Colossians
Colossians 1
Colossians 1:1-3
Q? பவுல் எப்படி இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரானார்?
A. தேவனுடைய சித்தத்தினாலே பவுல் இயேசு கிறிஸ்துவினுடைய
Q? பவுல் யாருக்கு இந்த நிரூபத்தை எழுதினார்?
A. பவுல் இந்த நிரூபத்தை கொலோசே பட்டணத்தின் வேறுபிரிக்கப்பட்ட உண்மையுள்ள சகோதரர்களுக்கு எழுதினார்[1:2]
Colossians 1:4-6
Q? கொலோசியர்கள், இப்பொழுது அவர்களிடம் இருக்கக்கூடிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை பற்றி எங்கிருந்து கேள்விப்பட்டார்கள்?
A. கொலோசியர்கள் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகளைப் பற்றி, சத்தியவசனமாகிய சுவிசேஷசத்தில் கேள்விப்பட்டார்கள்[1:5].
Q? இந்த சுவிசேஷம் எப்படி உலகமெங்கும் பரம்பி பலன் தருகிறதாய் இருக்கிறது என்று பவுல் சொன்னார்?
A. இந்த சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பி சகல விதமான நற்கனிகளை தந்து விருத்தியடையத்தக்கதாக இருக்கிறது என்று பவுல் கூறினார்[1:6].
Colossians 1:7-8
Q? யார் இந்த சுவிசேஷத்தை, நற்செய்தியை கொலோசெயருக்கு அர்ப்பணித்தது?
A. அதை எங்களுக்கு பிரியமான உடன்வேலையாளும் உங்களுக்காகக்கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்கரனுமாயிருக்கிற எப்பாபிராத்து கொலோசெயருக்கு அர்ப்பணித்தான்.
Colossians 1:9-10
Q? பவுல் கொலோசெய்யர்கள் எதினால் எல்லாம் நிரப்பப்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்?
A. எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வேண்டும் என்று பவுல் கொலோசெயருக்காக வேண்டிக்கொண்டான்.
Q? கொலோசியர்கள் தங்களது வாழ்க்கையிலே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பவுல் வேண்டிக்கொண்டான்.[1:9].
A. சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக நடந்து கொள்ள வேண்டும் என்று பவுல் கொலோசெயருக்கு வேண்டிக்கொண்டான். [1:10].
Colossians 1:11-12
Q? என்னத்திற்காக தேவன் அவர்களை ஒரு தொகுப்பாக பங்கடைய வேண்டும் என்று தகுதிப்படுத்தினார்?
A. ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரதரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதிபடுத்தினர்[1:12].
Colossians 1:13-14
Q? பிதாவிற்க்காக வேறுபிரிக்கப்பட்டவர்களை அவர் எதிலிருந்து விடுதலையாக்கினர்?
A. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்க்கு உட்படுத்தினவருமாயிருக்கிறதுமான பிதாவானவர். [1:13]
Q? கிறிஸ்துவுக்குள் மீட்பு கிடைத்திருக்கிறது, அந்த மீட்பு என்ன?.
A. அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.[1:14]
Colossians 1:15-17
Q? குமரன் யாருடைய சாயலாய் இருக்கிறார்?
A. குமாரன் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமுமானவர்.[1:5].
Q? தேவன் தன் குமாரனுக்காக, அவர் மூலமாக படைக்கப்பட்டது என்ன?
A. இயேசு கிறிஸ்துமூலமாக சகலமும் சிருஷ்டிக்கப்பபட்டது, சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.[1:16]
Colossians 1:18-20
Q? தேவன் எப்படி எல்லாவற்றையும் தம்மிடம் ஒப்புரவாக்கினார்?
A.தேவன், தன் குமாரன் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கினார்.[1:2௦]
Colossians 1:21-23
Q? சுவிசேஷசத்தை நம்புவதற்கு முன்பு கொலோசெயர் தேவனுடன் என்ன மாதிரியான உறவு பண்ணயிருந்தார்கள்?.
