தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 Timothy

2 Timothy 1

2 Timothy 1:1-2

Q? பவுல் எப்படி கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக மாறினார் ?

A. பவுல் தேவனுடைய சித்தத்தின் மூலமாக, கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக மாறினார் [1:1]

2 Timothy 1:3-5

Q? தீமோத்தேயுவிற்கு முன்னிருந்து தீமோத்தேயுவின் குடும்பத்தில் யாரெல்லாம் உண்மையான விசுவாசம் வைத்திருந்தார்கள் ?

A. தீமோத்தேயுவின் பாட்டியும், மற்றும் அவர் தாயார் இருவருக்குள்ளும்,உண்மையான விசுவாசம் இருந்தது [1:5]

2 Timothy 1:6-7

Q? தேவன் எப்படிபட்ட ஆவியை, தீமோத்தேயுவிற்கு கொடுத்தார் ?

A. தேவன் தீமோத்தேயுவிற்கு, பலமும், மற்றும் அன்பும்,மற்றும் தெளிந்த புத்தியுள்ள ஆவியைக் கொடுத்தார் [1:7]

2 Timothy 1:8-11

Q? தீமோத்தேயுவிற்கு செய்யக்கூடாதென்று பவுல் சொன்ன காரியம் என்ன ?

A. கர்த்தரை பற்றின சாட்சியைக் குறித்து வெட்கப்படாதவனாய் இருக்கவேண்டும் என்று சொல்லி பவுல் தீமோத்தேயுவிற்கு கூறுகிறார் [1:8]

Q? தீமோத்தேயுவை அதற்கு பதிலாக என்ன செய்யவேண்டும் என்று பவுல் கூறுகிறார் ?

A. தீமோத்தேயு அதற்கு பதிலாக சுவிசேஷத்திற்காக தீங்கநுபவிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் [1:8]

Q? கடவுளின் தீர்மானமும்,கிருபையும்,நமக்கு எப்பொழுது அருளப்பட்டது.

A. ஆதிகாலமுதல் நமக்கு கடவுளின் தீர்மானமும்,கிருபையும்,அருளப்பட்டது [1: 9]

Q? தனது இரட்சிப்பின் திட்டத்தை,கர்த்தர் எவ்வாறு வெளிப்படுத்தினார் ?

A. நம்முடைய இரட்சகாராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே,கர்த்தர் தனது இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தினார் [1:10]

Q? இயேசு வெளிப்பட்டபோது மரணத்தையும் ஜீவனையும் குறித்து அவர் என்ன செய்தார் ?

A. இயேசு மரணத்தைப் பரிகரித்து சுவிசேஷத்தின் வாயிலாக முடிவில்லாத ஜீவனைக் கொடுத்தார் [1:10]

2 Timothy 1:12-14

Q? கர்த்தர் தனக்கு எந்த காரியத்தை செய்ய,ஏதுவானவராய் இருக்கிறார் என்று பவுல் நிச்சயத்தினாலே, அவன் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாதவனாய் இருந்தான் ?

A. பவுல் கர்த்தரிடத்தில் ஒப்புவித்ததை,அவர் அந்நாள் வரைக்கும்,காத்துக்கொள்ள வல்லவராய் இருக்கிறார் என்று நிச்சயத்திருந்தார் [1:12]

Q? கர்த்தர் தீமோத்தேயுவினிடத்தில் ஒப்புவித்த நற்பொருளை,தீமோத்தேயு என்ன செய்யவேண்டும் ?

A. தீமோத்தேயு தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட, அந்த நற்பொருளை,பரிசுத்த ஆவியினாலே,தீமோத்தேயு காத்துக்கொள்ள வேண்டும் [1:14]

2 Timothy 1:15-18

Q? ஆசியாவிலுள்ள,பவுலின் நண்பர்கள் அவனுக்கு என்ன செய்தார்கள் ?

A. ஆசியா நாட்டில் இருக்கிற யாவரும்,பவுலை விட்டு விலகினார்கள் [1:15]

Q? ஒனேசிப்போருவின் வீட்டாருக்கு,கர்த்தர் இரக்கம் கட்டளையிட வேண்டும் என்று ஏன் பவுல் கூறுகிறார் ?

