26-01
சாத்தானுடைய சோதனைகளை ஜெயித்துவிட்டு, இயேசு திரும்பினார்
இதை இரண்டு வாக்கியங்களாக மாற்ற நீங்கள் விரும்பலாம், "சாத்தான் அவரைச் செய்ய வைக்க முயன்ற தவறான செயல்களை இயேசு செய்யவில்லை, அதினால் அவனைத் தோற்கடித்தார். அதன் பிறகு, இயேசு திரும்பினார்." "ஜெயித்தல்" என்ற வார்த்தையை "எதிர்ப்பது" அல்லது "நிராகரித்தல்" அல்லது "மறுப்பது" என்பதையும் மொழிபெயர்க்கலாம்.
பரிசுத்த ஆவியின் வல்லமையினால்
இது "பரிசுத்த ஆவியின் வல்லமை அவர் மூலமாக செயல்பட்டது" அல்லது "பரிசுத்த ஆவியானவர் அவரை வல்லமையான முறையில் வழிநடத்தினார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
ஒவ்வொரு இடமாக சென்று போதித்தார்
அதாவது, அவர் "வெவ்வேறு ஊர்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்குப் போதித்தார்."
எல்லோரும்
அதாவது, "அவரை அறிந்த அல்லது அவரைப் பற்றி கேட்ட அனைவருமே."
அவரைக் குறித்து நன்மையாய் பேசினார்கள்
அதாவது, “அவரைக் குறித்து நன்மையானதை சொன்னார்கள்”.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/satan]]
- [[rc://*/tw/dict/bible/kt/tempt]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/power]]
- [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
- [[rc://*/tw/dict/bible/other/galilee]]
26-02
ஆராதிக்கும் இடம்
அதாவது, “தேவனை ஆராதிக்க யூதர்கள் கூடிவந்த கட்டிடம்." இதை "ஆலயம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
சுருள்
ஒரு சுருள் என்பது ஒரு நீண்ட தாள் அல்லது தோலில் உருவான தாள், அது உருட்டப்பட்டு அதில் எழுதப்பட்டிருக்கும்.
ஏசாயா தீர்க்கதரிசியின் சுருள்
அதாவது, "ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய வார்த்தைகளைக் கொண்ட சுருள்." ஏசாயா நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுருளில் எழுதியிருந்தான். இது அந்த சுருளின் நகலாக இருந்தது.
சுருளைத் திறந்து
இதை "திறந்த சுருள்" அல்லது "சுருளைத் திறந்து" என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/nazareth]]
- [[rc://*/tw/dict/bible/kt/sabbath]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/isaiah]]
26-03
தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்
அதாவது, "ஏழை மற்றும்மிகவும் ஏழ்மையான மக்களுக்கு தேவன் உதவி செய்வார் என்ற நற்செய்தியைச் சொல்வது."
சிறைபட்டவர்களுக்கு விடுதலை
அதாவது, "சிறையில் தவறாக இருக்கும் நபர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று சொல்வது."
குருடருக்குப் பார்வைகொடுப்பது
இதை "குருடர்கள் பார்வையடைவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம்
அதாவது, "வாழ்க்கையில் ஒடுக்கபடுபவர்களுக்கு சுதந்திரம்."
கர்த்தரின் கருணை வருடம்
இது "கர்த்தர் நமக்கு இரக்கம் செய்யும் காலம்" அல்லது "கர்த்தர் நமக்கு மிகவும் கருணை காட்டும் காலம்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
- [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
- [[rc://*/tw/dict/bible/kt/goodnews]]
- [[rc://*/tw/dict/bible/kt/lord]]
26-04
நான் உங்களிடம் படித்த வார்த்தைகள் இப்போது நடக்கின்றன
இதை "நான் படித்து கேட்ட வார்த்தைகள் இப்போதே நிறைவேறி வருகின்றன" அல்லது, "இன்று நான் உங்களிடம் படித்த வார்த்தைகள் நீங்கள் கேட்டபடியே நிறைவேறியது." என்றும் வேறுமுறையில் மொழிபெயர்க்கலாம்.
ஆச்சரியப்படுவது
"ஆச்சரியம்" என்ற வார்த்தையை ஒரு வார்த்தையுடன் மொழிபெயர்க்கவும், அதாவது இது எப்படி சாத்தியமாகும் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர், அதிர்ச்சியடைந்தனர் மேலும் குழப்பமடைந்தனர்.
