தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

39-01

நடு இரவில்

இது, "இரவில் பாதியிலேயே" அல்லது, "இரவில் மிகவும் தாமதமாக" என்று பொருள்.

அவரைக் கேட்கும்படி

அதாவது, "இயேசு குற்றம் செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டக்கூடிய ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக இயேசுவிடம் கேள்விகளைக் கேட்பது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]

39-02

இயேசுவை சோதிக்கும்படி

இதை, "இயேசு ஏதாவது தவறு செய்ததாக குற்றம் சாட்ட ஒரு முறையான சந்திப்பு இருந்தது." வழக்கமாக ஒருவர் குற்றமற்றவரா அல்லது ஒரு குறிப்பிட்ட குற்றத்தில் குற்றவாளியா என்பதைக் கண்டறிய ஒரு விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கில், இயேசுவை குற்றவாளியாகக் காட்ட தலைவர்கள் உறுதியாக இருந்தனர். என்று மொழிபெயர்க்கலாம்.

அவரைக் குறித்து பொய் சொல்வது

அதாவது, "அவரைப் குறித்து பொய்களைக் கூறினார்கள்" அல்லது, "அவர் ஏதாவது தவறு செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டினார்கள்."

அவர்கள் சொல்வது ஒருவரோடொருவர் ஒத்துப்போகவில்லை

இதை, "அவர்கள் இயேசுவைப் பற்றி ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாகச் சொன்னார்கள்" அல்லது "சாட்சிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட காரியங்களை இயேசுவைப் பற்றி சொன்னார்கள்." என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை

அதாவது, "அவர் எந்த தவறும் செய்யவில்லை."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/witness]]
  • [[rc://*/tw/dict/bible/kt/guilt]]

39-03

இறுதியாக

அதாவது, "அவருக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" அல்லது, "அவர் குற்றவாளி என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]

39-04

நான்

அதாவது, "நீங்கள் சொன்னது போல் நான் தான்" அல்லது, "நான் மேசியா மற்றும் தேவனுடைய குமாரன் தான்." "நான்" என்பது தேவனின் பெயரும் (பார்க்க 09:14). "நான்" என்று வெறுமனே சொல்வதன் மூலம், இயேசு தான் தேவன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். முடிந்தால், இதை மொழிபெயர்க்கவும், இதன் மூலம் இயேசுவின் பதிலுக்கும் தேவனின் பெயருக்கும் இடையில் ஜனங்கள் ஒற்றுமையைக் காண்பார்கள்.

தேவனோடு உட்கார்ந்திருப்பது

இதை "தேவனோடு ஆட்சி செய்வது" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருப்பதால், ஜனங்கள் அவரைப் பற்றி பரலோகத்தில் வீற்றிருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். அவர் தேவனோடு வீற்றிருப்பார் என்று சொல்வதன் மூலம், பிதாவுடன் ஆட்சி செய்ய தனக்கும் அதிகாரம் இருப்பதாக இயேசு கூறினார்.

தேவனோடு உட்கார்ந்திருப்பது மற்றும் பரலோகத்திலிருந்து வருவதும்

இதை "தேவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பின்னர் பரலோகத்திலிருந்து வருவது" என்று மொழிபெயர்க்கலாம்.

கோபத்தில் அவனுடைய உடையை கிழித்தல்

துக்கத்தையோ கோபத்தையோ வெளிப்படுத்த யூதர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்து விடுவார்கள். துணிகளைக் கிழிப்பது என்பது உங்கள் மொழியில் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், "அவன் மிகவும் கோபமாக இருந்தான்" போன்ற ஒரு வார்த்தையை மாற்ற விரும்பலாம்.

உங்களுடைய நியாயத்தீர்ப்பு என்ன?

அதாவது, "உங்கள் முடிவு என்ன?" அல்லது, "நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள் என்று எங்களிடம் சொல்லுங்கள்: அவர் குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா?" தேவனுக்கு நிகரானவர் என்று இயேசு சொன்னதினால் அவரை தண்டிக்க வேண்டும் என்று பிரதான ஆசாரியர்கள் விரும்பினர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/witness]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/judge]]

39-05

அவர்கள் இயேசுவின் கண்களை மூடினர்

அதாவது. "அவர்கள் இயேசு பார்க்க முடியாதபடி அவருடைய கண்களை மூடினார்கள்."