A. ஒனேசிப்போருவின் வீட்டாருக்கு, கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவார் என்று கூறியதற்கு காரணம் என்னவென்றால், ஒனேசிப்போர் பவுலுக்கு, அநேக வழிகளில் உதவி செய்திருக்கிறார் [1:16-18]

2 Timothy 2

2 Timothy 2:1-2

Q? பவுலுக்கும், தீமோத்தேயுவிற்கும் இடையே உள்ள உறவு என்ன ?

A. தீமோத்தேயு, பவுலுக்கு ஆவிக்குரிய குமாரன் [1:2,2:1]

Q? பவுலிடத்தில் கேட்ட செய்திகளை தீமோத்தேயு யாரிடத்தில் ஒப்புவிக்க வேண்டும் ?

A. தன்னிடத்தில் கேட்டவைகளை, மற்றவர்களிடத்தில் போதிக்கத் தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஒப்புவிக்க வேண்டும் [2:2]

2 Timothy 2:3-5

Q? தீமோத்தேயுவிற்காய்,சொல்லப்பட்ட அறிவுரையில், நல்லப் போர்ச் சேவகன் தன்னை எதில் சிக்கிக்கொள்ள மாட்டான் என்று, பவுல் என்ன கூறுகிறார் ?

A. நல்லப் போர்ச் சேவகன் பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மாட்டான் [2:4]

2 Timothy 2:6-7

2 Timothy 2:8-10

Q? கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிப்பதினால், எவ்வித துன்பத்தை பவுல் அடைந்தார் என்று அவர் தீமோத்தேயுவிற்கு எழுதும் போது குறிப்பிடுகிறார் ?

A. பவுல் பாதகன் போல கட்டப்பட்டு துன்பத்தை அனுபவித்தார் [2:9]

Q? எது கட்டப்படவில்லை என்று பவுல் கூறுகின்றார் ?

A. தேவ வசனமோ கட்டப்பட்டு இருக்கவில்லை [2:9]

Q? ஏன் பவுல் இந்தக் காரியத்தையெல்லாம் சகித்தார் ?

A. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி பவுல் சகலத்தையும் அவர்கள் நிமித்தமாய் சகித்தார் [2:10]

2 Timothy 2:11-13

Q? பாடுகளை சகிக்கிறவர்களுக்கு,கிறிஸ்துவின் வாக்குதத்தம் என்ன ?

A. பாடுகளை சகிக்கிறவர்கள்,கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வார்கள் [2:12]

Q? கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களுக்கு,அவரின் எச்சரிக்கை என்ன ?

A. கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களை,கிறிஸ்துவும் மறுதலிப்பார் [2:12]

2 Timothy 2:14-15

Q? எதைக்குறித்து வாக்குவாதம் பண்ண வேண்டாம் என்று, மக்களை தீமோத்தேயு எச்சரிக்கிறார் ?

A. ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத வார்த்தைகளுக்காக,வாக்குவாதம் பண்ணவேண்டாம் என்று,மக்களுக்கு தீமோத்தேயு எச்சரிக்கை விடுகிறார் [2:14]

2 Timothy 2:16-18

Q? இரண்டு மனிதர்கள், சத்தியத்தை விட்டு விலக எவ்விதமான, தவறான உபதேசத்தைப் போதித்தார்கள் ?

A. உயிர்த்தெழுதல் நடந்தாயிற்று என்று போதித்தார்கள் [2:18]

2 Timothy 2:19-21

Q? எந்த நற்கிரியைகளுக்கும்,விசுவாசிகள் தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ளவேண்டும் ?

A. விசுவாசிகள் அவமரியாதையின்,பயன்பாட்டிலிருந்து தங்களை சுத்திகரித்துக்கொண்டு எந்த நற்கிரியைகளுக்கும் தங்களை ஆயத்தமாக்கப்பட்டு இருக்கவேண்டும் [2:21]

2 Timothy 2:22-23

Q? எதிலிருந்து தீமோத்தேயு விலகி ஓடவேண்டும் ?

A. பாலியத்துக்குரிய இச்சையிலிருந்து தீமோத்தேயு விலகி ஓடவேண்டும் [2:22]

2 Timothy 2:24-26

Q? கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு, எவ்வகையான குணாதிசயங்கள் இருக்க வேண்டும் ?

