தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

43-01

பரலோகம் திரும்பினார்

அதாவது, “திரும்பவும் பரலோகத்திற்கு சென்றார்.”

எருசலேமில் இருந்தனர்

அதாவது, "கொஞ்ச நாட்கள் எருசலேமில் தங்கியிருந்தார்கள்." அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]

43-02

பெந்தேகோஸ்தே

"பெந்தெகொஸ்தே" என்றால் "ஐம்பதாம் (நாள்)" என்று அர்த்தம். உங்கள் மொழிபெயர்ப்பில் "பெந்தெகொஸ்தே" என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தலாம் மற்றும் அந்த வார்த்தை இதன் அர்த்தத்தை வெளிப்படுத்தும். அல்லது "50 வது நாள்" என்று அர்த்தமாகும் ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தலாம்.

கோதுமையின் அறுவடையைக் கொண்டாடுவது

பலிகளைக் கொண்டுவருவதன் மூலம் கோதுமை அறுவடைக்கு யூதர்கள் தேவன் நன்றி செலுத்துவார்கள், மேலும் நல்ல உணவை சாப்பிட்டு கொண்டாடுவார்கள். கோதுமை ஒரு தானிய பயிர்; உங்களிடம் "கோதுமை" என்று அர்த்தம் காட்டும் எந்த வார்த்தையும் இல்லை என்றால், நீங்கள் தானியத்திற்கு மிகவும் பொதுவான வார்த்தையைப் பயன்படுத்தலாம். இது மே மாதம் நடந்தது; மற்ற பயிர்கள் வருடத்தின் மற்ற நேரங்களில் அறுவடை செய்யப்பட்டன.

இந்த வருடம்

அதாவது, “இயேசு மரித்த அந்த வருடம்.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/passover]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jew]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/heaven]]

43-03

புயல் போன்ற ஒரு சத்தம்

அதாவது, "ஒரு வலுவான காற்று மிகுந்த சத்தமுண்டாக்கும்" அல்லது, "காற்று கடுமையாக வீசும்போது ஏற்படும் சத்தம்."

பரிசுத்த ஆவியினால் நிறைந்து

அதாவது, “பரிசுத்த ஆவியின் வல்லையினால்” அல்லது “பரிசுத்த ஆவியின் பலத்தினால்.”

வேறு மொழிகளில்

இதை "தங்கள் சொந்த மொழியைத் தவிர வேறு மொழிகளில்" அல்லது "வெளிநாட்டு மொழிகளில்" அல்லது "பிற இடங்களைச் சேர்ந்தவர்கள் பேசுவது போல்" என்று மொழிபெயர்க்கலாம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு பேசும் வல்லமையைக் கொடுக்கும் வரை விசுவாசிகளுக்கு இந்த பாஷை தெரியாது. "மொழிகள்" என்று மொழிபெயர்க்கப் பயன்படுத்தப்படும் சொல் மக்கள் உண்மையில் பேச மற்றும் புரிந்துகொள்ளும் மொழிகளைக் குறிக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]

43-04

ஜனக்கூட்டம்

இதை "மக்கள் கூட்டம்" அல்லது "ஒரு பெரிய ஜனக்கூட்டம்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய அதிசயமான காரியங்கள்

இதை "தேவன் செய்த அற்புதமான செயல்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]

43-05

சீஷர்கள் குடித்து வெறித்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

இதை "சீஷர்கள் குடிபோதையில் இருப்பதாக சொன்னார்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

யோவேல்

இது சம்பவிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யோவேல் என்னும் ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் வாழ்ந்தான்.

கடைசி நாட்களில்

இது "உலகத்தின் முடிவுக்கு முன்பாக இருக்கும் கடைசி நாட்கள்" என்பதைக் குறிக்கிறது.

