50-01
சபை வளர்ந்துகொண்டிருக்கிறது
இதை "உலகம் முழுவதிலும் உள்ள சபைகளில் ஜனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்" அல்லது "இயேசுவை விசுவாசிகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
உலகத்தின் முடிவில்
இந்த வாக்கியம், "தற்போதைய உலகம் முடிவுக்கு வருவதற்கு முன்பே" அல்லது, "இந்த உலகின் இறுதி நாட்களில்" என்று அர்த்தம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/church]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
50-02
முடிவு வரும்
இதை "இந்த உலகத்திற்கு முடிவு வரும்" அல்லது "இந்த உலகத்தின் முடிவு சம்பவிக்கும்" அல்லது "இந்த தற்போதைய உலகம் முடிவுக்கு வரும்" என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/holy]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/other/preach]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
50-03
சீஷராக்குங்கள்
இதற்கு அர்த்தம் உள்ளது, "ஜனங்கள் என்னுடைய சீஷர்களாக மாற உதவுங்கள்."
வயல்களில் அறுவடை மிகுதி
"முதிர்ந்த பயிர்கள் அறுவடைக்கு வயல்கள் தயாராக இருப்பதுபோல அவர்களை தேவனிடத்தில் கொண்டுவர தயாராக உள்ளது" அல்லது "பயிர்களை அறுவடை செய்ய நிலங்கள் தயாராக இருப்பதுபோல அவர்களை ஒன்று சேர்த்து தேவனிடத்தில் கொண்டு வர அவர்கள் தயாராக உள்ளனர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
நிலங்கள்
இந்த வெளிப்பாட்டில், "நிலங்கள்" உலகின் மக்களைக் குறிக்கிறது.
முதிர்ந்த பயிர்கள்
இங்கே "முதிர்ந்த பயிர்கள்" என்பது இயேசுவை விசுவாசிக்க தயாராக இருப்பதைக் குறிக்கிறது.
அறுவடை
இங்கே "அறுவடை" என்பது இயேசுவைப் பற்றி போதிப்பதின் மூலம் ஜனங்கள் தேவனிடத்தில் கொண்டுவருவதற்கான வேலையைக் குறிக்கிறது.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/peoplegroup]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
- [[rc://*/tw/dict/bible/kt/christian]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
50-04
அதைவிட முக்கியமானது அல்ல
அதாவது, "முக்கியமானது அல்ல" அல்லது, இந்த விஷயத்தில், "இதைவிட சிறப்பாக நடத்தப்படவில்லை."
என்னிமித்தமாக
அதாவது, "நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதால்" அல்லது, "நீங்கள் என்னை குறித்து ஜனங்களுக்குக் போதிப்பதால்" அல்லது, "நீங்கள் எனக்கு சொந்தமானவர் என்பதால்."
இந்த உலகத்தில்
இதை "இந்த வாழ்நாளில்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
எனக்கு உண்மையாய் இருங்கள்
அதாவது, "எனக்குக் கீழ்ப்படிந்து கொண்டே இருங்கள்."
முடிவு வரை
அதாவது, "உங்கள் வாழ்க்கையின் இறுதி வரை."
உங்களை இரட்சிக்கும்
இது உடலில் துன்பத்திலிருந்து ஏற்படும் விடுதலையைக் காட்டிலும் ஆத்தும இரட்சிப்பைக் குறிக்கிறது. ஏற்கனவே சொல்லப்பட்டபடி அநேக விசுவாசிகள் கொல்லப்படுவார்கள் அல்லது சித்திரவதை செய்யப்படுவார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/other/suffer]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/faithful]]
- [[rc://*/tw/dict/bible/kt/save]]
50-05
நல்ல விதை
இந்த விதை கோதுமை தானியமாக இருந்தது. உங்கள் மொழியில் இந்த வகை விதை தெரியவில்லை என்றால், "விதை" என்பதற்கு ஒரு பொதுவான சொல்லைப் பயன்படுத்துவது நல்லது. பொதுவான சொல் இல்லை என்றால், அறியப்பட்ட ஒரு வகை தானிய விதைகளைத் தேர்ந்தெடுத்து, "அரிசி போன்ற நல்ல விதை" என்று சொல்ல வேண்டியது அவசியம்.
களை விதைகள்
நடப்பட்ட களை விதைகள் உயரமான புல்லாக வளரும், ஆனால் அவற்றை உண்ண முடியாது. அவை பயனற்றவை.
