Galatians
Galatians 1
Galatians 1:1-2
Q? பவுல் எப்படி அப்போஸ்தலன் ஆனான் ?
A. பிதாவினாலும், இயேசு கிறிஸ்துவினாலும் பவுல் அப்போஸ்தலன் ஆனான் [1:1].
Galatians 1:3-5
Q? இயேசு கிறிஸ்துவினால், விசுவாசிகள் எதிலிருந்து விடுதலையாக்கப்பட்டார்கள் ?
A. இயேசு கிறிஸ்துவினால், பொல்லாத ஆவிகளிடமிருந்து விசுவாசிகள் விடுதலையாக்கப்பட்டார்கள்[1:4].
Galatians 1:6-7
Q? கலாத்திய சபையில் பவுல் எதைக்குறித்து ஆச்சரியப்பட்டான் ?
A. சீக்கிரத்தில் சுவிசேஷத்தை விட்டு விலகிப்போனதைக் குறித்து பவுல் ஆச்சரியப்பட்டான் [1:6].
Q? எத்தனை சுவிசேஷம் இருக்கிறது ?
A. ஒன்றே ஒன்று. அது இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் [1:7].
Galatians 1:8-10
Q? இயேசு கிறிஸ்துவையல்லாத வேறே சுவிசேஷம் அறிவிப்பவனுக்கு என்ன சம்பவிக்குமென்று பவுல் கூறுகிறான் ?
A. இயேசு கிறிஸ்துவையல்லாத வேறே சுவிசேஷம் அறிவிப்பவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் கூறுகிறான் [1:8-9].
Q? கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவன் முதலில் யாரிடமிருந்து நிச்சயத்தைப் பெறவேண்டும் ?
A. அவன் முதலில் தேவனிடமிருந்து நிச்சயத்தைப் பெறவேண்டும்[1:10].
Galatians 1:11-12
Q? கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஞானம் எப்படி பவுலுக்குக் கிடைத்தது ?
A. நேரடியாக கிறிஸ்துவின் சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவினால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது [1:12].
Galatians 1:13-14
Q? கிறிஸ்துவின் சுவிசேஷகன் ஆவதற்கு முன்பு பவுல் என்ன செய்துகொண்டிருந்தான் ?
A. கிறிஸ்துவுக்கு எதிராக, கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தான் [1:13-14].
Galatians 1:15-17
Q? தேவன் எப்போது பவுலைத் தம்முடைய அப்போஸ்தலனாகத் தெரிந்துகொண்டார் ?
A. பவுல் அவன் தாயின் கருவில் இருக்கும்போதே தேவன் அவனைத் தம்முடைய அப்போஸ்தலனாகத் தெரிந்துகொண்டார் [1:15].
Q? எதற்காக தேவன், பவுலை தம்முடைய அப்போஸ்தலனாகத் தெரிந்துகொண்டார் ?
A. புறஜாதிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படிக்கு பவுலை தேவன் தெரிந்துகொண்டார் [1:16].
Galatians 1:18-20
Q? இறுதியாக பவுல், மற்ற அப்போஸ்தலர்களை எங்கு சந்தித்தான் ?
A. பவுல் இறுதியாக, எருசலேமில் யாக்கோபையும், கேபாவையும் சந்தித்தான் [1:19].
Galatians 1:21-24
Q? யூதேயாவிலுள்ள சபைகள் பவுலைக் குறித்து கேள்விப்பட்டது என்ன ?
A. முன்பு சபைகளை துன்புறுத்தினவன் இப்பொழுது விசுவாசத்தைக் குறித்து பேசுவதை கேள்விப்பட்டனர் [1:22-23].
Galatians 2
Galatians 2:1-2
Q? பதினாலு வருடத்துக்கு பின்பு எருசலேம் சென்ற பவுல் என்ன செய்தான் ?
