தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

24-01

வனாந்திரம்

அதாவது, "வனாந்திரம்" அல்லது, "தொலைதூர, பாலைவனம் போன்ற இடம்." இந்த இடத்தில் ஜனங்கள் குறைவாகவே வாழ்ந்தனர்.

காட்டுத்தேன்

இந்த தேன் வனாந்தரத்தில் தேனீக்களின் இயற்கையான தயாரிப்பு; இது மக்களால் பயிரிடப்படவில்லை. "தேன்" என்ற வார்த்தை சொன்னால் மக்கள் சாதாரணமாக புரிந்துகொள்வார்கள், நாம் அதை "காட்டுதேன்" என்று சொல்லவேண்டியதில்லை.

வெட்டுக்கிளி

இவை மிகப் பெரிய வகையானது, மிகப் பெரிய வெட்டுக்கிளிகளை வனாந்திரத்தில் வசிக்கும் சிலர் அவற்றை சாப்பிடுகிறார்கள்.

ஒட்டகமயிர்

ஒட்டகம் என்பது மிகவும் கடினமான கூந்தலைக் கொண்ட ஒரு விலங்கு. மக்கள் அதிலிருந்து ஆடைகளை உருவாக்க முடியும். இதை "கடினமான விலங்கின் முடி" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒட்டகமயிரினால் செய்யும் உடை

அதாவது, "ஒட்டக முடியால் செய்யப்பட்ட கரடுமுரடான உடைகள்." இந்த ஆடைகள் மற்ற துணிகளைப் போல விரைவாக அணிய முடியாது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/other/zechariahnt]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]

24-02

வனாந்திரம்

24:01 ல் இந்த வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

மனந்திரும்பு

"உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புங்கள்" என்று சொல்வது நல்லது.

தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது

அதாவது, "தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வரப்போகிறது" அல்லது, "தேவனுடைய ராஜ்யம் விரைவில் வரும்." இது ஜனங்களின் மீதான தேவனின் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. இதை “தேவனுடைய ராஜ்யம் வரப்போகிறது" அல்லது "தேவன் சீக்கிரமாய் நம்மை ராஜாவாக ஆட்சி செய்வார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/other/preach]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]

24-03

அவர்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பியது

இது "தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பியது " அல்லது "தங்கள் பாவங்களை விட்டு மனம் மாறியது" அல்லது "அவர்கள் செய்த பாவங்களை விட்டுவிட்டது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மனந்திரும்பவில்லை

அதாவது, “அவர்களுடைய பாவங்களிலிருந்து திரும்பவில்லை”

அவர்களுடைய பாவங்களை அறிக்கையிடுதல்

ஒப்புக்கொள்வது என்பது ஒரு உண்மையை ஒப்புக்கொள்வதாகும். இந்த தலைவர்கள் தாங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. இது "அவர்கள் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டனர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]

24-04

நீங்கள் விஷமுள்ள பாம்புகள்

இதை, "நீங்கள் படுத்துக்கொண்டிருக்கிற விஷ பாம்புகளைப் போன்றவர்கள்!" அவை ஆபத்தானவை, ஏமாற்றும் தன்மை கொண்டவை என்பதால் யோவான் அவர்களை விஷ பாம்புகள் என்று அழைத்தான் என்று மொழிபெயர்க்கலாம்.

நல்ல கனி கொடாத மரம் எல்லாம்

யோவான் உண்மையில் மரங்களைப் பற்றி பேசவில்லை. இது தேவனிடமிருந்து வரும் நல்ல செயல்கள், மற்றும் நற்குணங்களாகும்.

வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

இதன் அர்த்தம், "தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படுவது."

யோவான் நிறைவேற்றியது

அதாவது, தேவனின் தூதன் செய்வான் என்று தீர்க்கதரிசி சொன்னதை "யோவான் செய்து கொண்டிருந்தார்".

பார்

இதை "இங்கே பாருங்கள் மற்றும் பார்" அல்லது "கவனம் செலுத்துங்கள்!"

என்னுடைய தூதன்

அதாவது, "நான், கர்த்தர், என் தூதனை அனுப்புவேன்." சில மொழிகளில் இந்த வார்த்தைக்கு ஒரு அடைமொழி மறைமுகமாக பயன்படுத்துவது மிகவும் இயல்பானது, அதாவது: "தேவன் தம்முடைய தூதனை அனுப்புவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கத்தரிசனமாக உரைத்தது."

உனக்கு முன்பாக

இந்த வாக்கியம், "உனக்கு" என்ற வார்த்தை மேசியாவைக் குறிக்கிறது.

உமக்கு வழியை ஆயத்தம் செய்வது

ஜனங்கள் மேசியாவுக்கு செவிகொடுக்கும்படிக்கு தேவனுடைய தூதன் ஜனங்களை ஆயத்தப்படுத்துவான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/other/jewishleaders]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]

24-05

அவர் மிகவும் உன்னதமானவர்

இதை "அவர் மிகவும் முக்கியமானவர்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய செருப்பின் வாரை அவிழ்ப்பதற்குகூட தகுதி இல்லை

வேறு வார்த்தைகளில் சொன்னால், "அவருடன் ஒப்பிடும்போது, அவருக்காக மிகவும் சாதாரணமான பணியைக் கூட செய்வதற்கு நான் தகுதியுள்ளவன் இல்லை." செருப்பை அவிழ்ப்பது மிகவும் எளிமையான வேலை, இந்த வேலை ஒரு அடிமை செய்வான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]

24-06

இதோ

சில மொழிகளுக்கு இது "இதோ" அல்லது "அந்த மனிதன்" என்று தான் இருக்கும்.

தேவ ஆட்டுக்குட்டி

இதை "தேவனிடமிருந்து வந்த தேவ ஆட்டுக்குட்டி" அல்லது "தேவன் அனுப்பின ஆட்டுக்குட்டி" என்றும் மொழிபெயர்க்கலாம். பழைய ஏற்பாட்டில் பாவத்திற்கான பலியாக ஆட்டுக்குட்டியை பலி செலுத்துவார்கள் அதின் நிழலாட்டமாக தேவன் சொன்னபடியே நிறைவேற்றினார்.

போக்கும் அல்லது நீக்கும்

இயேசு நமக்காக பலியாவதினால் தேவன் நம்மில் ஒருபோதும் பாவம் இல்லாததை போல் ஆக்குகிறது. .

உலகத்தின் பாவம்

அதாவது, “உலகத்தில் இருக்கும் ஜனங்களின் பாவம்”.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lamb]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]

24-07

நான் உமக்கு ஞானஸ்நானம் கொடுக்க தகுதி இல்லாதவன்

இதை, "நான் உங்களை ஞானஸ்நானம் செய்ய பாத்திரன் அல்ல" அல்லது "நான் பாவி, எனவே நான் உமக்கு ஞானஸ்நானம் செய்யக்கூடாது." என்று மொழிபெயர்க்கலாம்.

அப்படி செய்வதுதான் சரி

"இது செய்ய வேண்டிய காரியம்" அல்லது "இதுதான் நான் செய்யும்படி தேவன் விரும்புகிறார்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]

24-08

என்னுடைய குமாரன் இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்

மற்றொரு மகன் இருப்பதைப் போல இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். "நீ என் மகன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், உன்னுடன் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று சொல்வது அவசியமாக இருக்கலாம் என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/love]]

24-09

தேவன் யோவானிடம் சொன்னார்

அதாவது, "இதற்கு முன்பே, தேவன் யோவானிடம் சொன்னார்" அல்லது, "இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு, தேவன் யோவானிடம் சொன்னார்."

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/johnthebaptist]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
  • [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]