40-01
அவரைக் கொண்டுபோனார்கள்
அதாவது, "அவர்களுடன் வரும்படி அவரை கட்டாயப்படுத்தியது." இதை "அவரை அழைத்துச் சென்றார்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
அவரை சிலுவையில் அறையும்படிக்கு
அதாவது, “சிலுவையில் அறைந்து கொள்ளும்படி.”
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/mock]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/crucify]]
- [[rc://*/tw/dict/bible/kt/cross]]
40-02
கபால ஸ்தலம்
எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு மலை, வெண்மையான, பாறைகள் நிறைந்த ஒரு இடம் அதன் பெயர் தான் கபாலஸ்தலம்.
இவர்களை மன்னியும் அவர்கள் செய்கிறது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாது
அதாவது, "அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை, எனவே தயவுசெய்து அவர்களை மன்னியும்." சேவகர்கள் இயேசுவை ஒரு குற்றவாளி என்று நினைத்தார்கள். அவர் தேவனுடைய குமாரன் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/cross]]
- [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
- [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
- [[rc://*/tw/dict/bible/other/pilate]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingofthejews]]
40-03
இயேசுவின் உடைக்காக சீட்டுப்போட்டார்கள்
அதாவது, "இயேசுவின் உடைகளை யார் எடுத்துக்கொள்வது என்பதற்காக செய்யப்பட்டது." அவர்கள் இதை எவ்வாறு செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் சில கலாச்சாரங்களில் இதை "இயேசுவின் ஆடைகளை எடுத்துக்கொள்வதற்காக தரையில் கற்களை எறிந்தார்கள்" அல்லது "இயேசுவின் ஆடைகளை யார் எடுக்கலாம் என்பதை தீர்மானிக்க குச்சிகளை பயன்படுத்தினர்" என்று மொழிபெயர்க்கலாம்.
சொல்லப்பட்ட தீர்க்கத்தரிசனத்தை அவர்கள் நிறைவேற்றினர்
அதாவது, "மேசியாவுக்கு நடக்கும் என்று வேதத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டதை அவர்கள் செய்தார்கள்" அல்லது "ஒரு தீர்க்கதரிசி நீண்ட காலத்திற்கு முன்பு எழுதியதைச் செய்தார்கள்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
40-04
இரண்டு கள்ளர்கள்
இதை "இரண்டு கொள்ளைக்காரர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது பொருட்களைத் திருடிய அல்லது வன்முறையை ஏற்படுதத்தின குற்றவாளிகளைக் குறிக்கிறது.
நீ தேவனுக்கு பயப்படுகிறதில்லையா?
இந்த கேள்விக்கு அந்தக் கள்ளன் பதிலை எதிர்பார்க்கவில்லை; இது ஒரு இயல்பான அறிக்கையை வெளியிட சில மொழிகள் பயன்படுத்தும் ஒரு வழியாகும். உங்கள் மொழி இந்த வழியில் கேள்விகளைப் பயன்படுத்தாவிட்டால், இதை "தேவனுக்கு நீ பயப்பட வேண்டும்!" என்று மொழிபெயர்க்கலாம்.
நாம் பாவம் செய்தோம் ஆனால் இந்த மனுஷன் ஒரு குற்றமும் செய்யவில்லை
இதை, "நீயும் நானும் பாவம் செய்து மரிப்பதற்கு தகுதியாயிருக்கிறோம், ஆனால் இயேசு என்ற இந்த மனிதன் எந்தத் தவறும் செய்யவில்லை, மரிப்பதற்கான ஒன்றும் செய்யவில்லை". இங்கே "நாம்" என்பது இரு கொள்ளையர்களையும் குறிக்கும், ஆனால் இயேசுவை அதில் சேர்க்கவில்லை. என்று மொழிபெயர்க்கலாம்.
