாவிற்கு போகும்படி துரிதப்படுத்தினார்கள் ?
இயேசு செய்கிற கிரியைகளை அவருடைய சீஷர்கள் பார்க்கும்படியும், உலகத்துக்கு அவர் தம்மை வெளிப்படுத்தும்படி இயேசுவின் சகோதரர்கள் அவரை யூதேயாவிற்குப் போகும்படி துரிதப்படுத்தினார்கள் [7:2-4].
John 7:5-7
பண்டிகைக்கு தாம் செல்லாததற்கு இயேசுவின் காரணம் என்ன ?
இயேசு தன் சகோதரரிடம்: என் வேளை இன்னும் வரவில்லை, என் வேளை இன்னும் வராததால் நான் போகிறதில்லை என்றார் [7:6&8].
ஏன் உலகம் இயேசுவைப் பகைக்கிறது ?
இயேசு: உலகத்தின் கிரியைகள் பொல்லாதவைகலென்று நான் சாட்சி கொடுக்கிறபடியால், அது என்னை பகைக்கிறது [7:7].
John 7:8-9
John 7:10-11
பண்டிகைக்கு இயேசு எப்போது சென்றார்? எப்படி சென்றார் ?
அவருடைய சகோதரர் போன பின்பு, அவர் வெளியரங்கமாய் போகாமல், அந்தரங்கமாய் பண்டிகைக்குப் போனார் [7:10].
John 7:12-13
ஜனக்கூட்டத்தில் இருந்தவர்கள் இயேசுவைக் குறித்து சொல்லிக்கொண்டது என்ன ?
சிலர் இயேசுவை நல்லவர் என்றார்கள், வேறு சிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்றார்கள் [7:12].
ஏன் ஒருவரும் இயேசுவைக் குறித்து வெளியரங்கமாய் பேசவில்லை ?
யூதருக்கு பயந்ததினாலே, ஒருவரும் இயேசுவைக் குறித்து வெளியரங்கமாய் பேசவில்லை [7:13].
John 7:14-16
எப்போது இயேசு தேவாலயத்துக்குப் போய், உபதேசம் பண்ணினார் ?
பாதிப்பண்டிகையானபோது இயேசு தேவாலயத்துக்குப் போய், உபதேசம் பண்ணினார் [7:14]
John 7:17-18
எப்படி ஒருவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ அல்லது நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்வான் என்று இயேசு கூறினார் ?
என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவனே இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ அல்லது நான் சுயமாய் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்வான் என்று இயேசு சொன்னார் [7:17].
தன்னை அனுப்பினவரின் மகிமையை தேடுகிறவனைக் குறித்து இயேசு கூறுவது என்ன ?
இயேசு: தன்னை அனுப்பினவரின் மகிமையை தேடுகிறவன் உண்மையாய் இருக்கிறான் அவனிடத்தில் அநீதியில்லை [7:18].
John 7:19-20
இயேசுவின் பார்வையில், எவன் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவன் ?
இயேசு: ஒருவனும் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை [7:19].
John 7:21-22
John 7:23-24
ஓய்வுநாளில் குணமாக்கியதைக் குறித்து இயேசுவின் வாதம் என்ன ?
இயேசுவின் வாதம்: நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனுக்கு விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள் மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாபடாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாய் இருக்கலாமா ?[7:22-23].
ஜனங்களை எப்படி நியாயத்தீர்ப்பு செய்யும்படி இயேசு கூறினார் ?
இயேசு: தோற்றத்தின்படி நியாயத்தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி நியாயத்தீர்ப்புச்செய்யுங்கள் என்றார் [7:24].
John 7:25-27
இயேசு, கிறிஸ்துதான் என்று ஜனங்கள் விசுவசியாமலிருக்க அவர்கள் கூறிய விளக்கங்களில் ஒன்று என்ன ?
இவன் எந்த இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் எந்த இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள் [7:27].
John 7:28-29
John 7:30-32
இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படி சேவகரை அனுப்பியது யார்?
பரிசேயரும், பிரதான ஆசாரியரும் இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படி சேவகரை அனுப்பினர் [7:32].
John 7:33-34
John 7:35-36
இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னை தேடுவீர்கள் ஆனாலும் என்னை காணமாட்டீர்கள்: நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்று இயேசு கூறியதை யூதர்கள் புரிந்துகொண்டார்களா ?
இயேசு கூறியதின் கருத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என அவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டது தெளிவுப்படுத்தியது [7:35-36].
John 7:37-38
John 7:39
ஒருவன் தாகமாய் இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன், வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ,
அவன் உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று எதைக் குறிப்பிடும்படி இப்படி கூறினார் ? இயேசு, தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படி சொன்னார் [7:39].
John 7:40-42
John 7:43-44
John 7:45-46
நீங்கள் ஏன் அவனை[இயேசுவை] கொண்டுவரவில்லை என்று பிரதான ஆசாரியரும், பரிசேயரும் கேட்க, சேவகரின் பதில் என்ன ?
சேவகர்கள்: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள் [7:45].
John 7:47-49
John 7:50-52
பரிசேயர், நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா, அதிகாரிகளிலாவது, பரிசேயரரிலாவது யாதொருவர் அவனை விசுவாசித்ததுண்டோ? என்று இயேசுவை பிடித்துக்கொண்டுவரும்படி அனுப்பப்பட்ட சேவகரிடம் கேட்டபொழுது, நிக்கோதேமுவின் பதில என்ன ?
நிக்கோதேமு பரிசேயரிடம்: ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயபிரமாணம் சொல்லுகிறதா என்றான் [7:50-51].
John 7:53
John 8
John 8:1-3
இயேசு தேவாலயத்தில் ஜனங்களுக்கு உபதேசம்பண்ணுகையில் பரிசேயரும் வேதபாரகரும் செய்தது என்ன ?
விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரியை, அவர் நடுவிலே நிறுத்தி, நீர் என்ன சொல்லுகிறீர் என்று [அவளை நியாயத்தீர்க்கும்படி]இயேசுவிடம் கேட்டனர் [8:2-3]
John 8:4-6
பரிசேயரும், வேதபாரகரும் ஏன் அந்த ஸ்திரியை இயேசுவிடம் கொண்டுவந்தனர் ? அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்தனர் [8:6]
John 8:7-8
பரிசேயரும், வேதபாரகரும் விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரியைக் குறித்து ஓயாமல் இயேசுவிடம் கேட்டுக்கொண்டே இருக்கையில், அவர்களுக்கு இயேசு கூறிய பதில் என்ன ?
இயேசு அவர்களை நோக்கி: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெரியக்கடவன் என்றார் [8:7].
John 8:9-11
விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரியின்மேல் முதலாவது எவன் கல்லெரியக்கடவன் என்று இயேசு கூறியபின்பு ஜனங்கள் செய்தது என்ன ?
இயேசு சொல்லியபின்பு, பெரியோர் முதல் சிறியோர் வரை ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள் [8:9].
விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரியிடம் என்ன செய்யும்படி இயேசு கூறினார் ?
இயேசு: நீ போ, இனி பாவஞ்செய்யாதே என்றார் [8:11].
John 8:12-13
நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன், என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்று இயேசு கூறியதற்கு பரிசேயர்களின் குற்றச்சாட்டு என்ன ?
பரிசேயர்: உன்னைக் குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள் [8:13].
John 8:14-16
John 8:17-18
இயேசு, அவருடைய சாட்சி உண்மையானது என்பதை அவர்களுக்கு எவ்வாறு விளக்கினார் ?
இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்களுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதே, என்னைக்[இயேசுவை] குறித்து நானும், என்னை அனுப்பின பிதாவும் சாட்சி கொடுக்கிறோம் என்றார் [8:17-18]
John 8:19-20
John 8:21-22
John 8:23-24
எவ்விதத்தில் இயேசு பரிசெயரைக் குறித்து நீங்கள் உங்கள் பாவங்களினலே சாவீர்கள் என்றார் ?
இயேசு கூறியது: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் உலகத்திலிருந்துண்டானவனல்ல [8:23-24].
பரிசேயர்கள் அவர்கள் பாவங்களிலே சாகாமல் தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் ?
இயேசு: நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார் [8:24].
John 8:25-27
எந்த காரியங்களை இயேசு உலகத்துக்கு அறிவித்தார் ?
பிதாவினிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்கு அறிவிப்பதாக இயேசு கூறினார் [8:26-27].
John 8:28-30
இயேசுவை அனுப்பின பிதா ஏன் அவரோடே கூட இருக்கிறார், ஏன் அவரை தனியே இருக்க விடுவதில்லை ?
பிதா இயேசுவோடு இருக்கிறார், பிதாவுக்கு பிரியமானவைகளை அவர் எப்போதும் செய்கிறபடியால், அவர் இயேசுவை தனிமையாய் இருக்க விடவில்லை [8:29].
John 8:31-33
இயேசுவை விசுவாசித்த யூதர்கள் எப்படி மெய்யான சீஷர்களாய் இருக்க இயலும் ?
அவர்கள் இயேசுவின் உபதேசத்திலே நிலைத்திருந்தால் மெய்யாகவே அவருடைய சீஷர்களாய் இருப்பார்கள் [8:31].
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறியதை, அவரை விசுவாசித்த யூதர்கள் என்னவென்று நினைத்தனர் ?
அவர்கள் மனிதனுக்கு அடிமையாய் இருப்பதைக் குறித்து இயேசு பேசுவதாக நினைத்தனர் [8:33].
John 8:34-36
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறியபோது அவர் எதைக் குறிப்பிட்டார் ?
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதைக் குறிப்பிட்டார் [8:34].
John 8:37-38
யூதர்கள் இயேசுவை கொலை செய்ய தேடுகிறதைக் குறித்து இயேசுவின் கருத்து என்ன ?
உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலை செய்யத் தேடுகிறீர்கள் என்றார் [8:37].
John 8:39-41
ஏன் இயேசு யூதர்களை ஆபிரகாமின் பிள்ளைகள் அல்லவென்று கூறினார் ?
இயேசு: ஆபிரகாமின் கிரியைகளை நீங்கள் செய்யாமல் மனுஷகுமாரனை கொலைசெய்ய வகைதேடுகிறபடியால் யூதர்களை ஆபிரகாமின் பிள்ளைகள் அல்லவென்று கூறினார்[8:39-40].
John 8:42-44
ஒரே பிதா எங்களுக்கு உண்டு அவரே தேவன் என்று யூதர்கள் கூறியதை எவ்வாறு இயேசு மறுத்தார் ?
இயேசு: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார் [8:42].
யூதர்களுக்கு யார் பிதா என்று இயேசு கூறினார் ?
இயேசு: உங்கள் பிதா பிசாசாயிருக்கிறான் [8:44].
பிசாசைக் குறித்து இயேசு கூறியது என்ன ?
இயேசு: அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாய் இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்து பேசுகிறான் என்றார் [8:44].
John 8:45-47
எவன் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறான் ?
தேவனால் உண்டானவன் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறான்[8:47].