A. சபையின் தலைவர்களுக்கு தனிமையில் தான் அறிவித்துவருகிற சுவிசேஷத்தைக் குறித்து விவரித்தான் [2:1].
Galatians 2:3-5
Q? தீத்து, கிரேக்கன், எதைச்செய்ய கட்டாயப்படுத்தப்படவில்லை ?
A. தீத்து, விருத்தசேதனம் பண்ணும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை[2:3].
Q? கள்ளச் சகோதரர்கள் என்ன செய்யும்படி யோசனையாயிருந்தனர் ?
A. பவுலையும், அவனோடிருந்தவர்களையும், நியாயப்பிரமாணத்திற்கு அடிமைப்படுத்தும்படிக்கு யோசனையாயிருந்தனர்[2:4].
Galatians 2:6-8
Q? எருசலேமில் இருந்த சபை தலைவர்கள் பவுலின் சத்தியத்தை மாற்றினார்களா ?
A. இல்ல. அவர்கள் பவுலுக்கு ஒன்றும் போதிக்கவில்லை [2:6].
Q? யாருக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி பவுலுக்கு கையளிக்கப்பட்டது ?
A. விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி பவுலுக்கு கையளிக்கப்பட்டது[2:7-8].
Q? யாருக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி பேதுருவுக்கு கையளிக்கப்பட்டது ?
A. விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி பேதுருவுக்கு கையளிக்கப்பட்டது[2:7-8].
Galatians 2:9-10
Q? பவுலின் ஊழியத்தை ஏற்றுகொள்ளும்விதமாக எருசலேம் சபைத் தலைவர்கள் என்ன செய்தனர் ?
A. எருசலேம் சபைத் தலைவர்கள் பவுலுக்கும், பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து அவர்களை ஏற்றுக்கொள்ளுகிறதைக் காண்பித்தனர் [2:9].
Galatians 2:11-12
Q? பேதுரு அந்தியோகியா வந்தபோது அவன் செய்த தவறு என்ன ?
A. விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களைக் கண்டு பயந்ததினால் புறஜாதியாருடன் புசிப்பதை நிறுத்திவிட்டான் [2:11-12].
Galatians 2:13-14
Q? எல்லோருக்கும்முன்பாக பவுல், கேபாவிடம் கேட்டது என்ன ?
A. யூதர் முறைமையின்படி நடவாமல் எப்படி புறஜாதியாரை நோக்கி யூத முறைமையின்படி நடக்க கட்டாயப்படுத்தலாம் என்று பவுல் கேட்டான் [2:14].
Galatians 2:15-16
Q? எதினால் எவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்று பவுல் கூறினான் ?
A. நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் எவனும் நீதிமானாக்கப்படுவதில்ல என்று பவுல் கூறினான்[2:16].
Q? எப்படி ஒருவன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவான் ?
A. இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே ஒருவன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவான்[2:16].
Galatians 2:17-19
Q? கிறிஸ்துவுக்குள் விசுவாசமாயிருப்பவன் மறுபடியும் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற நினைப்பவன் என்ன செய்வதாக பவுல் கூறுகிறான் ?
A. அப்படி செய்கிறவன் நியாயப்பிரமாணத்தை மீறுகிறவன் என்று பவுல் கூறுகிறான் [2:18].
Galatians 2:20-21
Q? யார் அவனுக்குள் பிழைத்திருப்பதாக பவுல் கூறுகிறான் ?
A. கிறிஸ்துவே அவனுக்குள் பிழைத்திருப்பதாக பவுல் கூறுகிறான்[2:20].
Q? தேவனுடைய குமாரன் பவுலுக்கு என்ன செய்ததாக அவன் கூறுகிறான் ?
A. பவுல்: தேவனுடைய குமாரன் தன்மேல் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்ததாகக் கூறுகிறான் [2:20].
Galatians 3
Galatians 3:1-3
Galatians 3:4-5
Galatians 3:6-9
Q? தேவனுக்கு முன்பாக ஆபிரகாம் எப்படி நீதிமானாய் எண்ணப்பட்டான் ?
A. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் எனவே அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது [3:6].
Q? ஆபிரகாமின் பிள்ளைகள் யார் ?
A. தேவனை விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள்[3:7].
Q? புறஜாதிகள் எதினால் நீதிமான்களாக்கப்படுவதை வேதம் முன்னாகக் கண்டது ?
A. புறஜாதிகள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுவதை வேதம் முன்னாகக் கண்டது[3:8].
Galatians 3:10-12
Q? நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் எதற்குட்பட்டிருப்பார்கள் ?
A. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருப்பார்கள் [3:10].
Q? எத்தனைப்பேர் நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் தேவனிடத்தில் நீதிமானாயிருக்கிறார்கள் ?
A. நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை[3:11].
Galatians 3:13-14
Q? எதினால் கிறிஸ்து நமக்காக சாபமாகி நம்மை மீட்டார் ?
A. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் புறஜாதியாருக்கும் உண்டாகும்படி கிறிஸ்து நமக்காக சாபமாகி நம்மை மீட்டுக்கொண்டார் [3:14].
Galatians 3:15-16
Q? ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி என்பது யாரைக்குறிகிறது ?
A. ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி என்பது கிறிஸ்துவையே குறிகிறதுது [3:16].
Galatians 3:17-18
Q? ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணின யூத பிரமாணம் 430 வருடத்திற்கு பின் நிறைவேறாமல் போனதோ ?
A. இல்லை ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணின யூத பிரமாணம் நிறைவேறாமல் போகவில்லை [3:17].
Galatians 3:19-20
Q? பின்னும் எதற்காக நியாயப்பிரமாணம்?
A. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆபிரகாமின் சந்ததி வருமளவும் செய்த மீறுதல்களினிமித்தம் நியாயப்பிரமாணம் கூட்டப்பட்டது [3:19].
Galatians 3:21-22
Q? வேதம் எதினால் எல்லோரையும் சிறைப்படுத்தியது ?
A. வேதம், பாவத்தினால் எல்லோரையும் ஏகமாய் சிறைப்படுத்தியது[3:22].
Galatians 3:23-26
Q? நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல்பண்ணப்பட்டிருந்த நாம் எப்படி விடுதலையானோம் ?
A. இயேசு கிறிஸ்துவின்மேல்வைத்த விசுவாசத்தினால் நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல்பண்ணப்பட்டிருந்த நாம் விடுதலையானோம்[3:23-26].
Galatians 3:27-29
Q? யாரெல்லாம் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் ?
A. கிறிஸ்துவுக்குள்ளாய் ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள்[3:27].
Q? எப்படிப்பட்ட மனிதர்களெல்லாம் கிறிஸ்து இயேசுவினால் ஒன்றாக்கப்பட்டார்கள் ?
A. யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், சுயாதினர்கள், ஆண், பெண் அனைவரும் கிறிஸ்து இயேசுவினால் ஒன்றாயிருக்கிறார்கள் [3:28].
Galatians 4
Galatians 4:1-2
Q? எல்லாவற்றிற்கும் எஜமானாயிருக்கிற ஒருவன் சிறுபிள்ளையாக இருக்கையில் எப்படி இருப்பான் ?
A. அவன் தகப்பன் குறித்த காலம்வரைக்கும் காரியக்காரருக்கும், வீட்டு விசாரிப்புக்காரனுக்கும் கீழ்ப்பட்டிருப்பான் [4:1-2].
Galatians 4:3-5
Q? தேவன் குறித்த காலத்தில் செய்தது என்ன ?
A. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்கும்படிக்கு குறித்த காலத்தில் தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் [4:4-5].
Q? நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களாகிய நம்மை தேவன் எப்படி தம்முடையவர்களாக்கினார் ?
A. நாமும் புத்திர சுவிகாராகும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களாகிய நம்மை தேவன் தம்முடையவர்களாக்கினார் [4:5].