அவர்மேல் துப்பினார்கள்

இதை "அவரை அவமதிக்க அவர்மேல் துப்புங்கள்" அல்லது "அவர் ஒரு பொருட்டு அல்ல என்று சொல்வதற்காக அவரைத் துப்புங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது ஒருவரை இழிவுபடுத்தும் ஒரு வழியாகும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/highpriest]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/mock]]

39-06

மறுதலிப்பது அல்லது மறுப்பது

இதை "அது உண்மை இல்லை என்று சொன்னது" அல்லது "அவர் இயேசுவோடுகூட இருந்ததில்லை என்று சொன்னான்" அல்லது "இல்லை, அது உண்மையல்ல" என்று மொழிபெயர்க்கலாம்.

பேதுரு மறுபடியும் மறுதலித்தான்

இதை, "பேதுரு இயேசுவை இரண்டாவது முறையாக மறுதலித்தான்" அல்லது "மீண்டும் இயேசுவை யார் என்றே தெரியாது என்று சொன்னான்." என்று மொழிபெயர்க்கலாம்.

கலிலேயாவிலிருந்து வந்தவர்கள்

இதை "கலிலேயர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இயேசுவும் பேதுருவும் கலிலேயா பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று பேதுரு பேசிய விதத்திலிருந்து ஜனங்களால் சொல்ல முடிந்தது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/galilee]]

39-07

சத்தியம் அல்லது ஆணையிடுவது

அதாவது, “உறுதியாக சொன்னான்” அல்லது “உண்மையைப் போல சொன்னான்”.

இந்த மனிதனை நான் அறிவேன் என்றால் தேவன் என்னை சபிக்கட்டும்.

இது ஒரு சாபம், "நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் தேவன் என்னை தண்டிப்பார்" அல்லது "நான் உங்களிடம் பொய் சொன்னால் தேவகன் என்னை தண்டிப்பார்!" இந்த வழியில் பேதுரு இயேசுவை அறியவில்லை என்று மிகவும் உறுதியாக சொல்லிக்கொண்டிருந்தான். அவன் இயேசுவை "இந்த மனிதன்" என்றும் சொன்னான், அவரைத் தெரியாது என்று சொன்னான்.

சேவல் கூவிற்று

"கூவுவது" என்பது சேவலின் சத்தம். இதை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்பதை ஒப்பிடுட்டுப்பாருங்கள் 38:09.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/curse]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

39-08

மிகவும் அழுவது

அதாவது, "அழுதது, மிகுந்த துக்கத்தை உணர்கிறது" அல்லது, "அழுதது, ஆழ்ந்த வருத்தத்தை உணர்த்துகிறது."

காட்டிக்கொடுத்தவன்

அதாவது, "இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன்" அல்லது "இயேசுவைக் கைது செய்ய தலைவர்களுக்கு உதவி செய்தவன்".

இயேசு மரணத்திற்கு ஏதுவானவர் என்று தீர்ப்பது

அதாவது, "இயேசு ஒரு குற்றவாளி, எனவே அவர் மரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தான்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/other/judasiscariot]]
  • [[rc://*/tw/dict/bible/other/betray]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]

39-09

ரோம அதிகாரி

அதாவது, "ரோமர்களின் அரசாங்க அதிகாரி." இஸ்ரவேலில் யூதேயா பகுதியை நிர்வகிக்க ரோம அரசாங்கம் பிலாத்துவை நியமித்திருந்தது.

அவரைக் கொன்றுபோடும்படி எழுதிக்கொடுப்பது

ஒரு அதிகாரியாக, இயேசுவை மரண தண்டனைக்கு உட்படுத்தவும், சிலுவையில் அறையப்படுவதற்கு சம்மதிக்கவும் அல்லது அவரை விடுவிக்கவும் பிலாத்துக்கு அதிகாரம் இருந்தது. யாரையும் கொலை செய்யும் அதிகாரம் யூத ஆசாரியர்களுக்கு இல்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/pilate]]
  • [[rc://*/tw/dict/bible/other/rome]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingofthejews]]

39-10

நீர் சொன்னபடியே

அதாவது, "நீர் சரியாக சொன்னீர்."