John 8:48-49
John 8:50-51
ஒருவன் இயேசுவினுடைய வார்த்தையைக் கைக்கொண்டால் அவனுக்கு என்ன சம்பவிப்பதாக இயேசு கூறுகிறார் ?
ஒருவன் இயேசுவினுடைய வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்றார் [8:51].
John 8:52-53
மரணத்தைக் காண்பதில்லை என்று இயேசு கூறியதை ஏன் யூதர்கள் அன்னியக் காரியம்போல் எண்ணினார்கள் ?
அவர்கள் மாம்சத்தில் ஏற்படும் மரணத்தைக் குறித்து எண்ணியபடியால் இவ்வாறு நினைத்தார்கள் ஏனெனில் ஆபிரகாமும் அனேக தீர்க்கதரிசிகளும் [மாம்சத்தில் மரித்திருப்பதால்] மரித்திருக்கிரார்கள் [8:52-53].
John 8:54-56
John 8:57-59
எந்த வார்த்தை ஆபிரகாம் உயிரோடுஇருப்பதாகவும் அவனையும்விட இயேசு பெரியவர் என்று அவரைக் கூற வைத்தது ?
இயேசு: உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாய் இருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆபிரகாம் உண்டாகிறதிற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கூறியதில் ஆபிரகாம் உயிரோடுஇருப்பதாகவும் அவனையும்விட இயேசு பெரியவர் என்றும் காண்பிக்கிறது [8:56-58].
John 9
John 9:1-2
சீஷர்கள் பிறவிக்குருடனைக் பார்த்து என்னவென்று நினைத்தனர் ?
அவன் குருடனாய் பிறந்தது, அவன் செய்த பாவம் அல்லது அவன் பெற்றோர் செய்த பாவம் என சீஷர்கள் நினைத்தனர் [9:2].
John 9:3-5
அவன் குருடனாய் பிறந்ததற்கு இயேசு கூறியக் காரணம் என்ன ?
இயேசு: தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்ப்படும்போருட்டு குருடனாய் பிறந்தான் என்றார் [9:3].
John 9:6-7
இயேசு அந்தக் குருடனுக்கு செய்ததும், அவனிடம் கூறியதும் என்ன ?
இயேசு தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றை குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார் [9:6-7].
அந்தக் குருடன் சீலோவாம் குளத்தில் கழுவியப்பின்பு அவனுக்கு சம்பவித்தது என்ன ?
அவன் பார்வையடைந்தவனாய் திரும்பிவந்தான் [9:7].
John 9:8-9
அயலகத்தாரும், அவனைக் குருடனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றனர், வேறுசிலர் அவன் சாயலாய் இருக்கிறான் என்று வாக்குவாதம் செய்ய, அவன் கூறியது என்ன ?
அவன்: உட்கார்ந்து பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்தவன் நான்தான் என்றான் [9:9].
John 9:10-12
John 9:13-15
குருடனாய் இருந்தவனுக்கு ஜனங்கள் செய்தது என்ன ?
அவனைப் பரிசேயரிடத்திற்கு கொண்டுபோனார்கள் [9:13].
அவன் பார்வையடைந்தது எப்போது ?
அவன் கண்களைத்திறந்தது ஓய்வுநாளாய் இருந்தது [9:14].
பரிசேயர்கள் அந்தக் குருடனாய் இருந்தவனிடம் கேட்டது என்ன ?
அவர்கள் நீ எப்படி பார்வையடைந்தாய் என்று கேட்டனர் [9:15].
John 9:16-18
பரிசேயருக்குள்ளே எப்படிப்பட்ட பிரிவினை உண்டாயிற்று ?
பரிசேயரில் சிலர்: இயேசு ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால்[ஓய்வுநாளில் சுகமாக்கியது] அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படி செய்வான் என்றார்கள் [9:16].
இயேசுவைக் குறித்து குருடனாய் இருந்தவனிடம் கேட்டபொழுது அவன் கூறியது என்ன ?
குருடனாய் இருந்தவன்: அவர் ஒரு தீர்க்கதரிசி என்றான் [9:17].
பார்வையடைந்த மனிதனின் தாய்த்தகப்பன்மாரை யூதர்கள் ஏன் அழைத்தனர் ?
அவன் குருடனாய் இருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல் அவனுடைய தாய்த்தகப்பன்மாரை அழைத்தனர்[9:18-19].
John 9:19-21
தாய்த்தகப்பன்மார் அவர்களுடைய குமாரனைக் குறித்து கூறியது என்ன ?
தாய்த்தகப்பன்மார்: இவன் எங்கள் குமாரன்தான் என்றும் குருடனாய் பிறந்தான் என்றும் அவனைக் குறித்து கூறினார்கள் [9:20].
அவனுடைய தாய்த்தகப்பன்மார் எது அவர்களுக்குத் தெரியாது என்றார்கள் ?
இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது, இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்றும் எங்களுக்குத் தெரியாது என்றார்கள் [9:21].
John 9:22-23
இவன் வயதுசென்றவனாய் இருக்கிறானே இவனைக் கேளுங்கள் என்று ஏன் தாய்த்தகப்பன்மார் கூறினார்கள் ?
தாய்த்தகப்பன்மார் யூதர்களுக்கு பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்துக்கு புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் முன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள் [9:22].
John 9:24-25
குருடனாய் இருந்தவனை பரிசேயர்கள் இரண்டாந்தரம் அழைத்து அவனிடம் கூறியது என்ன ?
நீ தேவனை மகிமைப்படுத்து: இந்த மனுஷன்[இயேசு] பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள் [9:24].
பரிசேயர்கள் இயேசுவை பாவியென்று கூறியதற்கு, குருடனாய் இருந்தவனின் பதில் என்ன ?
அவன்: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது: நான் குருடனாய் இருந்தேன், இப்பொழுது காண்கிறேன்: இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான் [9:25].
John 9:26-27
பரிசேயர்கள் ஏன் குருடனாய் இருந்தவனைத் திட்டினார்கள் ?
குருடனாய் இருந்தவன்: நான் உங்களுக்கு முன்னமே சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன ? அவருக்கு சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான் அதற்க்கு அவனைத் திட்டினார்கள் [9:26-28].
John 9:28-29
John 9:30-31
John 9:32-34
பரிசேயர்கள் குருடனாய் இருந்தவனைத் திட்டியதும், பரிசேயருக்கு அவன் கூறிய பதில் என்ன ?
குருடனாய் இருந்தவனின் பதில், அவர் என் கண்களைத்திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமானக் காரியம். பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார் பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே, அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான் [9:30-33].
குருடனாய் இருந்தவனின் பதிலுக்கு பரிசேயர்களின் மறுபடி என்ன ?
அவர்கள்: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்கு போதிக்கிறாயோ என்று சொல்லி அவனை தேவாலயத்துக்கு புறம்பாக்கினார்கள் [9:34].
John 9:35-38
குருடனாயிருந்தவனை தேவாலயத்துக்கு புறம்பாக்கினதை இயேசு கேள்விப்பட்டு அவர் செய்து என்ன ?
இயேசு அவனைத் தேடிச் சென்றுக் கண்டுபிடித்தார் [9:35].
குருடனாயிருந்தவனை இயேசு கண்டு அவனிடம் கூறியது என்ன ?
இயேசு: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்று கேட்டு, குருடனாயிருந்தவனிடம் உன்னுடன் பேசுகிற நான்தான் மனுஷகுமாரன்[இயேசு] என்றார் [9:35-36].
இயேசு தான் மனுஷகுமாரன் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு குருடனாயிருந்தவன் செய்தது என்ன ?
உடனே குருடனாயிருந்தவன் இயேசுவை ஆண்டவரே என்று சொல்லி விசுவாசித்து, அவரைப் பணிந்துகொண்டான் [9:38].
John 9:39-41
பரிசேயரின் பாவங்களைக் குறித்து இயேசு கூறியது என்ன?
இயேசு: நீங்கள் குருடராய் இருந்தால் உங்களுக்கு பாவமிராது: நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைத்திருக்கிறது என்றார் [9:41]
John 10
John 10:1-2
இயேசுவின் பார்வையில் எவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் ?
ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்[10:1].
எவன் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய் பிரவேசிகிறவன் ?
ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான் [10:2].
John 10:3-4
ஏன் ஆடுகள் தன் மேய்ப்பனின் கூப்பிடுதளுக்குப் பின் செல்லுகிறது ?
ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் அவனுக்குப் பின் செல்லுகிறது [10:3-4].
John 10:5-6
அந்நியனுக்குப்பின் ஆடுகள் செல்லுமோ ?
இல்லை, அந்நியனுக்குப்பின் ஆடுகள் செல்லுவதில்லை [10:5].
John 10:7-8
இயேசுவுக்குமுன் வந்த அனைவரும் யார் ?
இயேசுவுக்குமுன் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறபடியால், ஆடுகள் அவர்கள் சத்தத்துக்கு செவிகொடுக்கவில்லை [10:7].
John 10:9-10
நானே வாசல், ஒருவன் வாசல் வழியாய் உட்பிரவேசித்தால் அவனுக்கு என்ன ஆகும் என இயேசு கூறுகிறார் ?
என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறமும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான் [10:9].
John 10:11-13
நல்ல மேய்ப்பனாகிய இயேசு, ஆடுகளுக்காக என்ன கொடுப்பதாக கூறுகிறார் ?
இயேசு: நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுகிறார் [10:11 &15].
John 10:14-16
தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறே ஆடுகளும் இயேசுவுக்கு உண்டா? அவைகளுக்கு சம்பவிப்பது என்ன ?
இயேசு: இந்த தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்கு செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும் என்றார் [10:16].
John 10:17-18
ஏன் பிதா இயேசுவில் அன்பாய் இருக்கிறார் ?
இயேசு தன் ஜீவனை மறுபடியும் அடையும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா இயேசுவில் அன்பாய் இருக்கிறார் [10:17].
எவனாகிலும் இயேசுவின் ஜீவனை எடுக்க இயலுமோ ?
இல்ல, அவரே அதைக் கொடுக்கிறார் [10:18].
இயேசுவுக்கு தன் ஜீவனைக் கொடுக்கவும், அதை திரும்ப எடுக்கவும் எங்கேயிருந்து அதிகாரம் கிடைத்தது ?
இந்தக் கட்டளையை இயேசு பிதாவினிடத்திருந்து பெற்றுக்கொண்டார் [10:18].
John 10:19-21
இயேசுவின் வசனங்களினிமித்தம் யூதர்கள் கூறியது என்ன ?
இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்கு செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள். வேறுசிலர், இந்த வசனங்கள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடனுடைய கண்களை பிசாசு திறக்கக்கூடுமோ ? என்றார்கள் [10:19-21].
John 10:22-24
சாலமோன் தேவாலயத்து மண்டபத்தில் யூதர்கள் இயேசுவை சூழ்ந்துகொண்டு அவரிடம் கூறியது என்ன ?
அவர்கள்: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்கு சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்கு தெளிவாய் சொல்லும் என்றார்கள் [10:24].
John 10:25-26
சாலமோன் தேவாலயத்து மண்டபத்தில் யூதர்களுக்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு: நான் அதை உங்களுக்கு சொன்னேன்[நான் கிறிஸ்துதான்], நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள் [10:25-26].
