தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

07-01

வீட்டிலே தங்கியிருப்பதை விருபுதல்... வேட்டையாடுவதை விரும்புதல்

சில மொழிகள் "அன்பு" என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்துகின்றன, இது "ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்" என்பதற்கு வேறுபட்டது. உதாரணமாக, இதை "வீட்டில் தங்க விரும்பினேன் ... வேட்டையாட விரும்பினேன்" அல்லது "வீட்டில் தங்க விரும்பினேன் ... வேட்டையாட விரும்பினேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

வீட்டிலே

இந்த விளக்கம் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதியைக் குறிக்கிறது. அவர்கள் வாழ்ந்த கூடாரங்களுக்கு அருகில் தான் யாக்கோபு இருக்க விரும்பினான். சில மொழிகளில் "வீட்டில்" என்பதற்கு ஒரு சிறந்த விளக்கம் உள்ளது.

ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள், ஈசாக்கு ஏசாவை நேசித்தான்.

இதை, "ரெபெக்காள் யாக்கோபை மிகவும் விரும்பினாள், ஈசாக்கு ஏசாவை மிகவும் விரும்பினான்." ரெபேக்காளும் ஈசாக்கும் மற்ற மகனை நேசிக்கவில்லை என்று அர்த்தமல்ல, ஆனால் ஒவ்வொரு பெற்றோருக்கும் பிடித்த ஒருவன் இருப்பதுபோல..

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]

07-02

கொஞ்சம் சாப்பிட எனக்குக் கொடு ... உன்னுடைய சிரேஸ்டபுத்திர பாக்கியம் எனக்குக் கொடு

சில மொழிகளில் இரண்டு வார்த்தைகளில் சொல்லலாம் “கொடு” இங்கே. இதை கடைசி இரண்டு வரிகளில் ஏசாவின் விஷயத்தில் பார்க்கலாம், “ஏசா கொடுத்தான் ... யாக்கோபு கொடுத்தான்”.

மூத்தகுமரனின் சிரேஸ்டபுத்திர பாக்கியம்

அந்த கலாசாரத்தின்படி, ஏசா மூத்தகுமாரன் என்பதினால், தகப்பன் மரித்தப்பின்பு, அவனுக்கு தான் தகப்பனிடத்தில் கிடைக்கும் இரட்டிப்பான ஆசீர்வாதம் போய் சேர வேண்டும். ஆனால் யாக்கோபு இவைகளை எசாவிடம் இருந்து பெற நினைத்தான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]

07-03

அவனுடைய ஆசீர்வாதத்தை கொடு

பிதாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை முறையாக வெளிப்படுத்துவது வழக்கம். பொதுவாக மூத்த மகன் சிறந்த வாக்குறுதியைப் பெற்றார். ஏசாவுக்கு இந்த கூடுதல் செழிப்பு ஏற்பட வேண்டும் என்று ஈசாக்கு விரும்பினான்.

அவனை ஏமாற்றினான்

"தந்திரம்" என்ற வார்த்தையின் அர்த்தம் ஒருவரை வேண்டுமென்றே ஏமாற்ற செய்வது. ஏசாவுக்குப் பதிலாக யாக்கோபுக்கு சிறப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பதற்காக ஈசாக்கை ஏமாற்றும் திட்டத்தை ரெபேக்காள் கொடுத்தாள்.

நடித்தான்

“நடித்தான்” என்ற வார்த்தை யாக்கோபு எப்படி தன் தகப்பனை ஏமாற்றினான் என்பதை காட்டுகிறது (தனக்கு வயதானதினால் நன்றாய் பார்க்க முடியாதவனாய் இருந்தான்).

ஆட்டுத்தோல்

ஆட்டுத்தோல் போன்ற ரோமம் யாக்கோபை ஏசா தான் என்று ஈசாக்கை நம்பவைக்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/kt/bless]]
  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]

07-04

யாக்கோபு ஈசாக்கினிடத்தில் வந்தான்

சில மொழிகளில் யாக்கோபு ஈசாக்கினிடம் போனான் என்பது இன்னும் இயல்பாக இருக்கும்.

அவன் ஏசா என்று நினைத்தான்

அவன் தொட்டு, வாசனையை நுகர்ந்தபோது அது ஏசா என்று நினைத்தான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/kt/bless]]

07-05

மூத்த மகனைப் போன்ற உரிமை

தன் தகப்பனுடைய ஆஸ்தியில் பெரும்பாலானவை யாக்கோபுக்கு சேரும் வழியை அவன் தெரிந்துகொண்டான், பொதுவாக இது மூத்த மகனாகிய ஏசாவுக்கு உரியது. குறிப்பையும் காண்க 07:02.