A. சுவிசேஷத்தை நம்புவதற்க்கு முன்பாக, கொலோசெயர் தேவனை விட்டு அந்நியராயும், சத்துருக்களாயும் இருந்தார்கள்.[1:21]
Q? முக்கியமாக கொலோசெயர் தொடர்ந்து என்ன செய்ய இருந்தார்கள்?
A. கொலோசெயர்கள் விசுவசத்திலும், சுவிசேஷத்தின் நம்பிக்கையிலும், தொடர்ந்து நிலைத்து இருக்க வேண்டும்.[1:23]
Colossians 1:24-27
Q? யார் நிமித்தமாக பவுல் வேதனை பட்டார், அவருடைய மன நிலைமை என்ன?
A. பவுல் சபையின் நிமித்தமாக பாடுகள் பட்டார், அதினாலே அவர் மகிழ்ந்திருத்தார்.[1: 24]
Q? ஆதிகாலங்களில் மறைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட இரகசியம் என்ன?
A. ஆதிகாலங்களில் மறைக்கப்பட்டது ஆனால் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட இரகசியம் கிறிஸ்து உனக்குள் இருப்பதே அந்த மகிமையின் நம்பிக்கை [1:27]
Colossians 1:28-29
Q? என்ன நோக்கத்திற்க்காக பவுல் கடிந்துபேசி உபதேசித்தார்?
A. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக இருக்கும்படிக்கு.[1;28]
Colossians 2
Colossians 2:1-3
Q? தேவனுடைய இரகசியம் என்ன?
A. கிறிஸ்துவே தேவனுடைய இரகசியம்[2:2]
Q? கிறிஸ்துவுக்குள் மறைந்து இருப்பது என்ன?
A. அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.[2:3]
Colossians 2:4-5
Q? பவுல் கோலேசசெயருக்கு என்ன நிகழும் என்று கவலைப்பட்டான்?
A. பவுல் கோலேசெயரை நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடி இருக்கும்படி சொன்னான்[2:24]
Colossians 2:6-7
Q? இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்பு கொலோசியர் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் வேண்டிக்கொண்டான்?
A. இயேசு கிறிஸ்துவை எப்படி ஏற்றுக்கொண்டார்களோ, அதே வழியில் நடக்கும்படி பவுல் கொலோசெயாருக்கு சொன்னான்.[2:6].
Colossians 2:8-9
Q? ஏமாற்றப்பட்டவைகளின் மேல் பவுல் எதைக்குறித்து கவலைப்பட்டார் ?
A. ஏமாற்றப்பட்டப்பட்டவைகள் என்பது மனிதபாரம்பரியத்தையும், உலகத்தின் பாவ காரியங்களையும் அடிப்படையாகக்கொன்ண்டது.[2:8] Q? கிறிஸ்துவுக்குள் வாசமாய் இருப்பது எது ?
A. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வசமாயிருகிறது.
Colossians 2:10-12
Q? ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும் தலைமையாய் இருப்பது யார் ?
A. ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் தலைமையாய் இருப்பது கிறிஸ்துவே.[2:10]
Q? கிறிஸ்துவின் விருத்தசேதனத்தின் மூலமாக நீக்கப்பட்டது என்ன?
A. இயேசு கிறிஸ்துவின் விருத்தசேதனத்தின் மூலமாக மாமிசத்துக்குரிய பாவ சரீரம் நீக்கப்பட்டது.[2:11]
Q? ஞானஸ்தனத்திற்குள் என்ன நடக்கிறது?
A. ஞானஸ்தானத்தினாலே ஒரு மனிதன் கிறிஸ்துவோடே கூட அடக்கம் பண்ணப்படுகிறான்.
Colossians 2:13-15
Q? தேவன் ஒரு மனிதனை உயர்பிப்பதற்க்கு முன்பாக அவனுடைய நிலைமை என்ன?
