தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Philippians

Philippians 1

Philippians 1:1-2

Q? பவுல் இந்த நிருபத்தை யாருக்கு எழுதினான் ?

A. பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் பவுல் இந்த நிருபத்தை எழுதினான் [1:1].

Philippians 1:3-6

Q? எதினால் பவுல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் ?

A. சுவிசேஷம் பிலிப்பியர்கள் அறிந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் அவர்களின் ஐக்கியத்தைக் கண்டு பவுல் தேவனை ஸ்தோத்தரித்தான் [1:5].

Q? எதைக்குறித்து பிலிப்பியர்களிடம் பவுல் நிச்சயித்திருந்தான் ?

A. அவர்களில் நற்கிரியைகளைத் தொடங்கினவர் அதை கிறிஸ்து இயேசுவின் நாள் பரியந்தம் நடத்துவாரென்று பவுல் நிச்சயித்திருந்தான்[1:6].

Philippians 1:7-8

Q? எதினால் பிலிப்பியர்கள் பவுலுடன் பங்காளிகளாயிருந்தார்கள் ?

A. பவுலின் கட்டுகளிலும், அவன் சுவிசேஷத்திற்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்திவருகிற பிலிப்பியர்கள் அனைவரும் பவுலுக்கு கிருபையினால் பங்குள்ளவர்கள் [1:7].

Philippians 1:9-11

Q? பிலிப்பியர்களுக்குள் எது பெருகும்படி பவுல் விண்ணப்பம்பண்ணினான் ?

A. பிலிப்பியர்களின் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய் பெருகும்படி பவுல் விண்ணப்பம்பண்ணினான் [1:9].

Q? எதிலே பிலிப்பியர்கள் நிறைந்திருக்கும்படி பவுல் விரும்பினான் ?

A. நீதியின் கனிகளால் பிலிப்பியர்கள் நிறைந்திருக்கும்படி பவுல் விரும்பினான்[1:11].

Philippians 1:12-14

Q? பவுலின் கட்டுகளினாலே சுவிசேஷம் எப்படி திடன்கொண்டது ?

A. சகோதரரில் அநேகர் பவுலின் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய் துணிந்திருக்கிறார்கள் [1:12-14].

Philippians 1:15-17

Q? சுயநலத்தோடும், உண்மையில்லாமலும் ஏன் சிலர் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் ?

A. சுயநலத்தோடும், உண்மையில்லாமலும் சிலர் பவுலின் கட்டுகளோடே உபத்திரவத்தையும் கூட்ட நினைத்து கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் [1:17].

Philippians 1:18-19

Q? உண்மையோடும், உண்மையில்லாமலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறவர்களுக்கு பவுலின் எதிர்செயல் என்ன ?

A. எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் என்று பவுல் சந்தோஷப்பட்டான் [1:18].

Philippians 1:20-21

Q? பவுல் ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும் எதை செய்யும்படி வாஞ்சையாயிருந்தான் ?

A. பவுல் ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும் கிறிஸ்துவுக்கு மகிமை வரப்பண்ணும்படிக்கு வாஞ்சையாயிருந்தான்[1:20].

Q? பவுல் எதை ஜீவன் என்றும், எதை ஆதாயம் என்றும் கூறுகிறான் ?

A. பவுல்: கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் [1:21].

Philippians 1:22-24

Q? பவுலை நெருக்கின ஆலோசனைகள் என்னென்ன ?

A. தேகத்தைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனே கூட இருக்க ஆசையுண்டு மற்றும் சரீரத்திலே தரித்திருந்து அவருக்கு ஊழியம் செய்வது [1:22-24].

Philippians 1:25-27

Q? பவுல், பிலிப்பியர்களோடே இருப்பதைக் குறித்து நிச்சயித்திருந்தான் அதன் நோக்கம் என்ன ?

A. அவர்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்துவுக்குள் பெருகும்படிக்கு, பவுல்; பிலிப்பியர்களோடே இருப்பதைக் குறித்து நிச்சயித்திருந்தான்[1:25].

Q? பிலிப்பியர்களோடு இருக்கையிலும் அல்லது அவர்களிடத்தில் வராமலிருக்கையில் பவுல் அவர்களைக் குறித்து எதை கேள்விப்பட விரும்பினான் ?

A. அவர்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காய் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருப்பதைக் கேள்விப்படும்படி பவுல் விரும்பினான் [1:27].