கோதுமை
அதாவது, "கோதுமை விதைகள்." கோதுமை என்பது ஒரு வகையான தானியமாகும், அது ஒரு உயரமான புல் போல வளரும். மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் விதைகள் இதில் உள்ளன.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/kt/good]]
50-06
பொதுத் தகவல்
இயேசு தொடர்ந்து கதை சொல்கிறார்
ஒரு எதிரி அவைகளை நட்டிருக்க வேண்டும்
முடிந்தால், இதை பேசுபவர் அவற்றைப் பார்க்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் மொழிபெயர்க்கவும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
- [[rc://*/tw/dict/bible/kt/good]]
50-07
பொதுத் தகவல்
இயேசு தொடர்ந்து கதை சொல்கிறார்
நீங்கள் கோதுமையையும் வெளியே பிடுங்குவீர்கள்
அதாவது, "நீங்கள் தற்செயலாக கோதுமையையும் வெளியே பிடுங்குவீர்கள்." இளம் கோதுமையை களைகளிலிருந்து வேறுபடுத்துவது மிகவும் கடினம், கோதுமையை பிடுங்காமல் களைகளை பிரிப்பது கடினம்.
அறுவடை காலம் வரை
அதாவது, "கோதுமை அறுவடை செய்யத் தயாராகும் காலம் வரை" அல்லது, "கோதுமை அறுவடை செய்ய போதுமான அளவு வளரும் வரை."
கோதுமை
அதாவது, "அறுவடை செய்யப்பட்ட கோதுமை தானியங்கள்."
களஞ்சியம்
அறுவடை செய்யப்பட்ட கோதுமை தானியங்கள் சேர்க்கப்பட்டு சேமிக்கப்பட்ட கட்டிடத்தை இது குறிக்கிறது. இதை "களஞ்சியம்" என்றும் அழைக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/servant]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
50-08
தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்கள்
இதை "தேவனின் அதிகாரத்தின் கீழ் வாழும் ஜனங்கள்" அல்லது "தேவனின் ஆளுகைக்கு அடிபணிந்த மக்கள்" அல்லது "தேவனுடைய ராஜ்யத்தில் தேவனோடு வாழக்கூடிய ஜனங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/good]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
50-09
பிசாசினுடையவர்கள்
அதாவது, "பிசாசுக்குக் கீழ்ப்படிவோர்" அல்லது "பிசாசினால் ஆளப்படுபவர்கள்".
பிசாசானவன்
இது சாத்தானுக்கு மற்றொரு தலைப்பு. இதை "சாத்தான்" என்று மொழிபெயர்க்கலாம், ஆனால் "கொடியவன்" என்ற தலைப்பு அவனது தன்மையை விவரிக்கிறது.
சாத்தான்
இதை "சாத்தான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
உலகத்தின் முடிவைக் குறிக்கிறது
அதாவது, "உலகின் முடிவில் ஜனங்களுக்கு என்ன சம்பவிக்கும் என்பதைக் குறிக்கிறது."
அறுவடை செய்பவர்கள்
இதை "முதிர்ந்த தானியத்தை அறுவடை செய்யும் மனிதர்கள்" அல்லது "முதிர்ந்த தானியத்தை சேகரிக்கும் ஊழியர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/evil]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/angel]]
50-10
பிசாசுக்குரியவர்கள்
இதை "பிசாசுக்குக் கீழ்ப்படிவோர்" அல்லது "பிசாசினால் ஆளப்படுபவர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம். இது இயேசுவை விசுவாசியாத மற்றும் பிசாசின் தீய வழிகளைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கிறது.
எரிகிற அக்கினி
அதாவது, "மிகவும் சூடான, எரியும் நெருப்பு" அல்லது, "ஒரு பெரிய, மிகவும் சூடான அக்கினி."
நீதிமான்கள்
இது மேசியாவைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. 50:08 ஐ பார்க்கவும்.
சூரியனைப்போல் பிரகாசிப்பார்கள்
இதை "சூரியனைப் போல மகிமையாய் இருப்பது" அல்லது "சூரியன் பிரகாசமான ஒளியைத் தருவதுபோல தூய்மையைக் காட்டுகிறது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/angel]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/other/suffer]]
- [[rc://*/tw/dict/bible/kt/righteous]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
50-11
அவர் போய்விட்டார்
இதை "அவர் பூமியை விட்டு வெளியேறினார்" அல்லது "அவர் திரும்பவும் பரலோகத்திற்குச் சென்றார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
வானில் மேகத்தின்மீது வருவார்
அதாவது, "வானத்தில் மேகங்கள் அவர் வரும்போது அவரைச் சூழ்ந்து கொள்ளும்" அல்லது "வானத்தின் மேகங்கள் அவரைச் சுமந்து செல்லும்."