A. தேவன் ஒரு மனிதனை உயர்பிப்பதற்க்கு முன்பாக அவனுடைய அக்கிரமங்களை மன்னித்து அவனை மரித்தோரிலிருந்து உயர்பிக்கிறார்[2:13]
Q? நமக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த கட்டளைகளை கிறிஸ்து என்ன செய்தார்?
A. கிறிஸ்து எதிரிடையாக இருந்த கட்டளைகளை சிலுவையின் மேல் ஆணியடித்து, எடுத்துப்போட்டார்[2:14]
Q? கிறிஸ்து துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் என்ன செய்தார்?
A. கிறிஸ்து துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரித்துக்கொண்டு வெளியரங்கமான கோலமாக்கி அவைகளின் மேல் வெற்றி சிறந்தார்[2:15]
Colossians 2:16-17
Q? வருங்கரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்று பவுல் சொன்னது என்ன?
A. போஜனத்தையும் பானத்தையும் பண்டிகைநாளையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது உங்களை ஒருவனும் குற்றப்படுத்தாதிருப்பானாக என்று பவுல் சொன்னான்[2:17]
Q? வருங்கரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்பதன் பொருள் என்ன?
A. வருங்கரியங்களுக்கு நிழலாயிருக்கிறது என்பதன் பொருள் கிறிஸ்துவே [2:17].
Colossians 2:18-19
Q? முழு சரீரம், முழுவதும் எப்படி உதவி பெற்று இணைக்கப்பட்டது?
A. முழு சரீரம், முழுதும் உதவி பெற்று இணைக்கப்பட்டு தலையாய் இருப்பது கிறிஸ்துவே [2:19]
Colossians 2:20-23
Q? எந்த மாதிரியான கட்டளைகள, உலக நம்பிக்கையின் ஒரு பகுதி என பவுல் கூறுகிறார்?
A. தீண்டாதே, ருசிபாராதே மற்றும் தொடாதே ஆகிய கட்டளைகள எல்லாம் உலக நம்பிக்கைகளின் ஒரு பகுதி ஆகும் [2 : 20-22].
Q? மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களின் விதிகள் எவற்றிற்கு பிரயோஜனமில்லாமல் உள்ளது?
A. மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களின் விதிகள் மாம்சத்தைப் பேணுவதற்கே ஒழிய மற்றொன்றுக்கும் பிரயோஜனம் இல்லை [2:23].
Colossians 3
Colossians 3:1-4
Q? கிறிஸ்து எவ்விடத்திற்க்கு எழுந்தருளியிருக்கிறார் ?
A. கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்தில் எழுந்தருளியிருக்கிறார். [ 3 : 1 ].
Q? விசுவாசிகள் எவற்றை தேட வேண்டும், மற்றும் எவற்றை தேடக்கூடாது ?
A. விசுவாசிகள் மேலானவைகளையே தேடவேண்டும், பூமியிலுள்ளவைகளைத் தேடக்கூடாது3:1-2].
Q? தேவன் விசுவாசிகளின் ஜீவனை எங்கு வைத்துயிருக்கிறார்?
A. தேவன் விசுவாசிகளின் ஜீவனை கிறிஸ்துவுக்குள் மறைத்து வைத்திருக்கிறார்[3;3].
Q? கிறிஸ்து வெளிப்படும் போது விசுவாசிகளுக்கு என்ன நேரிடும்?
A. ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது விசுவாசிகளும் அவரோடகூட மகிமையிலே வெளிப்படுவார்கள்[3:4]
Colossians 3:5-8
Q? விசுவாசிகள் எவற்றை அழித்துப்போட வேண்டும் ?
A. விசுவாசிகள் பூமியின் பாவமான அவயங்களை அழித்துப்போட வேண்டும் [ 3 : 5 ].
Q? கர்த்தருக்கு கீழ்படியாதவர்களுக்கு என்ன நடக்கும் ?
A. கர்த்தருக்கு கீழ்படியாதவர்களுக்கு தேவ கோபக்கினை வரும் [3 : 6]
Q? எவற்றை எல்லாம் விட்டு விட வேண்டும் என்று பவுல் விசுவாசிகளிடம் கூறினார்?