Galatians 4:6-7
Q? தம்முடைய புத்திரர்களின் இருதயத்தில் தேவன் எதை அனுப்புகிறார் ?
A. நாம் அவருடைய புத்திரராயிருக்கிறதினால் அவருடைய குமாரனுடைய ஆவியை நமது இருதயங்களில் அனுப்புகிறார் [4:6].
Galatians 4:8-9
Q? தேவனை அறியும்முன்பு நாம் யாருக்கு அடிமைகளாயிருந்தோம் ?
A. இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கும், சுவாபத்தின்படி தேவனல்லாதவர்களுக்கும் நாம் அடிமைகளாயிருந்தோம்[4:3,8].
Q? கலாத்தியர் மறுபடியும் எங்கு திரும்புகிறதைக் குறித்து பவுல் குழப்பமடைந்தான் ?
A. கலாத்தியர் உலகை ஆளும் ஆவிகளிடத்திற்குத் திரும்புகிறதைக் குறித்து பவுல் குழப்பமடைந்தான்[4:9].
Galatians 4:10-11
Q? கலாத்தியர் பின்மாறுகிறதைக் காண்கையில் பவுல் ஏன் பயந்தான் ?
A. கலாத்தியர் மறுபடியும் அடிமைகளாவதைக் கண்டு, அவர்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்போயிற்றென்று பவுல் பயந்தான் [4:9,11].
Galatians 4:12-14
Q? கலாத்தியாவுக்கு பவுல் முதன்முதலில் வந்தபோது அவனுக்கு ஏற்பட்ட சோதனை என்ன ?
A. கலாத்தியாவுக்கு பவுல் முதன்முதலில் வந்தபோது அவனுடைய சரீரத்தில் பலவீனம் ஏற்பட்டது [4:13].
Q? பவுலின் சோதனையோடு அவனை கலாத்தியர் எவ்வாறு ஏற்றுக்கொண்டனர் ?
A. கிறிஸ்து இயேசுவைப் போல ஏற்றுக்கொண்டனர் [4:14].
Galatians 4:15-16
Galatians 4:17-18
Q? கள்ள உபதேசக்காரர்கள், கலாத்தியர்களை யாரிடமிருந்து பிரிக்க முயற்சித்தனர் ?
A. கள்ள உபதேசக்காரர்கள், கலாத்தியர்களை பவுலிடமிருந்து பிரிக்க முயற்சித்தனர்[4:17].
Galatians 4:19-20
Galatians 4:21-23
Galatians 4:24-25
Galatians 4:26-27
Q? பவுலுக்கும், கலாத்திய விசுவாசிகளுக்கும் தாயாக இருப்பவள் யார் ?
A. மேலான எருசலேமோ சுயாதினமுள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்[4:26].
Galatians 4:28-29
Q? கிறிஸ்துவின் விசுவாசிகள் மாம்சத்தின் பிள்ளைகளோ அல்லது வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளோ ?
A. கிறிஸ்துவின் விசுவாசிகள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்[4:28].
Q? வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளைத் துன்பப்படுத்துகிறது யார் ?
A. மாம்சத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளைத் துன்பப்படுத்துகிறான்[4:29].
Galatians 4:30-31
Q? அடிமையானவளின் பிள்ளைகள் சுதந்தரிப்பது என்ன ?
A. அடிமையானவளின் பிள்ளைகள் சுயாதினமுள்ளவளுடைய பிள்ளைகளோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை [4:30].
Q? கிறிஸ்துவின் விசுவாசிகள் அடிமையானவளுக்குப் பிள்ளைகளோ அல்லது சுயாதினமுள்ளவளுக்கு பிள்ளைகள் ?
A. கிறிஸ்துவின் விசுவாசிகள் சுயாதினமுள்ளவளுக்குப் பிள்ளைகள்[4:31].
Galatians 5
Galatians 5:1-2
Q? எதற்காக கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினார் ?