A. கர்த்தருடைய ஊழியக்காரன், சாந்தகுணமுள்ளவனும், போதகசமர்த்தனும், சண்டைபண்ணாதவனும், எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தீமையை சகிக்கிறவனுமாய் இருக்கவேண்டும் [2:24,25]

Q? அவிசுவாசிகளோடு பிசாசு என்னத்தை செய்தான் ?

A. தன் இச்சையின்படி செய்ய கண்ணியினால் பிசாசானவன் அவிசுவாசிகளைக் கைப்பற்றினான் [2:26]

2 Timothy 3

2 Timothy 3:1-4

Q? கடைசி நாட்களில் என்ன வரும் என்று பவுல் கூறுகிறார் ?

A. கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும் என்று பவுல் கூறுகிறார் [3:1]

Q? கடைசி நாட்களில் தேவனுக்கு பதிலாக, மனிதர்கள் நேசிக்கும் மூன்று காரியங்கள் யாவை ?

A. கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும் மற்றும் தேவபிரியராயிராமல் சுகபோக பிரியராய் இருப்பார்கள் [3:2-4]

2 Timothy 3:5-7

Q? தேவபக்தியின் வேஷத்தை தரித்திருப்பவர்களிடத்தில் தீமோத்தேயு எப்படி இருக்கவேண்டும் என்று பவுல் கூறுகிறார் ?

A. தேவபக்தியின் வேஷம் தரித்திருப்பவர்களிடத்திலிருந்து தீமோத்தேயு,விலகி இருக்கவேண்டும் என்று பவுல் கூறுகிறார் [3:5]

Q? இப்படிப்பட்ட சில தேவபக்தியின் வேஷம் தரித்தவர்கள்,என்னத்தை செய்வார்கள் ?

A. ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாய் இருக்கிற, பெண்பிள்ளகளுடைய வீடுகளில்,இப்படிப்பட்ட தேவபக்தியின் வேஷத்தை தரித்த சிலர் நுழைந்து,பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,அவர்களை வசப்படுத்திக் கொள்வார்கள் [3:6]

2 Timothy 3:8-9

Q? தேவபக்தியின் வேஷம் தரித்தவர்கள்,எவ்வகையில் பழைய ஏற்ப்பாட்டில் உள்ள யந்நேயும்,யம்ரேயையும் போல் இருக்கிறார்கள் ?

A. யந்நேயையும்,யம்ரேயையும்,போல தேவபக்தியின் வேஷம் தரித்திருக்கிற மனுஷர்களும்,சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிற தவறான போதகர்களாய் இருக்கிறார்கள் [3:8]

2 Timothy 3:10-13

Q? தீமோத்தேயு தவறான போதகர்களுக்கு பதிலாக யாரைப் பின்பற்றினான் ?

A. தீமோத்தேயு பவுலை பின்பற்றினான் [3:10-11]

Q? கர்த்தர் எதிலிருந்து பவுலை நீங்கலாக்கி விட்டார் ?

A. கர்த்தர் பவுலை அவனுடைய எல்லா துன்பங்களில் நின்று நீங்கலாக்கி விட்டார் [3:11]

Q? தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவருக்கும், என்ன சம்பவிக்கும் என்று பவுல் கூறுகிறார் ?

A. தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பபடுவார்கள் என்று பவுல் கூறுகிறார் [3:12]

Q? கடைசிநாட்களில் யார் கேடுள்ளவர்களாய் ஆவார்கள் ?

A. பொல்லாதவர்களும், மற்றும் எத்தர்களுமானவர்களும்,கடைசி நாட்களில் மென்மேலும் கேடுள்ளவர்கள் ஆவார்கள் [3:13]

2 Timothy 3:14-15

Q? தீமோத்தேயுவினுடைய வாழ்க்கையில் எந்த காலகட்டத்திலிருந்து,அவன் பரிசுத்த வேதஎழுத்துக்களை அறிந்திருந்தான் ?

A. தீமோத்தேயு தனது சிறுவயது முதல் பரிசுத்த வேத எழுத்துக்களை அறிந்திருந்தான் [3:15]

2 Timothy 3:16-17

Q? வேதவாக்கியங்கள் எல்லாம் மனுஷருக்கு எவ்வாறு அருளப்பட்டது ?