இவன் யோசேப்பின் மகன் தானே
இதை, "இவர் யோசேப்பின் மகன் தான்!" அல்லது, "அவர் யோசேப்பின் மகன் என்று அனைவருக்கும் தெரியும்!" அவர் யோசேப்பின் மகனா இல்லையா என்று மக்கள் கேட்கவில்லை. அவர் ஒரு சாதாரண மனிதனின் மகன் மட்டுமே என்று அவர்கள் நினைத்ததால் அவர் எப்படி மேசியாவாக முடியும் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தார்கள் என்று மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/wordofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/christ]]
- [[rc://*/tw/dict/bible/other/josephnt]]
26-05
எந்த தீர்க்கதரிசியும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை
இந்த வார்த்தையின் அர்த்தம், "மக்களால் அறியப்பட்டு அந்த ஊரில் வளர்ந்த ஒரு தீர்க்கதரிசியின் அதிகாரத்தை மக்கள் அங்கீகரிக்கவில்லை."
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/true]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/other/elijah]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
26-06
எலிசா
எலியாவுக்குப் பின் வந்த தேவனுடைய தீர்க்கதரிசி எலிசா. எலியாவைப் போலவே, எலிசாவும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த இஸ்ரவேல் ராஜாக்களை எச்சரித்தான், மேலும் தேவன் அவனுக்குச் அற்புதங்களைச் செய்யும் வல்லமையைக் கொடுத்தார்.
ஒரு ராணுவத் தளபதி
அதாவது, “இராணுவ அதிகாரி”.
அவர்கள் அவர் மீது கோபமடைந்தனர்
தங்களைத் தவிர வேறு ஜாதியரை தேவன் ஆசீர்வதித்தார் என்று யூதர்கள் கேட்க விரும்பவில்லை, எனவே இயேசு சொன்னதைக் கண்டு அவர்கள் மிகவும் கோபமடைந்தார்கள்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
- [[rc://*/tw/dict/bible/kt/israel]]
- [[rc://*/tw/dict/bible/other/heal]]
- [[rc://*/tw/dict/bible/other/naaman]]
- [[rc://*/tw/dict/bible/kt/jew]]
26-07
ஆராதிக்கும் இடம்
அதாவது, "தேவனை ஆராதிக்க யூத மக்கள் கூடிவந்த ஆலயம்." இதை "வழிபாட்டு கட்டிடம்" என்றும் மொழிபெயர்க்கலாம். 26:02 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.
ஆனால் இயேசுவோ ஜனங்களின் நடுவாக கடந்து போனார்
"ஆனால்" என்பது "ஆனால் அதற்கு பதிலாக" அல்லது "இருப்பினும்" போன்ற வலுவான அர்த்தமாகும் சொல் அல்லது வாக்கியத்துடன் மொழிபெயர்க்கப்படலாம், அவர்கள் செய்யத் திட்டமிட்டதை மக்கள் இயேசுவிடம் செய்ய முடியவில்லை என்பதைக் காட்ட.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/other/nazareth]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
26-08
கலிலேயாவின் ஊர் பகுதிகளில் வழியாக போனார்
அதாவது, "கலிலேயாவில் சுற்றிலும்" அல்லது, "கலிலேயாவில் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு".
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/other/galilee]]
- [[rc://*/tw/dict/bible/other/heal]]
26-09
அசுத்த ஆவி பிடித்திருந்தவர்கள்
அதாவது, “அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டவர்கள்”.
இயேசு அவைகளுக்குக் கட்டளையிட்டபோது
இதை "இயேசு அவைகளுக்குக் கட்டளையிட்டபோது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/demon]]
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/demon]]
- [[rc://*/tw/dict/bible/kt/sonofgod]]
- [[rc://*/tw/dict/bible/kt/worship]]
- [[rc://*/tw/dict/bible/kt/god]]
26-10
அவரிடத்திலிருந்து கற்றுக்கொண்டவை
அதாவது, "அவர் அவர்களுக்குக் போதித்தவைகளிலிருந்து கற்றுக்கொண்டார்கள்" அல்லது, "அவர் சொன்ன மற்றும் செய்த எல்லாவற்றிலிருந்தும் கற்றுக்கொண்டார்கள்."
வேதாகமத்திலிருந்து ஒரு கதை
சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
- [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
- [[rc://*/tw/dict/bible/kt/apostle]]