A. சுயாதினராயிருக்கும்படிக்கு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினார்[5:1].
Q? கலாத்தியர்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் என்ன சம்பவிக்குமென்று பவுல் அவர்களை எச்சரித்தான் ?
A. கலாத்தியர்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இராது என்கிறான் [5:2].
Galatians 5:3-4
Q? கலாத்தியர்கள் நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாகவிரும்பினால் என்ன சம்பவிக்குமென்று பவுல் அவர்களை எச்சரித்தான் ?
A. கலாத்தியர்கள் நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாகவிரும்பினால், கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுவீர்களென்று பவுல் அவர்களை எச்சரித்தான்[5:4].
Galatians 5:5-8
Q? கிறிஸ்து இயேசுவில், விருத்தசேதனமோ அல்லது விருத்தசெதனமில்லாமையோ எது உதவும் ?
A. கிறிஸ்து இயேசுவில், அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும் [5:6].
Galatians 5:9-10
Q? சுவிஷேசத்தில் இருக்கிற கலாத்தியர்களைக் கலக்குகிறவனைக் குறித்து பவுல் நிச்சயமாய் கூறுவது என்ன ?
A. சுவிஷேசத்தில் இருக்கிற கலாத்தியர்களைக் கலக்குகிறவன் நிச்சயமாய் ஆக்கினை அடைவான் என்று பவுல் கூறுகிறார்[5:10].
Galatians 5:11-12
Q? விருத்தசேதனத்தைக் குறித்து பவுல் கூறுவது என்ன ?
A. பவுல்: விருத்தசேதனம் என்பது சிலுவையைப்பற்றும் இடறல் என்கிறான் [5:11].
Galatians 5:13-15
Q? விசுவாசிகள் கிறிஸ்துவின் சுயாதினத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென்று பவுல் கூறுகிறான் ?
A. விசுவாசிகள் கிறிஸ்துவின் சுயாதினத்தினால் அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் என்கிறான் [5:13].
Q? எந்த வார்த்தையில் முழுநியாயப்பிரமாணமும் நிறைவேறும் ?
A. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல, பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற வார்த்தையில் முழுநியாயப்பிரமாணமும் நிறைவேறும்[5:14].
Galatians 5:16-18
Q? விசுவாசியானவன் எவ்விதத்தில் மாம்சத்தின் இச்சையை நிறைவேற்றாதிருப்பான் ?
A. விசுவாசியானவன் ஆவிக்கேற்றபடி நடந்து, மாம்சத்தின் இச்சையை நிறைவேற்றாதிருப்பான்[5:16].
Q? விசுவாசிகளுக்குள் எந்த இரண்டு காரியங்கள் ஒன்றையொன்று விரோதிக்கிறது ?
A. விசுவாசிகளுக்குள் மாம்சம், ஆவிக்கு விரோதமாயிருகிறது[5:17].
Galatians 5:19-21
Q? மாம்சத்தின் கிரியைகளின் மூன்று அடையாளங்கள் என்ன ?
A. மாம்சத்தின் கிரியைகளின் மூன்று அடையாளங்கள்: விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கப்பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலியவைகளே. [5:20-21].
Q? மாம்சத்தின் கிரியைகளை செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை ?
A. மாம்சத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை[5:21].
Galatians 5:22-24
Q? ஆவியின் கனிகள் எது ?
A. ஆவியின் கனிகள்: அன்பு, சந்தோஷம் சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற இவைகளே [5:22-23].
Q? கிறிஸ்துவினுடையவர்கள், தங்கள் மாம்சத்தையும், அதின் இச்சையையும் என்ன செய்திருப்பார்கள் ?
A. கிறிஸ்துவினுடையவர்கள், தங்கள் மாம்சத்தையும், அதின் இச்சையையும் சிலுவையில் அறைந்திருப்பார்கள்[5:24].
Galatians 5:25-26
Galatians 6
Galatians 6:1-2
Q? ஆவிக்குரியவர்களில் யாதொருவன் ஏதாவது குற்றத்தினால் அகப்பட்டால் அவனுக்கு என்ன செய்யவேண்டும் ?
