தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

23-01

அவனுடைய குழந்தை அது இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான்.

அதாவது, "அவள் கர்ப்பமாவதற்கு அவன் காரணமாக இல்லை என்று அவனுக்குத் தெரியும்."

திருமணம் செய்துகொள்ள தயங்கினான்

அதாவது, "மரியாளை பகிரங்கமாக அவமானப்படுத்துவது" அல்லது "மரியாளை எல்லோருக்கும் முன்பாக வேதனைப்படுத்துவது." அவள் விபச்சாரம் செய்பவள் என்று தோன்றினாலும், யோசேப்பு மரியாளின்மேல் தயவாய் இருந்தான். .

பேசாமல் அவளைத் தள்ளிவிட (விவாகரத்து செய்ய) யோசித்தான்

இதை "மற்றவர்களுக்கு சொல்லாமல் ஏன் விவாகரத்து செய்ய அவன் முடிவு செய்தான்" அல்லது "அவள் கர்ப்பமானத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் அவளை விவாகரத்து செய்ய திட்டமிட்டான்" என்றும் மொழிபெயர்க்கலாம். யோசேப்பு ஒரு நீதிமான் என்பதால், நிலைமையை முடிந்தவரை நல்ல முறையில் தீர்க்க விரும்பினான், இதன் விளக்கம் அவளை அமைதியாக விவாகரத்து செய்வது.

அவளை விவாகரத்து செய்ய

சில மொழிகளுக்கு, "அவர்களின் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள" என்று சொல்வது நல்லது. யோசேப்பும் மரியாளும் நிச்சயதார்த்தம் செய்திருந்தனர் அல்லது "திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தனர்." ஆனால் யூத கலாச்சாரத்தில் ஒரு நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விவாகரத்து தேவைப்பட்டது.

சொப்பனத்தில்

அதாவது, "அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது கனவு பார்த்தான்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/mary]]
  • [[rc://*/tw/dict/bible/kt/righteous]]
  • [[rc://*/tw/dict/bible/other/josephnt]]
  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/other/dream]]

23-02

மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள்ள பயப்படவேண்டாம்

இதை, "நீ மரியாளைத் திருமணம் செய்யக்கூடாது என்று நினைக்க வேண்டாம்" அல்லது "மரியாளை உன் மனைவியாகக் கொள்ள தயங்கவேண்டாம்." என்று மொழிபெயர்க்கலாம்.

பரிசுத்த ஆவியினால் உண்டானது

அதாவது, "பரிசுத்த ஆவியின் அற்புதத்தினால் கருத்தரிக்கப்பட்டது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/other/josephnt]]
  • [[rc://*/tw/dict/bible/other/mary]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/son]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/yahweh]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]

23-03

அவன் அவளுடன் சேரவில்லை

அதாவது, "அவன் அவளுடன் பாலியல் உறவு கொண்டிருக்கவில்லை." குழந்தை பிறக்கும் வரை அவன் அவளை ஒரு கன்னியாக வைத்திருந்தான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/josephnt]]
  • [[rc://*/tw/dict/bible/other/mary]]

23-04

மரியாள் குழந்தைப் பெற்றெடுக்கும் நேரம் வந்தபோது

அதாவது, "இது மரியாளின் பிரசவ சமயம் வந்தபோது."

ரோம அரசாங்கம்

அந்த சமயத்தில் இஸ்ரவேலர்களை ரோம அரசாங்கம் தான் ஆட்சி செய்து வந்தது.

கணக்கெடுப்பு செய்ய

அதாவது, "அரசாங்க பதிவுக்காக கணக்கிடப்பட வேண்டும்" அல்லது "அரசாங்கம் அவர்களின் பெயர்களை ஒரு பட்டியலில் எழுத வேண்டும்" அல்லது "அரசாங்கத்தால் கணக்கிடப்பட வேண்டும்." இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அநேகமாக மக்களுக்கு வரி விதிக்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/mary]]
  • [[rc://*/tw/dict/bible/other/rome]]
  • [[rc://*/tw/dict/bible/other/josephnt]]
  • [[rc://*/tw/dict/bible/other/nazareth]]
  • [[rc://*/tw/dict/bible/other/bethlehem]]
  • [[rc://*/tw/dict/bible/other/david]]

23-05

தங்குவதற்கு இடம் இல்லை

அதாவது, "தங்குவதற்கு வழக்கமான இடம்கூட இல்லை." அந்த நேரத்தில் பெத்லகேம் மிகவும் கூட்டமாக இருந்ததால், விருந்தினர்களுக்காக வழக்கமாக இருக்கும் அறைகள் கூட மக்களால் நிறைந்திருந்தது.

விலங்குகள் தங்குமிடம்

மக்கள் வாழ்ந்த இடமாக அல்ல அது விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான இடமாக இருந்தது,. மிருகங்களை தங்க வைப்பதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையுடன் இதை மொழிபெயர்க்கவும்.

