தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

12-01

அவர்கள் பின்பு அடிமைகளாக இருக்கவில்லை

இதை "அவர்கள் இனி அடிமைகள் அல்ல" என்று மொழிபெயர்க்கலாம்.

போவது

சில மொழிகள் "பயணம்" போன்ற ஒரு குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்தலாம், ஏனெனில் அவர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு நீண்ட தூரம் செல்லுகிறார்கள்..

வாக்குத்தத்ததின் தேசம்

ஆபிரகாமின் சந்ததியினருக்குக் கொடுப்பதாக தேவன் வாக்குதத்தம் கொடுத்த தேசம் இது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promisedland]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

12-02

உயரமான மேகத்தூண்

இதை "உயரமான மேகம்" அல்லது "தூணின் வடிவிலான மேகம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அக்கினிஸ்தம்பம்

இது இஸ்ரவேலரின் முன்னால் நெருப்பு போன்று காற்றில் தொங்கிய அல்லதுஅக்கினியின் தூணாகும் .

அவர்களை நடத்தினார்

ஸ்தம்பம் அவர்கள் முன்னால் போவதன் மூலம் தேவன் அவர்களுக்கு வழியைக் காட்டினார், அதினால் அவர்கள் அதைப் பின்பற்றலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

12-03

கொஞ்ச நேரத்திற்குப் பின்பு

அநேகமாக குறைந்தது இரண்டு நாட்கள் சென்றிருக்கலாம். அது தெளிவாக இருக்க, "சில நாட்களுக்குப் பிறகு" அல்லது "இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

அவர்களின் மனதை மாற்றிக்கொண்ட னர்

இந்த சொற்றொடரின் அர்த்தம், "அவர்கள் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்கினர்." சில மொழிகளில் இதே வெளிப்பாடு இருக்காது, மேலும் அர்த்தத்தை நேரடி வழியில் வெளிப்படுத்தும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/falsegod]]

12-04

அவர்கள் செங்கடலின் நடுவில் சிக்கிக்கொண்டனர்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி என்னவென்றால், "எகிப்தியர்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்ததாலும், செங்கடல் அவர்களுக்கு முன்னால் இருந்ததாலும் அவர்களால் தப்பிக்க எங்கும் செல்ல முடியவில்லை."

நாம் ஏன் எகிப்தை விட்டுப் புறப்பட்டோம்?

இதன் அர்த்தம், "நாங்கள் எகிப்தை விட்டு வெளியேறியிருக்கக்கூடாது!" அவர்கள் உண்மையில் காரணங்களைக் கேட்கவில்லை. அவர்கள் பயந்ததால், இந்த தருணத்தில் அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டாம் என்று நினைத்தனர் (அங்கே அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தபோதிலும்).

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/pharaoh]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/other/redsea]]

12-05

தேவன் இன்று உங்களுக்காக யுத்தம் செய்து காப்பாற்றுவார்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "இன்று தேவன் உங்களுக்காக எகிப்தியர்களைத் தோற்கடித்து, உங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் kaapar."

போ அல்லது செல்

சில மொழிகளில் இதை இன்னும் தெளிவாக சொன்னால், “நட” என்று கூறலாம்

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/moses]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/other/redsea]]

12-06

மேகம் போன்ற தூண்

நீங்கள் இந்த வாக்கியத்தை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள் 12:02

பார்க்க முடியவில்லை

மேகத் தூண் மிகப் பெரியதாகவும் தடிமனாகவும் இருந்ததால் எகிப்தியர்கள் இனி இஸ்ரவேலர்களில் எவரையும் பார்க்க முடியவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]

12-07

கடலுக்கு மேல் தன்னுடைய கையை நீட்டினான்

இதை "கடலின் மேல் கையை நீட்டி" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் இந்த அற்புதத்தை மோசே மூலம் செய்கிறார் என்பதைக் காட்ட இது ஒரு சைகை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/moses]]

12-08

கடந்தார்கள்

இதை, “நடந்தார்கள்” அல்லது “போனார்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.

இரண்டு பக்கத்திலும் வெள்ளம் சுவர் போல் நின்றது.