இயேசு வரும்போது
அதாவது, "இயேசு பூமிக்குத் திரும்பும்போது."
வானத்தில் அவரை சந்திப்பது
அதாவது, "அவருடன் வானத்தில் சேர்வது." இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் இயேசு வானத்தில்வரும்போது அவருக்கு அருகில் இருப்பார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/christian]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/other/raise]]
50-12
இன்னும் உயிரோடிருக்கிறார்
அதாவது, "இயேசு திரும்ப வரும்போதும் உயிரோடு இருக்கிறார்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/christian]]
- [[rc://*/tw/dict/bible/kt/life]]
- [[rc://*/tw/dict/bible/other/raise]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
50-13
கிரீடம்
இந்த கிரீடம் இயேசுவை விசுவாசிப்பதற்கும் இந்த வாழ்க்கையில் அவருக்கு சேவை செய்வதற்கும் கிடைக்கும் வெகுமதியைக் குறிக்கிறது.
பூரணமான
அதாவது, "முழுமையானது" அல்லது, "அனைத்தும்."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/promise]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/life]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/other/peace]]
50-14
அழுகை மற்றும் வேதனையில் பற்களைக் கடிப்பது
50:10 ல் பார்க்கவும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/judge]]
- [[rc://*/tw/dict/bible/kt/believe]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/hell]]
50-15
அவருடைய ராஜ்யம்
இதை "ஜனங்களின் மீதான சாத்தானின் கொடிய ஆட்சி" அல்லது "அவன் செய்யும் அனைத்து பாவ காரியங்களும் அவன் கட்டுப்படுத்தும் தீய மக்களும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
அதைவிட
அதாவது, “அதற்கு பதிலாக.”
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/other/kingdom]]
- [[rc://*/tw/dict/bible/kt/hell]]
- [[rc://*/tw/dict/bible/other/obey]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
50-16
பாவத்தை உள்ளே கொண்டுவந்தது
இதை "பாவம் நுழைவதற்கு" என்று மொழிபெயர்க்கலாம்.
ஒரு புதிய வானம்
இதை "ஒரு புதிய வானம்" அல்லது "ஒரு புதிய பிரபஞ்சம் " என்றும் மொழிபெயர்க்கலாம். இது ஒரு புதிய நட்சத்திரங்களையும், வானத்தில் உள்ள எல்லாவற்றையும் குறிக்கிறது.
ஒரு புதிய பூமி
நாம் வாழும் இந்த தற்போதைய புதிய பூமி மற்றும் மேலான ஒன்றாக மாற்றப்படும்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/adam]]
- [[rc://*/tw/dict/bible/other/eve]]
- [[rc://*/tw/dict/bible/other/disobey]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/sin]]
- [[rc://*/tw/dict/bible/kt/curse]]
- [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
50-17
கண்ணீர் யாவையும் துடைப்பது
இதை "எங்கள் துக்கங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவது" அல்லது "கொடுமையை முடிவுக்குக் கொண்டுவருவது" அல்லது "ஜனங்களுக்குள் இருக்கும் எல்லா பாரங்களையும் சுலபமாக போக்கும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
இனி துன்பம், சோகம், அழுகை, கொடுமை, வலி அல்லது மரணம் இருக்காது
இதை, "ஜனங்கள் இனி துன்பப்பட மாட்டார்கள், சோகமாக, அழுதுகொண்டு, பாவம் செய்வது, வியாதியாய் இருப்பது, மற்றும் மரிப்பது போன்ற எந்தக் காரியங்களும் அவர்களுக்கு இராது என்று மொழிபெயர்க்கலாம்.
அவருடைய ராஜ்யத்தை அமைதியோடும் நீதியோடும் ஆளுகைசெய்வது
இதை, "அவருடைய ஜனங்களை நியாயமாக ஆளுகை செய்வது, அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கும் வகையில்." என்று மொழிபெயர்க்கலாம்.
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/suffer]]
- [[rc://*/tw/dict/bible/kt/evil]]
- [[rc://*/tw/dict/bible/other/death]]
- [[rc://*/tw/dict/bible/kt/kingdomofgod]]
- [[rc://*/tw/dict/bible/other/peace]]
- [[rc://*/tw/dict/bible/kt/justice]]