தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

41-01

விசுவாசியாத யூத தலைவர்கள்

அதாவது, "இயேசுவை ஏற்கமறுத்த யூதத் தலைவர்கள்."

இயேசுவை, பொய்யன் என்று சொன்னார்கள்

இதை, இயேசுவை "அந்த மனிதன், பொய் சொல்கிறார் என்று சொன்னார்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இயேசு தாம் தேவனுடைய குமாரன் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை.

மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது

அதாவது, "மீண்டும் உயிரோடு எழுந்தது" அல்லது, "மீண்டும் உயிரோடு இருப்பது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/crucify]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/other/pilate]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/other/tomb]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

41-02

அவர்கள் வைத்தது

அதாவது, “பிரதான ஆசாரியர்களும் சேவகர்களும் வைத்தனர்.”

கல்லுக்கு முத்திரை வைப்பது

அவர்கள் கல் மற்றும் கல்லறைக்கு இடையில் களிமண் அல்லது மெழுகு போன்ற மென்மையான பொருளை வைத்து அதிகாரப்பூர்வ முத்திரையால் குறித்தனர். யாராவது கல்லை நகர்த்தினால், கல் உடைந்து யாரோ கல்லறைக்குள் நுழைந்திருக்க கூடும் என்று காண்பிக்கும். இதை "மக்கள் நகர்த்துவதைத் தடுக்க கல்லில் ஒரு அடையாளம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/pilate]]
  • [[rc://*/tw/dict/bible/other/tomb]]

41-03

யூதர்களை சம்மதிக்கவில்லை

ஓய்வு நாளில் ஒரு யூதர் வெகுதூரம் நடக்கவோ அல்லது வேறு எந்த வேலையும் செய்யவோ அனுமதிக்கபடவில்லை.

கல்லறையின் வாசனை

கெட்ட வாசனையை மறைக்க இறந்தவர் உடலில் வைக்கப்பட்ட நல்ல மணம் கொண்ட மசாலாப் பொருள்களை இது குறிக்கிறது. இதை "சுவையான மணம் கொண்ட மசாலா" அல்லது "இனிப்பு மணம் கொண்ட எண்ணெய்கள்" அல்லது "இனிப்பு மணம் கொண்ட தாவரங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sabbath]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/other/tomb]]

41-04

பெரிய நிலநடுக்கம்

இதை "ஒரு வகையான பூகம்பம்" அல்லது "தரையில் பிளவு போன்று பலமாக ஏற்படுதல்" என்றும் மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் இதை மறுபரிசீலனை செய்ய விரும்பலாம், "நிலநடுக்கம் ஏற்படுவது."

அந்த ஒளி மின்னலைப்போல பிரகாசமாய் இருந்தது

அதாவது, "மின்னலைப் போல பிரகாசமாக இருந்தது."

செத்தவர்களைப் போல தரையில் விழுந்தார்கள்

அவர்கள் இறந்தவர்கள் இல்லை, ஆனால் அவர்கள் மிகவும் பயந்ததினால் செத்த பிரேதம் போல அசையாமல் மயங்கிக் கிடந்தனர். இதை தெளிவுபடுத்துவதற்காக, "திடீரென்று தரையில் விழுந்து அசைவில்லாமல் கிடந்தனர்" என்று இதை மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/other/tomb]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]

41-05

பயபடாதிருங்கள்

அதாவது, "பயப்படுவதை நிறுத்துங்கள்." மின்னல் போல் பிரகாசிக்கும் ஒரு தேவதை ஒரு பயமுறுத்தும் பார்வை!

அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்

இதை "அவர் மீண்டும் உயிரோடு வந்தவிட்டார்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/other/tomb]]

41-06

அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார்

அதாவது, "அவர் உங்களை கலிலேயாவில் சந்திப்பார்" அல்லது, "நீங்கள் அங்கே போகும்போது அவர் கலிலேயாவில் இருப்பார்." இங்கே "நீங்கள்" என்பது அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்களை பன்மையில் குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/angel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/other/galilee]]

41-07

மிகுந்த சந்தோஷம் மற்றும் அதிகம் பயப்படுவது

அதாவது, "பயத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மற்றும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பது."

நற்செய்தி

இதை "இயேசு மீண்டும் உயிரோடு எழுந்தார் என்ற நற்செய்தி" என்றும் மொழிபெயர்க்கலாம். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை இந்த நற்செய்தி குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/joy]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

41-08

என்னைக் காண்பீர்கள்

அதாவது, "என்னை சந்திப்பாய்" அல்லது, "என்னை சந்திக்க முடியும்."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/worship]]
  • [[rc://*/tw/dict/bible/other/galilee]]