இதை மொழிபெயர்க்கலாம், "அவற்றின் இருபுறமும் உள்ள நீர் ஒரு சுவர் போல உயரமாகவும் நேராகவும் நின்றது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]

12-09

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]

12-10

கடல் வழியான பாதை

இது ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சுவர் கொண்ட கடலின் அடிப்பகுதியில் வறண்ட நிலமாக இருந்தது.

பயந்து

இதை "பயந்து குழப்பமடைய" என்று மொழிபெயர்க்கலாம்.

சிக்கிக்கொண்ட

இரதங்கள் நகர முடியவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/other/chariot]]

12-11

மற்ற பகுதியில் பாதுகாப்பாக இருந்தனர்

இதை "மறுபுறம் பாதுகாப்பாக நடந்தது" அல்லது "மறுபுறம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்" அல்லது "மறுபுறம் நடந்து எகிப்தியர்களிடமிருந்தும் கடலிலிருந்தும் பாதுகாப்பாக இருந்தனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

இதை "தனது கையை மீண்டும் கடலுக்கு மேலே தூக்கி " அல்லது ஒரு நேரடி கட்டளையாக "தேவன் மோசேயிடம், 'உன் கையை மீண்டும் நீட்டு என்று சொன்னார்' என்று மொழிபெயர்க்கலாம்.

திரும்பவும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதை "பாதை இருந்த இடத்தை மீண்டும் மூடியது" அல்லது "முழு கடலையும் மீண்டும் நிரப்பியது" அல்லது "கடவுள் அதைப் பிரிப்பதற்கு முன்பு இருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றது" என்று மொழிபெயர்க்கலாம்.

எகிப்தின் இராணுவம் முழுவதும்

இதை “எகிப்தின் இராணுவத்தின் எல்லோரும்” என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/moses]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]

12-12

தேவனை விசுவாசித்தார்கள்

வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவன் வல்லமையுடையவர் என்றும் அவர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் மக்கள் இப்போது நம்பினர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/other/moses]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]

12-13

மிகுந்த சந்தோஷத்துடன் களிகூர்ந்தனர்.

இதை, "மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர்கள் அதை உற்சாகமாகக் கொண்டாடினர்" அல்லது, "அதை முழு இருதயத்தோடு வெளிப்படுத்தினார்கள்" அல்லது "தங்கள் முழு பலத்தோடு" என்று மொழிபெயர்க்கலாம்.

அடிமைத்தனம் மற்றும் மரணத்திலிருந்து

இதை "எகிப்தியர்களால் கொல்லப்படுவதோ அல்லது அடிமைகளாக்குவதோ" என்று மொழிபெயர்க்கலாம்.

விடுதலையாய் இருக்க

இஸ்ரவேலரை எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார், அல்லது மீட்டார்.

தேவனை துதி

சில மொழிகளில் இதை "தேவனின் நாமத்தை உயர்த்துங்கள்" அல்லது "தேவன் பெரியவர் என்று சொல்லுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/other/praise]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]

12-14

பஸ்கா பண்டிகை

இதை "பஸ்கா நடவடிக்கைகள்" அல்லது "பஸ்கா கொண்டாட்டம்" அல்லது "பஸ்கா உணவு" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவன் அவர்களுக்கு எப்படி ஜெயம் தந்தார் என்பதை நினைவுகூரும்படி

இதை, "தேவன் எப்படி அவர்களைத் தோற்கடித்து உங்களுக்கு ஜெயம் தந்தார் என்பதை நினைவுகூருங்கள்." இங்கே "நினைவில்" என்ற வார்த்தை மறந்துவிடக் கூடாது என்று அர்த்தமல்ல; எதையாவது முறையாக நினைவுகூருவதும் இதன் அர்த்தம் என்றும் மொழிபெயர்க்கலாம்.

பூரண ஆட்டுக்குட்டி

இங்கே "சரியானது" என்ற சொல் எந்த நோயும் இல்லாத ஆட்டுக்குட்டியையும் வேறு எந்த குறையையும் இல்லாததை குறிக்கிறது. இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் நன்றாய் இருக்கும் ஆட்டுக்குட்டி."

ஈஸ்ட் இல்லாத அப்பம்

இதை வேறு வழியில் சொன்னால, “புளிப்பில்லாத அப்பம்.” நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று 11:03. பாருங்கள்

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/passover]]
  • [[rc://*/tw/dict/bible/other/egypt]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lamb]]