John 10:27-28
இயேசு தன்னுடைய ஆடுகளின் காவனிப்பையும், பாதுகாப்பையும் குறித்து கூறுவது என்ன ?
இயேசு: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை [10:28].
John 10:29-31
ஆடுகளை இயேசுவுக்கு கொடுத்தது யார் ?
ஆடுகளை இயேசுவுக்கு பிதா கொடுத்திருக்கிறார் [10:29].
பிதாவிலும் பெரியவன் எவனாகிலும் உண்டோ ?
எல்லோரிலும் பிதா பெரியவராய் இருக்கிறார் [10:29].
John 10:32-33
இயேசு பிதாவும் நானும் ஒன்றாய் இருக்கிறோம் என்றதற்கு ஏன் மறுபடியும் யூதர்கள் அவர்மேல் கல்லெறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள் ?
நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள் [10:30-33].
John 10:34-36
தேவ தூஷணம் என்ற குற்றச்சாட்டுக்கு இயேசுவின் மறுமொழி என்ன ?
இயேசு: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா ? தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேத வாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்படும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ தூஷணம் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா ?[10:34-36].
John 10:37-39
யூதர்கள் இயேசுவை விசுவாசிக்க வேண்டுமா, வேண்டியதில்லையா என்று அவர் எவ்வாறு விளக்கினார் ?
இயேசு: யூதர்களை நோக்கி, நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்திருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை, செய்தேனேயானால் விசுவாசியுங்கள் என்றார் [10:37-38].
இயேசுவின் கிரியைகளை யூதர்கள் அறிந்து அவரை விசுவாசிக்க அவர் கூறியது என்ன ?
இயேசு: பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கவேண்டும் என்றார் [10:38].
பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறேன் என்று இயேசு கூறியதற்கு யூதர்களின் செய்கை என்ன ?
மறுபடியும் யூதர்கள் இயேசுவைப் பிடிக்க வகைதேடினார்கள் [10:39].
John 10:40-42
இந்த சம்பவங்களுக்குப் பின் இயேசு எங்கே சென்றார் ?
யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு திரும்பி போனார் [10:40].
இயேசுவிடம் வந்த ஜனங்கள் கூறியதும் செய்ததும் என்ன ?
அவர்கள்: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் யோவான் இவரைக் குறித்து சொன்னதெல்லாம் மெய்யாய் இருக்கிறது என்று அநேகர் இயேசுவின்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் [10:41:42].
John 11
John 11:1-2
லாசரு என்பவன் யார் ?
லாசரு என்பவன் பெத்தானியாவை சேர்ந்தவன், மரியாளும் மார்த்தாளும் அவன் சகோதரிகள். கர்த்தருக்கு பரிமளதைலம் பூசி தன் தலைமையிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் இந்த மரியாளே. [11:1-2].
John 11:3-4
லாசருவைக் குறித்தும், அவன் வியாதியாய் இருக்கிறான் என்றும் அவர் கேள்விப்பட்டபோது இயேசு கூறியது என்ன ?
இயேசு: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் மகிமைப்படுவார் என்றார் [11:4].
John 11:5-7
லாசரு வியாதியாய் இருப்பதாக இயேசு கேள்விப்பட்டு அவர் என்ன செய்தார் ?
இயேசு தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டு நாள் தங்கினார் [11:6].
John 11:8-9
இயேசு யுதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்று கூறியதும் அவருடைய சீஷர்கள் அவரிடம் கூறியது என்ன ?
சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்கு போகலாமா என்றார்கள் [11:8].
பகலிலும் இரவிலும் நடக்கிறதைக் குறித்துக் கூறியது என்ன ?
இயேசு: ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியால் இடறமாட்டான். ஒருவன் இருளிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார் [11:9-10].
John 11:10-11
John 11:12-14
இயேசு தமது சீஷர்களிடம், லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றதற்கு சீஷர்கள் அவர் எதைக் குறித்து பேசுவதாக நினைத்தனர் ?
அவர்கள், நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள் [11:11-12].
லாசரு நித்திரையாய் இருக்கிறான் என்று இயேசு எதைக் குறிப்பிட்டு சொன்னார் ?
இயேசு: லாசரு நித்திரையாய் இருக்கிறான் என்று அவன் மரணத்தைக் குறித்து சொன்னார் [11:13].
John 11:15-16
லாசரு மரித்தபோது தான் அங்கே இல்லாததைக் குறித்து ஏன் சந்தோஷப்படுவதாக
இயேசு கூறினார் ? இயேசு: நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவுன்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன் என்றார் [11:15].
யுதேயாவுக்கு அவர்கள் சென்றால் அங்கே என்ன சம்பவிக்கப்போவதாக தோமா நினைத்தான் ?
தோமா, அவர்கள் அனைவரும் மரிக்கப்போவதாக கருதினான் [11:16].
John 11:17-20
இயேசு அங்கே வந்தபோது லாசரு எத்தனை நாளாய் கல்லறையிலே இருந்தான் ?
லாசரு நாலுநாளாய் கல்லறையிலே இருந்தான் [11:17].
இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டு, அவள் செய்தது என்ன ?
இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டு அவருக்கு எதிர்கொண்டு போனாள்[11:20].
John 11:21-23
தேவன், இயேசுவுக்காக எதை செய்வதாக மார்த்தாள் நினைத்தாள் ?
மார்த்தாள்: நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவதாக அறிந்திருக்கிறேன் என்றாள்[11:22].
John 11:24-26
இயேசு மார்த்தாளை நோக்கி உன் சகோதரன் உயிர்தெழுந்திருப்பான் என்றதற்கு, அவள் பதில் என்ன ?
அவள் இயேசுவிடம்: உயிர்தெழும் கடைசிநாளிலே அவனும் உயிர்தெழுந்திருப்பான் என்றாள் [11:24].
இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு என்ன சம்பவிப்பதாக இயேசு கூறுகிறார் ?
இயேசு: என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றேன்றைக்கும் மரிக்காமலும் இருப்பான் [11:25-26].
John 11:27-29
மார்த்தாள் இயேசுவை யார் என்று சாட்சி கூறினாள் ?
மார்த்தாள் இயேசுவிடம்: ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து தான் என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள் [11:27].
John 11:30-32
மரியாள் சீக்கிரமாய் எழுந்து வெளியேப் போகிறதை அவளோடு இருந்த யூதர்கள் கண்டு அவள் என்ன செய்வதாக நினைத்தனர் ?
வீட்டில் அவளோடு இருந்த யூதர்கள் அவள் கல்லறையினிடத்திற்கு அழுவதற்கு போகிறாள் என்று சொல்லி அவளுக்கு பின்னே போனார்கள் [11:31].
மரியாள் எங்கே சென்றாள் ?
மரியாள் இயேசுவை சந்திக்கும்படி போனாள் [11:29 & 32].
John 11:33-35
இயேசு எதைக் கண்டபோது ஆவியில் கலங்கி துயரமடைந்து, அவர் கண்ணீர் விட்டார் ?
மரியாள் அழுகிறதையும், அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியில் கலங்கி துயரமடைந்து, அவர் கண்ணீர் விட்டார் [11:33 & 35].
John 11:36-37
இயேசு கண்ணீர் விட்டதைக் கண்ட யூதர்கள் என்னவென்று முடிவு செய்தனர் ?
இதோ இவர். இவனை இவ்வளவாய் சிநேகித்தார் என்றார்கள் [11:36].
John 11:38-40
லாசருவை வைக்கப்பட்டிருந்த கல்லறையின் வாசலில் இருந்தக் கல்லை இயேசு எடுத்துப்போடுங்கள் என்றதற்கு, மார்த்தாள் என்னவென்று மறுப்பு தெரிவித்தாள் ?
மார்த்தாள்: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாள் ஆயிற்றே என்றாள் [11:39].
கல்லை எடுத்துப்போட மார்த்தாள் மறுப்பு தெரிவிக்க, அவளுக்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு முன்னமே சொல்லவில்லையா என்றார் [11:40].
John 11:41-42
கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கல்லைப் புரட்டிப்போட்டவுடனே இயேசு செய்தது என்ன ?
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, பிதாவை நோக்கி சத்தமாய் ஜெபம்பண்ணினார் [11:41].
ஏன் இயேசு சத்தமாய் ஜெபம்பண்ணினார், அவர் பிதாவிடம் கூறியது என்ன ?
நீர் என்னை அனுப்பினதை என்னை சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இப்படியாக ஜெபம் செய்தார் [11:42].
John 11:43-44
லாசருவே வெளியே வா என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டதும் நடந்தது என்ன ?
மரித்தவன் வெளியே வந்தான், அவன் கைகளும் கால்களும் பிரேத சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது [11:44].
John 11:45-46
கல்லறையிலிருந்து வெளியே வந்த லாசருவைக் கண்ட யூதர்கள் என்ன செய்தனர் ?
யூதர்களில் அநேகர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள், அவர்களில் சிலர் பரிசெயரிடத்திற்க்குபோய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள் [11:45-46].
John 11:47-48
John 11:49-50
பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும் கூடியிருந்த ஆலோசனை சங்கத்தில் என்ன முன் அறிவித்தான் ?
காய்பா: ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும் என்றான் [11:50-51].
John 11:51-53
அந்நாள் முதல் ஆலோசனை சங்கத்தார் என்ன ஆலோசனைப் பண்ணினார்கள்?
அவர்கள் இயேசுவை கொலைசெய்யும்படி ஆலோசனைப் பண்ணினார்கள் [11:53].
John 11:54-55
லாசருவை உயிரோடு எழுப்பினப் பின்பு இயேசு என்ன செய்தார் ?
இயேசு அதன்பின்பு, வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரிக்காமல், அவ்விடம் விட்டு வனாந்திரத்துக்குச் சமீபமான இடமான எப்பிராயீம் எனப்பட்ட ஊருக்குப்போய் தமது சீஷர்ருடனேகூட தங்கினார் [11:54].
John 11:56-57
பிரதான ஆசாரியரும், பரிசேயரும் எதைக் குறித்து கட்டளையிட்டிருந்தார்கள் ?
இயேசு இருக்கிற இடத்தை எவனாகிலும் அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள் [11:57].
John 12
John 12:1-3
இயேசு எப்போது பெத்தானியாவுக்கு வந்தார் ?
பஸ்கா பண்டிகை வர ஆறு நாளைக்கு முன்னே இயேசு பெத்தானியாவுக்கு வந்தார் [12:1].
இராவிருந்து பண்ணப்பட்டிருந்த இடத்தில் மரியாள் இயேசுவுக்கு செய்தது என்ன ?
மரியாள், விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தைக் கொண்டுவந்து இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலை முடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள் [12:3].
John 12:4-6
இயேசுவின் சீஷரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து, இந்த தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான் ?
அவன் தரித்திரரைக் குறித்து கவலைப்பட்டு இப்படி சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதை சுமக்கிறவனானபடியினாலும் இப்படி சொன்னான் [12:4-6].
