தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

28-01

ஒரு நாள்

இந்த வாக்கியம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடவில்லை. ஒரு உண்மையான கதையைச் சொல்லத் தொடங்க பல மொழிகள் இதேபோன்ற வழியைக் கொண்டுள்ளன.

இளம் பணக்கார அதிகாரி

இந்த மனிதன் இளமையாக இருந்தபோதிலும், பணக்கார மற்றும் சக்திவாய்ந்த அரசியல் அதிகாரியாக இருந்தான்.

இயேசுவிடம் வந்து

அதாவது, “இயேசுவை சந்தித்து’.

நல்ல போதகரே

அதாவது, “பரிசுத்தமான போதகர்”. இயேசு ஒரு சாதாரணமாக கற்றுத்தேர்ந்த ஒரு ஆசிரியர் என்று அவன் சொல்லவில்லை.

நித்திய ஜீவனை அடைய

அதாவது, "நித்திய ஜீவனைப் பெறுவது" அல்லது, "தேவனோடு என்றென்றும் வாழ்வது." 27:01 ல் "நித்திய ஜீவன்" எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டு, அதைப் பற்றிய மொழிபெயர்ப்பை அங்கே பாருங்கள்.

‘நல்லவன்’ என்று எப்படி நீ சொல்கிறாய்

இயேசு தாம் ஒரு தேவன் என்பதை அங்கே மறுக்கவில்லை. மாறாக, அந்த அதிகாரி இயேசுவை ஆண்டவர் என்று புரிந்துகொண்டானோ என்று அறியவே அவ்வாறு கேட்டார்.

நல்லவன் என்று யார் இருக்கிறார்கள், அது தேவன் ஒருவரே

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "உண்மையிலேயே நல்லவர் தேவன் மட்டுமே" அல்லது, "தேவன் மட்டுமே நல்லவர்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/good]]
  • [[rc://*/tw/dict/bible/other/teacher]]
  • [[rc://*/tw/dict/bible/kt/eternity]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/obey]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lawofmoses]]

28-02

நான் எதற்கு கீழ்படிய வேண்டும்?

அதாவது, “நித்திய ஜீவனை சுதந்தரிக்க நான் எந்த கற்பனையை பின்பற்ற வேண்டும்?”.

உன்னை நேசிப்பது போலவே

அதாவது, "நீங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு" அல்லது, "நீங்கள் உங்களை நேசிக்கும் அதே அளவிற்கு."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/adultery]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]

28-03

என் சிறுவயது முதல்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்து இப்போது வரை."

இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்?

அதாவது, "நான் வேறு என்ன செய்ய வேண்டும்" அல்லது, "இதைத் தவிர நான் என்ன செய்ய வேண்டும்?"

அவனில் அன்புகூர்வது

இயேசு அவன் மீது இரக்கம் காட்டினார். தேவன் மக்கள் மீது வைத்திருக்கும் அன்போடு ஒத்துப்போகும் அன்பிற்கான ஒரு வார்த்தையைத் தேர்வுசெய்யலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/obey]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lawofmoses]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]

28-04

நீ

நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து உங்கள் மொழியில் "நீங்கள்" என்பதற்கு வெவ்வேறு சொற்கள் இருந்தால், ஒற்றை வடிவத்தைப் பயன்படுத்தவும். இந்த கட்டளையை இயேசு இந்த ஒரு மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பூரணம்

அதாவது, “முற்றிலும் பரிசுத்தமாக”.

உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும்

அதாவது, “உன்னுடைய எல்லா ஆஸ்தியையும்”.

பொக்கிஷம்

இதை, “ஆஸ்தி” அல்லது “ பெரும் செல்வம்”.

பரலோகத்தில்

இதை "நீ அங்கு வரும்போது பரலோகத்தில் இருக்கும்" என்றும் மொழிபெயர்க்கலாம். இந்த பொக்கிஷம் "அங்கும்" இருக்கும், இயேசு அந்த இளைஞனிடம் "இங்கே இப்பொழுது" கைவிடும்படி சொன்னார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]

28-05

இயேசு சொன்னதைக் கேட்டு

அதாவது, “அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் என்று இயேசு சொன்னதைக் கேட்டு”.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

28-06

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க

இதை, “தேவனுடைய ராஜ்யத்தில் பாத்திரராய் இருப்பதற்கு” என்று மொழிபெயர்க்கலாம்.