A. கோபம், மூர்க்கம், பொறமை, தூஷ்ணம், மற்றும் வம்பு வார்த்தைகள் இவைகளையெல்லாம் விசுவாசிகள் விட்டுவிடவேண்டும்.[3:8-9].
Colossians 3:9-11
Q? விசுவாசிகளுடைய புதிதாக்கப்பட்ட புதிய மனுஷன் யாருடைய சாயல்?
A. விசுவாசிகளுடைய புதிதாக்கப்பட்ட புதிய மனுஷன் சிருஷ்டித்தவரின் சாயலுக்கு ஒப்பாய் உள்ளான்[3:10].
Colossians 3:12-14
Q? விசுவாசிகள் என்னென்ன குணங்களை தரித்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
A. விசுவாசிகள் உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும் சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார்[3:12].
Q? விசுவாசிகள் எவ்வாறு மன்னிக்க வேண்டும்?
A. கிறிஸ்து அவரை மன்னித்தது போல விசுவாசிகளும் மன்னிக்க வேண்டும்[3:13].
Q? விசுவாசிகளுக்குள் உள்ள பூரண சற்குணத்தின் கட்டு என்ன?
A. அன்பு என்பது பூரண சற்குணத்தின் கட்டாகும்[3:14].
Colossians 3:15-17
Q? விசுவாசிகளின் இருதயத்தில் என்ன ஆளப்பட வேண்டும்?
A. விசுவாசிகளின் இருதயத்தில் தேவசமாதானம் ஆளப்பட வேண்டும்[3:15]
Q? விசுவாசிகளுக்குள் எவை பரிபூரணமாக வாசமாயிருக்க வேண்டும்?
A. கிறிஸ்துவின் வசனம் விசுவாசிகளுக்குள் பரிபூரணமாய் வாசமாயிருக்க வேண்டும்[3:16].
Q? விசுவாசி அவனுடைய மனப்பான்மை, சங்கீதம், கீர்த்தனை மற்றும் ஞானப்பாட்டு ஆகியவற்றில் தேவனுக்கு என்ன கொடுக்க வேண்டும்?
A. விசுவாசி அவனுடைய மனப்பான்மை, சங்கீதம், கீர்த்தனை மற்றும் ஞானப்பாட்டு ஆகியவற்றில் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.[3:15-17]
Colossians 3:18-21
Q? மனைவி எப்படி அவளுடைய புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்?
A. மனைவியானவள் புருஷனுக்கு ஏற்றபடி கீழ்படிந்து நடக்க வேண்டும்[3:18]
Q? ஒரு கணவன் தன் மனைவியை எப்படி நடத்தவேண்டும்?
A. கணவன் அவரது மனைவியை அன்பு கூற வேண்டும், அவளை கசந்து கொள்ளாதிருக்க வேண்டும்[3:19].
Q? பிள்ளை எப்படி தனது பெற்றோரை உபசரிக்க வேண்டும்?
A. பிள்ளை தனது பெற்றோருக்கு எல்லா காரியத்திலேயும் கீழ்படிய வேண்டும்[3:20].
Q? தந்தை தன் பிள்ளைகளுக்கு என்ன செய்யக்கூடாது?
A. தந்தை தன் பிள்ளைகளை கோபமூட்டாதிருக்க வேண்டும்[3:21].
Colossians 3:22-25
Q? விசுவாசிகள் தாங்கள் எதை செய்தாலும் யாருக்காக செய்கிறார்கள்?
A. விசுவாசிகள் தாங்கள் எதை செய்தாலும் கர்த்தருக்கென்றே செய்கிறார்கள்[3:23-24].
Q? கர்த்தருக்கென்றுமனப்பூர்வமாய் செய்து, என்ன பெற்றுக்கொள்வார்கள்?