A. வேதவாக்கியங்கள் எல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [3:16]

Q? வேதவாக்கியங்கள் எல்லாம் எதற்கு பிரயோஜனம் உள்ளதாய் இருக்கிறது ?

A. வேதவாக்கியங்கள் எல்லாம் உபதேசத்திற்கும் கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருந்துதலுக்கும் நீதியை படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளுமாய் இருக்கிறது [3:16]

Q? ஒரு மனுஷனை வேதவாக்கியங்களில் பயிற்சி கொடுப்பதற்கான,நோக்கம் என்ன ?

A. ஒரு மனுஷன் வேதவாக்கியங்களில் பயிற்சி பெறுவானானால் அவன் தேறினவனாகவும்,எந்த நற்கிரியையும் செய்ய தகுதி உள்ளவனாகவும் இருப்பான் [3:17]

2 Timothy 4

2 Timothy 4:1-2

Q? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யாரை நியாயம் தீர்க்கப்போகிறார் ?

A. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,உயிரோடு இருக்கிறவர்களையும்,மரித்தவர்களையும் நியாயம் தீர்க்கப்போகிறார் [4:1]

Q? தீமோத்தேயு,எதை செய்ய வேண்டும் என்று பவுல் கட்டளை கொடுக்கிறார் ?

A. தீமோத்தேயு,திருவசனத்தை பிரசங்கிக்க வேண்டும் என்று பவுல் கட்டளை கொடுக்கிறார் [4:2]

2 Timothy 4:3-5

Q? மனிதர்கள், எதை செய்யும் போது,அவர்களுக்கு காலம் வரும் என்று பவுல் எச்சரிக்கிறார் ?

A. மனிதர்கள், ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாமல்,தங்கள் சுயஇச்சைகளுக்கேற்ற போதகங்களுக்கு செவிசாய்ப்பார்கள் [4:3]

Q? தீமோத்தேயு, எவ்வகையான வேலை மற்றும் ஊழியத்தை செய்யும் படி அருளப்பட்டது ?

A. சுவிசேஷகனுடைய வேலையை மற்றும் ஊழியத்தை செய்ய தீமோத்தேயுவிற்கு அருளப்பட்டது [4:5]

2 Timothy 4:6-8

Q? பவுல் தனது வாழ்க்கையில், காலம் வந்தது என்று எதைக் குறிப்பிடுகிறார் ?

A. பவுல் தன் தேகத்தை விட்டு பிரியும் காலம் வந்தது என்று கூறுகிறார் [4:6]

Q? கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் கிடைக்கும் வெகுமதி என்னவென்று பவுல் கூறுகிறார் ?

A. கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவரும்,நீதியின் கிரீடத்தைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று பவுல் கூறுகிறார் [4:8]

2 Timothy 4:9-10

Q? பவுலின் உடன் ஊழியனாகிய,தேமா ஏன் அவனை விட்டு பிரிந்துப் சென்றான் ?

A. ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்ததினால் பவுலை விட்டுப் பிரிந்து சென்றார் [4:10]

2 Timothy 4:11-13

Q? பவுலோடு கூட இருந்து கொண்டிருக்கிற,ஒரே உடன் வேலையாள் யார் ?

A. லூக்கா மாத்திரம் பவுலோடு கூட இருந்தார் [4:11]

2 Timothy 4:14-16

Q? பவுல் தனக்கு தீமை செய்த மனிதனுக்கு,எதை வைத்து வெகுமதி,வழங்கப்படும் என்று பவுல் சொல்லுகிறார் ?

A. பவுல் தனக்கு தீமை செய்த மனிதனுடைய செய்கைகளுக்குத் தக்கதாக அவனுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று பவுல் கூறுகிறார் [4:14]

Q? பவுல் முதல் விசை உத்தரவு சொல்ல நிற்கையில்,அவனோடு நின்றது யார் ?

A. பவுல் முதல் விசை உத்தரவு சொல்ல நிற்கையில்,கர்த்தரே அவனுக்குத் துணையாக நின்றார் [4:16,17]

2 Timothy 4:17-18

2 Timothy 4:19-22