John 12:7-8
மரியாள் செய்வதை [தைலம் பூசியது] ஏற்றுக்கொள்ளும்வன்னமாக இயேசு என்ன செய்தார் ?
இயேசு: அவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், நான் எப்போதும் உங்களிடத்தில் இரேன் என்றார் [12:7-8].
John 12:9-11
ஏன் திரளான ஜனங்கள் பெத்தானியாவுக்கு வந்தனர் ?
அவர்கள் இயேசுவினிமித்தமாக மாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்து எழுப்பின லாசருவைக் காணும்படியாக வந்தனர் [12:9].
பிரதான ஆசாரியர்கள் ஏன் லாசருவை கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினர்கள் ?
லாசருவினிமித்தம் யூதர்களில் அநேகர் இயேசுவை விசுவாசித்தபடியால் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள் [12:10-11].
John 12:12-13
பண்டிகைக்கு இயேசு வருகிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு என்ன செய்தனர் ?
குருத்தோலைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு; ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள் [12:13].
John 12:14-15
இயேசுவின் சீஷர்கள் துவக்கத்திலே எதை அறியவில்லை, பின்பு இயேசு மகிமையடைந்தபின்பு, அவருக்குச் செய்ததை நினைவுகூர்ந்தார்கள் ?
சியோன் குமாரத்தியே பயப்படாதே, உன் ராஜா கழுத்தைக் குட்டியின்மேல் ஏறி வருகிறார் என்று இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறதை சீஷர்கள் நினைவுகூர்ந்தனர் [12:13-16].
John 12:16
John 12:17-19
பண்டிகையிலே இருந்த ஜனங்கள் ஏன் இயேசுவுக்கு எதிர்கொண்டு போனார்கள் ?
அவருடனேகூட இருந்த ஜனங்கள் இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று அவரைக் குறித்து சாட்சி கொடுத்தார்கள் [12:17-18].
John 12:20-22
John 12:23-24
பிலிப்பும் அந்திரேயாவும் இயேசுவிடம் கிரேக்கர்கள் உம்மை காண விரும்புகிறார்கள் என்றதற்கு அவர் கூறியது என்ன ?
இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும் வேளை வந்தது என்றார் [12:23]
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் என்ன சம்பவிக்கும் என்று இயேசு சொன்னார் ?
இயேசு: அது செத்ததேயாகில் அது மிகுந்த பலனைக் கொடுக்கும் [12:24].
John 12:25-26
தன் ஜீவனை சிநேகிக்கிறவனையும், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனையும் குறித்து இயேசு கூறுவது என்ன ?
இயேசு: தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய் காத்துக்கொள்வான் என்றார் [12:25].
ஒருவன் இயேசுவுக்கு ஊழியம் செய்தால் என்ன ஆகும் ?
பிதாவானவர் அவனை கனம்பண்ணுவார் [12:26].
John 12:27-29
பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்று இயேசு கூறியதும் சம்பவித்தது என்ன ?
மகிமைப்படுத்தினேன் இன்னும் மகிமைப்படுத்துவேன் என்று வானத்திலிருந்து உண்டாயிற்று [12:28].
John 12:30-31
வானத்திலிருந்து உண்டான சத்தத்தைக் குறித்து இயேசு கூறியது என்ன ?
இயேசு: இந்த சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல், உங்கள் நிமித்தமே உண்டாயிற்று [12:30].
இப்போது என்ன சம்பவிக்குமென்று இயேசு கூறினார் ?
இயேசு: இப்பொழுது இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது, இப்போதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான் என்றார் [12:31].
John 12:32-33
நான் பூமியிலிருந்து உயர்த்தபட்டிருக்கும்போது எல்லோரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன் என்று ஏன் இயேசு சொன்னார் ?
இயேசு தாம் இவ்விதமான மரணமாய் மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படி சொன்னார் [12:33].
John 12:34-36
மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டுமென்று எப்படி சொல்கிறீர் ? இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள் ? என்று ஜனங்கள் இயேசுவிடம் கேட்க அவர் நேரடியாக பதில் கொடுத்தாரா ?
இல்லை, அவர்களுடைய கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை [12:35-36].
ஒளியைக் குறித்து இயேசு கூறியது என்ன ?
இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்திலிருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள். ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு ஒளியினிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள் என்றார் [12:35-36].
John 12:37-38
ஏன் ஜனங்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை ?
கர்த்தாவே எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் ? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது [12:37-38].
John 12:39-40
ஏன் ஜனங்களால் இயேசுவை விசுவாசிக்க இயலவில்லை ?
ஏனெனில் ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் காணாமலும் இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும் நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான் [12:39-40].
John 12:41-43
ஏன் ஏசாயா இவைகளைச் சொன்னான் ?
இயேசுவின் மகிமையை ஏசாயா கண்டபடியினால் இவைகளைச் சொன்னான் [12:41].
ஏன் அதிகாரிகள் இயேசுவை விசுவாசித்து அறிக்கைபண்ணாதிருந்தார்கள் ?
அதிகாரிகளில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்கு புறம்பாக்கப்படாதபடி பரிசேயரினிமித்தம் அதை அறிக்கை பண்ணாதிருந்தார்கள் [12:42-43].
John 12:44-45
இயேசு தன்னையும், பிதாவையும் குறித்து கூறியது என்ன ?
அப்பொழுது இயேசு சத்தமிட்டு, என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாய் இருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான் [12:44-45].
John 12:46-47
எதற்காக இயேசு இவ்வுலகத்தில் எதை செய்ய வந்ததாக கூறினார் ?
இயேசு: நான் உலகத்தை இரட்சிக்க வந்தேன் [12:47].
John 12:48-50
இயேசுவைத் தள்ளி அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவனை எது நியாயந்தீர்க்கும் ?
இயேசு சொன்ன வசனமே அவரைத் தள்ளிவிட்டவனை கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் [12:48].
இயேசு, தான் சுயமாய் பேசினாரா ?
இல்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும், உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதா எனக்குக் கட்டளையிட்டார் [12:49].
பிதா தனக்குச் சொன்னபடியே ஏன் இயேசு ஜனங்களிடம் சொன்னார் ? இயேசு இதைச் செய்தார் ஏனெனில், பிதாவின் கட்டளை நித்தியஜீவனாயிருக்கிறதென்று அவர் அறிவார் [12:50].
John 13
John 13:1-2
தம்முடயவர்களிடம் இயேசு எவ்வளவு காலம் அன்பு வைத்தார் ?
அவர் முடிவுபரியந்தம் அவர்களிடம் அன்பு வைத்தார் [13:1]
யூதாஸ்காரியோத்துக்கு பிசாசு செய்தது என்ன ?
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசு யூதாஸ்காரியோத்துவின் இருதயத்தை தூண்டினான் [13:2]
John 13:3-5
பிதா இயேசுவிடம் ஒப்புவித்தது என்ன ?
இயேசுவிடம் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் [13:3]
இயேசு தாம் எங்கேயிருந்து வந்தார்? எங்கு போகிறவராயிருந்தார் ?
இயேசு, தேவனிடத்திலிருந்து வந்து, தேவனிடத்திற்கு போகிறவராயிருந்தார் [13:3]
போஜனத்தைவிட்டு எழுந்து இயேசு செய்தது என்ன ?
இயேசு, தன் வஸ்திரங்களை கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அறையிலே கட்டிக்கொண்டு பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷர்களுடைய கால்களை கழுவவும், தாம் கட்டிகொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் செய்தார் [13:4-5]
John 13:6-9
நீர் ஒருக்காலும் என் கால்களை கழுவக்கூடாது என்று பேதுரு தடுக்கையில், இயேசு கூறியது என்ன ?
இயேசு: நான் உன்னை கழுவாவிட்டால், என்னிடத்தில் உனக்கு பங்கில்லை என்றார் [13:8]
John 13:10-11
நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்று ஏன் இயேசு தன் சீஷர்களிடம் கூறினார் ?
தம்மைக் காட்டிகொடுப்பவனை அவர் அறிந்திருந்தபடியால் இயேசு அவ்வாறு கூறினார் [13:11]
John 13:12-15
ஏன் இயேசு சீஷர்களுடைய பாதங்களைக் கழுவினார் ?
இயேசு அவர்களுக்கு செய்ததுபோல அவர்களும் செய்யும்படிக்கு அவர்களுக்கு மாதிரியை காண்பிக்கும்படிக்கு அவர் அவ்வாறு செய்தார் [13:14-15]
John 13:16-18
ஊழியன் தன் எஜமானிலும் பெரியவனா ? அல்லது அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனா ?
ஊழியன் தன் எஜமானிலும் பெரியவன் அல்ல மற்றும் அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவன் அல்ல [13:16]
எவன் இயேசுவுக்கு எதிராக தன் குதிகாலை தூக்கினவன் ?
இயேசுவோடு அப்பம் புசித்தவனே இயேசுவுக்கு எதிராக தன் குதிகாலை தூக்கினவன்[13:18]
John 13:19-20
நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல என்றும் என்னுடனே அப்பம் புசித்தவன் தன் குதிகாலை தூக்கினான் என்றும் இயேசு ஏன் தன் சீஷர்களிடம் கூறினார் ?
அது சம்பவிக்கும்போது நானே அவர் என்று அவர்கள் விசுவாசிக்கும்படிக்கு அதை முன்னமே அவர்களுக்கு அறிவித்தார் [13:19]
இயேசுவை ஏற்றுக்கொள்கிறவன் யாரை ஏற்றுக்கொள்கிறான் ?
அவர் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் இயேசுவை ஏற்றுக்கொள்கிறான், இயேசுவை ஏற்றுக்கொள்கிறவன் அவரை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான், [13:20]
John 13:21-22
John 13:23-25
உங்களில் ஒருவன் என்னைக்காட்டிக்கொடுப்பான் என்று இயேசு கூறியதும் பேதுரு செய்து என்ன ?
இயேசு மிகவும் நேசித்த சீஷனிடம், இயேசு யாரைக் குறித்து பேசுகிறார் என்று விசாரிக்கும்படி சைகைக் காட்டினான் [13:24]
John 13:26-30
இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் இயேசுவிடம் உம்மைக் காட்டிக்கொடுப்பவன் யார் என்று கேட்டதற்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு: நான் இந்த துணிக்கையை தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன் தான் என்று சொல்லி, துணிக்கையை தோய்த்து சீமோனின் குமாரனாகிய யுதாஸ்காரியோத்துவிடம் கொடுத்தார் [13:26]
இயேசு கொடுத்த துணிக்கையை அவன் வாங்கினபின்பு அவன் செய்ததும், அவனுக்கு சம்பவித்தது என்ன ?
யூதாஸ் அந்த துணிக்கையை வாங்கினபின்பு, பிசாசு அவனுக்குள் புகுந்தான். அவன் உடனே புறப்பட்டுப்போனான் [13:27, 30]
John 13:31-33
எப்பொழுது தேவன் மகிமைப்பட போகிறார் ?
தேவன், மனுஷகுமாரனில் மகிமைப்படுகிறார். மனுஷகுமாரன் மகிமைப்பட்டிருந்தால் பிதாவும் மகிமைப்படுவார் [13:31]
John 13:34-37
இயேசு சீஷர்களுக்கு கொடுத்த புதிய கட்டளை என்ன ?