அவனுடைய ஆசீர்வாதம்

யாக்கோபு தன்னுடைய மூத்த குமாரனாகிய ஏசாவுக்கு கொடுக்க நினைத்திருந்த மேலான ஆசீர்வாதத்தை யாக்கோபு அவனை வஞ்சித்து பெற்றுக்கொண்டான். குறிப்பையும் காண்க 07:03.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/kt/bless]]

07-06

ஏசாவின் திட்டம்

தன் தகப்பன் மரித்தப்பின்பு யாக்கோபை கொன்றுபோட ஏசா நினைத்தான்.

ஈசாக்கும் அவளும் யாக்கோபை அனுப்பி விட்டனர்.

ரெபெக்காள் யாக்கோபை ஏசாவிடமிருந்து காப்பாற்ற நினைத்து, அவனை அனுப்பி விடும்படி ஈசாக்கிடம் பேசினாள்.

தூரத்தில் இருந்த தன்னுடைய உறவினர் வீட்டிற்கு

ஆபிரகாமின் வேலைக்காரன் அவளை ஈசாக்கின் மனைவியாகப் பெற்றபோது ரெபெக்கா வாழ்ந்த அதே இடம் இதுதான். இதை தெளிவுபடுத்த, "அவள் வாழ்ந்த அதே ஊரில் உறவினர்கள்" என்று நீங்கள் சேர்க்கலாம். நிலம் பல நூறு மைல் தொலைவில் கிழக்கு நோக்கி இருந்தது.

அவளுடைய உறவினர்கள்

இதை "அவர்களுடைய உறவினர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். ஆபிரகாமின் சகோதரர் ரெபெக்காளின் தாத்தா என்பதால், அவளுடைய உறவினர்களும் ஈசாக்கின் உறவினர்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]

07-07

ஆசீர்வாதம்

இது, பணம், திரளான மந்தை மிருகங்கள் மற்றும் வெவேறான வளங்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/other/rebekah]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

07-08

இருபது வருடங்கள் கழித்து

யாக்கோபு தன் தாய் இருந்த தேசத்தில் இருபது ஆண்டுகள் வாழ்ந்தான். அது தெளிவாக இல்லை என்றால், "இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய உறவினர்கள் இருந்த ஊரில் வாழ்ந்தார்கள்" என்று நாம் கூறலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/canaan]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]

07-09

உம்முடைய ஊழியக்காரனாகிய, யாக்கோபு

யாக்கோபு ஏசாவின் ஊழியக்காரன் அல்லது வேலைக்காரன் அல்ல. ஆனால் யாக்கோபு தன்னுடைய வேலைக்காரர்களிடம் உம்முடைய ஊழியக்காரனாகிய யாக்கோபு உம்மை சந்திக்க வருகிறார் என்று பணிவோடும், மரியாதையுடனும் இருப்பதைக் காட்ட இப்படி சொல்லும்படி முன்பாக அனுப்பினான். அப்படி செய்தால் ஏசா அவன்மேல் கோபம் காட்டாமல் இருப்பான் என்பதினால்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]

07-10

சமாதானமாய் வாழ்ந்தான்

யாக்கோபும் ஏசாவும் ஒருவருக்கொருவர் சண்டை பண்ணாமல், கோபமடையாமல் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

அவனை அடக்கம் செய்தல்

இது நிலத்தில் குழி தோண்டி, ஈசாக்கின் சரீரத்தை அதில் புதைத்து,அந்தக் குழியை மண்ணினால் மூடுவது. அல்லது கல்லினால் மூடுவது. அல்லது ஈசாக்கின் சரீரத்தை கல்லறையில் வைப்பது அல்லது அடைப்பது.

உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள்

இவைகள் எல்லாம் தேவன் ஆபிரகாமுடன் ஏற்படுத்தியது.

ஈசாக்கிடமிருந்து யாக்கோபுக்கு போவது

வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமினிடத்திலிருந்து அவனுடைய குமாரனாகிய ஈசக்கிர்க்கும், ஈசாக்கினிடத்திலிருந்து அவனுடைய குமாரனாகிய யாக்கோபுக்கும் போனது. ஏசா வாக்குத்தத்தங்கள் ஒன்றும் பெறவில்லை. குறிப்பையும் காண்க 06:04.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த விளக்கங்கள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/esau]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
  • [[rc://*/tw/dict/bible/other/jacob]]
  • [[rc://*/tw/dict/bible/other/peace]]
  • [[rc://*/tw/dict/bible/other/canaan]]
  • [[rc://*/tw/dict/bible/other/isaac]]
  • [[rc://*/tw/dict/bible/kt/covenant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/abraham]]