ஒட்டகம்

ஒட்டகங்கள் மிகப் பெரிய விலங்குகள், அவை பெரும்பாலும் அதிக சுமைகளைச் சுமக்கப் பயன்படுகின்றன. உங்கள் மொழியில் ஒட்டகங்கள் தெரியாவிட்டால், "மிகப் பெரிய விலங்கு" அல்லது "சுமை மிருகம்" போன்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தலாம். வேறு ஏதேனும் பெரிய விலங்குகளின் பெயரை மாற்ற நீங்கள் தேர்வுசெய்தால், "எருது" அல்லது "கழுதை" போன்ற இயேசு பேசிக் கொண்டிருந்த மக்களால் இந்த மிருகங்கள் அறியப்பட்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஊசியின் காது

இது ஒரு தையல் ஊசியின் முடிவில் உள்ள சிறிய துளையைக் குறிக்கிறது. ஒரு ஊசியின் கண் வழியாக ஒட்டகத்தைப் போன்ற பெரிய ஒன்றைப் பற்றிய யோசனை சாத்தியமற்ற ஒன்றைக் குறிக்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]

28-07

அதிர்ச்சியடைவது

அதாவது, “மிகுந்த ஏமாற்றத்துடன்”.

யார் இரட்சிக்கப்பட கூடும்

இதை "பணக்காரர்களால் இரட்சிக்கப்படமுடியாவிட்டால், வேறு மற்றவர்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?" பணக்காரராக இருப்பது தேவனின் தயவின் அடையாளம் என்று பலர் நம்பினர்.

இரட்சிப்படைவது

இங்கே இது தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து காத்துக்கொள்ளவும் பாவத்திற்கான தண்டனையிலுமிருந்து தப்பித்து, தேவனுடைய ராஜ்யத்தில் குடிமகனாகுவது

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/save]]

28-08

மனிதர்களால் இது கூடாத காரியம்

அதாவது, "இது ஜனங்களால் செய்ய முடியாது" அல்லது, "மனிதர்கள் தங்களைக் அவர்களே இரட்சிக்க முடியாது."

தேவனால் எல்லாம் கூடும்

இதை "தேவனால் எதையும் செய்ய முடியும், ஒரு பணக்காரனைக் கூட இரட்சிக்க முடியும்" அல்லது " சாத்தியமற்ற காரியங்களைக்கூட செய்ய அவர் வல்லவர், எனவே அவர் ஒரு பணக்காரரையும் இரட்சிக்க முடியும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

28-09

எல்லாவற்றையும் விடுவது

அதாவது, "எல்லாவற்றையும் விட்டுவிட்டு" அல்லது, "எங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் விட்டுவிட்டு."

நம்முடைய வெகுமதி என்னவாயிருக்கும்?

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "நாம் என்ன வெகுமதியைப் பெறுவோம்" அல்லது "எங்களுக்கு எவ்வாறு வெகுமதி கிடைக்கும்?" அல்லது, "நாங்கள் இதைச் செய்ததால்?" "தேவன் நமக்கு என்ன வெகுமதியாகக் கொடுப்பார்?" என்பதையும் இதனோடு சேர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

28-10

விட்டுவிடுவது

அதாவது, "விட்டுச் சென்றது" அல்லது, "கைவிட்டுவிட்டது" அல்லது, "தேவனைவிட எதையும் முக்கியமாக நினைக்காமல் இருப்பது."

என்னக்காக

இது "எனக்காக" அல்லது "என் சார்பில்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

1௦௦ மடங்கு அதிகம்

அதாவது, "அவர் முன்பு இருந்ததை விட மிக அதிகம்."

முந்தினோர் பிந்தினோராயும்

அதாவது, "இப்போது முக்கியமான பலர், அப்போது முக்கியமானவர்கள் அல்ல."

பிந்தினோர் முந்தினோராயும்

அதாவது, "பூமியில் மிக முக்கியமானவர்கள் அல்ல என்று கருதப்படும் பலர் பரலோகத்தில் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுவார்கள்" அல்லது, "இப்போது பூமியில் சிறிதளவு மதிப்புள்ளவர்களாகக் கருதப்படும் பலர் பரலோகத்தில் அதிக மதிப்புடையவர்களாக இருப்பார்கள்."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/eternity]]