என்னுடைய ஆவியை ஊற்றுவேன்

"என் ஆவியை அதிகமாய் என்னுடைய ஜனங்களுக்குள் ஊற்றுவேன்" அல்லது "என் ஆவி ஜனங்களை முற்றிலுமாக ஆளுகை செய்யும்" என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

என்னுடைய ஆவி

அதாவது, “என்னுடைய பரிசுத்த ஆவி.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]

43-06

பொதுத் தகவல்

பேதுரு தொடர்ந்து ஜனங்களுக்குப் பிரசங்கித்தான்.

இஸ்ரவேலின் மனிதர்களே

சில மொழிகளில், "இஸ்ரவேல் ஜனங்கள்" என்று சொல்வது நல்லது, இதில் ஆண்களும் பெண்களும் அடங்குவதாக தெளிவாக இருக்க வேண்டும். இதை "நம் இஸ்ரவேலின் ஜனங்கள் " அல்லது "என் சக யூதர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் அவரை சிலுவையில் அறைந்தீர்கள்

இதை, "நீங்கள் அவரை சிலுவையில் அறைந்தீர்கள்" அல்லது "உங்கள் நிமித்தம் அவர் சிலுவையில் அறையப்பட்டார்." யூதர்கள் உண்மையில் இயேசுவை சிலுவையில் அறையவில்லை. இருப்பினும், யூதத் தலைவர்கள் அவரைக் சிலுவையில் அறையும்படிச் செய்தனர்’, அந்த கூட்டத்தில் இருந்த பலர் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று கூச்சலிட்டனர். என்று நீங்கள் மொழிபெயர்க்கலாம்

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/israel]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/miracle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/power]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/crucify]]

43-07

பொதுத் தகவல்

பேதுரு தொடர்ந்து ஜனங்களுக்குப் பிரசங்கித்தான்.

இப்படியாய் சொல்லப்பட்ட ஒரு தீர்க்கத்தரிசனத்தை இது நிறைவேற்றினது

இதை மொழிபெயர்க்க மற்றொரு வழி, "தீர்க்கதரிசிகளில் ஒருவன் நீண்ட காலத்திற்கு முன்பு சொன்னதை இந்த சம்பவம் நிறைவேற்றியது."

நீங்கள் விடமாட்டீர்கள்

"நீர்" மற்றும் "உங்கள்" என்பது பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது. இதை தெளிவுபடுத்துவதற்கு, "தேவன், உன்னை விடமாட்டார்" என்று இதை மொழிபெயர்க்கலாம். சில மொழிகளில் "தேவனே, நீர்" போன்ற வார்த்தை ஒருவரைக் குறித்து பேச ஒரு சிறப்பு வழி இருக்கலாம்.

கல்லறையில் கெட்டுப்போவது

அதாவது, "கல்லறையில் அழுகுவது" அல்லது, "கல்லறையில் சிதைவது". இது இயேசு கல்லறையில் மிக நீண்ட காலம் இருக்கவில்லை என்பதையும், அவர் மரித்துப்போகவில்லை என்று சொல்வதற்கான மற்றொரு வழியாகும், அவர் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதையும் இது குறிக்கிறது.

இயேசுவை மறுபடியும் உயிரோடு எழுப்பினார்

அதாவது, “இயேசுவை மறுபடியும் உயிருடன் எழுப்புவது.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/other/raise]]
  • [[rc://*/tw/dict/bible/other/death]]
  • [[rc://*/tw/dict/bible/kt/fulfill]]
  • [[rc://*/tw/dict/bible/kt/prophet]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]
  • [[rc://*/tw/dict/bible/kt/witness]]
  • [[rc://*/tw/dict/bible/kt/life]]

43-08

பொதுத் தகவல்

பேதுரு தொடர்ந்து ஜனங்களுக்குப் பிரசங்கித்தான்.