இயேசு அவர்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே புதிய கட்டளை [13:34]
ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளை சீஷர்கள் கைக்கொண்டால் என்ன சம்பவிப்பதாக இயேசு கூறினார் ?
இயேசு: ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளை நீங்கள் கைக்கொண்டால் எல்லோரும் நீங்கள் என்னுடையவர்கள் என்று அறிந்துகொள்வார்கள் என்றார் [13:35]
நான் போகிற இடத்திற்கு இப்போது நீ வரக்கூடாது என்று இயேசு கூறியதை பேதுரு புரிந்துகொண்டானா ?
இல்லை. பேதுரு புரிந்துகொள்ளவில்லை எனெனில் அவன் இயேசுவிடம்; ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்று கேட்டான் [13:33, 36]
John 13:38
நான் உமக்காக ஜீவனையும் கொடுப்பேன் என்று பேதுரு கூறியதற்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு : எனக்காக உன் ஜீவனை கொடுப்பாயோ ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார் [13:38]
John 14
John 14:1-3
பிதாவின் வீட்டில் இருப்பது என்ன ?
பிதாவின் வீட்டில் அநேகே வாசஸ்தலங்கள் உண்டு [14:2]
இயேசு தம்முடைய சீஷர்களுக்காக செய்ய இருந்தது என்ன ?
இயேசு தமது சீஷர்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவதாக இருந்தார் [14:3]
எதினால் சீஷர்களின் இருதயம் கலங்கவேண்டாததாயிருந்தது ?
ஒரு ஸ்தலத்தை அவர்களுக்காக ஆயத்தம்பண்ணினபின்பு, இயேசு இருக்கிற இடத்திலே அவர்களும் இருக்கும்படி அவர் மறுபடியும் வந்து அவர்களை சேர்த்துக்கொள்வதால் சீஷர்களின் இருதயம் கலங்கவேண்டாததாயிருந்தது[14:1-3]
John 14:4-7
பிதாவினிடத்திற்கு செல்ல இருக்கும் ஒரே வழி எது ?
பிதாவினிடத்திற்கு செல்ல இயேசுவே ஒரே வழி [14:6]
John 14:8-9
சீஷர்களுக்கு போதுமானதாயிருக்கும் எந்த காரியத்தை பிலிப்பு, இயேசுவிடம் செய்யும்படி கேட்டுக்கொண்டான் ?
பிலிப்பு இயேசுவிடம் ; பிதாவை எங்களுக்கு காண்பியும் அது எங்களுக்கு போதும் என்றான் [14:8]
John 14:10-11
இயேசு தன் சீஷர்களிடம் சொல்லுகிறதை சுயமாய் பேசினாரோ ?
இயேசு தன் சீஷர்களிடம் சொல்லுகிற வசனங்கள் தன் சுயமாய் பேசாமல், அவரிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவே கிரியைகளை செய்து வருகிறார் [14:10]
இயேசு, பிதாவிலும், பிதா, இயேசுவிலும் இருக்கிறதை காரணம் இல்லாவிட்டாலும் ஏன் சீஷர்கள் நம்பும்படி இயேசு கூறினார் ?
இயேசு: ஒன்றுமில்லாவிட்டாலும் என் கிரியையினாலாவது அவரை நம்பும்படி சீஷர்களிடம் கூறினார் [14:11]
John 14:12-14
தன்னை விட பெரிய காரியங்கள் சீஷர்கள் செய்வார்கள் என்று ஏன் இயேசு கூறினார் ?
இயேசு; தாம் பிதாவினிடம் போகிறபடியால் தன்னை விட பெரிய காரியங்கள் சீஷர்கள் செய்வார்கள் என்று இயேசு கூறினார்[14:12]
சீஷர்கள் இயேசுவின் நாமத்தில் எதைக்கேட்டாலும் செய்வேன் என்று ஏன் இயேசு கூறினார் ?
குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக இயேசு அவ்வாறு செய்வதாக கூறினார் [14:13]
John 14:15-17
நீ இயேசுவினிடத்தில் அன்பாயிருந்தால் நீ என்ன செய்வதாக கூறினார் ?
நீ இயேசுவினிடத்தில் அன்பாயிருந்தால் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வாய் என்று கூறினார் [14:15]
சீஷர்களுடம் என்றென்றைக்கும் இருக்கும்படி பிதா அருளும் வேறொரு தேற்றரவாளனை இயேசு என்னவென்று அழைக்கிறார் ?
இயேசு அவரை சத்திய ஆவியானவர் என்கிறார் [14:17]
உலகம் ஏன் சத்திய ஆவியானவரை பெற்றுக்கொள்ளமாட்டாது ?
அவரை காணாமலும், அறியாமலும் இருக்கிறதினால் உலகம் சத்திய ஆவியானவரை பெற்றுக்கொள்ளமாட்டாது [14:17]
சத்திய ஆவியானவர் எங்கே வாசம்பண்ணுவதாக இயேசு கூறினார் ?
இயேசு: சீஷர்களுக்குள்ளே சத்திய ஆவியானவர் வாசம்பண்ணுவதாக கூறினார் [14:17]
John 14:18-20
John 14:21-22
இயேசுவினுடைய கற்பனைகளை பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு என்ன சம்பவிக்கும் ?
அப்படிப்பட்டவர்கள் இயேசுவினிடத்தில் அன்பாயிருக்கிறார்கள். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் பிதாவினிடத்தில் அன்பாயிருக்கிறான், இயேசுவும் அவர்களிடத்தில் அன்பாயிருந்து அவரை அவர்களிடத்தில் வெளிப்படுத்துவார் [14:21]
John 14:23-24
John 14:25-27
பிதாவினால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் செய்வது என்ன ?
தேற்றரவாளனே எல்லாவற்றையும் சீஷர்களுக்குப் போதித்து, இயேசு அவர்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு நினைப்பூட்டுவார் [14:26]
John 14:28-29
இயேசு பிதாவினிடத்திற்கு போகிறதைக் குறித்து சீஷர்கள் எதினால் சந்தோஷப்படுவார்கள் ?
இயேசு பிதாவினிடத்திற்கு போகிறதைக் குறித்து சீஷர்கள் சந்தோஷப்படுவார்கள் ஏனெனில் பிதா குமாரனிலும் பெரியவராயிருக்கிறார் [14:28]
John 14:30-31
இயேசு தம்முடைய சீஷர்களிடம் அதிகமாய் பேசுவதில்லை என்பதற்கு கூறிய விளக்கம் யாது ?
இந்த உலகத்தின் அதிபதி வருகிறபடியால் இயேசு சீஷர்களிடம் அதிகமாய் பேசுவதில்லை என்றார் [14:30]
John 15
John 15:1-2
யார் அந்த மெய்யான திராட்சைச் செடி ?
இயேசுவே மெய்யான திராட்சைச் செடி [15:1]
திராட்சைத் தோட்டக்காரர் யார் ?
பிதாவே திராட்சைத் தோட்டக்காரர் [15:1]
கிறிஸ்துவில் இருக்கிற கொடிகளுக்கு பிதா செய்வது என்ன ?
கிறிஸ்துவில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை பிதா அறுத்துப்போடுவார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ அது அதிக கனிகளைக் கொடுக்கும்படிக்கு அதை சுத்தம்பண்ணுவார் [15:2]
John 15:3-4
எதினால் சீஷர்கள் சுத்தமாயிருக்கிறார்கள் ?
இயேசு அவர்களுக்கு சொன்ன உபதேசத்தினால் அவர்கள் சுத்தமாயிருக்கிறார்கள் [15:3]
John 15:5-7
யார் அந்த கொடிகள் ?
நாமே அந்த கொடிகள் [15:5]
கனிகொடுக்கும்படி நாம் என்ன செய்யவேண்டும் ?
கனிகொடுக்கும்படி நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவேண்டும் [15:5]
கிறிஸ்துவில் நீ நிலைத்திராவிட்டால் சம்பவிப்பது என்ன ?
நீ கிறிஸ்துவில் நிலைத்திராவிட்டால் வெளியே எரியுண்ட கொடியைப்போல எரியுண்டு உலர்ந்துபோவான் [15:6]
நாம் கேட்டுக்கொள்வது எதுவோ அது செய்யப்படும்படி நாம் என்ன செய்ய வேண்டும் ?
நாம் கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தை நம்மிலும் நிலைத்திருந்தால் நாம் கேட்டுக்கொள்வது எதுவோ அது செய்யப்படும் [15:7]
John 15:8-9
எந்த இரண்டு காரியங்களில் பிதா மகிமைப்படுவார் ?
இயேசுவுக்கு சீஷராய் இருப்பதினாலும், மிகுந்தகனிகளைக் கொடுப்பதினாலும் பிதா மகிமைப்படுவார் [15:8]
John 15:10-11
கிறிஸ்துவின் அன்பிலே நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும் [15:10]
John 15:12-13
ஒருவனுக்கு கிடைக்கும் அதிக அன்பு எது ?
ஒருவன் தன் சிநேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை [15:13]
John 15:14-15
நாம் இயேசுவின் சிநேகிதர் என்பதை எவ்வாறு அறியலாம் ?
நமக்கு கற்பித்த கற்பனைகள் யாவையும் கைக்கொண்டால் நாம் இயேசுவின் சிநேகிதர்கள் [15:14]
இயேசு ஏன் சீஷர்களை தம்முடைய சிநேகிதர்கள் என்றார் ?
அவர் சீஷர்களை சிநேகிதர்கள் என்றார், ஏனெனில் தாம் பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட யாவையும் அவர்களுக்கு அறிவித்தார் [15:15]
John 15:16-17
John 15:18-19
இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை ஏன் உலகம் பகைக்கிறது ?
அவர்கள் உலகத்தாராயிராதபடியினாலும், இயேசு அவர்களை தெரிந்துகொண்டபடியினாலும் உலகம் அவர்களைப் பகைக்கிறது [15:19]
John 15:20-22
John 15:23-25
உலகமானது தனது பாவத்திற்கு போக்கு சொல்ல இடமில்லாதபடிக்கு இயேசு கிறிஸ்து என்ன செய்தார் ?
வேறொருவரும் செய்யாத கிரியைகளை இயேசு கிறிஸ்து வந்து அவர்களுக்குள்ளே செய்திருந்ததினாலே உலகமானது தனது பாவத்திற்கு போக்கு சொல்ல இடமில்லை [15:24]
John 15:26-27
யார் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுப்பார் ?
சத்திய ஆவியாகிய தேற்றவாளனும், இயேசுவின் சீஷர்களும் அவரைக் குறித்து சாட்சிகொடுப்பார்கள் [15:26-27]
எதினால் சீஷர்கள் இயேசுவுக்கு சாட்சிகளாயிருப்பார்கள் ?
அவர்கள் ஆதிமுதலாய் இயேசுவுடனே கூட இருந்தபடியினால் இயேசுவுக்கு சாட்சிகளாய் இருப்பார்கள் [15:27]
John 16
John 16:1-2
ஏன் இவைகளைக் குறித்து இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார் ?