முன்னனை

அதாவது, "விலங்குகளின் தீவன பெட்டி" அல்லது, "மிருகங்களுக்கு உணவளிக்க பயன்படுத்தும் மர அல்லது கல் பெட்டி." குழந்தை அந்தப் பெட்டியில் படுத்துக்கொள்ள அந்தப் பெட்டியை வைக்கோலால் நிரப்பியிருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/bethlehem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

23-06

அவர்களுடைய மந்தையை காத்துக்கொண்டிருந்தநர்

ஒரு "மந்தை" என்பது ஆடுகளின் கூட்டம். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை பாதுகாத்து, தீங்கு அல்லது திருட்டில் இருந்து பாதுகாக்கிறார்கள்.

ஒரு வெளிச்சம் போன்ற தூதன்

இதை "பிரகாசமான வெளிச்சத்தினால் சூழப்பட்ட ஒரு தேவதூதன்" என்றும் மொழிபெயர்க்கலாம். பிரகாசிக்கும் ஒளி இரவின் இருளுக்கு மாறாக இன்னும் பிரகாசமாகத் தெரிந்திருக்கும்.

அவர்கள் பயந்தார்கள்

அந்த தேவதூதனின் தோற்றம் மிகவும் பயமாக இருந்தது.

பயப்படாதிருங்கள்

இது பெரும்பாலும் "பயப்படவேண்டாம்" என்பதாகும். தேவதூதனைப் பார்த்தபோது மேய்ப்பர்கள் மிகவும் பயந்தார்கள், அதினால் அவர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவன் சொன்னான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/shepherd]]
  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/other/bethlehem]]

23-07

பொதுத் தகவல்

தேவதூதன் தொடர்ந்து அவர்களோடு பேசி

துணிகளில் சுற்றி

புதிதாகப் பிறந்த குழந்தைகளை நீண்ட துணிகளில் இறுக்கமாக போர்த்துவது அந்த காலத்தின் வழக்கம். "வழக்கமான வழியில், நீளமான துணியால் மூடப்பட்டிருக்கும்" என்று சொல்வது அவசியமாக இருக்கலாம்.

முன்னனையில்

அதாவது, "விலங்குகளுக்கு உணவளிக்கும் பெட்டி." இதை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் 23:05 ல் பார்க்கவும்.

தூதர்களால் நிறைந்திருந்தது

இதன் அர்த்தம் என்னவென்றால், ஏராளமான தேவதூதர்கள் இருந்தார்கள், அவர்கள் வானத்தில் தோன்றினார்கள்.

தேவனுக்கு மகிமை

இதை நாம் எல்லோரும் தேவனை மகிமைப்படுத்துவோம்! அல்லது, "எங்கள் தேவன் கணத்திற்கும், மகிமைக்கும் பாத்திரர்!" அல்லது, "நாம் அனைவரும் தேவனை மகிமைப்படுத்துகிறோம்!"

பூமியில் சமாதானம்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "பூமியில் அமைதி உண்டாகட்டும்."

ஜனங்களின்மேல் அவருடைய தயவு

இது "தேவ தயவு, மகிழ்ச்சி அல்லது அவருடைய ஜனங்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/glory]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/other/peace]]

23-08

அவர்கள் கேட்டதும் பார்த்ததும்

அதாவது, "அவர்கள் கேட்ட மற்றும் பார்த்த எல்லாவற்றிற்கும்." மகிமையான தேவதூதர்களும் அவர்களுடைய அற்புதமான செய்தியும், புதிதாகப் பிறந்த மேசியாவையே பார்த்ததும் இதில் அடங்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/shepherd]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/other/mary]]
  • [[rc://*/tw/dict/bible/other/praise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

23-09

கொஞ்ச காலத்திற்குப் பின்பு

ஞானிகள் நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு முன்பும் இயேசு பிறந்த பிறகும் எவ்வளவு காலம் ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் பயணத்திற்குத் தயாராகி பின்பு பெத்லகேமுக்குப் பயணம் செய்ய இரண்டு வருடங்கள் ஆயிருக்கலாம்.

ஞானிகள்

"ஞானிகள்" அநேகமாக நட்சத்திரங்களைப் படித்த ஜோதிடர்கள். மேசியாவின் பிறப்பை முன்னறிவித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் அவர்கள் தெரிந்திருக்கலாம்.

விசித்திரமான நட்சத்திரம்

அவர்கள் கவனித்த நட்சத்திரம் சாதாரண நட்சத்திரம் அல்ல. அது இயேசு பிறந்த நேரத்தில் தோன்றிய ஒன்று.

அவர்கள் அறிந்துகொண்டனர்

சில மொழிகள், "அவர்களின் படிப்பிலிருந்து, இந்த அறிஞர்கள் உணர்ந்தனர்" என்று சொல்லலாம்.

வீடு

அவர் பிறந்த அந்த விலங்குகளுக்கான இடத்தில் அவர்கள் இனியும் தங்கவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/wise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingofthejews]]
  • [[rc://*/tw/dict/bible/other/bethlehem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

23-10

ஞானிகள்

23:09 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

குனிந்து வணங்குவது

அதாவது, "தரையில் குனிந்த, குனிந்தது." அந்த நேரத்தில், இது மிகுந்த மரியாதை அல்லது பயபக்தியைக் காட்டும் வழக்கமாகும்.

விலையுயர்ந்த

அதாவது, “மிகவும் மதிப்புமிக்க”.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]