என்னுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல

அதாவது, "என் ராஜ்யம் பூமிக்குரிய ராஜ்யங்களைப் போன்றதல்ல."

என்னுடைய ஊழியக்காரர்கள் எனக்காக சண்டைப் போடுவார்கள்

அதாவது, "என் ராஜியத்திற்குரியவர்கள் என்னை காப்பாற்ற போராடியிருப்பார்கள்", அப்படியாயிருந்தால் நான் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்.

எனக்குச் செவிகொடுங்கள்

இதை "என் உபதேசங்களைக் கேட்டு எனக்குக் கீழ்ப்படிகிறது" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பது மட்டுமல்லாமல், அவர் சொல்வதைச் செய்வதும் இதில் அடங்கும்.

எது உண்மை?

அதாவது, "உண்மை எது என்று யாராவது அறிய முடியுமா?"

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
  • [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
  • [[rc://*/tw/dict/bible/other/servant]]
  • [[rc://*/tw/dict/bible/kt/true]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]
  • [[rc://*/tw/dict/bible/other/pilate]]

39-11

நான் இந்த மனிதனிடத்தில் எந்தக் குற்றமும் பார்க்கவில்லை

அதாவது, "இந்த மனிதன் குற்றவாளி என்று நான் நினைக்கவில்லை" அல்லது, "நான் இந்த மனிதனை விசாரித்ததில், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன்."

அவர் குற்றம் ஒன்றும் செய்யவில்லை

அதாவது, "அவர் எந்த தவறும் செய்யவில்லை!"

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/pilate]]
  • [[rc://*/tw/dict/bible/kt/guilt]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/crucify]]

39-12

கலகம்

அதாவது, "அவர்கள் கோபத்தினால் கலவரம்ச் செயல்களைச் செய்யத் தொடங்கினார்கள்."

அவன் ஒப்புக்கொண்டான்

இயேசு ஒரு நீதிமான் என்று பிலாத்து நம்பினதினால் இயேசுவைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால், அவன் அந்தக் கூட்டத்தினருக்குப் பயந்ததினால் இயேசுவை சிலுவையில் அறையும்படி தனது வீரர்களிடம்(சேவகர்களிடம்) சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முடிந்தால், இந்த வாக்கியத்தை அவனுடைய தயக்கத்தைக் காட்டும் வகையில் மொழிபெயர்க்கவும்.

ராஜ வஸ்திரம்

அதாவது, "ராஜாவின் அங்கி போன்ற ஒரு அங்கி." இந்த அங்கி ஒரு பிரகாசமான நிறத்தைக் கொண்டிருந்தது, எனவே இது ஒரு ராஜா அணியும் ஒரு வகையான அங்கி போல் இருந்தது.

முற்க்களினால் ஆன ஒரு கிரீடம்

இதன் அர்த்தம் அவர்கள் கிரீடம் போல தோன்றும்படி முற்கிளைகளை ஒரு வட்டமாக கட்டினார்கள். கிரீடம் என்பது ஒரு ராஜா தனது அதிகாரத்தைக் காட்ட தலையில் அணிந்திருக்கும் ஒரு ஆபரணம். ஆனால் அவர்கள் இயேசுவின் தலையில் வைத்த கிரீடத்தில் கூர்மையான, ஆபத்தான முட்கள் இருந்தன.

பார்

அதாவது, "பார்" அல்லது, "இதோ."

யூதர்களின் ராஜா

சேவகர்கள் இயேசுவை கேலி செய்ததினால், இதை "யூதர்களின் ராஜா என்று அழைக்கப்படுவார்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/pilate]]
  • [[rc://*/tw/dict/bible/kt/crucify]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/rome]]
  • [[rc://*/tw/dict/bible/other/mock]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingofthejews]]