A. அவனை சாந்தமுள்ள ஆவியோடே சீர்பொருந்தப்பண்ணவேண்டும் [6:1].
Q? ஆவிக்குரியவன் எதைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கக் கடவன் ?
A. ஆவிக்குரியவன் தானும் சோதிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன்[6:1].
Q? விசுவாசியானவன் கிறிஸ்துவின் பிரமாணத்தை எப்படி நிறைவேற்றக்கூடும் ?
A. விசுவாசியானவன் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றவேண்டும் [6:2].
Galatians 6:3-5
Q? ஒருவன் தன் கிரியைகளைக் குறித்து தானே எப்படி மேன்மை பாராட்டக்கூடும் ?
A. அவனவன் தன்தன் கிரியைகளை சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல தன்னையே பார்க்கும்போது அவனுக்கு மேன்மைப்பாராட்ட இடமுண்டாகும் [6:4].
Galatians 6:6-8
Q? திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன், தனக்கு உபதேசிக்கிறவனுக்கு என்ன செய்யவேண்டும் ?
A. திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன், தனக்கு உபதேசிக்கிறவனுக்கு தன் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும் [6:6].
Q? ஆவிக்குரிய விதமாக விதைக்கிறவனுக்கு என்ன ஆகும் ?
A. மனுஷன் ஆவிக்குரிய விதமாக எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் [6:7].
Q? மாம்சத்தின்படி விதைக்கிறவன், எதை அறுப்பான் ?
A. மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினாலே அழிவை அறுப்பான்[6:8].
Q? ஆவியின்படி விதைக்கிறவன், எதை அறுப்பான் ?
A. ஆவிக்கென்று விதைக்கிறவன், ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான் [6:8].
Galatians 6:9-10
Q? விசுவாசிகளில் ஒருவன் நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாதிருந்தால், அவனுக்கு கிடைப்பது என்ன ?
A. விசுவாசிகளில் ஒருவன் நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாதிருந்தால், ஏற்றக்காலத்தில் அறுப்பான் [6:9].
Q? விசுவாசியானவன் விசேஷமாக யாருக்கு நன்மைசெய்ய வேண்டும் ?
A. விசுவாசியானவன் விசேஷமாக விசுவாசக்குடும்பத்தார்களுக்கு நன்மைசெய்ய வேண்டும் [6:10].
Galatians 6:11-13
Q? விசுவாசிகளை விருத்தசேதனம் பண்ணும்படி கட்டாயப்படுத்துகிறவர்களின் நோக்கம் என்ன ?
A. கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு அவர்கள் விசுவாசிகளை விருத்தசேதனம் பண்ணும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்[6:12].
Galatians 6:14-16
Q? பவுல் எதைக்குறித்து மேன்மை பாராட்டுவதாகக் கூறுகிறான் ?
A. கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் சிலுவையைக் குறித்தே பவுல் மேன்மைபாராட்டுவதாகக் கூறுகிறான்[6:14].
Q? விருத்தசேதனம், விருத்தசேதனமில்லாமை இவைகளில் எது அவசியம் ?
A. புது சிருஷ்டியே அவசியமாயிருக்கிறது [6:15].
Q? சமாதானமும், இரக்கமும் யாருக்கு உண்டாகும்படி பவுல் விரும்புகிறான் ?
A. கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நடந்து வருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், இஸ்ரவேலருக்கும்; சமாதானமும், இரக்கமும் உண்டாகும்படி பவுல் விரும்பினான் [6:16].
Galatians 6:17-18
Q? பவுல் தன் சரீரத்திலே எதைத் தரித்திருந்தான் ?
A. கிறிஸ்து இயேசுவின் அச்சடையாளங்களை பவுல் அவன் சரீரத்தில் தரித்திருந்தான்[6:17].