Philippians 1:28-30

Q? பிலிப்பியர்கள்; அவர்களை எதிர்க்கிறவர்களுக்கு மருளாமலும், அத்தாட்சியுமாயிருப்பது எது ?

A. பிலிப்பியர்கள்; அவர்களை எதிர்க்கிறவர்களுக்கு மருளாதிருப்பது அவர்கள் கெட்டுப்போகிறதற்க்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது [1:28].

Q? பிலிப்பியர்களுக்கு தேவனால் அருளப்பட்ட இரண்டு காரியங்கள் எது ?

A. கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிப்பதற்கு மாத்திரம் அல்ல, அவர் நிமித்தமாக பாடுபடுகிறதற்கும் பிலிப்பியர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது [1:29].

Philippians 2

Philippians 2:1-2

Q? பிலிப்பியர்கள் எதை செய்து பவுலின் சந்தோஷத்தை நிறைவாக்கும்படி பவுல் கூறுகிறான் ?

A. ஏக சிந்தையும், ஏக அன்பும் உள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்துப் பவுலின் சந்தோஷத்தை நிறைவாக்கும்படி பவுல் கூறுகிறான்[2:2].

Philippians 2:3-4

Q? பிலிப்பியர்கள் தங்களில் ஒருவரையொருவர் எப்படி எண்ணவேண்டுமென்று பவுல் கூறுகிறான் ?

A. பிலிப்பியர்கள் தங்களில் ஒருவரையொருவர் மேன்மையானவர்களாய் எண்ணவேண்டும்[2:3].

Philippians 2:5-8

Q? யாருடைய சிந்தை நமக்கு தேவை என பவுல் கூறுகிறான் ?

A. கிறிஸ்து இயேசுவின் சிந்தை நமக்கு உண்டாயிருக்கும்படி பவுல் கூறுகிறான் [2:5-6].

Q? கிறிஸ்து இயேசு எந்த ரூபமாயிருந்தார் ?

A. கிறிஸ்து இயேசு தேவனுடைய ரூபமாயிருந்தார்[2:6].

Q? பின்பு கிறிஸ்து இயேசு எந்த ரூபமானார் ?

A. கிறிஸ்து இயேசு அடிமையின் ரூபமெடுத்து, மனுஷசாயலானார் [2:7].

Q? இயேசு எப்படி தம்மைத்தாமே தாழ்த்தினார் ?

A. இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்[2:8].

Philippians 2:9-11

Q? தேவன், இயேசுவுக்காக செய்தது என்ன ?

A. தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தார் [2:9].

Q? எல்லா நாவும் எதை அறிக்கைசெய்யும் ?

A. இயேசு கிறிஸ்துவே கர்த்தரென்று நாவு யாவும் அறிக்கைசெய்யும் [2:11].

Philippians 2:12-13

Q? பிலிப்பியர்கள்; அவர்களின் இரட்சிப்பு நிறைவேற எப்படி பிரயாசப்படவேண்டும் ?

A. அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் அவர்களின் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படவேண்டும்[2:12].

Q? தேவன் விசுவாசிகளில் செய்யும் செய்கை என்ன ?

A. தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் விசுவாசிகளில் உண்டாக்குகிறார் [2:13].

Philippians 2:14-16

Q? எல்லாவற்றையும் எவைகள் இல்லாமல் செய்யவேண்டும் ?

A. எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்யவேண்டும் [2:14].

Philippians 2:17-18

Q? எதினால் பவுல் அவனுடைய ஜீவனை வார்க்கப்படுகிறான் ?

A. பிலிப்பியர்களின் விசுவாசமாகிய பலியின் மேலும் ஊழியத்தின்மேலும் பவுல் வார்க்கப்படுவதாக கூறுகிறான் [2:17].

Q? பவுல் இருக்கும் எந்த காரியத்தில் பிலிப்பியர்களிலும் இருக்கும்படி அழைத்தான் ?

A. பவுல் மகிழ்ந்து சந்தோஷப்படும்படி அழைத்தான் [2:17-18].

Philippians 2:19-21

Q? ஏன் தீமோத்தேயு பவுலுக்கு விசேஷ ஊழியக்காரனாயிருந்தான் ?

