37-01
ஒரு நாள்
இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.
மரியாள்
இயேசுவின் தாயின் பெயரும் மரியாள், ஆனால், இது வேறு பெண்.
இந்த வியாதி மரணத்திற்கேதுவானது அல்ல
இதை " இந்த வியாதி மரணத்திற்கேதுவானது அல்ல " அல்லது "லாசருவுக்கு உடம்பு சரியில்லை, ஆனால் மரணம் இந்த நோயின் இறுதி முடிவு அல்ல" என்றும் மொழிபெயர்க்கலாம். லாசரு மரிக்க மாட்டான் என்று இயேசுவின் சீஷர்கள் நினைத்திருக்கலாம். லாசரு நோய்வாய்ப்பட்டு இறந்தாலும், மறுபடியும் ஜீவன் பெறுவான் என்பதை இயேசு அறிந்திருந்தார்.
இது தேவனுடைய மகிமைக்கென்று
அதாவது, "இது தேவன் எவ்வளவு பெரியவர் என்று ஜனங்கள் புகழ்ந்து பேச வைக்கும்."
ஆனால் அவர் இருந்த இடத்தில் இரண்டு நாட்கள் தங்கினார்
இதை, “லாசருவை குணமாக்க நினைத்தும், அவர் இருந்த இடத்தில் மேலும் இரண்டு நாட்கள் தங்கினார்” என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/glory]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/love]]
37-02
யூதேயா
இது யூதாவின் கோத்திரத்திலிருந்து குடியேறிய இஸ்ரவேலின் தெற்குப் பகுதியைக் குறிக்கிறது. சில மொழிகள் "யூதேயாவின் பகுதி" என்று சொல்ல விரும்புகின்றன.
அவன் நித்திரையாய் இருக்கிறான், நான் அவனை எழுப்ப வேண்டும்.
இந்த வாக்கியத்தை உங்கள் மொழியில் "தூக்கம்" மற்றும் "எழுப்பு" என்பதற்கான சாதாரண சொற்களுடன் மொழிபெயர்க்கவும். இயேசு இந்த வார்த்தைகளை வேறு அர்த்தத்துடன் பயன்படுத்துகிறார் என்றாலும், சீஷர்களுக்கு அது இன்னும் புரியவில்லை.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/other/teacher]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
37-03
அவன் சுகமாவான்
சீஷர்கள் இதை காரணமாகக் கொண்டு, "அவன் நலமடைவான் என்பதால் நாங்கள் இப்போது அவனிடம் செல்ல எந்த காரணமும் இல்லை."
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
இதை "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" அல்லது "அது நல்லது" என்று மொழிபெயர்க்கலாம். லாசரு மரித்துவிட்டதினால் மகிழ்ச்சியடைந்தார் என்று அர்த்தமல்ல, மாறாக அவர் எவ்வளவு பெரியவர் என்பதை தேவன் நிருபிக்கப் போகிறார் என்பதினால் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
37-04
மார்த்தாள்
மரியாள் என்பவள் மார்த்தாள் மற்றும் லாசருவின் சகோதரி. 37:01 ல் பார்க்கவும்.
இயேசுவை சந்திக்கும்படி போனாள்
அதாவது, "இயேசு அந்த ஊருக்குள் வருகையில் அவரைச் சந்திக்கச் சென்றது."
என்னுடைய சகோதரன் மரித்திருக்க மாட்டான்.
அதாவது, "நீங்கள் என் சகோதரனைக் குணப்படுத்தியிருப்பீர்ரானால், அவன் மரித்திருக்க மாட்டான்" அல்லது, "என் சகோதரன் மரிப்பதை நீர் தடுத்திருக்க முடியும்."
நீங்கள் அவரிடத்தில் கேட்கிற யாவும் அவர் உங்களுக்குக் கொடுப்பார்
அதாவது, "நீ கேட்கிற எல்லாவற்றையும் அவர் செய்வார்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
37-05
நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
"நான்" என்கிற வார்த்தை இயேசு தனது வல்லமையைப் பற்றி கூறுகிறார். இது மிகவும் வல்லமையுள்ளது இதில், இயேசு உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவன் "கொடுப்பவர்" அல்லது "வழி" என்று சுட்டிக்காட்டினார். முடிந்தால், இந்த வாக்கியத்தை இது அவரது குணாதிசயம் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மொழிபெயர்க்கவும். இதை, "நானே ஜனங்களை உயிரோடு எழுப்பி, அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறேன்." என்று மொழிபெயர்க்கலாம்.
அவன் மரித்தாலும் பிழைப்பான்.
அதாவது, " அவன் மரித்தாலும் என்றென்றைக்கும் பிழைப்பான்." "அவன்" என்ற ஆங்கில வார்த்தை ஆண்களை மட்டும் குறிக்கவில்லை. இயேசுவை விசுவாசிக்கும் பெண்களும் என்றென்றைக்கும் பிழைப்பார்கள்.
