தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 John

2 John 1

2 John 1:1-3

Q? எழுத்தாளராகிய யோவான் இந்த நிருபத்தில் தன்னை எந்தப் பட்டப்பெயரினால் அறிமுகப்படுத்துகிறான்?

A. யோவான் தன்னை மூப்பனென்று அறிமுகப்படுத்துகிறான் [1:1].

Q? இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?

A. இந்த நிருபம் தெரிந்துகொள்ளப்பட்டவளாகிய அம்மாவிற்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதப்பட்டது [1:1].

Q? யோவான் யாரிடமிருந்து கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் வருகிறதென்று சொல்லுகிறான்?

A. பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் வருகிறதென்று யோவான் சொல்லுகிறான் [1:3].

2 John 1:4-6

Q? யோவான் ஏன் சந்தோஷப்படுகிறான்?

A. யோவான் அம்மாளின் பிள்ளைகளில் சிலர் சத்தியத்தில் நடப்பதைக் கண்டபடியினால் சந்தோஷப்படுகிறான் [1:4].

Q? ஆதிமுதல் தங்களுக்கு உண்டாயிருந்தது என்று எந்தக் கட்டளையை யோவான் சொல்லுகிறான்?

A. ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும் என்ற கட்டளை ஆதிமுதல் தங்களுக்கு உண்டாயிருந்தது என்று யோவான் சொல்லுகிறான் [1:5].

Q? எது அன்பாயிருக்கிறது என்று யோவான் சொல்லுகிறான்?

A. தேவனுடைய கட்டளைகளின்படி நடப்பது அன்பாயிருக்கிறது என்று யோவான் சொல்லுகிறான் [1:6].

2 John 1:7-8

Q? மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்யாதவர்களை யோவான் என்னவென்று அழைக்கிறான்?

A. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்யாதவர்களை

Q? விசுவாசிகள் எதை செய்யாதபடிக்குக் கவனமாயிருக்க வேண்டுமென்று யோவான் கூறுகிறான்?

A. விசுவாசிகள் தாங்கள் கிரியை செய்தவைகளுக்குரிய பலனை இழந்து போகாதபடிக்குக் கவனமாயிருக்க வேண்டுமென்று யோவான் கூறுகிறான் [1:8].

2 John 1:9-11

Q? எவனாகிலும் கிறிஸ்துவைப் பற்றிய சரியான போதனையைக் கொண்டுவராவிட்டால் அவனிடத்தில் விசுவாசிகள் என்ன செய்ய வேண்டுமென்று யோவான் கூறுகிறான்?

A. கிறிஸ்துவைப் பற்றிய சரியான போதனையைக் கொண்டுவராத எவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று விசுவாசிகளுக்கு யோவான் கூறுகிறான் [1:10].

Q? கிறிஸ்துவைப் பற்றிய சரியான போதனையைக் கொண்டுவராத ஒருவனை, ஒரு விசுவாசி ஏற்றுக்கொண்டால் அவன் என்ன குற்றத்திற்குப் பொறுப்பாயிருக்கிறான்?

A. கிறிஸ்துவைப் பற்றிய சரியான போதனையைக் கொண்டுவராத ஒருவனை, ஒரு விசுவாசி ஏற்றுக்கொண்டால், அவன் அவனுடைய தீய செயல்களில் பங்கெடுக்கிற குற்றத்திற்குப் பொறுப்பாயிருக்கிறான் [1:11].

2 John 1:12-13

Q? யோவான் எதிர்காலத்தில் என்ன செய்யப்போவதாய் நம்புகிறான்?

A. யோவான் தெரிந்துகொள்ளப்பட்டவளாகிய அம்மாவிடம் வந்து, முகமுகமாய் பேசலாமென்று நம்புகிறான் [1:12].