இந்த மனிதன்
இந்த வாக்கியம் இயேசுவை வெளிப்படுத்துகிறது
தயவாய் என்னை நினைத்தருளும்
அதாவது, "தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளும்" அல்லது, "தயவுசெய்து என்னை நினைத்தருளும்" அல்லது, "தயவுசெய்து என்னை உங்களுடன் இருக்க அனுமதிக்க வேண்டும்." இங்கே "நினைவில் கொள்ளும்" என்பது எதையாவது மறந்துவிட்ட பிறகு அதை நினைவுபடுத்துவதான அர்த்தமல்ல. ஒரு தாழ்மையான கோரிக்கையைத் தெரிவிக்கும் வகையில் இதை மொழிபெயர்க்கவும்.
உம்முடைய ராஜ்யத்தில்
அதாவது, "நீர் உம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது" அல்லது, "நீர் ராஜாவாக ஆட்சி செய்யும் போது."
பரதேசம்
இதன் அர்த்தம் “பரலோகம்”.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/crucify]]
- [[rc://*/tw/dict/bible/other/mock]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/guilt]]
- [[rc://*/tw/dict/bible/kt/innocent]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
40-05
உம்மை விசுவாசிக்கிறேன்
அதாவது, "உம்மை நம்புகிறேன்" அல்லது, "நீங்கள் மேசியா என்று விசுவாசிக்கிறேன்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/other/mock]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/cross]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
40-06
பொதுத் தகவல்
இதற்கு குறிப்புகள் ஒன்றும் இல்லை
40-07
எல்லாம் முடிந்தது!
இதை "இது முடிந்தது" அல்லது "நான் அதை முடித்துவிட்டேன்" அல்லது "நான் என் வேலையை முடித்துவிட்டேன்" என்றும் மொழிபெயர்க்கலாம். இயேசுவின் இரட்சிப்பின் பணி முடிந்தது என்பதே இதன் பொருள்.
உம்முடைய கரத்தில்
அதாவது, "உம்முடைய கட்டுபாட்டில்."
அவருடைய தலையை சாய்த்தார்
அதாவது, “அவருடைய தலையை தாழ்த்தினார்.”
அவருடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார்
அதாவது, "அவருடைய ஆவியை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்தார்" அல்லது, "அவருடைய ஆவியை தேவனிடம் கொடுத்துவிட்டு இறந்தார்."
திரைச்சீலை
இது தேவாலயத்தில் தொங்கவிடப்பட்ட ஒரு பெரிய, வலுவான துணி. அது ஒரு அறையை இன்னொரு அறையிலிருந்து பிரிக்கும் சுவர் போல இருந்தது. இதை "தடிமனான திரை" அல்லது, "தொங்கும் துணி" அல்லது, "திரைச்சீலை" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
- [[rc://*/tw/dict/bible/kt/spirit]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/temple]]
40-08
அவருடைய மரணத்தினால்
அதாவது, "அவரது மரணத்தின் மூலம்" அல்லது, "மரித்ததின் மூலம்."
வழி திறந்தது
அதாவது, “சாத்தியமாக்குவது.”
தேவனிடம் வருவது
அதாவது, "தேவனிடம் நெருங்கி வாருவது" அல்லது "தேவனுக்கு அருகில் செல்வது" அல்லது "தேவனிடம் இருப்பது" அல்லது "தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வது". திரைச்சீலை கிழிக்கப்படுவது தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தடை நீக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/innocent]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
40-09
யோசேப்பு
இவர் மரியாளின் கணவர் அல்ல. இது யோசேப்பு என்கிற மற்றொரு மனிதன்.
பிலாத்துவினிடத்தில் இயேசுவின் ‘சரீரத்தைக்’ கேட்டான்.
அதாவது, "இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து கீழே எடுக்க அனுமதிக்கும்படி பிலாத்துவிடம் கேட்டான்."
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/pilate]]
- [[rc://*/tw/dict/bible/other/tomb]]