மார்த்தாள்
மரியாள் என்பவள் மார்த்தாள் மற்றும் லாசருவின் சகோதரி. 37:01 ல் பார்க்கவும்.
ஒருபோதும் மரிப்பதில்லை
இதை "என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/resurrection]]
- [[rc://*/tw/dict/bible/kt/life]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
37-06
மரியாள்
37:01 ல் இருந்த அதே பெண் தான், இவள் இயேசுவின் தாய் அல்ல.
இயேசுவின் காலில் விழுந்து
அதாவது, மரியாதை கொடுக்கும் விதமாக "இயேசுவின் காலில் விழுவது".
என்னுடைய சகோதரன் மரித்திருக்க மாட்டான்
அதாவது, "நீர் என் சகோதரனை மரிக்காமல் காப்பாற்றியிருக்க முடியும்" அல்லது, "என் சகோதரனின் மரணத்தை நீர் தடுத்திருக்கலாம்" அல்லது, "என் சகோதரர் இன்னும் உயிருடன் இருந்திருப்பான்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
- [[rc://*/tw/dict/bible/other/tomb]]
37-07
அவர் அவர்களிடத்தில் சொன்னது
அதாவது, "அவர் அங்குள்ள ஆண்களிடம் கூறினார்." அவர் கல்லை உருட்டும்படி மரியாளையும் மார்த்தாளையும் சொல்லவில்லை.
கல்லை அப்புறம் புரட்டுங்கள்
சில மொழிகள் "கல்லறையின் வாசலில் இருந்து கல்லை உருட்டவும்" என்று சொல்ல விரும்பலாம்.
மார்த்தாள்
மரியாள் என்பவள் மார்த்தாள் மற்றும் லாசருவின் சகோதரி. 37:01 ல் பார்க்கவும்.
அவன் மரித்து நான்கு நாட்கள் ஆயிற்று
இதை, "அவன் நான்கு நாட்களுக்கு முன்பு மரித்தான், அவனுடைய உடல் அங்கேயே கிடக்கிறது." என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/tomb]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
37-08
நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?
அதாவது, "நான் உங்களிடம் சொன்னதை நினைவு கூறுங்கள்." ஒரு பதிலைப் பெறுவதற்காக இயேசு இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை, எனவே சில மொழிகள் இதை ஒரு கட்டளையாக மொழிபெயர்க்க வேண்டும்.
தேவனுடைய மகிமையைக் காண்பாய்
அதாவது, "தேவனுடைய மகிமையைப் பாருங்கள்" அல்லது, "தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை பார்ப்பது."
கல்லை அப்புறம் உருட்டுங்கள்
சில மொழிகள் "கல்லறையின் வாசலில் இருந்த கல்லை உருட்டுங்கள்" என்று சொல்ல வேண்டும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/glory]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
37-09
நான் சொல்வதைக் கேட்பது
அதாவது, "நான் சொல்வதைக் கேட்பது." "நான் உம்மிடம் ஜெபிக்கும்போது" அல்லது "நான் உங்களுடன் பேசும்போது" சேர்க்க உதவியாக இருக்கும்.
வெளியே வா
சில மொழிகள் "கல்லறையிலிருந்து வெளியே வா" என்று சொல்ல விரும்பலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
- [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
37-10
லாசருவே வெளியே வா!
சில மொழிகள், "லாசரு கல்லறையிலிருந்து வெளியே வந்தான்!"
பிரேத சீலை
அதாவது, "அடக்கம் செய்யும்போது சுற்றும் சீலை." இதை "அடக்கம் செய்யும்முன் கட்டுவது" அல்லது "துணியின் கீற்றுகள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
இந்த அற்புதத்தினால்
அதாவது, "தேவன் இந்த ஆச்சரியமான அற்புதத்தைச் செய்ததினால்" அல்லது, "லாசருவை இயேசு மீண்டும் உயிரோடு எழுப்பினதினால்".
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/jew]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/miracle]]
37-11
பொறாமை
அதாவது, "இயேசுவின் வல்லமை மற்றும் புகழ்ச்சியினால் பொறாமையடைவது" அல்லது, "பல யூதர்கள் இயேசுவை நம்பினார்கள் எனவே பொறாமைப்படுகிறார்கள்."
ஒன்று சேர்ந்து
அதாவது, "ஒன்றாகச் சந்தித்து" அல்லது, "ஒன்றாக இணைந்து." இது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு சந்தித்தது - இயேசுவை எவ்வாறு கொலை செய்வது என்று திட்டமிடுவதற்காக.
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
- [[rc://*/tw/dict/bible/kt/jew]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/lazarus]]