A. எதை செய்தாலும் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாக செய்து, புத்திரசுவீகாரம்என்னும் வெகுமதியை பெற்றுக்கொள்வர்கள் [3:24]
Q? அநியாயஞ்செய்கிறவர்கள் என்ன பெற்றுக்கொள்வார்கள்?
A. அநியாயஞ்செய்கிறவர்கள் அவர்கள் செய்த அநியாத்துக்கேற்ற பலனை பெற்றுக்கொள்வார்கள்[3:25].
Colossians 4
Colossians 4:'18-0
Q? எவ்வாறு பவுல் இந்த நிரூபம் அவரிடத்திலிருந்து தான் வந்தது என்பதை காண்பித்தார்
A. பவுல் தன் பெயரை தன் சொந்த கையெழுத்தினால் எழுதி கடிதத்தின் கடைசியை முடித்தார்[4:18].
Colossians 4:1
Q? என்ன அவர்களுக்கும் இருப்பதாக பவுல் பூலோகத்தருக்கு நினைப்பூட்டுகிறார்?
A. அவர்கள்களுக்கும் பூலோகத்தில் எஜமான் இருக்கிறார்றென்று, பவுல் பூலோகத்தருக்கு நினைப்பூட்டுகிறார்[4:1].
Colossians 4:2-4
Q? எவற்றில் கொலோசெயர்கள் இடைவிடாமல் தொடர்ந்து இருக்க வேண்டும் என பவுல் விரும்பினர்?
A. கொலோசெயர்கள் இடைவிடாமல் ஜெபத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என பவுல் விரும்பினர்[4:2].
Q? எதற்காக கொலோசெயர்கள் ஜெபம் பண்ண வேண்டும் என பவுல் விரும்பினர்?
A. திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படியாகவும்,கிறிஸ்துவுடைய இரகசியசியத்தை குறித்து பேசவும் கொலோசெயர்கள் ஜெபம் பண்ண வேண்டும் என பவுல் விரும்பினர்[4:3].
Colossians 4:5-6
Q? அன்னியர்கள் எப்படி உபசரிக்க வேண்டும் என பவுல் கொலோசெயருக்கு அறிவுறுத்தினர்?
A. அந்நியர்களுக்கு முன்பாக ஞானமாகவும் நடந்து கிருபை பொருந்தின வசனங்களை பேசவேண்டுமென்று பவுல் கொலோசெயருக்கு அறிவுறுத்தினர்[4:5-6].
Colossians 4:7-9
Q? பவுல் என்ன பணியினை தீகிக்கும், ஒநேசிமுக்குக் கொடுத்தார்?
A. பவுல் தம்மை குறித்து செய்தி களையெல்லாம் கொலோசெயர்கள் அறிந்து கொள்ளச்செய்யும் பணியினை அவர்களுக்கு கொடுத்தார்[4:7-9].
Colossians 4:10-11
Q? பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கை குறித்து பவுல் என்ன அறிவுறுத்துகிறார்?
A. மாற்கு உங்களிடத்தில் வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பவுல் அவர்களுக்கு கூறினார்[4-10].
Colossians 4:12-14
Q? எப்பாப்பிரா எதற்க்காக கொலோசெயருர்களுக்காக ஜெபம் பண்ணுகிறான்?
A. கொலோசெயர்கள் தேவனுக்கு சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்க்காகவும் நிலைநிற்க வேண்டும்மென்று அவன் பண்ணுகிறான்[4:12].
Q? பவுலுடன் இருக்கிற வைத்தியன் பெயர் என்ன?
A. வைத்தியன் பெயர் லூக்கா[4:14].
Colossians 4:15-18
Q? எந்த வகையான இடத்தில் லவோதிக்கேயா சபை கூடுகை நடைபெறுகிறது?
A. லவோதிக்கேயா சபை ஒரு வீட்டில் நடைபெறுகிறது[4:15]
Q? வேறு எந்த சபைக்கு பவுல் ஒரு நிரூபம் எழுதினார்?
A. பவுல் லவோதிக்கேயா சபைக்கு ஒரு நிரூபம் எழுதினார்[4:16].