தம்முடைய சீஷர்கள் இடறலடயாதிருக்கும்படிக்கு இவைகளைக் குறித்து இயேசு சொன்னார் [16:1]
John 16:3-4
எதினால் இயேசுவின் சீஷர்களை ஜெபஆலயத்திற்கு புறம்பாக்கி, அவர்களை கொலைசெய்வார்கள் ?
அவர்கள் பிதாவையும், இயேசுவையும் அறியாததினால் அவ்வாறு செய்வார்கள் [16:3]
ஏன் இயேசு இவைகளை தம்முடைய சீஷர்களுக்கு முன்னமே அறிவிக்கவில்லை ?
இயேசு அவர்களுடனே இருந்தபடியினால் இவைகளை முன்னமே அறிவிக்கவில்லை [16:4]
John 16:5-7
எவ்விதத்தில் இயேசு போகிறது பிரயோஜனமாயிருக்கும் ?
இயேசு அவர்களை விட்டுப்போகிறது பிரயோஜனமாயிருக்கும் என்னெனில் அவர் போகாதிருந்தால் தேற்றரவாளன் வரார், இயேசு போவாறேயாகில் அவர் தாமே தேற்றரவாளனை அனுப்புவார் [16:7]
John 16:8-11
தேற்றரவாளன் எவைகளைக் குறித்து கண்டித்து உணர்த்துவார் ?
தேற்றரவாளன், பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார் [16:8]
John 16:12-14
சத்திய ஆவியானவர் வரும்போது சீஷர்களுக்கு என்ன செய்வார் ?
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தாம் சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்ட யாவையும் சொல்லி வரப்போகிற காரியங்களை அவர்களுக்கு அறிவிப்பார் [16:13]
சத்திய ஆவியானவர் எப்படி இயேசுவை மகிமைப்படுத்துவார் ?
அவர் இயேசுவினுடயதிலிருந்து எடுத்து அவர்களுக்கு அறிவிப்பதினால் இயேசுவை மகிமைப்படுத்துவார் [16:14]
John 16:15-16
சத்திய ஆவியானவர்; இயேசுவில் எவைகளை எடுப்பார் ?
பிதாவினுடையவைகள் யாவும் இயேசுவினுடயவைகள்; ஆகவே சத்திய ஆவியானவர் இயேசுவுக்கு சொந்தமானதில் எடுப்பார் [16:15]
John 16:17-18
இயேசு கூறிய எந்த காரியத்தை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை ?
இயேசு: நான் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால் என்னை கொஞ்சகாலத்திலே காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று இயேசு கூறியதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை [16:17-18]
John 16:19-21
சீஷர்களின் துக்கம் என்னவாகும் ?
அவர்களின் துக்கம் சந்தோஷமாக மாறும் [16:20]
John 16:22-24
சீஷர்கள் மறுபடியும் சந்தோஷப்படும்படி என்ன சம்பவிக்கும் ?
அவர்கள் மறுபடியும் இயேசுவை காண்பதினால் அவர்களின் இருதயம் சந்தோஷப்படும் [16:22]
எவைகளை சீஷர்கள் இயேசுவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார் ?
இயேசு: கேளுங்கள், உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி பெறுவீர்கள் [16:24]
John 16:25
John 16:26-28
எந்த காரணத்தினால் பிதா தாமே இயேசுவின் சீஷர்களை சிநேகிக்கிறார் ?
அவர்கள் இயேசுவை நேசித்து, அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்ததை விசுவாசித்தபடியினால், பிதா அவர்களை சிநேக்கிறார் [16:27]
இயேசு எங்கேயிருந்து வந்து, எங்கே போகிறார் ?
இயேசு பிதாவினிடத்திலிருந்து உலகத்திற்கு வந்து மறுபடியும் பிதாவினிடத்திற்கே போகிறார் [16:28]
John 16:29-31
John 16:32-33
அக்காலத்தில் சீஷர்கள் என்ன செய்வார்கள் என்று இயேசு கூறினார் ?
இயேசு: நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டுவிடும் காலம் வரும் [16:32]
சீஷர்கள் இயேசுவை தனியே விட்டு சென்றாலும் அவருடன் இருப்பவர் யார் ?
பிதா அவருடனே கூட இருப்பார் [16:32]
உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார் ?
இயேசு உலகத்தை ஜெயித்தபடியினால் தம்முடைய சீஷர்களுக்கு அவ்வாறு கூறி அவர்களை திடப்படுத்தினார் [16:33]
John 17
John 17:1-2
மாம்சமான யாவர்மேலும் ஏன் இயேசுவுக்கு பிதா அதிகாரம் கொடுத்தார் ?
குமாரனுக்கு தந்தருளின யாவருக்கும் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படிக்கு மாம்சமான யாவர்மேலும் இயேசுவுக்கு பிதா அதிகாரம் கொடுத்தார் [17:2]
John 17:3-5
நித்திய ஜீவன் என்றால் என்ன ?
ஒன்றான மெய்தெய்வமாகிய பிதாவையும், அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் [17:3]
இந்த பூமியிலே இயேசு எவ்வாறு தேவனை மகிமைப்படுத்தினார் ?
அவர் செய்யும்படி பிதா அவருக்கு நியமித்த எல்லாவற்றையும் செய்துமுடித்து தேவனை மகிமைபடுத்தினார் [17:4]
இயேசு விரும்பும் மகிமை யாது ?
இந்த உலகம் உண்டாகிறதற்கு முன்னமே பிதாவினிடத்தில் அவருக்கு உண்டாயிருந்த மகிமை இயேசு விரும்பினார் [17:5]
John 17:6-8
இயேசு பிதாவினுடைய நாமத்தை யாருக்கு வெளிப்படுத்தினார் ?
உலகத்தில் அவருக்குத் தந்தருளின மனிதர்களுக்கு பிதாவினுடைய நாமத்தை வெளிப்படுத்தினார் [17:6]
பிதா, இயேசுவுக்கு கொடுத்த ஜனங்கள் இயேசுவின் வார்த்தைக்கு எவ்வாறு செவிகொடுத்தனர் ?
அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தார் என்று நிச்சயமாய் அறிந்து, பிதா அவரை அனுப்பினார் என்று அவரை விசுவாசித்தார்கள் [17:8]
John 17:9-11
எவைகளுக்காக இயேசு வேண்டிக்கொள்வதில்லையேன்று கூறினார் ?
இயேசு, உலகத்துக்காக வேண்டிக்கொள்வதில்லை [17:9]
John 17:12-14
இயேசு உலகத்தில் இருக்கையில், பிதா அவருக்குத் தந்தவர்களுக்காக என்ன செய்தார் ?
இயேசு அவர்களைக் காத்துக்கொண்டார் [17:12]
John 17:15-17
John 17:18-19
ஏன் இயேசு தம்மைத்தாமே பரிசுத்தமாக்கினார் ?
பிதாவினால் அருளப்பட்டவர்களும் பரிசுத்தமாகும்படி அவர்களுக்காக இயேசு தம்மைத்தாமே பரிசுத்தமாக்கினார் [17:19]
John 17:20-21
எவைகளுக்காகவும் இயேசு வேண்டிக்கொண்டார் ?
அவரை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், அவரை விசுவாசிக்கிறவர்களின் வார்த்தையைக் கேட்டு இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொண்டார் [17:20]
John 17:22-23
இயேசுவுக்கு தாம் அருளினவர்களை பிதா எவ்வாறு சிநேகித்தார் ?
இயேசுவில் அன்பாயிருக்கிறதுபோலவே, பிதா அவர்களிலும் அன்பாயிருக்கிறார் [17:23]
John 17:24
இயேசுவுக்கு பிதாவினால் அருளப்பட்டவர்களுக்காக பிதாவிடம் இயேசு வேண்டிக்கொள்வது என்ன ?
பிதாவின் நாமத்தினால் அவர்கள் ஒன்றாய் இருக்கவும், தீமையிலிருந்து காத்துக்கொள்ளவும், சத்தியத்திலே தங்களை பரிசுத்தமாக்கிகொள்ளவும், பிதாவும், கிறிஸ்துவும் ஒன்றாய் இருக்கிறதுபோல கிறிஸ்துவுக்குத் தந்தருளின சீஷர்களும் ஒன்றாய் இருக்க வேண்டிக்கொண்டார் [17:11, 15, 21, 24]
John 17:25-26
எதினால், ஏன் இயேசு பிதாவினால் தமக்கு அருளப்பட்டவர்களுக்கு பிதாவை வெளிப்படுத்துவார் ?
பிதா, இயேசுவில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும் இயேசுவும் அவர்களில் இருக்கும்படிக்கும் பிதாவினுடைய நாமத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் [17:26]
John 18
John 18:1-3
இயேசு இவைகளை சொன்னபின்பு எங்கே போனார் ?
இயேசு தம்முடைய சீஷருடனே கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார் [18:1]
தோட்டத்தைக் குறித்து யூதாஸ் எவ்வாறு அறிந்திருந்தான் ?
இயேசு தம்முடைய சீஷர்களுடன் அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால் அந்த இடத்தை யூதாஸ் அறிந்திருந்தான் [18:2]
பந்தங்கலோடும், தீவட்டிகளோடும், ஆயுதங்களோடும் யாரெல்லாம் அந்த தோட்டத்திற்கு வந்தனர் ?
யூதாஸ், போர்ச்சேவகரின் கூட்டம், பிரதான ஆசாரியர் மற்றும் பரிசேயரால் அனுப்படட்ட ஊழியக்காரரும் அங்கே வந்தனர் [18:3]
John 18:4-5
தோட்டத்திற்கு வந்த கூட்டத்தாரிடம் இயேசு கேட்டது என்ன ?
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்றார் [18:4]
John 18:6-7
அவர்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றதன் பின்பு அவர்களிடம் இயேசு நான் தான் என்றதும் சம்பவித்தது என்ன ?
சேவகர்களும் மற்றவர்களும் பின்னிட்டு தரையிலே விழுந்தார்கள் [18:6]
John 18:8-9
நான் தான் என்று சொன்னேனே; என்னை தேடுகிறதுண்டானால் இவர்களைப் போக விடுங்கள் என்று ஏன் இயேசு கூறினார் ?
நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவரையும் நான் இழந்துபோகவில்லை என்கிற வேத வாக்கியம் நிறைவேறும்படி இயேசு இவ்வாறு கூறினார் [18:8-9]
John 18:10-11
பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாகிய மல்குஸ் என்பவனின் காதை பேதுரு வெட்டியதும் இயேசு அவனிடம் கூறியது என்ன ?
இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு, பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார் [18:10-11]
John 18:12-14
போர்ச்சேவகரும், ஆயிரம்பேருக்கு போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப் பிடித்து எங்கே கொண்டு சென்றனர் ?
முதலில் அன்னா என்பவனிடத்திற்கு கொண்டு சென்றனர் [18:13]
அன்னா என்பவன் யார் ?
அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் மாமனாயிருந்தான் [18:13]
John 18:15-16
பிரதான ஆசாரியரின் அரண்மனைக்குள் பேதுரு எப்படி பிரவேசித்தான் ?