A. தீமோத்தேயு, பிலிப்பியர்களை உண்மையாய் விசாரிக்கிறவனும், தனக்குரியவைகளைத் தேடாதவனுமாயிருந்தான் [2:20-21].

Philippians 2:22-24

Q? பிலிப்பியர்களை பவுல் காண விரும்பினானா ?

A. ஆம். சீக்கிரத்தில் அவர்களைக் காணும்படி நம்பிக்கையாயிருந்தான் [2:24].

Philippians 2:25-27

Philippians 2:28-30

Q? எப்பாப்பிரோதீத்து ஏன் மரணத்திற்கு சமீபமாயிருந்தான் ?

A. ஊழியத்தில் பவுலின் குறைவை நிறைவாக்கும்படிக்கு எப்பாப்பிரோதீத்து தன் பிராணனையும் எண்ணாமல் கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்கு சமீபமாயிருந்தான்[2:30].

Philippians 3

Philippians 3:1-3

Q? யாரைக்குறித்து ஜாக்கிரதையாயிருக்கும்படிக்கு பவுல் விசுவாசிகளை எச்சரித்தான் ?

A. பவுல் நாய்களுக்கும், பொல்லாத வேலையாட்களுக்கும், சுன்னத்துக்காரருக்கும் எச்சரிக்கையாயிருக்கும்படிக்கு கூறினான் [3:2].

Q? யார் உண்மையான விருத்தசேதனக்காரர்கள் என பவுல் கூறுகிறான் ?

A. மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினால் தேவனுக்கு ஆராதனை செய்து கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே உண்மையான விருத்தசேதனக்காரர்கள் என பவுல் கூறுகிறான் [3:3].

Philippians 3:4-5

Philippians 3:6-7

Q? பவுல் முன்பு செய்துவந்த செய்கைகளைக் குறித்து பக்திவைராக்கியத்தின்படி நியாயப்பிரமாணத்திற்குரிய விளக்கங்கள் என்ன ?

A. பக்திவைராக்கியத்தின்படி பவுல் முன்பு செய்துவந்த செய்கைகள் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன் [3:6].

Q? பவுலுக்கு மாம்சத்தின்படி லாபமாயிருந்தவைகளை எவ்வாறு கருதுகிறான் ?

A. பவுலுக்கு மாம்சத்தின்படி லாபமாயிருந்தவைகளை கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று கருதுகிறான் [3:7].

Philippians 3:8-11

Q? எதினால் பவுல் முன்பு செய்த எல்லாவற்றையும் குப்பையென்று எண்ணுகிறான் ?

A. கிறிஸ்துவின் மேன்மைக்காக பவுல் முன்பு செய்த எல்லாவற்றையும் குப்பையென்று எண்ணுகிறான்[3:8].

Q? பவுல் எப்படிப்பட்ட நீதியுடையவனாயிருக்கிறான் ?

A. தேவன்மேல் உள்ள விசுவாசாத்தினால் உண்டான நீதியினால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறான் [3:9].

Q? பவுல் கிறிஸ்துவுக்குள் எப்படிப்பட்டவனாயிருந்தான் ?

A. கிறிஸ்துவின் பாடுகளை சுமக்கிறவனாயிருந்தான் [3:10].

Philippians 3:12-14

Q? இன்னும் முழுமையடையவில்லை ஆகவே பவுல் செய்தது என்ன ?

A. பிடித்துக்கொள்ளும்படி பவுல் ஆசையாய் தொடர்ந்தான் [3:12].

Q? எந்த இலக்கை நோக்கி பவுல் தொடர்ந்தான் ?

A. கிறிஸ்து இயேசுவுக்குள், தேவன் அழைத்த பந்தயப் பொருளுக்காக பவுல் இலக்கை நோக்கி தொடர்ந்தான் [3:14].

Philippians 3:15-16

Philippians 3:17-19

Q? பிலிப்பியர்களுக்கு பவுல் வழிகாட்டுகிற மாதிரியைக் குறித்துக் கூறுவது என்ன ?

A. பிலிப்பியர்களை பவுல் தன்னோடுகூடப் பின்பற்றுகிறவர்களாகி அவர்களுடைய மாதிரியை நோக்கும்படி கூறுகிறான் [3:17].

Q? பூமிக்கடுத்தவைகளை சிந்தித்து, தங்கள் வயிறை தேவனாய் நினைக்கிறவர்களின் முடிவு எது ?