இயேசு இப்போது எழுந்தருளினார்

இதை "இயேசு இப்போது எழுந்தருளினார்" அல்லது "இயேசு இப்போது எழுப்பப்பட்டார்" அல்லது "தேவன் இயேசுவை உயர்த்தினார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

வலது பக்கத்தில்

இதை "மிக முக்கியமான ஸ்தானம்" அல்லது "அடுத்த மிக உயர்ந்த மரியாதைக்குரிய இடம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

செய்தது

அதாவது, "விசுவாசிகளைச் செய்ய உதவுகிறது" அல்லது, "இந்த ஜனங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/godthefather]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]
  • [[rc://*/tw/dict/bible/kt/promise]]

43-09

பொதுத் தகவல்

பேதுரு தொடர்ந்து ஜனங்களுக்குப் பிரசங்கித்தான்.

ஆனால் உறுதியாக அதை தெரிந்துகொள்ள

இதை, "ஆனால் அது உண்மைதான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்" அல்லது, "ஆனால் நீங்கள் அதை உறுதியாக விசுவாசிக்கலாம்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/crucify]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/lord]]
  • [[rc://*/tw/dict/bible/kt/christ]]

43-10

மிகவும் வேதனையடைந்து

அதாவது, "மிகவும் கலக்கமடைந்து" அல்லது, "அவர்கள் கேட்டபோது மிகவும் வருத்தப்பட்டு." "உணர்வடைவது" என்பது வலுவான உணர்ச்சிகளை உணர்த்த வேண்டும்.

சகோதரரே

சக யூதர்களிடத்தில் பேச ஒரு யூதருக்கு இது ஒரு சாதாரண வழியாகும். இதை "நண்பர்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]

43-11

நாமத்தில்

இந்த வாக்கியம் இரண்டையும் குறிக்கிறது, "அதிகாரத்தால்" மற்றும் "அதிகாரத்தின் கீழ்". "நாமம்" என்ற வார்த்தையை உங்கள் மொழியில் இந்த வழியில் புரிந்து கொள்ள முடிந்தால் அதை மொழிபெயர்ப்பதைக் கவனியுங்கள்.

கிறிஸ்து

"மேசியா" என்பதன் அர்த்தமும் இதுதான். இதை "அபிஷேகம் செய்யப்பட்டவர்" அல்லது "தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்று மொழிபெயர்க்கலாம். அர்த்தத்தை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, சில மொழிபெயர்ப்பாளர்கள் "கிறிஸ்து" என்ற வார்த்தையை வைத்து தங்கள் சொந்த மொழியில் சொல்லப்படுவது போல பயன்படுத்தலாம்.

இயேசு கிறிஸ்து

"கிறிஸ்து" என்பது இங்கே ஒரு தலைப்பு என்பதால், சில மொழிபெயர்ப்பாளர்கள் ஒழுங்கை மாற்றி, "கிறிஸ்து இயேசு" என்று சொல்லலாம். இரண்டு வழக்கமும் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/repent]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/forgive]]
  • [[rc://*/tw/dict/bible/kt/sin]]
  • [[rc://*/tw/dict/bible/kt/holyspirit]]

43-12

பொதுத் தகவல்

இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/believe]]
  • [[rc://*/tw/dict/bible/other/peter]]
  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/jesus]]
  • [[rc://*/tw/dict/bible/kt/baptize]]
  • [[rc://*/tw/dict/bible/kt/church]]
  • [[rc://*/tw/dict/bible/other/jerusalem]]

43-13

அவர்களைப் பற்றி நல்ல முறையில் சிந்திப்பது

அதாவது, "அவர்களைப் பற்றி ஒரு நேர்மறையான கருத்து இருந்தது."

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/bible/kt/disciple]]
  • [[rc://*/tw/dict/bible/kt/apostle]]
  • [[rc://*/tw/dict/bible/kt/pray]]
  • [[rc://*/tw/dict/bible/other/praise]]
  • [[rc://*/tw/dict/bible/kt/god]]
  • [[rc://*/tw/dict/bible/kt/believer]]