இயேசுவுக்குப் பின்சென்ற மற்றொரு சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்தபடியினால், அந்த சீஷன் வாசல் காக்கிறவளுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டு போனான் [18:16]
John 18:17-18
நீயும் அந்த மனுஷரில் ஒருவன் அல்லவா? இயேசுவின் சீடன் அல்லவா என்று பேதுருவிடம் கேட்டது யார் ?
சேவகரும், ஊழியக்காரரும் நெருபுன்டாக்கி குளிர்காய்ந்துகொண்டிருக்கையில் அவர்களுடன் பேதுருவும் குளிர்க்காயந்துகொண்டிருந்தான். பேதுரு காதை வெட்டினவனுடைய சொந்தக்காரனும், வாசல் காக்கிற வேலைக்காரியும் மற்றும் அங்கிருந்த அனைவரும் நீயும் இயேசுவின் சீஷர்களில் ஒருவனல்லவா என்றனர் [18:17]
John 18:19-21
இயேசுவைக் குறித்தும் அவருடைய போதனைகளைக் குறித்தும் பிரதான ஆசாரியன் கேட்டதற்கு இயேசு கூறியது என்ன ?
பிரதான ஆசாரியனுக்கு இயேசு வெளிப்படையாக பதிலளித்தார், அவரைக் குறித்து கேள்விப்பட்டவர்களிடம் அவர் கூறியவைகளைக் கேட்கும்படி கூறினார் [18:19-21]
John 18:22-24
அன்னா என்பவன் இயேசுவை விசாரித்து பின்பு எங்கே அவரை அனுப்பினான் ?
காய்பா என்னும் பிரதான ஆசாரியனிடதிற்கு இயேசுவை அன்னா அனுப்பினான் [18:24]
John 18:25-27
நான் இயேசுவோடு இருந்தவன் அல்ல என்று மூன்று முறை பேதுரு மறுதலித்ததும் சம்பவித்தது என்ன ?
நான் இயேசுவோடு இருந்தவன் அல்ல என்று மூன்று முறை பேதுரு மறுதலித்ததும் சேவல் கூவிற்று [18:27]
John 18:28-30
இயேசுவைக் கொண்டுசென்றவர்கள் ஏன் தேசாதிபதியின் அரண்மனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் ?
தீட்டுப்படாமல் பஸ்காவை புசிக்கும்படிக்கு அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் [18:28]
பிலாத்து குற்றப்படுத்துகிறவர்களை நோக்கி இந்த மனுஷன்மேல் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் ? என்றான்
அவர்கள் பிலாத்துவிடம்; இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புவிக்கமாட்டோம் என்றார்கள் [18:29-30]
John 18:31-32
யூதர்கள் ஏன் அவர்கள் தாமே இயேசுவை தண்டியாமல், பிலாத்துவினிடம் கொண்டுசென்றனர் ?
அவர்கள் இயேசுவை கொலைசெய்யும்படி விரும்பினார்கள். ரோம அரசாங்கத்தின் அனுமதியின்றி ஒருவனையும் மரணஆக்கினக்குள்ளாக நியாயத்தீர்ப்பு செய்ய அவர்களுக்கு அதிகாரமில்லை [18:31]
John 18:33-35
பிலாத்து இயேசுவிடம் கேட்டது என்ன ?
பிலாத்து இயேசுவிடம்; நீ யூதருக்கு ராஜாவா? மற்றும் நீ என்ன செய்தாய் என்று கேட்டான் [18:33-35]
John 18:36-37
இயேசுவின் ராஜ்யத்தைக் குறித்து அவர் பிலாத்துவிடம் கூறியது என்ன ?
இயேசு: என் ராஜ்யம் இவ்வுலகத்துக்குறியது அல்ல, நான் இங்கிருந்து வரவில்லை என்று பிலாத்துவிடம் கூறினார் [18:36]
இயேசு எதற்காக உலகத்தில் பிறந்தார் ?
இயேசு ராஜாவாகும்படி பிறந்தார் [18:37]
John 18:38-40
இயேசுவை விசாரித்த பின்பு பிலாத்துவின் தீர்ப்பு என்ன ?
பிலாத்து யூதர்களிடம்: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை என்றான் [18:38]
பிலாத்து யூதர்களை நோக்கி, இயேசுவை விடுதலை செய்ய உங்களுக்கு மனதுண்டா என்று கேட்டதற்கு அவர்கள் சத்தமிட்டுக் கூறியது என்ன ?
யூதர்கள்;தேசாதிபதியின் அரண்மனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். இவனை அல்ல பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று சத்தமிட்டார்கள் [18:39-40]
John 19
John 19:1-3
பிலாத்து இயேசுவை ஒப்புக்கொடுத்ததும், சேவகர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?
போர்ச்சேவகர்கள் முள்ளுகளினால் ஒரு முடியைப்பின்னி அவர் சிரசின்மேல் வைத்து சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி, யூதருடைய ராஜாவே வாழ்க என்று சொல்லி தங்கள் கைகளினால் அவரை அடித்தார்கள் [19:2-3]
John 19:4-6
ஏன் பிலாத்து இயேசுவை மறுபடியும் ஜனங்களிடத்திற்கு கொண்டுவந்தான் ?
இயேசுவினிடத்தில் பிலாத்து ஒரு குற்றமும் காணாததால் அவரை மறுபடியும் ஜனங்களிடத்திற்கு கொண்டுவந்தான் [19:4]
பிலாத்து இயேசுவை மறுபடியும் ஜனங்களிடத்திற்கு கொண்டுவருகையில் இயேசு அணிந்திருந்தது என்ன ?
இயேசு முள்முடியையும், சிவப்பங்கியையும் அணிந்திருந்தார் [19:5]
பிரதான ஆசாரியரும், சேவகரும் இயேசுவைக் கண்டதும் கூறியது யாது ?
அவனை சிலுவையில் அறையும், அவனை சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள் [19:6]
John 19:7-9
யூதர்கள் கூறிய எந்த வார்த்தையினால் பிலாத்து மிகவும் பயந்தான் ?
யூதர்கள் பிலாத்துவிடம்: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படி இவன் சாகவேண்டும் என்று சொன்னார்கள் [19:7-8]
பிலாத்து இயேசுவிடம்; நீ எங்கேயிருந்து வந்தவன் என்று கேட்டதற்கு இயேசு கூறியது என்ன ?
இயேசு பதில் ஒன்றும் சொல்லவில்லை [19:9]
John 19:10-11
இயேசுவின்மேல் யார் பிலாத்துவுக்கு அதிகாரம் கொடுத்ததாக அவர் கூறினார் ?
இயேசு: பரத்திலிருந்து கொடுக்கப்படாதிருந்தால், உமக்கு என்மேல் அதிகாரம் இராது என்றார் [19:11]
John 19:12-13
பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய மனதாயிருக்கையில், யூதர்கள் அதை தடுக்கும்படி கூறியது என்ன ?
யூதர்கள் சத்தமிட்டு: இயேசுவை விடுதலைப்பண்ணினால் நீர் இராயனுக்கு சிநேகிதன் அல்ல, தான் ராஜா என்று சொல்லுகிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று கூறினார்கள் [19:12]
John 19:14-16
பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தபின்பு பிரதான ஆசாரியர்கள் இறுதியாக பிலாத்துவிடம் கூறியது என்ன ?
பிரதான ஆசாரியர்கள்: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள் [19:15-16]
John 19:17-18
இயேசுவை எங்கே சிலுவையில் அறைந்தார்கள் ?
கபாலஸ்தலம் என அர்த்தம் கொள்ளும் கொல்கதாவிலே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் [19:17-18]
அன்று இயேசு மாத்திரம் சிலுவையில் அறையப்பட்டாரா ?
இல்லை. வேறு இரண்டுபேரை அவருக்கு இரண்டு பக்கங்களிலும் சிலுவையில் அறைந்தார்கள் [19:18]
John 19:19-20
பிலாத்து இயேசுவின் சிலுவையில் வைத்த மேல்விலாசம் என்ன ?
அதில்; நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது [19:19]
இயேசுவின் சிலுவையில் அந்த மேல்விலாசம் எந்த மொழியில் எழுதப்பட்டது ?
அது எபிரேயு, கிரேக்கு மற்றும் லத்தின் பாஷைகளில் எழுதப்பட்டது [19:20]
John 19:21-22
John 19:23-24
இயேசுவின் வஸ்திரங்களை சேவகர்கள் என்ன செய்தனர் ?
இயேசுவின் வஸ்திரங்களை ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக அதை நாலு பங்காக்கினார்கள். கிழியாமல் யாருக்கு வருமோ அதை சீட்டுப்போடுவோம் என்றார்கள் [19:23-24]
சேவகர்கள் எதினால் இயேசுவின் வஸ்திரத்தை அவ்வாறு செய்தார்கள் ?
என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேத வாக்கியம் நிறைவேறும்படிக்கு அவர்கள் அவ்வாறு செய்தார்கள் [19:23-24]
John 19:25-27
இயேசுவின் சிலுவையினருகே நின்றுகொண்டிருந்தது யார் ?
இயேசுவின் தாயும், அவருடைய தாயின் சகோதிரி கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தனர் [19:25-26]
தம்முடைய தாயையும், தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் அருகே நிற்கிறதையும் இயேசு கண்டு கூறியது என்ன ?
இயேசு: ஸ்திரியே அதோ உன் மகன் என்றார் [19:26]
தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் இயேசு கண்டு அதோ உன் தாய் என்று கூறியதும் அவன் செய்தது என்ன ?
அந்நேரம் முதல், அந்த சீஷன் அவளை தன்னிடமாய் சேர்த்துக்கொண்டான் [19:27]
John 19:28-30
நான் தாகமாய் இருக்கிறேன் என்று எதினால் இயேசு கூறினார் ?
வேதவாக்கியம் நிறைவேறும்படியாக இயேசு அவ்வாறு கூரினார் [19:28]
ஈசோப்புத் தண்டில் வாயினிடதிற்கு நீட்டப்பட்ட காடியை இயேசு வாங்கினபின்பு அவர் என்ன செய்தார் ?
இயேசு அந்த காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார் [19:29-30]
John 19:31-33
ஏன் யூதர்கள் பிலாத்துவினிடத்தில் முந்தினவனுடைய கால் எலும்புகளை முறிக்கும்படி கேட்டுக்கொண்டனர் ?
அது ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு யூதர்கள் பிலாத்துவினிடத்தில் கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் கேட்டுக்கொண்டனர் [19:31]
ஏன் சேவகர்கள் இயேசுவின் கால் எலும்புகளை முறிக்கவில்லை ?
இயேசு மரித்திருக்கிறதைக் கண்டு அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை [19:33]
John 19:34
இயேசு மரித்த்தபின்பு சேவகர்கள் என்ன செய்தனர் ?
ஒருவன் ஈட்டியினால் இயேசுவின் விலாவில் குத்தினான் [19:34]
John 19:35-37
ஏன் இயேசுவின் எலும்புகள் முறிக்கப்படாமல், ஈட்டியினால் விலாவில் குத்தப்பட்டது ?
இயேசுவின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படிக்கும் அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று எழுதப்பட்டிருப்பதினால் [19:36-37]
எதினால் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், ஏன் அவனுடைய சாட்சிகள் மெய்யாய் இருக்கிறது ?