A. பூமிக்கடுத்தவைகளை சிந்தித்து, தங்கள் வயிறை தேவனாய் நினைக்கிறவர்களின் முடிவு அழிவு [3:19].

Philippians 3:20-21

Q? விசுவாசிகளின் குடியிருப்பு எங்கே இருப்பதாக பவுல் கூறுகிறான் ?

A. பவுல் விசுவாசிகளின் குடியிருப்பு பரலோகத்தில் உள்ளது [3:20].

Q? கிறிஸ்து தம்முடைய வருகையில் விசுவாசிகளின் சரீரத்தை என்ன செய்வார் ?

A. கிறிஸ்து தம்முடைய வருகையில் விசுவாசிகளின் சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மருரூமாக்குவார் [3:21].

Philippians 4

Philippians 4:1-3

Q? பிலிப்பியிலுள்ள பிரியமான சகோதரர்கள் என்ன செய்யும்படி பவுல் விரும்பினான் ?

A. அவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்கும்படி பவுல் விரும்பினான் [4:1].

Q? எரோதியாளுக்கும், சிந்திகேயாளுக்கும் என்ன சம்பவிப்பதைக் காண பவுல் ஆசையாயிருந்தான் ?

A. எரோதியாளுக்கும், சிந்திகேயாளுக்கும் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருப்பதைக் காண பவுல் ஆசையாயிருந்தான்[4:2].

Philippians 4:4-7

Q? எப்பொழுதும் என்ன செய்யும்படி பிலிப்பியர்களுக்கு பவுல் கூறினான் ?

A. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கும்படி பவுல் கூறினான் [4:4].

Q? கவலைப்படாமல் என்ன செய்யும்படி பவுல் கூறினான் ?

A. பவுல்: ஒன்றுக்கும் கவலைப்படாமல், விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் [4:6].

Q? அப்படி செய்வதினால் நம்முடைய இருதயங்களையும், சிந்தனைகளையும் எது காத்துக்கொள்ளும் ?

A. அப்படி செய்வதினால் தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களையும், சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்[4:7].

Philippians 4:8-9

Q? எப்படிப்பட்டவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்கும்படி பவுல் கூறுகிறான் ?

A. பவுல்: உண்ண்மையுள்ளவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், மற்றும் புகழ் இவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்கும்படி பவுல் கூறுகிறான்[4:8].

Philippians 4:10-13

Q? எதைச் செய்ய பிலிப்பியர்கள் மனம் மலர்ந்திருக்கிறார்கள் ?

A. பவுலை விசாரிப்பதற்கு பிலிப்பியர்கள் மனம் மலர்ந்திருக்கிறார்கள்[4:10].

Q? எந்த நிலைமையிலும் இருக்கும்படி பவுல் எந்த ரகசியத்தை கற்றிருந்தான் ?

A. எந்த நிலைமையிலும் வாழ்ந்திருக்கவும், தாழ்ந்திருக்கவும் கூடும் என்கிற ரகசியத்தை கற்றிருந்தான்[4:11-12].

Q? எந்த பலத்தினால் பவுல் எல்லாம் செய்ய இயலும் என்கிறான் ?

A. பவுல் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு [4:13].

Philippians 4:14-17

Q? பவுலின் குறைச்சலின்போது பிலிப்பியர்கள் அனுப்பியவற்றிற்காக பவுல் எதை நாடினான் ?

A. அவர்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே பவுல் நாடினான் [4:14-17].

Philippians 4:18-20

Q? பவுலுக்கு பிலிப்பியர்களால் உண்டான பரிபூரணத்தை தேவன் எவ்வாறு கண்டார் ?

A. பிலிப்பியர்கள், பவுலுக்கு செய்த பரிபூரணத்தை சுகந்த வாசனையும், தேவனுக்கு பிரியமுமான பலியாக கண்டார் [4:18].

Q? பிலிப்பியர்களுக்கு தேவன் என்ன செய்வதாக பவுல் கூறுகிறான் ?

A. பவுல்: தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி அவர்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் மகிமையிலே நிறைவாக்குவார் [4:19].

Philippians 4:21-23

Q? பிலிப்பியாவிலுள்ள எந்த குடும்பத்தினருக்கெல்லாம் பவுல் வாழ்த்து கூறினான் ?

A. இராயனுடைய அரண்மனைகளில் உள்ளவர்களுக்கும் பவுல் வாழ்த்து கூறினான் [4:22].