அது சாட்சியாகவும் நாமும் அவரை விசுவாசிக்கும்படியாகவும் [19:35]
John 19:38-39
இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி உத்தரவு கேட்டவன் யார் ?
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி உத்தரவு கேட்டான் [19:38]
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புவுடனே இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி உடன் வந்தவன் யார் ?
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புடன் நிக்கொதேமு என்பவன் வந்திருந்தான் [19:39]
John 19:40-42
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும் இயேசுவின் சரீரத்தை என்ன செய்தனர் ?
அவர்கள் சுகந்தவர்கங்களுடனே சீலைகளினால் சுற்றிக் கட்டி, அந்த இடத்தில் இருந்த தோட்டத்தில் ஒருவனும் வைக்கப்பட்டிராத புதிய கல்லறையிலே இயேசுவின் சரீரத்தை வைத்தார்கள் [19:40-41]
John 20
John 20:1-2
மகதலேனா மரியாள் கல்லறைக்கு எப்போது வந்தாள்?
வாரத்தின் முதல் நாள் விடியற்காலையிலே அவள் கல்லறைக்கு வந்தாள் [20:1]
மகதலேனா மரியாள் கல்லறையில் கண்டது என்ன ?
கல்லறை அடைத்துவைக்கப்பட்டிருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக் கண்டாள் [20:1] # இரண்டு சீஷர்களிடம் மகதலேனா மரியாள் கூறியது என்ன ?
அவள்: அவர்கள் கர்த்தரை கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியாது என்றாள் [20:2]
John 20:3-5
மகதலேனா மரியாள் கூறியதை பேதுருவும் மற்ற சீஷனும் கேட்டு என்ன செய்தார்கள் ?
அவர்கள் இருவரும் கல்லறைக்கு ஒருமித்து ஓடினார்கள் [20:3-4]
John 20:6-7
சீமான் பேதுரு கல்லறையில் கண்டது என்ன ?
சீலைகள் கிடக்கிறதையும், இயேசுவின் தலையில் சுற்றியிருந்த சீலை மற்ற சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்ததையும் பேதுரு கண்டான் [20:6-7]
John 20:8-10
கல்லறைக்கு வந்து சம்பவித்தவைகளைக் கண்ட மற்ற சீஷர்களின் செயல் என்ன ?
கண்டு விசுவாசித்தார்கள் [20:8]
John 20:11-13
மரியாள் கல்லறையில் குனிந்து பார்க்கையில் அவள் கண்டது என்ன ?
சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், ஒருவன் கால்மாட்டிலும், மற்றொருவன் தலைமாட்டிலும் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள் [20:12]
தூதர்கள் மரியாளிடம் கூறியது என்ன ?
அவர்கள்: ஸ்திரியே ஏன் அழுகிறாய்? என்று கேட்டனர் [20:13]
John 20:14-15
மரியாள் பின்னாகத் திரும்பி அவள் கண்டது என்ன ?
அவள் இயேசு நிற்கிறதைக் கண்டாள் ஆனாலும், அவரை இயேசு என்று அறியாதிருந்தாள் [20:14]
இயேசுவை யார் என்று மரியாள் நினைத்தாள்?
அவர் தோட்டக்காரர் என்று நினைத்தாள் [20:15]
John 20:16-18
எப்போது மரியாள் இயேசுவை அறிந்தாள்?
அவர் மரியாள் என்று அழைத்தபின்பு அவள் அவரை இயேசு என்று அறிந்தாள் [20:16]
ஏன் இயேசு மரியாளை தொடாதே என்றார் ?
இயேசு: நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை எனவே அவளைத் தொடாதே என்றார் [20:17]
இயேசுவின் சகோதரர்களிடம் என்ன சொல்லும்படி இயேசு மரியாளிடம் கூறினார் ?
நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும், உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று சொல்லும்படி மரியாளிடம் இயேசு கூறினார் [20:17]
John 20:19
வாரத்தின் முதலாம் நாள் சாயங்கால வேளையில் சீஷர்கள் இருந்த இடத்தில் சம்பவித்தது என்ன ?
இயேசு வந்து அவர்கள் நடுவே நின்றார்[20:19]
சீஷர்களுக்கு, இயேசு எதைக் காண்பித்தார் ?
இயேசு தம்முடைய கைகளையும், விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார் [20:20]
John 20:20
கல்லறையின் முன்பு வைக்கப்பட்டிருந்த கல் தள்ளப்பட்டிருக்கிறதை மகதலேனா மரியாள் கண்டு அவள் என்ன செய்தாள்?
இயேசு நேசித்த பேதுரு மற்றும் மற்ற சீஷர்களிடம் ஓடினாள்[20:20]
John 20:21-23
இயேசு, சீஷர்களுக்கு என்ன செய்வதாக கூறினார் ?
பிதா இயேசுவை அனுப்பினதுபோல, இயேசுவும் சீஷர்களை அனுப்புவதாகக் கூறினார் [20:21]
சீஷர்கள்மேல் இயேசு ஊதி அவர் கூறியது என்ன ?
இயேசு: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருகிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கபபடாதிருக்கும் என்றார் [20:22-23]
John 20:24-25
சீஷர்கள் இயேசுவைக் கண்டபோது அவர்களில் எவன் இல்லாதிருந்தான் ?
திதிமு எனப்பட்ட தோமா என்பவன் சீஷர்கள் இயேசுவைக் கண்டபோது இருக்கவில்லை [20:24]
இயேசு பிழைத்திருக்கிறார் என்று தோமா விசுவாசிக்கும்படி எது நடக்கவேண்டும் என்றான் ?
தோமா: அவருடைய கைகளில் ஆணிகளினாளுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே நான் என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய நான் விசுவாசிப்பதில்லை என்றான் [20:25]
John 20:26-27
தோமா எப்போது இயேசுவைக் கண்டான் ?
எட்டு நாளைக்குப்பிறகு, அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்தது, இயேசு அவர்கள் நடுவே நின்றார் [20:26]
இயேசு, தோமாவிடம் என்ன செய்யும்படி கூறினார் ?
இயேசு: நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு. பின்பு இயேசு அவனை நோக்கி; அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிருக்கும்படி கூறினார் [20:27]
John 20:28-29
தோமா, இயேசுவிடம் கூறியது என்ன ?
தோமா: என் ஆண்டவரே, என் தேவனே என்றான் [20:28]
யாரை இயேசு பாக்கியவான்கள் என்றார் ?
இயேசு: காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் என்றார் [20:29]
John 20:30-31
புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அனேக அற்புதங்களை இயேசு செய்தாரோ?
ஆம். புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அனேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷர்களுக்கு முன்பாக செய்தார் [20:30]
எதினால் அவைகள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது ?
இயேசுவை, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது [20:31]
John 21
John 21:1-3
இயேசு தம்மை மறுபடியும் சீஷர்களுக்கு வெளிப்படுத்துகையில் அவர்கள் எங்கே இருந்தனர் ?
திபேரியா கடற்கரையிலே இயேசு தம்மை மறுபடியும் சீஷர்களுக்கு வெளிப்படுத்தினார் [21:1]
திபேரியா கடற்கரையிலே இருந்த சீஷர்கள் யார் ?
சீமான் பேதுருவும், திதிமு எனப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும் செபதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் திபேரியா கடற்கரையிலே இருந்தனர் [21:2]
அங்கே சீஷர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் ?
சீஷர்கள் மீன் பிடிக்கும்படி புறப்பட்டுப்போய், அந்த இராத்திரியிலே ஒன்றும் பிடிக்கவில்லை [21:3]
John 21:4-6
சீஷர்கள் என்ன செய்யும்படி இயேசு கூறினார் ?
நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார் [21:6]
சீஷர்கள் வலையைப் போட்டபின்பு சம்பவித்தது என்ன ?
திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள் [21:6]
John 21:7-9
அன்பாயிருந்த சீஷன் அது கர்த்தர் என்றதும் பேதுரு செய்தது என்ன ?
பேதுரு வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியால் தன் மேற்சட்டையை அறையிலே கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான் [21:7]
மற்றசீஷர்கள் செய்தது என்ன ?
படவிலிருந்தபடியே அவர்கள் மீன்களை இழுத்துக்கொண்டு வந்தார்கள் [21:8]
John 21:10-11
சீஷர்கள் பிடித்த மீன்களில் சிலவற்றை இயேசு என்ன செய்யும்படி கூறினார் ?
பிடித்த மீன்களில் சிலவற்றை இயேசு கொண்டுவரும்படி கூறினார் [21:10]
John 21:12-14
இயேசு உயிர்த்தெழுந்தபின்பு தம்முடைய சீஷர்களுக்கு எத்தனை முறை தரிசனமானார் ?
இது இயேசு உயிர்த்தெழுந்தபின்பு தம்முடைய சீஷர்களுக்கு காண்பித்த மூன்றாவது தரிசனம் [21:14]
John 21:15-16
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு இயேசு, பேதுருவிடம் முதலில் கேட்டது என்ன ?
இயேசு: இவர்களிலும் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்டார் [21:15]
John 21:17-18
மூன்றாவது முறை நீ என்னை நேசிக்கிறாயா என்று இயேசு கேட்டதற்கு பேதுருவின் பதில் என்ன ?
பேதுரு மூன்றாவது முறை; ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர் என்றான் [21:17]
மூன்றாவது முறை கேட்ட நீ என்னை நேசிக்கிறாயா? என்று கேட்டபின்பு. இயேசு பேதுருவிடம் செய்யும்படி கூறியது என்ன ?
மூன்றாவது முறை இயேசு பேதுருவிடம்; நீ என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் [21:17]
பேதுரு முதிர்வயதுள்ளவனாகும்போது அவனுக்கு என்ன சம்பவிக்கும் என்று இயேசு கூறினார் ?
பேதுரு முதிர்வயதுள்ளவனாகும்போது, நீ உன் கையை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு அறையைக் கட்டி, நீ விரும்பாத இடத்திற்கு உன்னை அழைத்துக்கொண்டு போவான் என்று இயேசு கூறினார் [21:18]
John 21:19
பேதுரு முதிர்வயதுள்ளவனாகும்போது சம்பவிப்பதை எதினால் இயேசு அவனுக்கு அறிவித்தார் ?
இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படி இயேசு கூறினார் [21:19]
John 21:20-23
இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷனைக் குறித்து பேதுரு இயேசுவிடம் என்ன கேட்டான் ?
பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்?
இவன் காரியம் என்ன என்ற பேதுருவின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன ?
இயேசு பேதுருவிடம், நீ என்னை பின்பற்றிவா என்றார் [21:22]
John 21:24-25
இந்த நிருபத்தை எழுதினவன் யார்? அவன் கொடுக்கும் சாட்சி என்ன ?
சீஷர்கள் இயேசுவை நேசித்ததும், இந்த நிருபத்தில் குறிப்பிடும் எல்லா காரியங்களும் சத்தியம் என்று இவைகளைக்குறித்து சாட்சி கொடுக்கிறார்கள் [21:24]